Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஈழத் தமிழர் போராட்டம் இந்தியாவின் இறைமைக்கு அச்சுறுத்தல்
#1
இன்றைய உலகப் பொருளாதார மயமாக்கல் என்ற நிலைக்கூடாக உலக நாடுகள் அனைத்தும் தம் பூகோள அரசியல் இருப்பையும் தாண்டி நெருங்கி வரக்கூடிய நிலமையே காணப்படுகின்றது. பூமிப் பந்தில் இருக்கக்கூடிய நாடுகளின் வாழ்க்கை முறை அதனால் ஏற்படக்கூடிய தாக்கங்கள் அனைத்து நாடுகளையும் சென்றடையக் கூடியதாக காணப்படுகின்றது. உலகின் எந்த மூலையிலும் ஏற்படக் கூடிய புயலோ பூகம்பமோ இல்லை போரோ கூட உலக நாடுகளின் பொருளாதார வாழ்க்கை முறைகளில் பெரும் தாக்கத்தை உடனும் ஏற்படுத்துவதை நாம் காண்கின்றோம்.

அந்த வகையில் இன்று உலகின் சில பகுதிகளில் ஏற்படக்கூடிய இனங்களுக்கிடையிலான மோதல்களும் சுதந்திரத்துக்கான போராட்டங்களும் உலகின் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஆட்டங்காணச் செய்வதுடன் வசதி பெற்ற நாடுகளின் சந்தை வாய்ப்புக்களையும் மாற்றி அமைத்து விடுகின்றது. இச்சந்தை வாய்ப்புக்களிற்கான போராட்டமே இன்று உலகின் வல்லரசுகளிற்கும் பிராந்திய வல்லரசுகளிற்கும் இடையிலான முறுகல்களுக்கும் பெரும் காரணமாக அமைந்து விடுகின்றது. அதேவேளையில் எதிர்காலச் சந்தை வாய்ப்புக்களுக்கான விஸ்தரிப்பு முயற்சிகளும் பிராந்திய உலக சமநிலையைக் குழப்புவதுடன் புதிய புதிய அணிகளுக்கிடையிலான கூட்டுக்களையும் உடைவுகளையும் ஏற்படுத்துகின்றன.

இன்று இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் நிலை கொண்டுள்ள ஆதிக்கப் போட்டி எவ்வாறு தமிழ் ஈழத்துக்கான சுதந்திரப் போராட்டத்தில் சாதக பாதகத் தன்மைகளை ஏற்படுத்துகின்றது என்பதப் பார்ர்ப்போம். இந்து சமுத்திரப் பிராந்தியத்துக்கான ஆதிக்கப் போட்டி என்பது காலனித்துவ ஆட்சியின் காலத்திலேயே விதையூன்றி இன்று பெருமளவில் வியாபித்து நிற்கின்ற உலகப்பிராந்தியத்துக்கான ஆதிக்கப் போட்டியின் ஒரு பகுதியாகும். காலனித்துவ முறைமையின் சுரண்டல்,முடிவுக்கு வரவேண்டிய கட்டாயம் எழுந்தபோது நவீன காலனித்துவ சுரண்டல் எனப்படக் கூடிய உலகப் பொரூளாதார முறைமை அறிமுகம் செய்து வைக்கப் பட்டது. வளர்ந்த நாடுகளின் உற்பத்திப் பொருட்களுக்கும் தொழில்நுட்பங்களுக்குமான சந்தை வாய்ப்புக்களாக வளர்ந்து வரும் நாடுகளும் பின் தங்கிய நாடுகளும் தெரிவு செய்யப் பட்டன. இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட நாடுகளில் அதிகளவில் ஆசிய ஆபிரிக்க லத்தீன் அமெரிக்க நாடுகளே அடங்கியிருந்தன. வளர்ச்சி யடைந்த நாடுகள் பட்டியலில் இருந்த ஐரோப்பாவும் அமெரிக்காவும் தங்களிடமிருந்த தொழில் நுட்பச்சிறப்புகளாலும் பணபலத்தினாலும் இவற்றைச் சாதகமாக்கின.

