Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சாவகச்சேரியில் காவலரண் மீது தாக்குதல்:
#1
சாவகச்சேரியில் இராணுவ காவலரண் மீது தாக்குதல்: 2 பேர் காயம்
[வெள்ளிக்கிழமை, 23 டிசெம்பர் 2005, 17:51 ஈழம்] [யாழ். நிருபர்]
யாழ். சாவகச்சேரியில் சிறிலங்கா இராணுவ காவலரண் மீது இன்று கைக்குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.


சாவகச்சேரி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தை அண்மித்த சிறிலங்கா படையரண் மீது இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.45 மணியளவில் அடையாளம் தெரியாதோர் இந்தத் தாக்குதலை நடத்தினர்.

இதில் 2 இராணுவத்தினர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தில் பெண் ஒருவரும் காயமடைந்ததாக யாழ். செய்திகள் தெரிவிக்கின்றன.


Puthinam
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
வெள்ளி 23-12-2005 18:14 மணி தமிழீழம் [யாழ் நிருபர்]

சாவக்சேரியில் இருவர் படையினர் காயம்: இராணுவத்தினரின் தாக்குதலில் இரு பொதுமக்கள் காயம்: அதிர்ச்சியில் ஒருவர் மரணம்.
சாவகச்சேரி பலநோக்கு கூட்டுறவுச் சங்கதின் முன்பாக அமைந்துள்ள இராணுவ காவலரண் மீதான தாக்குதலில் இரு இராணுவத்தினர் காயமடைந்துள்ளனர்.இன்று பிற்பகல் 1.30 மணியளவில் இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

காயமடைந்த இருவரும் பலாலி இராணுவ மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளனர். எடுத்துசெல்லும்வழியில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தாத செய்தி ஒன்று தெரிவிக்கின்றது.

இத்தாக்குதலை அடுத்து இராணுவத்தினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 20 அகவையுடைய மலர் மற்றும் இராஜதுரை என்போர் காயமடைந்துள்ளனர். இதனால் ஏற்பட்ட அதிர்ச்சியில் தர்மலிங்கம் என்பவர் மரணமடைந்துள்ளார்.

Pathivu
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)