Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஆசியாவில் அல்லது இலங்கையிலேயே பேச்சு - மகிந்த உறுதி
#1
ஆசியாவில் அல்லது இலங்கையிலேயே பேச்சு ஜே.வி.பி. யினரிடம் ஜனாதிபதி மகிந்த உறுதி

விடுதலைப் புலிகளுடனான சமாதானப் பேச்சுவார்த்தைகள் நோர்வே தலைநகர் ஒஸ்லோவிலோ அல்லது வேறெந்த ஐரோப்பிய நாட்டிலோ நடைபெறமாட்டாது என ஜே.வி.பி. யினருக்கு உறுதியளித்துள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, புலிகளுடனான பேச்சுவார்த்தை இலங்கையில் அல்லது ஆசிய நாடொன்றிலேயே நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கின் பாதுகாப்பு நிலை குறித்து ஆராயுமுகமாக ஜே.வி.பி. தலைவர் சோமவன்ச அமரசிங்க மற்றும் அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நேற்று செவ்வாய்க்கிழமை காலை அலரிமாளிகையில் சந்தித்து கலந்துரையாடினார்.

இச் சந்திப்பின் போது புலிகளுடனான பேச்சுவார்த்தை ஒஸ்லோவிலோ அல்லது ஐரோப்பிய நாடுகளிலோ நடத்த அனுமதிக்கக் கூடாது என ஜே.வி.பி. தலைவர் சோமவன்ச, ஜனாதிபதியிடம் வலியுறுத்தினார்.

இதற்கு பதிலளித்த ஜனாதிபதி, தனது நிலைப்பாடும் அதுதான் எனவும் பேச்சுவார்த்தை ஆசிய நாட்டில் அல்லது இலங்கையிலேயே நடத்தப்படும் எனவும் உறுதியளித்துள்ளார்.

ஜனாதிபதியுடனான இச்சந்திப்பில், சமாதானப் பேச்சுவார்த்தையை மீள ஆரம்பிப்பது குறித்து நோர்வே வெளிநாட்டமைச்சருடன் ஹொங்கொங்கில் பேச்சுவார்த்தை நடத்தியிருந்த வெளிநாட்டமைச்சர் மங்கள சமரவீரவும், கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த, ஜே.வி.பி. யின் செயலாளர் ரில்வின் சில்வா, பிரசாரச் செயலாளர் விமல் வீரவன்ச, அக்கட்சியின் மத்திய குழு உறுப்பினர் அனுர திசாநாயக்க ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இதேநேரம், இந்த விடயம் குறித்து மீண்டுமொரு முறை கலந்துரையாடுவது எனவும் இரு தரப்பினரும் இணங்கியுள்ளனர். இச் சந்திப்பு நாளை அல்லது நாளை மறுதினம் நடைபெறலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Thinakural

http://www.thinakural.com/New%20web%20site...ocal%20News.htm
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)