சோவியத்யூனியனின் கட்டுப் பாட்டில் இருந்த கொம்யூனிச நாடுகள் இதன் எக்ல்லைகளுக்கப்பால் இருந்திருந்தபோதும் சோவியத்தின் உடைவு இன்னும் பல நாடுகளை சந்தை நாடுகளாக்கிவிட்டிருக்கின்றன. இதிலிருந்தே சோவியத்தின் உடைவிற்காக அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் ஏன் மிகவும் பாடுபட்டன என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

இந்த சந்தைப் பொருளாதாரம் என்னும் உலக மயமாக்கல் எவ்வாறு செயல் படுகின்றது என்னும் தெளிவு இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் அரசியல் ஆதிக்கப் போட்டிகளை எவ்வாறு ஊக்குவிக்கின்றது என்பதை விளங்கிக் கொள்ள உதவி செய்யக் கூடும். வலிமை வாய்ந்த நாடுகளாகக் கூடும் என்று எண்ணப் பட்ட நாடுகளை இரண்டாக உடைத்தே பழக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகள் தங்களுக்கிடையே ஒற்றுமையை வலிந்து ஏற்படுத்தி ஐரோப்பிய ஒன்றியமாக செயற்படும் தாற்பரியத்தையும் விளங்கிக் கொள்வது அவசியமாகும். உலகப் பொருளாதாரத்தில் அமெரிக்கா ஏற்படுத்தக் கூடிய தாக்கத்தை ஈடு செய்து தங்கள் பொருளாதாரத்தையும் கட்டி எழுப்புவது என்ற பொது நன்மையின் நோக்கிலேயே அவை ஒன்று சேர்ந்துள்ளன என்பதையும் விளங்கிக் கொள்ள வேண்டும்.

இரண்டாம் உலகப் போர்க்கால கட்டத்தில் பிரித்தானியாவின் காலனித்துவ நாடுகளாக இருந்த அனேக ஆசிய ஆபிரிக்க நாடுகளின் ஏகாதிபத்திய எதிர்ப்புகளின் குணாம்சங்களைக் கருத்தில் கொண்டு அவை இரண்டு மூன்று சிறிய நாடுகளாகப் பிரிந்து போக ஊக்குவிக்கப் பட்டதுடன் பிரித்தும் வைக்கப் பட்டது. அதற்காக எதிர் சக்திகள் ஊக்குவிக்கப்பட்டு போர்களும் வலிந்து திணிக்கப்பட்டது. அந்தவகையில் ஒரே மொழி பேசப்பட்ட இரண்டாகப் பிரிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் கொரியா, வியற்நாம் . மத்திய அரேபிய நாடுகள் மற்றும் ஆபிரிக்க நாடுகள் உதாரணங்களாகும்.

இரண்டாம் உலகப் போரின் முடிவில் ஜப்பானின் காவலனாக பாத்திரம் ஏற்ற அமெரிக்கா இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் கட்டுப் பாட்டைத் தனது கைகளில் எடுத்துக் கொள்ள ஜப்பான் ,பிலிப்பைன்ஸ் ,தென்கொரியா போன்ற நேச நாடுகளிலும் கார்சியத் தீவுக் கூட்டத்திலும் வலிமை வாய்ந்த படைத் தளங்களை நிறுவிக்கொண்டது. இரண்டாம் உலகப் போரின் தொடர்ச்சியாக கம்யூனிச சோவியத் ஒன்றியத்தின் எதிர்ப்பையே அமெரிக்கா முதலில் எதிர் கொண்டது. அதற்கு வசதியாக இந்துசமுத்திரப் பிராந்திய நாடுகளும் அமெரிக்க சோவியத் சார்பு நிலைகளை எடுத்துக் கொண்டன. தென் கொரியா, பாகிச்ய்தான்,ஜப்பான் போன்ற நாடுகள் அமெரிக்க நிலையை எடுத்துக் கொண்ட பொழுது இந்தியா சோவியத் சார்பு நிலையை எடுத்துக் கொண்டதுடன் இந்தியாவின் பொருளாதார இராணுவக் கட்டமைப்பிலும் சோவியத்தின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறந்தது. சோவியத்தின் ஆதிக்கத்தை இப்பிராந்தியத்தில் கட்டுப் படுத்தும் நோக்கில் அமெரிக்காவும் பாகிஸ்தானை வெகுவாக வளர்த்து விட்டது. இந்தியா அன்று சோவியத் சார்பு நிலை எடுக்காது அமெரிக்க சார்பு எடுத்திருந்தால் அமெரிக்காவின் நேச நாடாக இன்று இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் சக்தி வாய்ந்த நாடாக இருந்திருக்கக் கூடும். சீனா இன்னொரு கம்யூனிசக் கொள்கையைப் பின்பற்றும் நாடென்ற வகையில் அமெரிக்காவிற்கும் அதன் சார்பு நாடாகைய ஜப்பானின் போட்டிநாடென்ற வகையிலும் அமெரிக்காவின் நேச நாடாகும் சாத்தியம் மிகவும் குறைவே. சோவியத் என்ற பயம் இல்லாதொழிந்த இன்றைய காலகட்டத்தில் அமெரிக்காவின் மேலாண்மையை நெருக்கடிக்குள்ளாக்கக் கூடிய வலிமையுடனும் இப்பிராந்தியப் பொருளாதாரப் போட்டியின் நேரடிபோட்டியாளராக வளர்ந்து வருவதும் அதற்கான சாத்தியங்கள் இல்லையென்றே கூற வைக்கின்றன.

