Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஒரு பொங்கல் காலத்து நினைவு
#1
ஒரு பொங்கல் காலத்து நினைவு

பலருக்கும் உங்கள் சிறிய வயது காலத்தில் நடந்த சில சின்ன சின்ன சம்பவங்கள் மறக்காமல் காலம் முளுவதும் அவ்வப்போ நினைவுக்கு வரும் அது போல பொங்கல் நாள் எண்டதும் எனக்கும் ஒரு சிறு வயது நினைவு.

அப்போ எனக்கு பதின்மூண்று வயதிருக்கும் ஒரு பொங்கல் நாள் வழைமை போல குடும்பமாய் முற்றத்தில் அழகிய கோலம் போட்டு புது பானையில் பொங்கலிட்டு சந்தோசமாய் நாங்களெல்லாம் அண்ணா அக்கா தம்பி தங்கையெண்று புத்தாடையுடுத்து.

வெடி கொழுத்தவும் வாணம் விடவும் சண்டை பிடித்து சண்டை பிடித்து பெரியோர்கள் விலக்கு பிடித்து மகிழ்ச்சியாக கொண்டாடிய ஒரு பொங்கல் நாள்.எங்களுரில் எங்களிற்கு மிகவும் நெருங்கிய நட்பாக இரண்டு கிறிஸ்தவ குடும்பங்கள் இருந்தன.

பண்டிகை காலங்களில் நாங்கள் அந்த குடும்பங்களிற்கும் அவர்கள் தங்கள் பண்டிகையின்போது எமக்கும் பலகாரங்கள் பரிமாறி மகிழ்ச்சியை தெரிவிப்பதுண்டு.அந்த பொங்கல் நாளன்றும் பொங்கல் முடிய அம்மா இரண்டு பெரிய தட்டுகளில் (தாம்பாளம் என்றும் அழைப்பதுண்டு) புக்கை பலகாரம் எல்லாத்தையும் வைத்து பக்கத்தில் உள்ள கிறீஸ்தவரின் விட்டிற்கு தங்:கையிடம் கொடுத்து அனுப்பி விட்டு கொஞ்சம் தூரத்தில் உள்ள டேவிட் அங்கிள்(அந்த வீட்டு காரரை எல்லாரும் அப்பிடித்தான் அழைப்போம்)

பலகாரம் கொண்டு பொக அண்ணனை தேடினார் அண்ணனை காணவில்லை உடனே அவரது பார்வை எனது பக்கம் திரும்பியது என்னை பாத்து நீ கொண்டு பொய் குடுத்திட்டு வா என்றார் நான் உடனேயே என்னாலை போக ஏலாது எண்டு மறுத்திட்டன் காரணம் டேவிட அங்கிள வீட்டில் உள்ள புலிதான் காரணம்.உடைனை கே;காதையுங்:கோ உங்கடை ஊரிலை வீடுகளிலை புலியெல்லாம் வளத்தைவையா எண்டு.

அவை வளர்த்த அல்சேசன் ரக நாய் அதற்கு பெயர் ரைகர் அதன் பெயருக்கேற்றால் போல் அந்த நாயும் அவர்கள் வீட்டு பெரிய வாசல் இரும்புகதவில் இரண்டு முன்னங் கால் களையும் தூக்கி போட்டுவிட்டு நிமிரந்து நின்றால் அது என்னை விட பெரிதாய் இருக்கும்.

அப்படியே நின்ற படி வீதியால் போவோர் வருவோரை ஒரு பெரிய சாம்ராச்சியத்தின் அரசனை போல அலட்சியமாக பார்த்தபடி நிற்கும். எல்லோரும் மரியாதையாக தலையை குனிந்தபடி வீதியின் மறு கரையால் அந்த நாய்க்கு மரியாதை செய்தபடி பொனால் பிரச்சனை இல்லை யாராவது விசயம் தெரியாமல் இவர் என்ன பெரிய ஆளா என்று நினைத்து தலையை நிமித்தி பார்த்தால் உடனே ரைகர் அவர்களை பார்த்து சின்னதாய் ஒரு உர்ர்ர்ர்ர்...உடனே அவர்கள்: அடங்கி போய்ட விடுவார்கள்.

இப்ப சொல்லுங்கள் அந்த வீட்டிற்கு நீங்கள் பலகாரம் கொண்டு போவீங்களா?? ஆகவே நான் மறுக்க அக்காவோ டேய் நீயெல்லாம் ஒரு ஆம்பிளை பிள்ளை உன்னை நம்பி நானெல்லாம் என்ணெண்டு வாறது எண்டு எனது வீரத்தை செதனை செய்தார் அத்துடன் விடவில்லை யுரேகா கேள்வி பட்டாலே பகிடி பண்ணுவாள் வீட்டு கேற் புூட்டித்தான் இருக்குநீ தூரத்திலை நிண்டு கூப்பிடு எண்றார்.

யுரேகா என்பது டேவிற் அங்கிளின் மகள் எனது வயதுதான் அடிக்கடி வீட்டிற்கு வருவாள் இருவரும் டா டி போட்டு கூப்பிடுகிற நட்பு யுரேகாவின் பெயரை சொல்லி எனது ஆண்மையையும் வீரத்தையும் வீட்டார் கேலி செய்ததால் அரை மனதுடன் ஒத்து கொண்டேன்.அம்மா தட்டை தந்தார் கன மாக தான் இருந்தது .

உடனே அக்கா எனது வேட்டியாக மாறியிருந்த அப்பாவின் பட்டு சால்வையை ஒரு சடம்பு கயிறு கொண்டு இறுக்க கட்டி விட்டு கவனம் வேட்டி களருதெண்டு பலகார தட்டை கை விட்டிடாதை அதுதான் கட்டி விட்டிருக்கிறன் என்றார். என்ன பாசம் எனது மானம் போனாலும் உனக்கு பலகாரதட்டுதான் முக்கியம் என்று சொல்லி விட்டு டேவிற் அங்கிளின் வீட்டுக்கு அருகில் போனதும் நின்று அந்த ரைகர் நிக்கிறதா என்று வடிவாக பார்த்தேன் காணவில்லை

அப்பாடா நிம்மதி வீட்டுக்கு பின்னாலை கட்டி போட்டிருக்கு போலை என்று நினைத்தபடி எதற்கும் முன்னெச்சரிக்கையாக ஒரு சத்தம் குடுத்து பாப்பம் என்று நினைத்த தூரத்தல் நின்றவாறு ஒரு முறை டேவிற் அங்கிள் என்று கூப்பிட்டேன் எனக்கு தெரியும் உள்ளெ இருப்பவர்களிற்கு கேட்டிருக்காது என்றாலும் ரைகர் மதிலுக்கு பின்னாலை ஒளிஞ்சிருந்தாலும் சத்தத்திற்கு வெளியாலை வரும் என்றுதான்.

ஆனாலும் எந்த சத்தத்தையும் காணவில்லை உடனே பலகார தட்டை தோளில் வைத்து பிடித்தபடி கம்பீரமாக நடந்து போய் அவர்களின் இரும்பு கதவு கொளுக்கியை தட்டி விட்டு கதவை காலால் உதைந்தது தருணம் அவர்களது குறோட்டன் செடிகளினுள் உரு மறைப்பு செய்து கொண்டு படுத்திருந்த ரைகர் வவ்வென்றபடி பாயந்தது. அய்யோ அம்மா என்று கத்தியவாறு பலகார தட்டை சுழற்றியெறிந்து விட்டு வேட்டியை கையில் தூக்கி பிடித்படி ஓட தொங்கினேன் சத்தம் கேட்டு வெளியே வந்த டேவிற் அங்கிள் குடும்பத்தினர் தம்பி நில்லும் நாய் கட்டிதான் இருக்கு என்று சத்தம் கேட்டு ஒரளவு தூரம் ஒடிய நான் நின்று திரும்பி பார்த்தேன்.

கட்டியிருந்த ரைகரின் சங்கிலியை கையில் பிடித்து இழுத்து காட்டியபடி யுரேகா கட்டியிருக்கிற நாய்க்கு இவ்வளவு பயமா?? என்றுவிழுந்து விழுந்து சிரித்து கொண்டிருந்தான்.எனக்கோ வாட்லு போரில் தோத்து போன மாவீரன் நெப்போலியனை போல அவமானமாய் இருந்தது ( அதற்காக நெப்போலியன் தோத்த போது பக்கத்திலை நிண்டு பாத்தியா எண்டு கேக்காதையுங்கோ எனக்குள் ஒரு கற்பனைதான்)இப்போ பயம் போய் அவமானமும் அழுகையாகவும் வந்தது.

டேவிற் அங்கிள்கீழே கிடந்த தட்டை கையிலெடுத்தபடி என்னைஅழவேண்டாம் என்று தேற்றியணைத்தபடி எங்கள் வீட்டிற்கு கூட்டி வந்து விட்டு விட்டு போய் விட்டார்.பின்னர் எங்கள் வீட்டில் எல்லாரும் என்னை கிண்டலடிக்க தொடங்கி விட்டனர்.சில நாட்களின் பின்னர் நான் எனது நண்பர்களுடன் வீதியால் போய் கொண்டிருந்த போது எதிரே யுரேகா வர நானும் எடுப்பாய் எங்கடி போறாய் எண்டு அவளை பாத்து கேக்க அவள் பதிலுக்கு ரைகர் வவ் வவ் என்று விட்டு ஒடி விட்டாள்.

