Posts: 638
Threads: 21
Joined: Nov 2005
Reputation:
0
சோதனைக்குப்படிக்காமல் அது என்ன உடாங்க் சம்பல் சமைப்பது பற்றி நினைப்பது?. படிக்கும் போது கவனம் தேவை. எதோ பெரியவன் நான் சொல்லிட்டேன். கேக்கிறதும் கேக்காததும் உங்கள் பொறுப்பு
! ?
'' .. ?
! ?.
Posts: 1,674
Threads: 91
Joined: Jan 2005
Reputation:
0
அப்பு பரீட்சை முடிந்துவிட்டது..அதுக்கு பின்னர் தானே சமைக்க தொடங்கினேன். (உங்களை உடாங்க் சம்பல் சாப்பிட வேண்டும் என்று சொன்னதற்காக இப்பிடி எங்கட குடும்பமே வார இடத்தில் மாட்டி விடுவது சரியில்லை. பிறகு திருமதி.கந்தப்புவிடம் சொல்ல வேண்டி வரும்..சொல்லிட்டன்)
[b][size=15]
..
Posts: 2,010
Threads: 258
Joined: Jun 2005
Reputation:
0
என்னது குடும்பமே வாரதா? :oops: :oops:
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Posts: 1,674
Threads: 91
Joined: Jan 2005
Reputation:
0
ஓம் மாமாக்கள், அண்ணாக்கள், 2 சித்தப்பா, அப்பா (சில நேரம்) & 5 மச்சான்மார் வாறவை... 50% குடும்பம் யாழில தான் நிற்குது...ஏன் கேட்க்கிறிங்கள்?
[b][size=15]
..
Posts: 2,010
Threads: 258
Joined: Jun 2005
Reputation:
0
ஆஆ escape நான் உங்கள இதுவரைக்கும் ஏதாச்சும் கிண்டல் பண்னி இருந்தால் இந்த சுண்டல மண்னிச்சுகோங்க..
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Posts: 638
Threads: 21
Joined: Nov 2005
Reputation:
0
<!--QuoteBegin-\"தூயா\"+-->QUOTE(\"தூயா\")<!--QuoteEBegin-->ஓம் மாமாக்கள், அண்ணாக்கள், 2 சித்தப்பா, அப்பா (சில நேரம்) & 5 மச்சான்மார் வாறவை... 50% குடும்பம் யாழில தான் நிற்குது...ஏன் கேட்க்கிறிங்கள்?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
அப்புமார்களினை விட்டிட்டிங்கள்
! ?
'' .. ?
! ?.
Posts: 1,674
Threads: 91
Joined: Jan 2005
Reputation:
0
நீங்க தான் இருக்கிங்களே..பிறகு ஏன் சொல்லுவான் என்று விட்டுவிட்டேன்..
[b][size=15]
..
Posts: 638
Threads: 21
Joined: Nov 2005
Reputation:
0
மிக்க நன்றி. சோதனை இலகுவாக இருந்ததா? அல்லது கடினமாக இருந்ததா பிள்ளை?
! ?
'' .. ?
! ?.
Posts: 638
Threads: 21
Joined: Nov 2005
Reputation:
0
அது சரி யார் 2 சித்தப்பா, 5 மச்சான்மார்?
! ?
'' .. ?
! ?.
Posts: 1,674
Threads: 91
Joined: Jan 2005
Reputation:
0
நான் யார்...தூயாவாச்சே...நல்ல இலகுவாக தான் இருந்த்து..எனக்கு பிரச்சனை இல்லை..வாத்திதான் அடிக்கடி "நீர், பேப்பர், டிஸ்ஸு (எனக்கு நல்ல தடிமல்/ன்)" அதிக தடவை கேட்டேன் என்று சொல்லி கால் வலிப்பதாக சொன்னாராம்... <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->
[b][size=15]
..
Posts: 1,674
Threads: 91
Joined: Jan 2005
Reputation:
0
[size=23][b]புலத்தில் இருந்து ஒர் புலம்பல் -"Sydney முருகனின் திருக்கல்யாணம்"
<img src='http://www.sydneymurugan.org.au/images/intro_21.gif' border='0' alt='user posted image'>
<img src='http://www.sydneymurugan.org.au/images/intro_22.gif' border='0' alt='user posted image'>
குளிரும், வெய்யிலுமாக சிட்னியில் இருப்பவர்களை நன்றாகவே வாட்டி எடுக்கும் "சித்திரை மாதம்". சிட்னியில் "மேய்ஸ் கில்" இல் அமைந்திருக்கும் சிட்னி முருகன் ஆலய வருடாந்த உற்சவம் சிறப்பாக நடந்துகொண்டிருக்கின்றது.
சும்மா சொல்ல கூடாது முருகனுக்கு பெரிய தொண்டர் படையே இருக்க தான் செய்கிறது. எங்க போனாலும் தனக்கென தொண்டர்களை சேர்க்கிறதில முருகன் கெட்டிக்காரன் தான் போல!
முருகன் பெருமை அனைவரும் அறிந்த விடயம் என்பதால், இப்ப ராஜன் வீட்டிற்குள் செல்லலாமே.
09-04-06, வியாழ கிழமை ராஜன் வேலைக்கு செல்வதற்காக அதிகாலையில் கண்விழிக்கும் போதே "கந்த புராணம்" ஆரம்பாமாகிவிட்டது.
ராதிகா: என்னங்க..என்னங்க..நான் ஒரு டீ போட்டு தாறன், நீங்கள் போய் குளித்துவிட்டு வாங்கோவன்.
ராஜன்: இங்ச காலையிலேயே மனிசனுக்கு அதிர்ச்சி குடுக்காதிங்கோ. இதுவரைக்கும் மாமியாரும், மருமகளும் போத்திகொண்டு நித்திரையில இருக்கும் போது நான் தானே என்னுடைய வேலை பார்த்தனான். நீங்க நல்ல படுத்து ஒரு 11 மணிக்கு எழும்புங்கோ. நான் போய்ட்டுவாறன்.
ராதிகா: வேளைக்கு வாங்கோ, இன்டைக்கு கோவிலுக்கு போக வேணும்.
ராஜன்: ம்ம்ம்ம் சும்மா சொல்ல கூடாது புளியடிகாரர் நல்ல விவரம் தான்.
அறையை விட்டு வெளியே வந்த ராஜனை தாய் புவனேஸ்வரி எதிர்கொள்ள,
ராஜன்: சரி சரி எதுக்கு இரண்டு பேரும் சுத்தி சுத்தி எனக்கு அதிர்ச்சியாவே தாறியள். பின்னேரம் வெளிக்கிட்டு நில்லுங்கோ. நான் வேலையால வந்த உடனே போகலாம்.
புவனேஸ்வரி: ம்ம்ம் எல்லாம் உன்ட கொப்பரால வந்தது. என்ட முருகனை பார்க்க போறதுக்கு இப்படி எல்லாம் சிரமப்பட வேண்டும் என என்ட விதி.
ராஜன்: இதில எதுக்கு அப்பாவை இழுக்கிறியள்?
புவனேஸ்வரி: டேய் உன்ட அப்பர் தானே என்ட புருசன். அவர் இருந்து இருந்தா இப்பிடி எல்லாம் கதை கேட்க வேண்டி வந்து இருக்குமா?
ராஜன்: (மனதிற்குள்) - "இந்த டயலக் நான் சொல்ல வேண்டியது. கதை கேட்கிறது எல்லாம் நான். மாமியும் மருமகளும் கூட்டணி சேர்ந்து என்னை போட்டு வார வேண்டியது"
புவனேஸ்வரி: "சரி சரி வெளிக்கிடுங்கோ தம்பி, நேரமாகுது"
ராஜன்: "ஓமனை. போய்ட்டுவாறன்"
புவனேஸ்வரி: "சரி தம்பி நேரத்திற்கு வந்திடு"
ராஜன்: "ஆரிய கூத்து ஆடினாலும் காரியத்தில கண்ணு தான்"
மாலை 5 மணி புவனேஸ்வரியும், ராதிகாவும் 2 மணி நேர அலங்காரத்தின் பின்னர் ஆயத்தமாகி தொலைக்காட்சி பெட்டியின் முன்னர் உட்கார்ந்த்து இருக்கிறார்கள்.
வேலை விட்டு வீடு வந்த ராஜன் ராதிகாவை பார்த்து கொண்டே,
ராஜன்: அம்மா...ஓ மன்னிக்கவும் அம்மா இது யார் என்று சொல்லவில்லையே?
ராதிகா: "என்னங்க..........."
ராஜன்: "அட ராதி, உங்களுக்கு சொன்னனான் ராதி அதிகமா முக அலங்காரம் செய்ய வேண்டாம் என்று, இப்ப பாருங்கோ எனக்கே தெரியாமல் போய்விட்டது"
புவனேஸ்வரி: "ஏன் அது நல்ல வடிவா தானே இருக்கு, ராஜன் போய் குளிச்சு போட்டு கெதியா வா தம்பி. நேரம் ஆகுதெல்லோ?"
ராஜன் குடும்பம் கிரேட் வெஸ்டன் கைவேயில் பயணம் செய்து கோவில் வாசலை அடைந்த போது, கோவில் தொண்டர் ஒருவர் வாகன தரிப்பிடம் நிறந்துவிட்டதாக கூறி, முன்னால் இருக்கும் வெற்று காணியில் வாகனத்தை நிறுத்துமாறு கூறினார்.
புவனேஸ்வரி: "ஏன் தம்பி பின்ன இதில கோவில் வாசலுக்கு முன்னால இருக்கிற இடம் எல்லாம் என்ன?"
ராஜன்: "அம்மா கொஞ்ச நேரம் கதைக்காம இருங்கோவன்"
காரை வாகன தரிப்பிடத்தில் நிறுத்தும் போது,
ராஜன்: "இதை எல்லாம் கேட்கிறதா? கோவிலுக்கு முன்னுக்கு வாகனத்தை தரிக்க நெருக்கமானவையை தானே முருகன் அனுமதிப்பார்"
புவனேஸ்வரி: "முருகா.."
ராஜன்: "இப்பிடியே முருகனை கூப்பிட்டு கொண்டே இருக்க வேணும். ராதி அம்மாவோட நீங்கள் பொம்பிளையளின்ட பக்கமா போங்கோ. நான் என்ட குரூப் பெடியளோட நிற்க போறன். ஒரு 9.30 போல வாசலடிக்கு வாங்கோ, சரியோ?"
ராதிகா: "ஓம் ஓம் பெடியள் தான், வயசு நினைவு இருக்கு தானே?"
ராஜன்: "முருகா...."
ராஜன் குடும்பம் கோவிலுக்கு உள்ளே செல்லவும் திருகல்யாணம் ஆரம்பமாகவும் சரியாக இருந்தது.
முருகனும், மனைவிகளும் அமர்ந்து இருந்த மணபந்தல் அழகாக பூக்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
பக்த கோடிகள் கோவிலுக்கு உள்ளேயும், வெளியேயும், சிற்றுண்டி சாலையிலுமாக (இந்த சிற்றுண்டிசாலையை பற்றிய விபரங்கள் பின்னர்) மிகவும் ஆர்வமாக முரகனை பார்க்காமல் அவரவர் வந்த வேலையை பார்த்து கொண்டு இருந்தார்கள். சிலரை தவிர. (தப்பித்தேன்)
[color=red]புவனேஸ்வரி:
ராதிகா: சரி மாமி, இதில இருந்தா கல்யாணமும் பார்க்கலாம். (உங்கட மகன் வெளியில என்ன செய்கிறார் என்றும் பார்க்கலாம்)
இருவரும் உட்காரும் போத் வயதான ஓர் பெண்மணி அவசரமாக வந்து,
வ.பெ: நான் தான் இதில இருக்கிறனான். நான் கும்பிட்டு போட்டு வந்ததும் இதில தான் இருக்க வேணும் ;
என கூறிவிட்டு அவ்விடத்தை விட்டு போக,
ராதிகா: மாமி இதென்ன கூத்து தூணுக்கும் உரிமை பிரச்சனை போல?