சீனாவின் அபரிமித வளர்ச்சி இந்தியாவுடன் அமெரிக்காவை நெருங்கி வரத் தூண்டினாலும் பாகிஸ்தான் அமெரிக்காவின் நேச நாடாக என்றும் இருந்து கொண்டிருப்பதும் எதிரிக்கு எதிரி நண்பன் என்ற அளவிலேயுமே அமெரிக்காவின் நெருக்கம் இந்தியாவுடன் இருக்கும் என்று நம்பலாம். பகிஸ்தானிற்கு அல்கைடா தீவிர வாதிகளுடனான தொடர்பு பரவலாகப் பேசப் படும் எல்லாச்சந்தர்ப்பத்திலும் அமெரிக்கா பாகிஸ்தானைக் காப்பாற்றிக் கொண்டிருப்பதும் தொடர்ந்தும் வழங்கப் பட்டுக் கொண்டிருக்கும் பாகிஸ்தானுக்கான பொருளாதார உதவிகளுமே இதற்குச் சான்றாகும்.

இந்தளவில் ஈழத்தமிழ் மக்களின் சுதந்திரப் போராட்டம் எவ்வாறு இந்திய அரசியல் வாதிகள் எண்ணுவது போன்று அச்சுறுத்தலாக இருக்கின்றது என்பதை விரிவாகப் பார்ப்போம்.

முதலில் இரு நாடுகளுக்கிடையிலான நட்பு அல்லது எதிர்ப்பு எவ்வாறு ஏற்படக் கூடும் என்பதற்கான சாத்தியங்களை ஆராய்வோம். இந்நட்பு அல்லது எதிர்ப்பு கருத்தியல் ரீதியாகவும் உலகாதிய ரீதியாகவும் ஏற்படலாம்.

கருத்தியல் ரீதியான நட்பும் தொடர்பும் இந்தியாவிற்கும் இலங்கைக்குமிடையே சங்ககாலம்தொட்டு ஆதாரங்களுடன் கானப் படுகின்றது. படையெடுப்புகள்,படை உதவிகள், பெண் எடுத்தது, பெண் கொடுத்தது என்ற வகையில் பல உதாரணங்கள் வரலாற்றில் கானப் படுவது கருத்தியல் ரீதியாக ஈழத்தமிழ் மக்களிடையேயும் தமிழகத் தமிழ் மக்களிடையேயும் பெரும் தாக்கத்தை இன்றளவும் ஏற்படுத்தும் வலிமையுடன் காணப் படுகின்றது.

உலகாதிய ரீதியாக பேசப்படும் மொழி, பின்பற்றப் படும் சமயம், கலாச்சாரப் பாரம்பரியங்கள் காணப் படுகின்றன.

இருந்த போதும் இத்தொடர்பானது இன்றைய இந்தியாவின் ஒரு பகுதியுடனான தொடர்பு என்ற வகையிலேயே முக்கியத்துவம் குறைக்கப்பட்டுப் பார்க்கப்படுகின்றது. இன்னொரு விதத்தில் தமிழீழம் அமைவதால் இந்தியாவிற்கு ஏற்படக் கூடிய நன்மை தீமைகள் என்ற அடிப்படையிலும் இந்தப் பிரச்சினை அலசப்படுகின்றது.

நன்மைகள் என்பதைதவிர்த்து தீமைகள் என்ற வகையில் முன்னிலைப் படுத்தும் குற்றச்சாட்டு ஈழத்தைபார்த்து தமிழ்நாடும் பிரிந்து போகலாம் என்பது.இதற்காக பேசப் படும் மொழி கலாச்சாரத்தொடர்புகள் இக்காரணத்திற்கான அடிப்படையாகப் பார்க்கப் படுகின்றது. ஆனால் இது முழுமையான இந்தியாவின் குற்றச் சாட்டாக எடுத்துக் கொள்ளாது இதன் அடிப்படையை நாம் பார்க்க வேண்டும். உண்மையில் இந்தியாவின் மேலாண்மை ஆட்சியையும் இந்தியக் கூட்டரசின் அனைத்து நன்மைகளையும் தங்களுக்கே பயன் படுத்தி வரும் ஒரு பெரும்பான்மை இனத்தின் உள்ளப் பயம் இதுவென்றே நாம் கொள்ளலாம்.

இக்குற்றச் சாட்டு உண்மையாக இருக்கவேண்டுமென்ற பட்சத்தில் இந்தியா என்ற நாடு இப்போது பல குட்டி நாடுகளாகப் பிரிந்திருக்க வேண்டும். வங்காள மொழி பேசும் பங்களாதேசம் உருவாக்கப் பட்ட பின்னால் அது சாத்தியமாகி இருக்க வேண்டும். இந்தியாவின் வங்காளப்பகுதியில் இருக்கும் மக்களுக்கும் இன்றைய பங்களாதேச மக்களுக்கும் இடையில் ஈழத் தமிழ் மக்களுக்கும் தமிழகத் தமிழ் மக்களிற்கும் இடையிலுள்ள தொப்பூழ் கொடியுறவு தான் காலாதி காலம் காணப் படுகின்றது. பாகிஸ்தான் என்ற நாட்டை பலவீனப் படுத்துவது என்ற அரசியல் காரணத்தை முன்னிறுத்திய போது வங்காளம் பிரிந்து தனி நாடாகப் போகும் ஆபத்தையும் ஏற்றுக் கொள்ளாது பிரிந்து போக மாட்டாது என்று அடித்துச் சொல்லி வங்காளிகளின் தாய்நாட்டுப் பற்றைப் போற்றிய இந்திய கொள்கை வகுப்பாளர்கள் தமிழ் நாட்டு மக்களின் நாட்டுப் பற்றைக் கொச்சைப் படுத்தும் வகையில் இதனை ஒரு காரணமாக முன்னிறூத்துவது ஏன் ?

ரோ போன்ற உளவு அமைப்புக்களின் அரை குறை அறிவுரையுடன் கூடிய ஈழத்தமிழ் போராட்டம் பற்றிய கண்ணோட்டம் இன்று ஒரு சிக்கலை இரு நாட்டு மக்களிற்கிடையேயும் உருவாக்கியிருக்கின்றது. இலங்கை முழுவதற்குமான அதிகாரத்தைப் பெறுவது என்ற இந்தியாவின் கண்ணோட்டம் இன்று சிங்கள தேசத்தின் இந்தியாவிற்கெதிரான முகத்தை அம்பலப்படுத்தியதுடன் அமெரிக்காவை இந்தியாவின் காலடிக்கே கொண்டுவந்து உண்மையான அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருப்பதை இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் இன்னும் ஏன் புரிந்து கொள்ளவில்லை. அமெரிக்காவையும் பாகிஸ்தானையும் காவடி எடுத்து வரவேற்கும் சிங்கள அரசின் இந்திய எதிர்ப்பு பற்றி ஏன் யாரும் பேசுவதில்லை ? பங்களா தெசப்பிரிவினையின் போதும் பாகிஸ்தானிய விமானங்கள் தங்கி எண்ணை நிரப்பிப் போக இந்திய்யாவின் விருப்பையும் மீறி அனுமதி அளித்த சிங்கள அரசுதானா இந்தியாவின் நேச நாடு.

