Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இன்று போய் நாளை வா!
#1
<b>இன்று போய் நாளை வா! Atha Gila Heta Enda!</b>

<i>வடக்குக் கிழக்கினைச் சிங்கள தேரவாத பௌத்தத்திற்கு உரிமைகோரும் Ven. Ellawala Medhananda Thera The Sinhala Buddhist Heritage in The East and The North of Shri Lanka என்ற நுல் பற்றிய விமர்சனம் </i>
சாணக்கியன் 07.01.2005, சனி.

இலங்கையில் அன்று, முடிவுகளைத் தாமாகவும், சரியாகவும் எடுக்கும் பக்குவ நிலையை அடையாத சிறுவர்கள, தேரவாத பௌத்த பிக்குகளாக ஆக்கப்பட்டும், கத்தோலிக்க பாதிமார்களாக ஆக்கப்பட்டும் வந்துள்ளனர். ஆனால், இன்று, எந்தவித முடிவுகளையும் தாமாகச் சிந்தித்து எடுக்க முடியாத நிலையில் இருக்கும் சிறுவர்களுக்கு இவை தொடரும் அதே வேளையில், தென்னிலங்கையில் 40,000 இற்கு மேற்பட்ட சிறுவர்கள் பாலியல் களியாட்டங்களுக்குப் பயன்படுத்தப்பட்டு வருவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. தென்னிலங்கையில் சிறுவர்கள் ஆயிரக்கணக்கில் பாலியல் களியாட்டங்களுக்குப் பயன்படுத்தப்படுவதுபோன்ற நிலை, வடக்குக் கிழக்கில், இல்லை என்பது இங்கு அவதானிக்கத்தக்கது.

அதேநேரத்தில், வடக்குக் கிழக்கில், போரினால் தாய், தந்தையரை, சகோதர, சகோதரிகளை இழந்த சிறுவர்களும், படைகளின் கொடுரங்களை அனுபவித்த குடும்பங்களைச் சேர்ந்த சிறுவர்களும், தம்மை விடுதலை அமைப்பில் இணைத்துக் கொள்வதைக் காணமுடிகின்றது.

விடுதலை அமைப்பில் ஒருவர் இணைந்து கொள்வதும், அவர் ஆயுதப் பயிற்சியை பெறுவதும், அவர் சிறுவனாக இருக்கும்போதே ஆயுத நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுவார் என்பதற்கில்லை. ஒரு விடுதலை அமைப்பில், ஆயுதப்படை ஒரு பகுதி மாத்திரமே!

ஆனால், ஐக்கிய நாடுகளும், அமெரிக்கா போன்ற நாடுகளும் சிறுவர்கள் உரிமைகள் பற்றிப் பேசும்பொழுதும், தென்னிலங்கையில் அதி கூடிய எண்ணிக்கையாக 40,000 இற்கு மேற்பட்ட சிறுவர்கள் பாலியல் களியாட்டங்களுக்குப் பயன்படுத்தப்படுவதையோ, அல்லது சமயக் குருமாராக மாற்றப்படுவதையோ கண்டு கொள்ளாது, விடுதலைப் போராட்டத்தில் இணைவதைப் பற்றியே பெரிதாகப் பேசுவதையும்@ அதனை இல்லாது செய்யவேண்டுமென ஓலமிடுவதையும்தான் காணமுடிகிறது.

இன்று இலங்கையின் பிரதம மந்திரியாக இருந்துவரும் மதிப்புக்குரிய ரட்ணசிறி விக்ரமநாயக்க அவர்கள் முன்னர் பிரதம மந்திரியாகவும், புத்த சாசன அமைச்சராகவும் இருந்து வந்தார். அவர் இலங்கையில் தேரவாத பௌத்தத்தைக் காப்பாற்றவென, ஆயிரம் பேரை உடனடியாகப்; புத்த பிக்குகளாக ஆக்கும் ஒரு திட்டத்தினை பெரும் விளம்பரத்துடன் நடைமுறைப்படுத்தியிருந்தார். 2001ஆம் ஆண்டில், நு}ற்றுக் கணக்கான 7 வயது முதல் 15 வயதுவரையான பாடசாலை மாணவர்கள் பௌத்த பிக்குகளாக ஆக்கப்பட்டனர். பொலனறுவ மாவட்டத்தில் னுiஅடிரடபயடய என்ற இடத்தில் மாத்திரம், 118 சிறுவர்கள் புத்த பிக்குகள் ஆக்கப்படும் ஒரு பெரிய நிகழ்ச்சி யுூன் மாதத்தில் கோலாகலமாக நடைபெற்றிருந்தது. இதைப் போன்று, பல இடங்களில் சிறுவர்கள் புத்த பிக்குகளாக ஆக்கப்படும் நிகழ்ச்சிகள் இடம்பெற்று வந்துள்ளன. ஆனால், இங்கு அவதானிக்கப்படவேண்டியது என்னவென்றால், சிங்கள ஆளும் வர்க்கங்களின் சிறுவர்கள் எவரும் இலங்கையில் தேரவாத பௌத்தத்தினைக் காப்பற்றப்; பிக்குகளாக ஆக்கப்படவில்லை! கிராமப் புறங்களின் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த சிறுவர்கள்தான், பெற்றோரின் வற்புறுத்தலால் புத்தபிக்குகளாக ஆக்கப்பட்டனர்!! சிறீ லங்காப் படைகளிலும், கிராமங்களைச் சேர்ந்த வறியவர்கள்தான் பெரும்பாலும் சேர்க்கப்பட்டு, போர்ப் பிராந்தியங்களுக்கு அனுப்பப்படுகின்றனர். அதாவது: வறிய சிங்கள இளைஞர்களே, இலங்கையின் போலி ஜனநாயகத்தைக் காப்பாற்ற, ஆளும் வர்க்கங்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர்!

சிறுவர்களைப் பிக்குகள் ஆக்கும் இந்த நிகழ்ச்சிகளில், வறிய தாய்மார்களும், சிறுவர்களது சகோதர, சகோதரிகளும், நெருங்கிய உறவினர்களும், கண்ணீருடன் நின்றதைத்தான் காண முடிந்தது!

இது சிறுவர் உரிமை மீறலா, இல்லையா என்பதற்குச் சரியான விடை காணப்படவேண்டும். இதற்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டுமா, இல்லையா என்பதைப் பற்றி, ஐக்கிய நாடுகள் எப்போதாவது வாதித்துள்ளதா என்பதும் தெரியவில்லை!

ஆனால், இன்று பிரதமராக ஆக்கப்பட்டுள்ள அதே ரடணசிறி விக்ரமநாயக்க சிறீ லங்காப் படைகளின் அடாவடித் தனத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த வடக்குக் கிழக்குச் சிறுவர்கள் விடுதலைப் புலிகள் அமைப்பில் சேருவது பற்றிக் கூக்குரல் இடுவதை என்னவென்று சொல்லலாம்?

இதில் வியப்பானது என்னவென்றால், மதிப்புக்குரிய மேதானந்த தேரர் போன்ற தேரர்களும், இது பற்றிப் பேசுவதே!

இங்கு அவதானிக்கப்படவேண்டிய மிக முக்கிய மற்றொரு விடயம் என்னவென்றால், சுய சிந்தனை அடிப்படையில் சுய விருப்புடன் தன்னைப் பிக்குவாக ஆக்கிக்கொள்ளும் பக்குவத்தை அடைந்த ஒருவரே, பௌத்த போதனையை முழுமையாகக் கடைப்பிடித்து, பௌத்த போதனையைப் பரப்பும் நிலை உருவாகமுடியும்@ இலங்கையின் மனித சமூகமானது இன்பமான, மேன்மையான வாழ்க்கை வாழ உதவமுடியும். ஆனால், சுயமாகச் சிந்தித்து, சுயமாக முடிவுகளை எடுக்கமுடியாத நிலையில் பிக்குகளாக ஆக்கப்படும் சிறுவர்கள, பௌத்த போதனையை எவ்வளவுக்கு விரும்பிச் சரியாகக் கடைப்பிடிப்பர் என்பதும், அவர்கள் இலங்;கையில் பௌத்தத்தினைக் காப்பற்றுவார்களா என்பதும் கேள்விக்குரிய விடயங்களே. ஏனெனில், பௌத்தத்தின் அடிப்படைத் தத்துவம் மழெறடநனபந ஆகும், நடுவுப்பாதை ஆகும், அறம் ஆகும்!

இன்று சிங்கள தேசத்தில் புத்தபெருமானும், பௌத்தமும் கேவலப்படுத்தப்படும் நிலை உருவாகியமைக்கு, இதுதான் முக்கிய காரணமாகும். சுருங்கக் கூறினால், சிங்கள தேசத்தில் பௌத்த போதனையைக் காப்பாற்றுவதாயின், அதன் அரசியல்வாதிகளும், சமய, சமூகப் பெரியோர்களும், ஆசிரியர்களும், நிர்வாகிகளும், ஊடகங்கங்கள் என்பவையும், சிங்கள தேச மக்களின் அறிவையும், ஆராயும் வல்லமையையும் வளர்ப்பது}டாகப் புத்தபெருமானின் போதனையைச் சரியாக விளங்க உதவி, அதைக் கடைப்பிடிக்க உதவவேண்டியுள்ளதே அன்றி, வேறு விடயங்களைச் செய்வது}டாக அந்தப் பெரும் சேவையைச் செய்ய முடியாது.

சிங்கள தேசத்தில் புத்தபெருமானும், அவரது போதனையும், தேரவாத பௌத்த பிக்குகளாலும், தேரவாத பௌத்த மத பீடங்களாலும், பௌத்தத்தினை இலங்கையில் தாமே காப்பாற்றி வருவதாகச் சிங்கள மக்களுக்கும், உலகிற்கும் காட்டி வருபவர்களாலும்தான் உண்மையில் நிராகரிக்கப்பட்டு வருகின்றன, கேவலப்படுத்தப்பட்டு வருகின்றன.

இதை அறிந்து கொள்ளுமளவிற்குக் கூட, இவர்கள் தமது அறிவையும், ஆராயும் வல்லமையையும் போதிய அளவிற்கு இன்னும் வளர்த்துக்கொள்ளவில்லை!

இப்படிக் கூறும்போது, சிங்கள தேசத்தின் தேரவாத பௌத்த மத பீடத்தலைவர்களும், கற்றோர் எனப்படுபவர்களும், அரசியல்வாதிகளும், ஊடகங்களும், கொதித்து எழ முடியும். ஆனால், இக்கூற்றினை அவர்களால் நிராகரிக்கவே முடியாது.

..........
..................
........................

மேதானந்த தேரர், பேராசிரியர் அபய ஆர்யசிங்க போன்றவர்களது அறிவியலுக்குப் புறம்பான புலம்பல்களை ஏற்றுச் சிங்கள தேச ஆளும் வர்க்கம்; அறிவியலையும், அறத்தினையும் நிராகரித்து, தமிழ்த் தேசத்தின்மீது போரை ஆரம்பிக்க முற்பட்டால், அறிவியலின் பெயரிலும், அறத்தின் பெயரிலும் போரை வீரத்துடன் நடாத்துவதைவிட வேறு வழியே இல்லை.

இதற்குச் சிங்கள தேசத்தின் ஒரு பகுதி மக்களும், இந்தியா, ஜப்பான், ஏனைய நாடுகளும் புூரண உதவிகளைத் தமிழத் தேசத்திற்கு வழங்குவதுதானே அறமானது?
http://www.mousegroup.net/tamilsociety/07....a%20enda-01.htm
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)