Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மனுவை ஏற்க மறுப்பு!
#1
சிங்களக் கடற்படையின் பாலியல் வல்லுறவை கண்டிக்கும் மனுவை ஏற்க இணைத்தலைமை நாடுகளின் பிரதிநிதிகள் மறுப்பு!
[சனிக்கிழமை, 24 டிசெம்பர் 2005, 18:32 ஈழம்] [கிளிநொச்சிலிருந்து செ.தனோஜன்]
சிங்களக் கடற்படையின் பாலியல் வல்லுறவை கண்டிக்கும் மனுவை ஏற்க இணைத்தலைமை நாடுகளின் பிரதிநிதிகள் மறுத்துவிட்டனர்.


கிளிநொச்சிக்கு இன்று சனிக்கிழமை பயணம் மேற்கொண்ட இணைத்தலைமை நாடுகளின் பிரதிநிதிகளான ஜப்பான், பிரிட்டன், நோர்வே மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஆகியோர் அடங்கிய குழுவினரிடம் கிளிநொச்சி மாவட்ட பெண்கள் அமைப்புக்கள் ஒன்றிணைந்து கண்டன மனுவொன்றை கையளிக்க பேரணியாக வந்து காத்திருந்தனர்.

புங்குடுதீவில் சிறிலங்கா கடற்படையினரால் இளம்பெண்ணாகிய இளையதம்பி தர்சினி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டமையை கண்டித்து இந்த மனுவை கையளிக்க ஏற்பாடு செய்திருந்தனர்.

எனினும்இ விடுதலைப் புலிகளுடனான சந்திப்பை முடித்துவிட்டு வந்த இணைத்தலைமை நாடுகளின் பிரதிநிதிகள், அவற்றை ஏற்கவோ பேரணியாளர்களின் கோரிக்கைகளை அவதானிக்கவோ முயற்சிக்காமல் தவிர்த்துவிட்டு வேறு பாதைவழியாக சென்றனர்.

இதனால் கண்டன மனுவைக் கையளிக்க நீண்ட நேரமாக காத்திருந்த பல நூற்றுக்கணக்கான மக்கள் பயன் எதுவுமின்றித் திரும்பினர்.


Puthinam
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: