Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஈழத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்போர் அமெரிக்க இராணுவ உதவியையும்
#1
ஈழத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்போர் அமெரிக்க இராணுவ உதவியையும் எதிர்க்க வேண்டும்

சோஷலிச சமத்துவக் கட்சியின் தலைவர் விஜே டயஸ்

ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்

ஈழத்துக்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள் அமெரிக்காவின் இராணுவ ரீதியான உதவியினையும் எதிர்க்க முன்வர வேண்டுமென சோசலிச சமத்துவக் கட்சியின் தலைவர் விஜே டயஸ் தெரிவித்தார்.
கடந்த செவ்வாய்க்கிழமை கொழும்பிலுள்ள வர்த்தக சமூகத்தினர் மத்தியில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜெப்ரி லான்ஸ்ரட் ஆற்றிய உரை குறித்து கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது பற்றி தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
அமெரிக்கத் தூதுவரின் கருத்தானது தமிழ் மக்களைப் போலவே சிங்கள மக்களையும் புண்படுத்தியுள்ளது. வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அமெரிக்கா சென்று திரும்பியதையடுத்தே இக் கருத்து அமெரிக்கத் தூதுவரினால் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்க வெளிவிவகார அமைச்சரான கொண்டலீஸா ரைஸ் கூட இவ்வாறான ஒரு கருத்தினை தெரிவித்திருக்கவில்லை. இந்நிலையில் இலங்கைக்கான அமெரிக்க தூதரின் கருத்து அச்சுறுத்தல் மிக்கதொன்றாகவே கருதப்பட வேண்டியுள்ளது.
அமெரிக்காவினைப பற்றிய எதிர்ப்பு உலகளாவிய ரீதியில் பரந்து காணப்படுகிறது. இலங்கையர்களும் பகைமை உணர்வுடனே அமெரிக்காவை நோக்குகின்றனர். இந்நிலையில் அமெரிக்காவின் இராணுவ ரீதியான உதவிகள் நிலைமையை மேலும் சிக்கலாக்கும்.
ஈராக்கில் உயிரியல் இரசாயன ஆயுதங்கள் இருப்பதாகக் கூறி படையெடுத்த அமெரிக்கா இன்று பயங்கரவாதிகளென்ற போர்வையில் அப்பாவி ஈராக்கியர்களை கொன்று குவித்து வருவதுடன், அதன் பார்வை தற்போது ஈரான் மீதும் திரும்பியுள்ளது.
இலங்கையிலும் பயங்கரவாதப் பிரச்சினையெனக் கூறி இராணுவத்திற்கு ஆயுதங்கள் வழங்க அமெரிக்கா முயல்கிறது. இவ்வாயுதங்கள் அப்பாவி தமிழ் மக்களை கொன்று குவிக்கவே உதவும்.
உலகம் பூராகவும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட வேண்டுமென கருதும் அமெரிக்காவின் நவீன காலனித்துவ சிந்தனையானது இலங்கைக்கு நீண்டகால மற்றும் குறுகியகால பாதகங்களையே ஏற்படுத்தப் போகிறது.
எனவே, அமெரிக்காவின் இராணுவ உதவிகள் குறித்து மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் சிந்திக்க வேண்டிய கட்டாயமுள்ளது. ரணில் விக்கிரமசிங்கவின் அமெரிக்க உறவு குறித்து அன்று வினாவெழுப்பிய இன்றைய அரசாங்கம் அமெரிக்காவிடமிருந்து எவ்வாறு இராணுவ ரீதியான உதவிகளைப் பெறமுடியும்?
தமிழர்கள் இந்நாட்டில் சலக உரிமைகளும் பெற்று வாழ உரித்துடையவர்கள். இவர்களின் உரிமையினை இராணுவ ரீதியாக அடக்க முயலுவது கண்டிக்கத்தக்கதும் ஏற்றுக் கொள்ள முடியாததும் என்றார்.
http://www.thinakural.com/New%20web%20site...3/Article-4.htm
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
வித்தியாசமாய் சிந்திக்கிறார். இதுவரை அறியப்படாத பேராகக் கூட இருக்குது...! தமிழரைப் பற்றிய அக்கறையில் பேசுகிறாரா..?? அல்லது அமெரிக்காவின் மேல் உள்ள அவநம்பிக்கையில் பேசுகிறாரா..??? இல்லை புலிகளின் ஆற்றலில் உள்ள நம்பிக்கையில் பேசுகிறாரா...??? அல்லது இந்தியாவை இலங்கை எதிரியாக்க வேண்டாம் எண்ட நோக்கத்தில் பேசுகிறாரா...???

எல்லாம் குழப்பமாய் இருக்கு... :roll: :roll: :roll:
::
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)