Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வாகனத்தை ஒளிப்பதிவு செய்ததாக இந்தியப் பிரஜை கைது
#1
தயாசந்தகிரி பயணம் செய்த வாகனத்தை ஒளிப்பதிவு செய்ததாக இந்தியப் பிரஜை கைது

முப்படைகளின் கட்டளை அதிகாரியான வைஸ் அட்மிரல் தயா சந்தகிரி பயணம் செய்த பாதுகாப்பு வாகனத்தை வீடியோ படம் எடுத்ததாக இந்தியாவைச் சேர்ந்த தமிழர் ஒருவரை கொழும்பு கோட்டை பொலிஸார் நேற்று புதன்கிழமை மாலை 5 மணியளவில் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர் மின்சாரப் பொறியியலாளராவார். தொழில் நிமித்தம் இலங்கை வந்திருந்த இவர் இன்று வியாழக்கிழமை இந்தியாவிற்கு திரும்பிச் செல்ல இருந்த நிலையில் பொருள் கொள்வனவு செய்து கொண்டு காலிமுகத்திடல் வழியாக நடந்து சென்ற போது, இயற்கைக் காட்சிகளை தனது வீடியோ கமரா மூலம் பதிவு செய்துள்ளார்.

இச்சந்தர்ப்பத்தில் அவ்வழியாக பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் தயா சந்தகிரியின் வாகனம் வந்துள்ளது. அதிலிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் சந்தேக நபர் வீடியோ கமராவுடன் செல்வதைக் கண்காணித்துள்ளனர்.

இதனையடுத்து, பாதுகாப்பு அதிகாரிகளின் வாகனத்தை ஒருவர் வீடியோ செய்வதாக அவர்கள் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார் உடனடியாக அவரைக் கைது செய்து பொலிஸ் நிலையம் அழைத்து வந்துள்ளனர்.

பொலிஸ் நிலையத்தில் வைத்து குறிப்பிட்ட வீடியோ கமரா தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்ட போது, அதில் இயற்கைக் காட்சிகள் தவிர, பாதுகாப்பு அதிகாரிக்கோ, பாதுகாப்பிற்கு குந்தகம் விழைவிக்கும் எதுவும் அதில் பதியப் படவில்லை என்று தெரிய வந்துள்ளது.

அதனையடுத்து, சந்தேக நபரிடம் வாக்கு மூலம் பெற்றுக் கொண்டு அவரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)