12-24-2005, 07:56 PM
யாழ்ப்பாணத்தில் 4 புலிப்போராளிகளை பதில் தாக்குதலில் கொன்றதாக இலங்கை ராணுவம் கூறுகிறது
யாழ் முனியப்பர் கோவில் பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற இராணுவத்தினர் மீதான கைக்குண்டுத் தாக்குதல் மற்றும் துப்பாக்கிப் பிரயோகத்தின்போது இராணுவத்தினர் திருப்பிச் சுட்டதில் 4 புலிகள் கொல்லப்பட்டதாக இராணுவ ஊடகத்துறை அலுவலக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்தச் சம்பவத்தின்போது இரு தரப்பினருக்கும் இடையி;ல் துப்பாக்கிப்பிரயோக மோதல் இடம்பெற்றதாகவும் இராணுவ அதிகாரி ஒருவரும் சிப்பாய் ஒருவரும் காயமடைந்ததாகவும், 9 மில்லிமீட்டர் கைத்துப்பாக்கியொன்றும், 40 மில்லிமீட்டர் கிரனைட் லோஞ்சர் ஒன்றும் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் இராணுவம் தெரிவித்துள்ளது.
எனினும் புலிகள் தரப்பில் இருந்து இந்தச் சம்பவம் குறித்து உடனடியாக எதனையும் உறுதி செய்யமுடியவில்லை.
இந்த மோதல் சம்பவத்தையடுத்து, யாழ் நகரின் பல இடங்களிலும் நிலைகொண்டுள்ள படையினர் ஒரேநேரத்தில் எச்சரிக்கை வேட்டுக்களைத்தீர்த்ததாகவும், இதனால் நகரத்தில் பதற்றம் நிலவியதாகவும் யாழ்ப்பாணத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
BBC Thamiloosai

<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>