சிங்கள அரசின் குள்ள நரித்தனத்தில் தன் கையை எடுத்து தன் கண்ணையே குத்திக் கொண்ட பின்னாலும் இந்திய நலனைப் பாதுகாக்கக் கூடிய சக்திகள் யார் என்பதை இனங்கண்டு கொள்வதில் இந்தியாவிற்கு இருக்கக் கூடிய மனத்தடைகள் தான் என்ன ? ரோவின் சமயோசிதமற்ற தோல்வி இந்தியாவின் தன் மானப் பிரச்சினையாக கொள்ளப்படுகின்றதா ?

தமிழ் ஈழ மக்களை பொறுத்த அளவில் இந்தியா இன்றைக்கு மட்டுமல்ல என்றைக்குமே நட்புடன் கூடிய உறவு நாடுதான்.தமிழ் ஈழம் அமைவது இந்தியாவிற்குத் தென் திசையால் வரக் கூடிய அத்தனை ஆபத்துக்களிற்கும் முடிவு கட்டும் என்பதை இந்திய கொள்கை வகுப்பாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு இஸ்ரவேல் இன்று மத்திய கிழக்கில் எவ்வாறு அமெரிக்காவின் அபிலாசைகளைப் பூர்த்தி செய்கின்றதோ அதே திறத்தில் அல்லது அதற்கும் மேலாக இந்திய அபிலாசைகளிற்கேற்ப தமிழ் ஈழம் செயற்படக் கூடும் என்பதை இந்தியா பரிசீலித்துப் பார்க்க வேண்டும். இந்த சாத்திய உண்மை காரணமாகவே சிங்கள தேசம் இந்தியாவிடம் இருந்து விலகி விலகிப் போகின்றது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழீழத்தின் நொய்மையான பொருளாதாரம் இந்தியாவின் பொருளாதார தொழில்நுட்பப் பரிமாற்றத்திற்கும் வழி வகுக்கும் நேரத்தில் புரிந்துணர்வை கட்டியெழுப்பவும் துணை போகும்.

தமிழ் ஈழம் இந்தியாவின் இறைமைக்கு என்றும் அச்சுறுத்தல் இல்லாது நேச நாடாக இருக்கும் சாத்தியக் கூறுகளே அதிகம் என்று தான் தோன்றுகின்றது. இந்தியா இத்திசையிலும் சிந்திப்பது இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் ஆட்சிக்கும் அமைதிக்கும் வழிவகுக்கக் கூடும்.

நன்றி>சிந்து
http://ilanthirayan.blogspot.com/2006/01/b...og-post_04.html
.

.
Reply
#2
மேற்கூறிய கட்டுரையில் சுட்டிக்காடிய திசையில் தற்போதய இந்திய கொள்கை வகுப்பாளர்கள் சிந்திப்பதாகா உலவும் அண்மைய 'வதந்திகளை' யாரவது அறிந்தீர்களா?அவ்வாறன ஒரு மாற்றம் உண்மயிலேயே ஏற்பட்டுள்ளதா?
Reply
#3
நடக்க வேண்டியதுதான்... நடக்கும் எண்டு நம்புவோம்.....
::
Reply
#4
எனக்குத் தோன்றுவது என்னவென்றால் ராஜபக்ச அரசாங்கம் மேற்குலகை விட இந்தியாவைத் தான் அதிகம் நம்பியிருந்தது. இதனால் தான் மேற்குலகிலிருந்து தூரவே நின்று கொண்டிருந்தது.

ஆனால் இப்போது இந்தியா கையை விரித்து விட்டதால் வேறு வழி இன்றி பிசைந்து கொண்டிருக்கின்றது. உண்மையில் தலைவர் கொடுத்த அடி சிறப்பானது. இதைத்தான் பாலகுமார் அண்ணா 3வது சுனாமி எனச் சொல்லியிருக்க வேண்டும்.

எனவே களம் இப்போது எமக்குச் சார்பாக நகர்வதாகவே நான் உணர்கின்றேன். எதுவானாலும் நாம் அவதானமாக இருக்கவேண்டும்.
[size=14] ' '
Reply
#5
நன்றி பிருந்தன் இணைப்பிற்கு!

* இந்திய மாநில தேர்தல்கள் நெருங்குகின்றது!
* அதைவிட தமிழ்நாட்டு பிரதிநிதிகளின் துணையின்றி ஆட்சியை தொடரமுடியாத மத்திய அரசு!
* தமிழ்நாட்டில் கட்சி பேதமின்றி ஆரம்பித்திருக்கும் ஈழ்மக்களுக்கான ஆதரவலை!
* இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள்/கொலைக்கலாச்சாரம் பகிரங்கமாக ஆதரிக்க முடியாத அளவிற்கு சென்றுவிட்டமை!

