Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
2ஆம் நாளாக சிறிலங்கா நாடாளுமன்றத்தை முடக்கினர்
#1
<b>2ஆம் நாளாக சிறிலங்கா நாடாளுமன்றத்தை முடக்கினர் தமிழ் உறுப்பினர்கள்! </b>

[புதன்கிழமை, 18 சனவரி 2006, 15:48 ஈழம்] [ம.சேரமான்]
சிறிலங்காவின் நாடாளுமன்றத்தை 2ஆம் நாளாக இன்றும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முடக்கினர்


சுமார் 30 நிமிடங்களே நாடாளுமன்ற செயற்பாடுகள் இன்று நடைபெற்றன.

சபாநாயகர் டபிள்யு.ஜே.எம்.லொகுபண்டார தலைமையில் இன்று காலை நாடாளுமன்றம் கூடியது. நாடாளுமன்றம் கூடியதையடுத்து தமிழ் மக்கள் மீதான படுகொலைகளைக் கண்டித்து அனைத்து தமிழ்க் கட்சி உறுப்பினர்களும் அவை மத்திக்குச் சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பதாகைகளை ஏந்தியவாறு முழக்கங்களை எழுப்பினர்.

நாடாளுமன்றத்தில் இன்று பல சட்டமூலங்கள் நிறைவேற ஏற்பாடாகியிருந்தது. சட்டமூலங்களை நிறைவேற்றும் போது சபாநாயகர், நாடாளுமன்ற செயலாளரின் இருக்கையில் அமர வேண்டியிருப்பதால் சபாநாயகர் தனது ஆசனத்திலிருந்து எழுந்து செயலாளரின் ஆசனத்திற்குச் செல்வதற்கு முயல்கையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம். சிவாஜிலிங்கம், சபாநாயகரின் ஆசனத்தில் சென்று அமர்ந்தார்.

அதேநேரம் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் ஓடிச்சென்று செயலாளரின் ஆசனத்தில் அமர்ந்தார்.

இதனால் நாடாளுமன்றச் செயற்பாடுகளை மேற்கொள்ள முடியாது சபாநாயகர் நாடாளுமன்றத்தை நாளை காலை 9.30 வரை ஒத்திவைத்தார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் இந்த ஆர்ப்பாட்டங்களுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் ஏனைய தமிழ் அரசியல் கட்சிகள் தங்கள் ஆசனங்களில் இருந்தே ஆதரவு தெரிவித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியிலும் 4 சட்டமூலங்கள் நிறைவேற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.


நன்றி:புதினம்
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)