Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஒரு யுத்தம் தான் தீர்வா?
#1
<b>ஒரு யுத்தம் தான் தீர்வா..?</b>
<i>-நிலாந்தன்-</i>
ஒலி வடிவில்: http://www.tamilnaatham.com/audio/2006/jan...n/20060108.smil
எல்லாச் சமாதான முயற்சிகளும் ஏதோ ஒரு வலுச்சமநிலையின் மீதே கட்டியெழுப் பப்படுகின்றன. பரஸ்பரம் இருதரப்பாலும் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரு வலுச்சம நிலையானது சர்வதேச சமூகத்தின் அங்கீகாரத்தைப் பெறும்போது குறிப்பிட்ட சமாதான முயற்சிகள் வெற்றிபெறுகின்றன. மாறாக சமாதானத்தில் ஈடுபடும் தரப்புக்கள் நிலவும் வலுச்சமநிலையை தமக்குச் சாதகமாக மாற்றமுடியும் என்று நம்புமாக இருந்தால் அல்லது வலுச்சமநிலை தனக்குப் பாதகமாய் மாறிவருகிறது என்று ஏதாவது ஒரு தரப்பு அஞ்சுமாக இருந்தாலும் அந்த வலுச்சமநிலை தளம்பத்தொடங்கிவிடும். அதாவது சமாதான முயற்சிகள் ஈடாடத் தொடங்கிவிடும்.

பொதுவாக வலுச்சமநிலை என்ற வார்த்தை அதன் போரியல் அர்த்தத்திலேயே பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் வலுச்சமநிலை எனப்படுவது தனிய யுத்தகள நிலவரங்களால் மட்டும் தீர்மானிக்கப்படுவதில்லை. அதற்கும் அப்பால் பின்வரும் காரணிகளும் ஒரு வலுச்சம நிலையை உருவாக்குவதில் தவிர்க்கப்படவியலாத பங்கை வகிக்கின்றன....
...
.....
......
இந்த எல்லாக் காரணங்களினாலும் வலுச்சமநிலை குழம்பிவிட்டது என்று மகிந்தவும் சரத்பொன்சேகாவும் நம்புகிறார்கள்.

இப்படிக் குழம்பிய வலுச்சமநிலை காரணமாக இருதரப்பும் தத்தமது நிலையை முன்னேற்றுவதற்காகவே ஒரு மென்தீவிர யுத்தத்தில் ஈடுபடுவதாகவும்இ ஒரு முழுத்தீவிர யுத்தத்தில் ஈடுபடும் நோக்கம் இருதரப்பிடமும் இல்லை என்றும் தமிழ் பகுதிகளில் இயங் கிவரும் சில சர்வதேச தொண்டர் நிறுவனங்களில் உள்ள சில மேல் நாட்டவர் கள் கருதுவதாக கொழும்பில் ஒரு தகவல் தெரிவிக்கிறது.

பொங்குதமிழ் படையின் தாக்குதல்களோ அல்லது ஆர்ப்பாட்டங்களோ ஊர்வலங் களோ வலுச்சமநிலையை மாற்றப்போது மானவை அல்ல. பதிலாக அவை வலுச்சம நிலை மாற்றப்படவேண்டிய அவசியத்தை முன்னுணர்த்துகின்றன என்பதே சரி.

வலுச்சமநிலை குழம்பிவிட்டது என்றாலோ அல்லது நிலவும் வலுச்சமநிலையை ஏதாவது ஒரு தரப்பு ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலோ அதன் அர்த்தம் ஒரு புதிய வலுச்சமநிலையை உருவாக்க அவர்கள் விரும்புகிறார்கள் என்பதே.ஒரு புதிய வலுச்சமநிலையை உருவாக்குவது என்பது இப்பத்தியின் தொடக் கத்தில் கூறப்பட்டது போல வலுச்சமநிலையைத் தீர்மானிக்கும் காரணிகளில் நிர்ணயகரமான மாற்றங்கள் ஏதும் நிகழ்ந்தாலேயே சாத்தியப்படும். அதன்படி ஒரு யுத்தம் ஒன்றின் மூலமோ அல்லது சர்வதேச மற்றும் பிராந்திய சக்திகளின் அதிகரித்த ஈடுபாடு அல்லது அதிகரித்த அழுத்தம் என்பவற்றின் மூலமாகவோதான் நிலவும் வலுச்சமநிலையை மாற்றலாம்.
....
......
அப்படியொரு யுத்தம் மூளும்போது அதில் பிராந்திய சக்திகளின் ஈடுபாடு எந்தளவுக்கு இருக்கும் என்பதன் அடிப்படையில் ஒரு புதிய வலுச்சமநிலை உருவாகும். அப்புதிய வலுச்சமநிலையே மற்றொருகட்டச் சமாதான முயற்சிகளின் ஆயுளையும் அவற்றுக்கிருக்கக் கூடிய வரையறைகளையும் தீர்மானிக்கும். அல்லது,அதுவும்கூட அதற்குமுந்திய எல்லா வலுச்சமநிலைகளையும் போல யுத்தத்தை மற்றொரு கட்டத்துக்கு ஒத்தி வைக்கப்போகும் மற்றொரு இடைத்தரிப்புக் காலத்துக்குரிய அடிப்படையாக அமைதல் கூடும்.
http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=8&
Reply
#2
போர் மூலம் தான் சிங்களவரிடமிருந்து நீதியைப் பெற்றுக் கொள்ளமுடியும் என்று இப்போது முடிந்த முடிவாகிவிட்டது: கா.வே.பாலகுமாரன்
http://www.eelampage.com/?cn=23190
Reply
#3
தினம் சராசரி பத்து.. இப்படியிருக்க யுத்தம் இனிமேல்தான் ஆரம்பமாகவேண்டுமோ?

பலம் பலவீனம் இனிமேல்தான் கணிக்கப்படவேண்டுமா?

விட்டால் மொட்டையடிச்சு ஏறிக்குந்திடுவியள் போலிருக்கே..
8
Reply
#4
Quote:......
அப்படியொரு யுத்தம் மூளும்போது அதில் பிராந்திய சக்திகளின் ஈடுபாடு எந்தளவுக்கு இருக்கும் என்பதன் அடிப்படையில் ஒரு புதிய வலுச்சமநிலை உருவாகும். அப்புதிய வலுச்சமநிலையே மற்றொருகட்டச் சமாதான முயற்சிகளின் ஆயுளையும் அவற்றுக்கிருக்கக் கூடிய வரையறைகளையும் தீர்மானிக்கும். அல்லது,அதுவும்கூட அதற்குமுந்திய எல்லா வலுச்சமநிலைகளையும் போல யுத்தத்தை மற்றொரு கட்டத்துக்கு ஒத்தி வைக்கப்போகும் மற்றொரு இடைத்தரிப்புக் காலத்துக்குரிய அடிப்படையாக அமைதல் கூடும்.


ஈழத்தில் நடந்த ஒவ்வொரு யுத்தமும், எமது போராட்டத்தை ஒவ்வொரு வளர்ச்சி நிலைக்கு இட்டுச் சென்றது. இறுதியாக நடந்த ஈழப்போர் கூட எம்மை சர்வதேசத்துக்கு இழுத்தது. நிச்சயமாக நடைபெறப்போகும் இறுதியுத்தமும் "தெற்கு சூடானிலோ, கிழக்கு தீமோரிலோ" சர்வதேசம் ஏற்படுத்திய தீர்வை எமக்குத்தரும்!!
" "
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)