... போன்ற சில காரணங்களுக்காக இந்திய ஆளும்வர்க்கம் கொஞ்சம் அடக்கி வாசிக்க முற்படுவதாகவே நினைக்கிறேன். மீண்டும் தமிழகத்தில் ஒலிக்கத்தொடங்கியுள்ள அரசியல் குரல்களின் வல்லமையைப் பொறுத்தே மத்தியில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது! இதுவரை எமக்காக ஒலித்த "நெடுமாறன், வைகோ, திருமாவளவன், ராமதாஸ், ..." போன்றோர்களுடன் "கலைஞர்" இணைந்திருப்பது ஒரு பாரிய மாற்றத்தை இந்திய கொள்கை வகுப்பாளர்களிடம் ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது. அதைவிட அண்மையில் சூழ்நிலைகளாலோ அல்லது நிஜமாகவோ தமிழக முதலமைச்சர், இலங்கை ஜனாதிபதியை சந்திக்க மறுத்த நிகழ்ச்சியும், மத்திய கொள்கை வகுப்பாளர்களுக்கு சங்கடங்களை ஏற்படுத்தலாம்.

எங்கு, யாரிடமாவது மாற்றங்கள் ஏற்படுகிறதோ இல்லையோ, எம் பலமே எதையும், எப்பவும் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும்.
" "
Reply
#6
cannon Wrote:நன்றி பிருந்தன் இணைப்பிற்கு!

* இந்திய மாநில தேர்தல்கள் நெருங்குகின்றது!
* அதைவிட தமிழ்நாட்டு பிரதிநிதிகளின் துணையின்றி ஆட்சியை தொடரமுடியாத மத்திய அரசு!
* தமிழ்நாட்டில் கட்சி பேதமின்றி ஆரம்பித்திருக்கும் ஈழ்மக்களுக்கான ஆதரவலை!
* இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள்/கொலைக்கலாச்சாரம் பகிரங்கமாக ஆதரிக்க முடியாத அளவிற்கு சென்றுவிட்டமை!

... போன்ற சில காரணங்களுக்காக இந்திய ஆளும்வர்க்கம் கொஞ்சம் அடக்கி வாசிக்க முற்படுவதாகவே நினைக்கிறேன். மீண்டும் தமிழகத்தில் ஒலிக்கத்தொடங்கியுள்ள அரசியல் குரல்களின் வல்லமையைப் பொறுத்தே மத்தியில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது! இதுவரை எமக்காக ஒலித்த "நெடுமாறன், வைகோ, திருமாவளவன், ராமதாஸ், ..." போன்றோர்களுடன் "கலைஞர்" இணைந்திருப்பது ஒரு பாரிய மாற்றத்தை இந்திய கொள்கை வகுப்பாளர்களிடம் ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது. அதைவிட அண்மையில் சூழ்நிலைகளாலோ அல்லது நிஜமாகவோ தமிழக முதலமைச்சர், இலங்கை ஜனாதிபதியை சந்திக்க மறுத்த நிகழ்ச்சியும், மத்திய கொள்கை வகுப்பாளர்களுக்கு சங்கடங்களை ஏற்படுத்தலாம்.
<b>
எங்கு, யாரிடமாவது மாற்றங்கள் ஏற்படுகிறதோ இல்லையோ, எம் பலமே எதையும், எப்பவும் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும்.</b>

இது தான் எனது கருத்தும். எந்த நாடுமே தன் நலனுக்கு பின தான் எம்மைப் பற்றி சிந்திக்கும். ஆகவே நாமே எம்மை காத்துக் கொள்ளவேண்டியது தேவையாகும்
[size=14] ' '
Reply
#7
இந்தியா ஒரு போதும் முற்றுமுழுதாக ஈழத்தமிழருக்கு சார்பாக நடந்ததும் இல்லை...இனி நடக்க போவதும் இல்லை!

