Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இராணுவக் காடைத்தனங்களை கட்டுப்படுத்தாவிட்டால் மக்களின் கொந்த
#1
<span style='font-size:25pt;line-height:100%'><b>இராணுவக் காடைத்தனங்களை கட்டுப்படுத்தாவிட்டால் மக்களின் கொந்தளிப்பும் மாறாது: சு.ப.தமிழ்ச்செல்வன்</b>

தமிழர் தாயகத்தில் சிறிலங்கா இராணுவக் காடைத்தனங்களை கட்டுப்படுத்தா விட்டால் மக்களின் கொந்தளிப்பை மாற்றுவது கடினம் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் எச்சரித்துள்ளார்.


கிளிநொச்சியில் சு.ப.தமிழ்ச்செல்வனை இன்று செவ்வாய்க்கிழமை சிறிலங்காவிற்கான நோர்வே தூதுவர் ஹான்ஸ் பிறட்ஸ்கர் மற்றும் இலங்கைப் போர்நிறுத்த கண்காணிப்புக்குழுவின் தலைவர் ஹக்ருப் ஹொக்லண்ட் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.

இச்சந்திப்புக்களுக்குப் பின்னர் ஊடகவியலாளர்களிடம் சு.ப.தமிழ்ச்செல்வன் கூறியதாவது:

நோர்வே தூதுவரை முதலில் சந்தித்தோம். தற்போதுள்ள மோசமான நிலைமைகளை அவருக்கு விவரித்தோம்.

எமது அப்பாவித் தமிழ் பேசும் மக்கள் தொடர்ந்து படுகொலை செய்யப்படுவதும் சிறிலங்கா இராணுவத்தினரது நெருக்குவாரங்களும், நெருக்கடிகளும் அச்சுறுத்தல்களும் அதிகரித்து வருகின்றன.

நாளாந்தம் எமது மக்கள் கொல்லப்படுகின்ற சூழல் உருவாகியுள்ளது. ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தமது சொந்த இடங்களிலிருந்து இடம்பெயரவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

யுத்த கால நெருக்கடி போலவே பாரிய அச்சுறுத்தலை பாரிய கொலை நடவடிக்கைகளை எமது மக்கள் மீது கட்டவிழ்த்து விட்டுள்ளார்கள் என்பதை இன்றைய சந்திப்பில் சுட்டிக்காட்டியுள்ளோம்.

மிக மோசமான நிலைமை உருவாகிக்கொண்டிருப்பதை நோர்வேத் தரப்பிற்கு எடுத்து விளக்கியுள்ளோம்.

யுத்த நிறுத்த உடன்படிக்கையை அமுலாக்குவதுதான் எல்லாவற்றுக்கும் தீர்வு என்பதை நாம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறோம். அதையே இன்றும் வலியுறுத்தினோம். ஏனெனில் எமது மக்களின் வாழ்க்கையில் இயல்பு நிலையை கொண்டு வரவேண்டும்.

சிறிலங்கா இராணுவ நடமாட்டத்தைக் குறைத்து நெருக்குவாரங்களையும் அச்சுறுத்தல்களையும் குறைத்து நெருக்கடிகளை இல்லாமல் செய்வதன் மூலம்தான் நிலைமைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரமுடியும்.

தற்போது அனைத்து இடங்களிலும் யுத்த காலம் போலவே சிறிலங்கா இராணுவம் தமது முழு காடைத்தனங்களையும் செயற்பாடுகளையும் கட்டவிழ்த்துவிட்டுள்ளது. இவற்றுக்கு உடனடியாகத் தீர்வு காணப்படவேண்டும். இல்லையெனில் மக்களின் கொந்தளிப்பான நிலைப்பாடுகளை மாற்றுவது கடினமாக இருக்கும்.

இலங்கைக்கு நோர்வே உயர்மட்டக்குழு வருகை தர உள்ளது. 23 ஆம் நாளன்று எமது தலைவரைச் சந்திக்க உள்ளனர். எமது தலைமைப் பீடத்தின் நிலைப்பாட்டை தலைவர் எடுத்து விளக்குவார்.

இந்த சந்திப்பின் போது அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கமும் பேச்சுக்களில் பங்கேற்பார்.

தெற்கிலே ஏற்பட்டு வருகின்ற சூழல், சிறிலங்கா அரசாங்கத்தின் நிலைப்பாடுகள் மற்றும் எமது தாயகத்தில் எமது மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள சிறிலங்கா இராணுவ வன்முறைகள், அடாவடித்தனங்கள் ஆகியவை ஒரு சுமூகமான சூழலைக் கொண்டு வருமா என்பது சந்தேகத்திற்கிடமான நிலையைத்தான் இன்று வரை உருவாக்கியுள்ளது.

நோர்வே உயர்மட்டக்குழுவின் பயணத்தின் போது சிறிலங்கா படைத்தரப்போ, அரசாங்கமோ தங்களுடைய நிலைப்பாடுகளில் மாற்றங்களை மேற்கொண்டால்தான் நிலைமைகள் சீராகும். அவர்களது நிலைப்பாடுகள் மாறவில்லையெனில் நிலைமை மிகவும் கடினமானதாகவே இருக்கும் எனக் கருதுகிறோம் என்றார் சு.ப.தமிழ்ச்செல்வன்.</span>

<b><i>தகவல் மூலம்-புதினம்.கொம்</i></b>
"
"
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)