எனக்கு மீண்டும் நெப்போலியன் தோத்தது போல அவமானம் இரடி இரு உன்ரை ரைகருக்கு ஒரு நாளைக்கு சாப்பாட்டுக்கை பொலிடோல்: (ஒரு வகை கிருமி நாசினி)ஊத்தி கொலை செய்யாட்டி என்ரை பேரை மாத்து எண்று சபதம் எடுத்து கொண்டேன் அந்த சபதம் கடைசி வரை நிறை வேறவில்லை. டேவிற் அங்கிள் குடும்பமும் பின்னர் நாட்டு பிரச்சனையால் அவுஸ் ரேலியாவிற்கு குடி பெயர்ந்து போய் விட்டனர் என்று கேள்விப்பட்டேன்.தொடர்புகள் இல்லை ஆனாலும் இந்த பொங்கல் நாளில் அவர்கள் குடும்பமும் எங்கள் குடும்பத்தை ஒரு கணம் நினைப்பார்கள் என எண்ணு கிறேன்
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
Reply
#2
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> ஆகா சாத்திரி அண்ணாக்கு அவ்ளோ பயமா? நல்ல காலம்..மோகன் அண்ணா டைகர் வளர்க்கல... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
..
....
..!
Reply
#3
அட சாத்திரி நீர் யுரேகா யுரேகா என்று சொல்ல எனக்கும் வேறோர் ஞர்பகம தான் வந்தது. அந்த ரைகர் கட்டியிருக்காமல் பாய்ந்து வந்து உமது வேட்டியை உருவ நீரும் பயத்தில் யுரேகா யுரேகா என்று கத்தியபடி ஓட ஊரவர்களும் நீரும் ஏதோ கண்டு பிடித்து விட்டீர் என்றல்லோ நினைத்திருப்பார்கள்.:roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
உண்மையில் அதுதான் நடந்திருக்கும்.
Reply
#4
ஆகா சாத்திரி இப்படி நாய்க்கு பயந்து ஒடி இருக்கிறீர்களா?
உங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள் சாத்தரி....

Reply
#5
Vasampu Wrote:அட சாத்திரி நீர் யுரேகா யுரேகா என்று சொல்ல எனக்கும் வேறோர் ஞர்பகம தான் வந்தது. அந்த ரைகர் கட்டியிருக்காமல் பாய்ந்து வந்து உமது வேட்டியை உருவ <b>நீரும் பயத்தில் யுரேகா யுரேகா என்று கத்தியபடி ஓட ஊரவர்களும் நீரும் ஏதோ கண்டு பிடித்து விட்டீர் என்றல்லோ நினைத்திருப்பார்கள்</b>.:roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
உண்மையில் அதுதான் நடந்திருக்கும்.

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
..

<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Reply
#6
ஒய் வசம்பு என்ன குசும்பா எங்கடை ஊருக்கு பெயர் ரோமாபுரி எங்கடைஊர் விதானைக்கு பெயர் யுலியஸ் சீசர் நான் யுரேகா யுரேகா எண்டு கத்தி கொண்டு ஓட விதானை ஓடியந்து நான் எதையோ கண்டு பிடிச்சிட்டன் எண்டு நினைச்சு ஒரு மாதத்து மண்ணெண்ணை கூப்பன் இலவசமா தந்தவர் :evil: :twisted: :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
Reply
#7
யோவ் சாத்திரி இது ரொம்ப அநியாயம். யுலியஸ் சீசரை ஒப்பிட்டது தான் ஒப்பிட்டீர் கடைசி ஒரு அரசாங்க அதிபருடனாவது ஒப்பிட்டிருக்கலாம். போயும் போயும் உமக்கு ஒரு விதானையா கிடைத்தார் அவருடன் ஒப்பிட :roll: :roll:
Reply
#8
நன்றி சாத்திரி ஐயா. உங்கள் அனுபவம் சுவாரசியமா இருந்துது.
Reply
#9
<b>ஆகா சாத்திரி அனுபவத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி
எனக்கும் நாய் என்றால் பயம். எங்கட வீட்டுக்கு பக்கத்துலயும் ரைகர் மாரி ஒரு நாய் நின்றது.</b> Cry
<b> .. .. !!</b>
Reply
#10
அனுபவம் அருமை சாத்திரியாரே...
Reply
#11
பொங்கல் காலத்து பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி சாத்திரி. பழைய சம்பவங்களை அசைபோடுவதே ஒரு சுகம் தான்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply


[-]
Quick Reply
Message
Type your reply to this message here.

Image Verification
Please enter the text contained within the image into the text box below it. This process is used to prevent automated spam bots.
Image Verification
(case insensitive)

Forum Jump:


Users browsing this thread: 10 Guest(s)