புவனேஸ்வரி: கோவில் என்று பார்க்கிறேன். என்ட முருகா...பிள்ளை பார் முருகன் தாலி கட்டுறார்.
ராதிகா: எங்க மாமி? ஐயர் தாலி கட்டுவது தான் எனக்கு தெரிகின்றது!!!
பஞ்சாரார்த்தி முருகனுக்கு மாட்டும் வேளையில் யாரோ ஒரு முருக பக்தர்,
"நான் வளர்த்த முருகா..." என்று கூவி முருகனை அழைத்து பரவசமாகின்றார்.
ராதிகா: மாமி இதுகளை எல்லாம் கோவிலில் கதைக்கிறேன் என்று நினைக்க கூடாது இந்த பக்திபழம் மற்றவர்களையும் பார்க்க விடாமல் நடுவில பனை மரம் போல நின்று கொண்டு "நான் வளர்த்த முருகா" என்று வேற...... இவர் சிட்னி முருகனை வளர்த்தவர் என்றால், பிறகு செல்வசந்நிதி முருகனை, நல்லூர் முருகனை எல்லாம் யாராம் வளர்த்தார்கள்??
புவனேஸ்வரி: பிள்ளை தம்பி சொன்னது நினைவு இருக்கா? இங்கு கோவில் என்பது பொது சொத்து அல்ல, தனியார் சொத்து.
ராதிகா: ம்ம்ம் சரி தான் இப்படியே விட்டால் முருகனுக்கு வீடிங்போத்தலில் பால் குடுத்தது நான், நப்பி மாத்தினது நான் என்றும் சொல்லுவினம் போல!!!
புவனேஸ்வரி: பிள்ளை முருகன் வீதிவலம் வர போறார் போல, இந்த "தண்டிகை" வாகனைத்தை பார். நல்லா தான் மினக்கெட்டு செய்து இருக்கின்றார்கள்!!
ராதிகா: ஓம் மாமி இவை யூனி பெடியள் பெட்டையளின்ட திருவிழா தானே இன்று.
புவனேஸ்வரி: ஓம் பெடி பெட்டையள் நிறைய தான் திரிகின்றார்கள். பிள்ளை இந்த யாழில் வரும் சுண்டலும் சில வேளை வந்து இருக்கலாம். பெடி அடிக்கடி முருகன் கோவிலுக்கு போறது என்று தானே சொல்லுறவன்.
ராதிகா: சுண்டலா? அப்படி என்றால் சிற்றுண்டிசாலை பக்கம் தான் போக வேண்டும்.
ஒருவாறு முருகனின் வீதிவலம் முடிய, குருக்கள் முருகனுக்கு தீபம் காட்டியதும்,
ராதிகா: மாமி, எங்க பாதி சனத்தை காணவில்லை???
புவனேஸ்வரி: பிரசாதம் குடுக்கிற இடத்தை பாரு பிள்ளை
ராதிகா: (நக்கல் தான், இவவின்ட மகன் எங்க நிற்கிறாராம்?) ....
ஒருவாறு 9.30 அளவில் ராஜன் குடும்பம் வீடு திரும்ப காரில் ஏறிய போது,
ராஜன்: என்ன மாமியும் மருமகளும் ஊரையே அளந்து இருப்பீர்களே..??
ராதிகா: உங்களுக்கு எப்பவும் எங்களை ஏதாவது சொல்ல வேணும், அது சரி உங்க இருக்கிற ஊடககாரர்களை காணகிடைக்கவில்லையே??
ராஜன்: ஏன் இல்லை? சிலர் வந்திருந்தார்கள். சிலர் வரவில்லை??
ராதிகா: ஏனப்பா கோவிலில என்ன பிரச்சனை..சனத்திற்கு இங்கு நடப்பவற்றை வெளியே சொன்னால் தானே நல்லது?
ராஜன்: எல்லம் இவர்களின் மீடியா கென்ட்ராக்ட்டால் வந்தது தான்..சரி சரி அதை பிறகு ஒரு நாள் சொல்லுகின்றேன்.
ராதிகா: நீங்கள் கேட்டனிங்களா " நான் வளர்த்த முருகா"?? கதையை??
புவனேஸ்வரி: சிலது முருகன் மேலே பற்றில அப்படி சொல்லியிருக்கலாம் தானே ராதிகா??
ராஜன் : பற்று தான், நான் ஒஸ்ரேலியாவிற்கு வந்த ஆரம்பத்தில பார்த்து இருக்கின்றேன், சனிக்கிழமை சந்தையில மீன் வாங்கி போடுறதும், முதல் நாள் முருகனை வழி பாட்டுக்கு எடுத்து வாறது எல்லாம் ஒரே காரின் பின் பக்கத்தில் தானே!!! முருகா??
புவனேஎஸ்வரி + ராதிகா: முருகா......
சிட்னி முருகன் புகழ் ஓங்குக
சிட்னி முருகனுக்கு அரோகரா
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
இன்பமே சூழ்க
எல்லோரும் வாழ்க
தூயா
[b][size=15]
..
Posts: 333
Threads: 16
Joined: Jan 2006
Reputation:
0
"நான் வளர்த்த முருகா..." என்று கூவி முருகனை அழைத்து பரவசமாகின்றார்
தூயா எழுதியது
உந்த நபர் தான் கடந்த இரண்டு ஆண்டுகளாக முருகன பார்க்க வராம இருந்துவிட்டு இப்ப பழையபடி முதுகை காட்டி கொண்டு திரிகிறார்.சாமி ஊர்வலம் முடிந்த்த பின்பு அங்கு இருக்கும் வயது போன மூதாட்டிகளை கட்டி தழுவி ஆனந்த கூத்தாடுவார்.நீங்கள் இதை அவதானித்து இருப்பீர்கள்.
"To think freely is great
To think correctly is greater"
Posts: 230
Threads: 22
Joined: Feb 2006
Reputation:
0
வாழ்த்துக்கள் தூயா!
உங்கள் கற்பனைக்கு.
Posts: 1,674
Threads: 91
Joined: Jan 2005
Reputation:
0
புத்தன், தெரிந்தும் தெரியாமலும் எத்தனை லீலைகள், திருவிளையாடல்கள்.எதோ கதையில சிலத பட்டும் படாமலும்... <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி தாரணி
[b][size=15]
..
Posts: 2,010
Threads: 258
Joined: Jun 2005
Reputation:
0
அட பாவிங்களா என்னையும் விட்டு வைக்கலியா...
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
மாலை 5 மணி புவனேஸ்வரியும், ராதிகாவும் 2 மணி நேர அலங்காரத்தின் பின்னர் ஆயத்தமாகி தொலைக்காட்சி பெட்டியின் முன்னர் உட்கார்ந்த்து இருக்கிறார்கள்.
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
தூய்ஸ் அதென்ன இன்பம் நம்மப புவனம் அக்காவையும் ராதியையும் வாரிறியள் நெடுகலும் நல்லாய் இல்லைச்சொல்லிப்போட்டன்...
முருகனை வளர்த்த கதை நல்லாய்த்தான் இருக்கு.. :wink: <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 4,986
Threads: 34
Joined: Jun 2004
Reputation:
0
சுண்டலையும் கதைக்குள் கொண்டுவந்துட்டியளே.ஹாஹா தூயா நல்லா எழுதி இருக்குறீங்க. வாழ்த்துக்கள் பபா <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[quote]சிட்னி முருகனுக்கு அரோகரா
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
இன்பமே சூழ்க
எல்லோரும் வாழ்க
தென்னாடுடைய சிவனே போற்றி
என்நாட்டவர்க்கும் இறைவா போற்றி <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
----------
|