Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கொழும்பில் `ஸ்ரேன்ஜர்ஸ் நைற்' தொடர்மாடி, லொட்ஜுகளில் `வேட்டை
#1
கொழும்பில் `ஸ்ரேன்ஜர்ஸ் நைற்' தொடர்மாடி, லொட்ஜுகளில் `வேட்டை'

மேல் மாகாணத்தில் `ஸ்ரேன்ஜர்ஸ் நைற்' என்ற பெயரில் தொடர்ந்து பன்னிரண்டு தினங்களுக்கு சுற்றி வளைப்பு தேடுதல்களை நடத்தி விடுதலைப்புலி உறுப்பினர்கள் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடுவோரையும் பாதாள உலக கோஷ்டியினரையும் கைது செய்வதற்காக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதென தெரிவிக்கும் பொலிஸ் மா அதிபர் சந்திரா பெர்னாண்டோ இந்நடவடிக்கைகளில் அசமந்தப் போக்கை கடைப்பிடிக்கும் பொலிஸார் சேவையிலிருந்து இடைநிறுத்தப்படுவார்களென்றும் தெரிவித்தார்.

கொழும்பு பொலிஸ் தலைமையகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே பொலிஸ் மா அதிபர் சந்திரா பெர்னாண்டோ மேற்கண்ட தகவலை தெரிவித்தார்.

மேல் மாகாணத்திலும், விசேடமாக கொழும்பு நகரிலும் பாரிய அளவில் இந்த சுற்று வளைப்பு தேடுதல்கள் நடத்தப்படவுள்ளன. முக்கியமாக தொடர் மாடி மனைகளிலும், சொகுசுமாடி மனைகளிலும், லொட்ஜுகளிலும் இரவுக் களியாட்ட விடுதிகளிலும் இந்த சுற்றி வளைப்புகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இந்த தேடுதல் நடவடிக்கைகளை திறமையாக செய்து முடிக்கும் பொலிஸாருக்கு பதவியுயர்வுகள் வழங்கப்படுவதோடு வெளிநாடுகளில் விசேட பயிற்சிகளுக்காகவும் அனுப்பி வைக்கப்படுவார்கள். இதில் அசமந்தப் போக்கை கடைப்பிடிக்கும் பொலிஸார் சேவையிலிருந்து இடைநிறுத்தப்படுவார்கள்.

பன்னிரெண்டு தினங்கள் தொடர்ந்து இடம் பெறும் இச் சுற்றிவளைப்பு தேடுதல்களின் விபரங்களை அறிக்கையாக தயாரித்து தினமும் பொலிஸ் தலைமையகத்திற்கு கையளிக்கப்பட வேண்டுமென்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அதேவேளை, எதிர்வரும் பண்டிகைக் காலங்களை முன்னிட்டு 24 ஆம் திகதி தொடக்கம் விசேட வீதி பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவுள்ளன. மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால் கடுமையான தண்டனைகள் வழங்கப்படும்.

போதைவஸ்து விற்பனை, கள்ளச் சாராயம் விற்பனையும் இச்சுற்றி வளைப்புகளின் போது கண்டுபிடிக்கப்பட்டு முற்றாக ஒழிக்கப்பட வேண்டுமென்று கடுமையான உத்தரவு பொலிஸாருக்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மதுபானச் சாலைகள், ரெஸ்ரூரன்டுகள் மற்றும் இரவு விடுதிகள் கலால் சட்டத்தை மதித்து நடக்க வேண்டும். மீறப்பட்டால் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்களென்றும் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.

இந் நிகழ்வின் போது "ஸ்ரேன்ஜர்ஸ் நைற்" சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கைகளை வெற்றிகரமாக மேற்கொள்வதற்காக 5000 வோக்கி டோக்கி (ரேடியோ தொடர்பாடல் கருவிகள்) மேல் மாகாண பொலிஸாரின் பாவனைக்காக வழங்கப்பட்டதோடு ஒரு பொலிஸ் நிலையத்திற்கு மூன்று மோட்டார் சைக்கிள் வீதம் வழங்குவதற்கான பத்திரங்களும் கையளிக்கப்பட்டன. இதில் பொலிஸ் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Thinakural

http://www.thinakural.com/New%20web%20site...Important-5.htm
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)