இந்தியா எமக்கு சார்பாக நடந்திருக்க கூடும்... ஈழத்தில் பெரும்பான்மை இனத்தினால் அடக்கி ஒடுக்கபடுவது எந்தவகையிலும் இந்தியாவின் மாநிலங்களூடன் தொடர்பற்ற ஒரு இனமாக இருந்திருந்தால்!
இந்தியா தூங்கும் போதும் காலாட்டிகொண்டே தூங்கும்..
அவ்ளோ பயம் அடுத்த நிமிடம் அதன் இறையாண்மைக்கு என்னாகுமோ என்று!

உலகத்திலேயே இந்தியா போல ஒரு நாடு இல்லை!
இருந்தாலும் அது ஜனநாயக அரசியல் வழிமுறையை பின்பற்றி செயற்படுவதாக இருக்காது!

உலகில் இருக்கக்கூடிய பல நாடுகள் போல் சில மடங்கு பரப்புள்ள ஒவ்வொரு மாநிலங்கள்!
ஒவ்வொரு மொழிகள்! ஒவ்வொரு அரசியல் முறைமைகள் கலாச்சாரங்கள்..ஒவ்வொரு மாநில எல்லையிலும் சோதனை சாவடிகள்... என்று இத்தனையயும் தாண்டிதான் "நமது பிரதமர்" என்று அத்தேச மக்கள் அழைக்கிறார்கள்... அல்லது அழைக்க வைக்கப்படுகிறார்கள்!

இன்றைக்கு தமிழ்நாட்டில் எமக்காய் குரல் கொடுக்கும் அரசியல் சக்திகளின் அழுத்ததினால்தான் இந்தியா எமக்கு எதிராய் செயற்பட தயங்குகிறது என்று நாம் நினைத்தால் அது அதீத கற்பனை! மாற்றுவழியை அது சுலபமாக பெற்றுக்கொள்ளும்!! ...
அரசியல் வியாபாரம் என்று ஆகிவிட்ட இன்றைய நிலையில்!

ஒரு சர்வதேச பத்திரிகையாளர் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியதற்காகவே எந்தவிதத்திலும் அது தனக்கு பாதிப்பு இல்லையென்று தெரிந்தும்....ராஜீவ் கொலை வழக்கு பற்றி பூச்சாண்டி காட்டி...உடனடியாக இந்தியா தனது படையை அனுப்பி பிரபாகரனை கைது செய்யவேண்டும் என்று திடீர்தேசப்பற்று காட்டிய ஜெயலலிதா போன்றவர்களை விலைக்கு வாங்கி நெருக்கடியை சமாளிக்க இந்தியாவுக்கு எவ்வளவு நேரம் செல்லும்?

இன்று எமக்காய் ஆதரவுதரும் சக்திகளின் கருத்துக்கு மதிப்பு கொடுக்கிறது..எப்படியென்றால் "பிடி என்கையில் இருக்கிறது" என்ற நிலமையில்.. அது கொஞ்சம் தளர்ந்தாலும் இந்தியா மாற்றுவழியை நாடும்!

தற்போதைய சூழ்நிலையில் எமக்கு ஆதரவு தரும் சக்திகளை கட்டாயம் அணைத்து போகவேண்டும்தான்..
எமக்கு சாதகமாயுள்ள நிலைமகளின் அதியுச்ச பயன்பாட்டை பெற்றேயாக வேண்டும்தான்...

ஆனால் எம்முடன் தோழ்கொடுக்கும் தமிழக உறவுகள்
கொஞ்சம் ஓவெரா உணர்ச்சி வசபடுகிறார்கள் என்றே நினைக்கின்றேன்!

"இலங்கைக்கு உதவி செய்தால் தமிழகம் இன்னொரு காஷ்மீர் ஆகும்" என்கிறீர்களே...வேணாமே!


எங்களூக்காய் நீங்கள் செய்யும் உதவிகள் நன்றியோடு பார்க்கிறோம்! பார்க்கப்படும்! ஆனால் மேற் குறிப்பிட்ட வசனம் வேண்டவே வேண்டாம்!

தமிழனுக்கு உதவி செய்தால் என்னென்ன சாதகம் பாதகம் எமக்கு என்று ஆராய்ந்து கொண்டிருக்கும் இந்திய வெளியுறவுத்துறைக்கு நீங்களே தகவல் கொடுக்கிறீர்கள்! 8)
-!
!
Reply


Forum Jump:


Users browsing this thread: