Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புலிகள் மீதான தடைக்கு புலம்பெயர் தமிழர் பரப்புரையின் பலவீனமே
#21
புலம் பெயர்ந்தவர்களுக்கு (முக்கிய்மாக அவுஸ்ரெலியா) இதைவிட வெறு முக்கியமான வேலை இருக்கப்பா....
ஒன்றூ கிரிக்கட்போட்டி .....இதில் விளையாட்டு வெறு அரசியல் வெறூ என்று எம்மவரும் சிங்களவறும் எவ்வளவு அழகாக ஒற்றூமையாக கூத்தடிப்பார்கள்.ஆகா அது அல்லொ அழ்கு.இருவரும் செர்ந்து தாம் வாழும் நாட்டுக்கு எதிராக துவசம் செய்வார்கள் ஆகா..இதை பார்க்கும் அன்னியர் என்னநினைப்பர்க்ள் அங்கு ஒரு குழுவினர் மட்டும் தான் சன்டை பிடிக்கிறர்கள் என்றூ எனையொர் ஒற்றூமையாக வாழ்வதாக...
இரன்டாவ்து சாய் பஜனை இங்கு சிலசிங்கள்வர் ஆங்கிலத்தில் பேசுவாவர்கள்...
கோவில்கள்,(சன்டைகள்)
"To think freely is great
To think correctly is greater"
Reply
#22
ஐ.நா. செயலாளர் நாயகத்தின் மின்னஞ்சல்: sg@un.org
உதவியாளரின் மின்னஞ்சல் : eckhard@un.org
உதவியாளாரின் தொலைபேசி: (+1 212) 963 7160
மின்னஞ்சல்: (+1 212) 963-7055, (+1 212) 963-4879,
(+1 212 ) 371-4360
Secretary-General Kofi Annan
United Nations (UN Plazza)
New York, NY 10017

கீழே இருப்பவை ஐ.நா. மனிதஉரிமைகள் ஆணைக்குழுவின் மின்னஞ்சல் மற்றும் முகவரிகள்.


Ms. Louise Arbour பிரஞ்சு மொழி பேசுபவர். அந்த மொழியை விரும்புவார். பெரும்பாலான கியுூபெக் மாகாணத்தவர் போல தனிநாட்டு கோரிக்கையை விளங்கிக்கொள்ள கூடியவர். கியுபெக் மாகாணம் கனடாவில் இருந்து பிரிந்து தனிநாடாக விரும்பி வருகிறது. காரணம் பிரஞ்சு மக்களின் உரிமைகள் மதிக்கப்படாமை.

Ms. Louise Arbour
United Nations High Commissioner for Human Rights
ngochr@ohchr.org
LArbour@ohchr.org
Fax: + 41 (0)22 917 9012
Office of the United Nations
High Commissioner for Human Rights
UNOG-OHCHR
1211 Geneva 10, Switzerland

Graham Fox
Independent Expert on minority issues
United Nations High Commission for Human Rights
GFox@ohchr.org

Erik Friberg
Independent Expert on minority issues
United Nations High Commission for Human Rights
efriberg@ohchr.org

Ms. Gay McDougall
Independent Expert on minority issues
Office of the High Commissioner for Human Rights
Palais des Nations
CH-1211 Geneva 10
Fax: + 41 22 917 9006
Switzerland
GMcDougall@ohchr.org

அமெரிக்க அரசின் இலங்கைக்கு பொறுப்பானவரின் மின்னஞ்சல். இவர் கொழும்பு குண்டுவெடிப்புக்கு அறிக்கை விட்டுவிட்டு திரிகோணமலை மக்கள் கொலையை அறியாதவர் போல இருக்கிறார்.

Richard Boucher
Assistant Secretary of State for South and Central Asian Affairs
United States of America
Ninthnet@mail.house.gov

ஐரொப்பிய யுூனியன் இலங்கை பொறுப்பாளர்.

Julian WILSON
DELEGATION OF THE EUROPEAN COMMISSION
mailto@dellka.cec.eu.int
(94-11) 267 88 60
''
'' [.423]
Reply
#23
ஓய்வு நிலைப் பேராசிரியர் க.சிவதம்பி அவர்களிற்கு!


கடந்த வாரம் அவுஸ்திரேலிய தமிழ் வானொலியில் நீங்கள் புலம் பெயர்ந்த தமிழர் மீது தொடுத்த விமர்சனங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்நிலையில், உங்களது விமர்சனத்தில் உள்ள யதார்த்தங்களை ஆரோக்கியமாக நாம் உள்வாங்குகின்ற அதே வேளை, உங்களது சில வார்த்தைப் பிரயோகங்கள் பற்றியும் அவை கூறும் தவறான செய்தி பற்றியும் உங்களிற்கு உணர்த்தும் நோக்கில் இம்மடல் வரையப்படுகின்றது.
அண்மைக்காலமாக புலம் பெயர்நத தமிழர் பற்றிய இகழ்ச்சிகள் உங்களால் அவ்வப்போது வெளியிடப்பட்டு வருகின்றன.




உங்களது பீஷ்மர் அவதாரம் வாயிலாக தினக்குரலிலும் இதர ஊடகங்களில் இதர அவதாரங்களிலும் நீங்கள் புலம்பெயர்ந்த உங்களின் உறவுகளைக் காய்ந்து வருகின்றீர்கள். சரி உறவுகள் நாம் நமக்குள் மனந்திறந்து கருத்தாடல்கள் மற்றும் விமர்சனங்களை மேற்கொள்வதில் தவறில்லை.

அத்தோடு உரிமை உள்ளவர் தான் உறைக்கும் படி உண்மை கூற முடியும். அந்த வகையில் உங்களது விமர்சனங்களை நாம் மதிப்போடு ஏற்றுக் கொண்டு எமது செயற்பாடுகள் பற்றிய சுய பரிசோதனையில் ஈடுபடுகின்றோம், தேவை ஏற்படுமிடத்து எமது செயற்பாடுகளில் திருத்தங்களை மேற்கொள்கின்றோம். எனினும் கருத்துப் பரிமாற்றமானது எப்போதும் ஒரு திசையில் இருப்பது ஆரோக்கியமற்றது என்ற அடிப்படையில் அக்குறையினை நிவர்த்தி செய்ய இதோ எங்களிடம் இருந்து உங்களிற்கு.

புலம் பெயர் தமிழரின் தாயக மேம்பாடு பற்றிய செயற்பாடுகள் தொடர்பில் நீங்கள் முன்வைத்த விமர்சனங்களில் பின்வரும் விடயங்களை உங்களது வாதத்திற்கு ஆதாரமாக நீங்கள் வரியிட்டுக் காட்டியுள்ளீர்கள்:

கனடா, இங்கிலாந்து மற்றும் இதர ஐரோப்பிய நாடுகளில் வாழ் தமிழரைப் பார்க்கிலும் அவுஸ்திரேலியா வாழ் தமிழர் ஆங்கிலப் புலமையில் மிளிர்கின்றார்கள். கனடா இங்கிலாந்து வாழ் தமிழர் போலல்லாது அவுஸ்திரேலியாவில் உடல் வருத்தி தமிழர் வேலை செய்வதில்லை.

அவுஸ்திரேலியா வாழ் தமிழர்கள் "அடிநிலை வேலை எனினும்" அரச வேலை புரிகின்றார்கள்.

புலம் பெயர்ந்த உறவுகள் கடனெடுத்து ஊரிற்கு உதவுகிறார்கள்.

எத்தனை நல்ல விடயங்களைச் சொன்னோம், இவன் யாரடா பன்னாடை போன்று வெறும் மூன்று விடயங்களை மட்டும் பிடித்துக் கொண்டு நம்மோடு மல்லுக்கட்டுகிறான் என எண்ணாதீர்கள். நான் ஏற்கனவே கூறியது போன்று உங்களது 90 விழுக்காடுகளிற்கு மேற்பட்ட யதார்த்தங்களை நாம் ஆரோக்கியமாக உள்வாங்கியுள்ளோம். அவற்றில் எமக்கு கருத்தொற்றுமை உள்ளமையால் அவை பற்றி விவாதிக்க ஏதுமில்லை. ஆனால் மேற்கூறிய மூன்று விடயங்களும் உங்களது உள்ளார்ந்த மனோநிலையைக் கண்ணாடி போன்று காட்டுவதற்கு உதவுவதாலும் இம்மடலின் நோக்கம் உங்களது உள்ளார்ந்த மனோநிலை பற்றி ஆலசுவது என்பதனாலும் இம்மூன்று விடயங்களையும் இங்கு எடுத்துக் கொள்கின்றேன். தற்போது மேலுள்ள மூன்று கருத்துக்களையும் ஒவ்வொன்றாய் ஆராய்வோம்.

உங்களது கருத்து இலக்கம் ஒன்று பற்றி

முதற்கண், எவ்வித ஆதாரமுமின்றி, கேள்வி ஞானத்தில் இத்தகையதொரு பிரதேசவாதச் சிந்தனையை முன்வைப்பது ஆரோக்கியமற்றது. முதற்கண் தமிழ் துறைப் பேராசிரியராகிய நீங்கள் கொண்டுள்ள ஆங்கில மோகமானது காலனித்துவ காலம் உங்கள் மீது விட்டுச்சென்ற எச்சமாக நாம் கருதவேண்டி உள்ளது. ஆங்கிலம் தெரிந்தவர் எல்லாம் அறிஞர் என்ற பத்தாம் பசலிக்கருத்து ஆங்கில ஏகாதிபத்தியத்தினால் தமது நலன்களிற்காக அவர்களது குடியேற்ற நாடுகளில் அத்து மீறி விதைக்கப்பட்ட ஒன்று. மேற்கு எப்போதுமே தனது கலாச்சார சமூகப் பெறுமதிகளை உலகத்தோர் அனைவரும் ஏற்று அடிபணியச் செய்யும் குள்ளநரி வேலையில் ஈடுபடுவது என்பது நாடு அடிபட்டவர்கள் நன்கு அறியும் ஓரு விடயம். உதாரணத்திற்கு, மாமனிதர் தராக்கி போன்ற உலக பட்டறிவு பெற்ற அறிஞர்கள் இதனை நன்கு அறிந்திருந்தார்கள். எனவே முதலில் ஆங்கில மோகத்திற்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்து விட்டு உங்களது கருத்தின் பொய்மையை இங்கு புலப்படுத்துவோம்.

நான் கனடாவாசி என்பதனால் எனது வாதத்திற்குக் கனடாவை உதாரணத்திற்கு எடுத்துக் கொள்கின்றேன்.

கனடாவின் உத்தியோக மொழிகள் இரண்டு: ஆங்கிலம், பிரஞ்சு. ஒருவர் கனடாவின் எந்தப் பாகத்தில் வாழ்கின்றார் என்பதனைப் பொறுத்து இந்த இரண்டில் ஒரு மொழியில் சம்பாசிக்கும் ஆற்றல், அது பல்கலைக்களக தரத்திலான சம்பாசனையாக இல்லாது போயினும் கூட அம்மொழியிலான சம்பாசனை, அற்றவராக இருப்பின் அவரால் கனடாவில் தொழில் புரிய முடியாது. நம்மவர்கள் இங்கு வேலைசெய்யாத துறையே இல்லை எனலாம். அந்தந்தத் துறையின் நடைமுறைகள் பற்றி அவர்கள் தெரிந்து கொள்வதற்கு ஆங்கில புலமை தேவையில்லை எனினும் மொழிப் பரீட்சயம் அவசியம். பத்து மணிநேரம் வேற்று இனத்தவரோடு வேலை செய்யும் நம்மவர்கள் வாய் பொத்தி வேலை செய்வதில்லை. ஏதோ தமக்குத் தெரிந்த வரையில் பொது மொழி ஆங்கிலத்தில் பேசித் தான் தமது வேலைப் பொழுதினை மகிழ்ச்சியாகக் கழிக்கின்றனர். மொழி என்பதன் அடிப்படை நோக்கம் என்ன? கருத்துப் பரிமாற்றம். எனவே இரு மனிதர்கள் தமக்கிடையே கருத்துக்களைப் பரிமாற முடிகின்றது என்றால் அதற்கு மேல் அங்கு புலமையினை ஆராய்வது அனைத்துச் சந்தர்ப்பங்களிற்கும் பொருத்தமாகாது. வேண்டுமாயின் பல்கலைக் கழகத்திலும் பேராசிரியர்கள் கூடும் கொக்ரெயில் பாட்டிகளிலும் மொழிப் புலமை எடைபோடப்படலாம். ஆனால் சாதாரண வாழ்விற்கு புலமை என்பது வெறும் ஏட்டுச்சுரைக்காய்.

தற்போது நீங்கள் நினைக்கலாம். யார் அதை மறுத்தது அது அல்லவே எனது கருத்து. நான் சொன்னதெல்லாம் வெறும் பரீட்சயத்தை மட்டும் ஒரு மொழியில் கொண்டுள்ள ஒருவரால் அம்மொழியில் கருத்தாடலினை மேற்கொள்ள அதாவது Lobby பண்ண முடியாது என்பது தானே என்று. சற்றுப் பொறுங்கள் அங்கு தான் வருகின்றேன்.

மேற்குலக நடப்பு புரிந்தவர்களிற்குத் தெரியும் இங்கு கொள்கை வகுப்பானது மூன்று பிரிவினரின் ஆதிக்கத்தில் உள்ளது. இம்மூன்று பிரிவினரும் முறையே: அரச அலுவலர் (Bureaucrats), ஊடகத்துறை (Media) மற்றும் அரசியல் வாதிகள் (Politicians) ஆவர். இம்மூன்று பிரிவினரது ஆசீர்வாத்தோடு தான் இங்கு சட்டங்கள் வகுக்கப்படுகின்றன. ஆனால் இம்மூன்று பிரிவினர் மீதும் மிகப்பெரும் ஆதிக்கத்தைக் கொண்டுள்ள மிகப்பெரும் பிரிவு பொது மக்கள் (grass roots). எவ்வாறெனின் அரசியல் வாதிகள் வாக்கு என்ற வடிவத்தில் பொது மக்களால் கடிவாளமிடப்படுகின்றனர். அலுவலர்கள் பொது மக்களாக பொதுமக்களோடு வாழ்பவர்கள். ஊடகங்கள் பணம் பண்ணுவது பொதுமக்களிடம். எனவே பொது மக்கள் மேற்கில் பாரிய பலமுள்ள ஒரு பிரிவு. இந்த அடிப்படையில் வெறும் மொழிப் பரீட்சயம் மட்டுமே உள்ள ஓருவரால் கூட இங்கு மிகச் சிறந்த Lobbying செய்ய முடியும்.

உதாரணத்திற்கு ஒரு கொள்கை வகுப்பாளர், ஊடகவியலாளர், அலுவலர், இவர்களிற்கும் நாளாந்த தேவைகள் உள்ளன. உதாரணமாக சாப்பிடுவதற்கு உணவு விடுதிகளிற்குச் செல்வார்கள், துணி சலவை செய்ய Dry Cleaners இடம் செல்வார்கள், எரிபொருள் நிரப்ப அந்நிலையங்களிற்குச் செல்வார்கள். இப்படிப்பல இடங்களில் இன்று நம்மவர்கள் உரிமையாளர்களாக அல்லது முகாமையாளர்களாக அல்லது தொழிலாளர்களாக தினமும் கடமையாற்றுகின்றார்கள். அந்த வகையில் இத்தகைய உயர்மட்டச் சந்திப்புக்கள் நம்மில் பலரிற்கு தினமும் ஏற்படுகின்றது. இதன் வாயிலாக பரீட்சயமும் சில சமயங்களில்

நட்பும் ஏற்படுகின்றன. அத்தகைய ஒரு பரீட்சயத்தின் பின்னர் அத்தகைய ஒரு தமிழர் மட்டுப்படுத்தப்பட்ட ஆங்கிலத்திலேனும் எமது தாயக நிலை பற்றிய உண்மை கூறும் போது ஆங்கில புலமை பெற்ற ஆனால் அறிமுகமில்லாத சிங்களத்தின் முகவர்களைக் காட்டிலும் அத்தமிழரின் கருத்து அவ்வலுவலரின் மனதில் பதிகின்றது. இந்நடை முறைக்கு மிகச் சிறந்த உதாரணம் சுனாமி ஏற்பட்ட வேளையில் கனடாவில் நிகழ்ந்த சில பிரமிப்பூட்டும் சம்பவங்கள். அவற்றிற் சில உதாரணங்கள்.

கனடாவின் ரொறன்ரோ பெரும்பாகத்தை அடுத்துள்ள யோர்க் பிரதேசத்தின் நகரசமை மண்டபம் அமைந்துள்ள கட்டிடத்தில் இயங்கும் உணவு விடுதியில் ஒரு தமிழர் தலை சிறந்த உணவு தயாரிப்பாளராகக் கடைமையாற்றுகின்றார். இவ்விடுதிக்கு உணவருந்த அடிக்கடி செல்லும் யோர்க் பிரதேச நகரபிதா (மக்களால் தெரிவு செய்யப்படும் அரசியல்வாதி) உட்பட்ட பல நகரசபை அலுவலர்கள (Bureaucarats) இத்தமிழரோடு பரீட்சயம் பெற்றுள்ளார்கள். சுனாமி அனர்த்தம் நிகழ்ந்த உடனே, அது சிறீலங்காவைத் தாக்கியது என்று அறிந்த உடனே, நகரபிதா உட்பட்ட யோர்க் பிரதேச நகரசபை ஊளியர்கள் அனைவரதும் நினைவில் உடன் வந்தது இந்த தமிழ் உணவு தயாரிப்பாளரது ஞாபகமே.

அந்த வகையில் உடனே அவர்கள் அவரோடு தொடர்பு கொண்டார்கள், அவர் வாயிலாக உண்மை நிலவரத்தை அறிந்தார்கள், அவரது சோகத்தில் பங்கேற்றார்கள் அத்தோடு நிற்காது மிகப் பெரிய ஒரு நிதி சேகரிப்பினை இத்தமிழரது உணவோடு ஏற்பாடு செய்து சுனாமி அனர்த்த நிவாரணத்திற்கு நிதி சேகரித்தார்கள். இந்நிகழ்வானது 'மார்ககம் எக்கனோமிக் அன்ட் சன்' என்ற யோர்க் பிரதேச பத்திரிகையில் முற்பக்கச் செய்தியாக மேற்படி தமிழரது அரைப்பக்க புகைப்படத்தோடு வெளியானது. இங்கே நீங்கள் பார்க்கலாம் எவ்வாறு கொள்கை வகுப்பை மேற்கொளளும் மூன்று பிரிவினரும்(அரசியல் வாதி, அரச அலுவலர், ஊடகம்) ஒரு உணவு தயாரிக்கும் சாதாரண தமிழரால் கருத்தூட்டப்பட்டுள்ளார்கள் என்பதனை.

இது போன்று எத்தனையோ வெள்ளை இனத்தவரது நிறுவனங்கள் அங்கு தொழில் புரியும் தமிழர்களுடைய சோகத்தில் பங்கேற்று சுனாமி நிவாரணத்திற்காய் நிதி சேகரித்தன ஊடகங்களில் தமிழரிற்குச் சாதகமாகப் பேட்டி கொடுத்தன. இது கனேடியத் தமிழரின் தாயக மேம்பாடு தொடர்பான நாளாந்த செயற்பாடு.. சுனாமி மட்டுமல்ல தமிழர் தாயக நிலவரங்களும் இவ்வாறு நமது சக கனேடியர் மத்தியில் அறிவிக்கப்பட்டவண்ணமே உள்ளன.

சரி அதை விட்டு விடுங்கள். உங்களது வகைக்கு வருவோம். தற்போது, கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் மட்டும் 15,000 ற்கு மேற்பட்ட தமிழர் மாணவர்கள் கனடாவின் பல்கலைக்களகங்களில் இன்னோரன்ன துறைகளில் கல்வி கற்று வருகின்றார்கள். தாயகத்தின்பால் தீராத காதல் கொண்டுள்ள (இங்கு பிறந்து வளர்ந்த மாணவர்கள் தாயக தாகம் கொண்டுள்ளார்கள் என்றால் அதில் பெற்றோரிற்கும் ஏதோ பங்குண்டு என்பதனை நீங்கள் ஒத்துக் கொள்வீர்கள் என நம்புகின்றேன்) இத்தனை ஆயிரம் தமிழ் மாணவர்களால் உந்தப்பட்டு கனடாவின் பல்கலைக்களக மாணவர் பேரவை (Canadian Federation of Students) என்ற மாபெரும் அமைப்பு எமது தாயகத்தில் தமிழ் மக்கள் மீது அத்து மீறல்கள் மேற்கொள்ளப்படும் போதெல்லாம் கண்டன அறிக்கை வெளியிட்டு வருகின்றது. அண்மையில் யாழ் பல்கலைக்களக ஆசிரியர் மாணவர்கள் தாக்கப்பட்ட போதும் புங்குடு தீவில் தர்சினி படுகொலை செய்யப்பட்ட போதும் கூட இவ்வமைப்பு கண்டன அறிக்கை வெளியிட்டது. இது கனேடியத் தமிழரின் தாயக மேம்பாட்டிற்கான செயற்பாடு.

இது மட்டுமல்ல, பொறியியலாளர்களாக, வைத்தியர்களாக, சட்ட வல்லுனர்களாக, கணக்காளர்களாக, பேராசிரியர்களாக, ஆசிரியர்களாக, விஞ்ஞானிகளாக, நிறுவனங்களின் அதியுயர் முகாமையாளர்களாக பல்லாயிரந் தமிழர்கள் தொழில் புரிகின்றார்கள். இவர்களது வேலையிடங்களிலும் எமது தாயக நிலவரம் தொடர்பான சரளமான கருத்தாடல்கள் நாளாந்தம் நிகழ்கின்றன. இது கனேடியத் தமிழரின் தாயக மேம்பாடு பற்றிய செயற்பாடு.

எனவே, முதலில் கனடாவாழ் தமிழர்கள் உடலை வருத்தி வேலை செய்யும் பத்தாம் பசலிகள் என்ற உங்களின் காலாவதியான கணிப்பினை மாற்றிக் கொள்ளுங்கள். தரவுகளைப் பதிவு செய்து கொள்ளுங்கள்.

இத்தனை கருத்தாடல் நிகழ்ந்தும் ஏன் இங்கு தமிழர் தரப்பு தடை செய்யப்பட்டது என்கிறீர்களா?

இதற்கு இரண்டு பதில்கள். ஒன்று இத்தனை காலம் எவ்வாறு இங்கு தடை செய்யப்படாது இருந்தது என உங்களைக் கேட்டுப்பாருங்கள். அதாவது இந்தியா, ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் தடைசெய்யப்பட்ட பின்னரும், கனடாவிற்கும் அமெரிக்காவிற்கும் வெளியுறவுக் கொள்கை வகுப்பில் பலத்த பிணைப்பு உள்ள போதிலும், சிங்களம் மில்லியன்களை ஒவ்வொரு ஆண்டும் செலவு செய்து "சாச்சி அன்ட் சாச்சி" போன்ற உலகப் புகழ்வாய்ந்த வல்லுனர்கள் வாயிலான Lobbying இனைத் தொண்ணூறுகளின் நடுப்பகுதியில் இருந்து கனடாவில் செய்து வருகின்ற போதிலும், லக்ஸ்மன் கதிர்காமர் போன்றோர் இங்கு வந்து பொய்யுரைத்துச் சென்ற போதிலும், ஆனந்த சங்கரி அடிக்கடி இங்கு வந்து செல்கின்ற போதிலும், இந்தியாவின் இந்து பத்திரிகை ஆசிரியர் றாம் மற்றும் இலங்கையின் றாதிகா குமாரசாமி மற்றும் நீலன் திருச் செல்வம் போன்றோர் தமிழ் எதிர்ப்புப் பிரச்சாரத்தினை உயர்மட்டங்களில் செய்து வந்திருந்த போதிலும் எவ்வாறு கனடாவில் இத்தனை ஆண்டுகள் தடை வராது இருந்தது என்ற கேள்வியில் உங்களது சிந்தனையைக் குவியுங்கள்...பல விடயங்கள் உங்களிற்குப் புரியத் தொடங்கும்.

இரண்டாவது, உலகம் தெரிந்தவர்களிற்குத் தெரியும், மேற்கின் வெளியுறவுக் கொள்கைகள் தம்மகத்தே கொண்டுள்ள சில சூட்சுமங்கள். ஒரு வரியில் சொல்வதானால் நித்திரை கொள்பவர்களை எழுப்பலாம் பாசாங்கு செய்பவரை?

விவாதத்திற்காக ஒரு கேள்வி: நீங்கள் படித்தவர், கொழும்பைத் தளமாகக் கொண்டவர் ஓரளவிற்கு சிங்கள மொழிப் பரீட்சயம் பெற்றிருப்பீர்கள் என நம்புகின்றேன், அவ்வாறாயின் ஏன் உங்களால் சிங்கள பேரின வாதத்தினை கருத்தாடல் செய்து தமிழரைத் தாக்காது செய்ய முடியவில்லை? கொழும்பிலே உங்கள் பணி எவ்வாறு உள்ளது. அறிய ஆவலாய் உள்ளோம். 83 கலவரத்தில் கொழும்பில தமிழர்கள் கொழுத்தப்பட்டது தமிழர் கருத்தாடல் செய்யத் தவறியதால் தான் என்றா கூறுகின்றீர்கள்?

தமிழர் தரப்பிற்கு இங்கு வந்த தடையால் நொந்து போயுள்ளோம். எழுந்த மானத்தில் ஆதாரமின்றி வேல் பாய்ச்சாதீர்கள்.

உங்களது இரண்டாவது கருத்துப் பற்றி

அவுஸ்திரேலியா வாழ் புலம் பெயர் தமிழரை பாராட்டுவது போல் ஆங்கிலப் புலமை உடையவர்கள் என்று பாராட்டி விட்டு மறுகணம் எங்கே அவர்கள் உங்களது பாராட்டால் பேர் பெற்று விடுவார்களோ என்பது போல், அவர்கள் அடிநிலை என்றாலும் அரச அலுவலில் இருப்பதாகக் கூறி அவர்களை அடிநிலை ஊழியர்கள் என்ற வார்த்தைப் பிரயோகத்தால் நையாண்டி செய்துள்ளீர்கள். மீண்டும் இது உங்களது காலாவலியான தரவுகளைக் காட்டுகின்றது. முதலில் தரவுகளைச் சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

உங்களது மூன்றாவது கருத்துப் பற்றி

இது அப்பட்டமாக புலம் பெயர் உறவுகள் மீது நீங்கள் மேற்கொண்ட Character Assassination.
புலம் பெயர் தமிழரின் வியத்தகு பங்களிப்பால் தாயக உறவுகள் மலைத்துப் போய் மரியாதை செய்யத் தொடங்கிடுவரோ என்று பயந்து அவசரஅவசரமாக அது கடனெடுத்த பணம் என்று சொல்வது போல் உள்ளது உங்களின் பேச்சு. தங்களிற்கு ஒரு சிறிய தரவு. கடன் என்பது மீளளிக்கப்பட வேண்டிய ஒன்று. திருப்பக் கொடுக்கும் தகுதி உடையவனிற்குத் தான் கடன் கிடைக்கும். அத்தகுதியை அடைவதற்கு ஒருவர் சில தகமைகளை வளர்த்துக் கொள்ளல் அவசியம். அது எவ்வளவு அதிக கடன் ஒருவர் பெறலாம் என்பது அவரது தகுதியைப் பொறுத்தது. மேற்கின் பொருளாதாரம் வியத்தகு விந்தைகளைக் கொண்டுள்ளது என்றால் இந்த கடன் பெறும் வசதி அதில் பெரும் பங்கு வகிக்கின்றது.

முடிக்கு முன்னர், எனது கருத்துக்களை சீனி பூசாது நேரடியாகக் கூறியுள்ளேன். தங்களைத் தாக்குவதோ புண்படுத்துவதோ எனது நோக்கம் அன்று. தாயகம் உதயமாகும் இந்நேரத்தில் நாம் ஒவ்வொருவரும் போறுப்போடு நடந்து கொள்ளல் அவசியம் என்பதனாலும் எமது கருத்துக்கள் செயற்பாடுகள் என்பன எமது தரவுகளைப் பொறுத்தே அமைகின்றன என்பதனாலும் உங்களின் தரவுகளைச் சரி செய்ய இம்மடலினை எழுதியுள்ளேன். புரிந்து கொள்வீர்கள் என நம்புகின்றேன்.


நன்றி.

கண்ணன்
மார்க்கம்,
கனடா.

- சூரியன் இணையத்தளம்
! ?
'' .. ?
! ?.
Reply
#24
வணக்கம் கண்ணன் அவர்களே!!

ஈழப்போரட்டத்தில் புலத்தமிழரது ஆக்கம் என்பது குறித்தான் சிவத்தம்பி அவர்களின் கரத்துக்கு முழுமையாக உடன்பாடு இல்லாவிட்டாலும் அவர் சொன்னதில் தப்பிருப்பதாக புலப்படவில்லை.

இன்று அவுஸ்ரேலியாவை எடுத்துக் கொள்ளுங்கள். அங்கே புலிகள் மீது தடை விடுக்கப்பட்டு எத்தனை வருடம்? இவ்வளவு காலப்பகுதியில் எவராவது அத் தடைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்திருக்கின்றீர்களா? அல்லது அதற்கு எதிராக எத்தனை பேர் உங்கள் ஆட்சேபனை சொல்லியிருக்கின்றீர்கள்? வெறுமனே தமிழீழ போராட்ட நிதியைக் கொடுத்தால் போதுமானது என்று நினைக்கின்றீர்கள். அதைத் தான் பேராசிரியர் தப்பாகச் சுட்டிக் காட்டுகின்றார்.

அதை நீங்கள் சட்டத்தை காரணம் காட்டி ஒதுக்கிக் கொள்ளவீர்கள். அது தான் உங்களுக்குள்ள இப்போதைய வழி என்பது எமக்குத் தெரியும். அப்படியாயின் இப்போது மோசமாக சிங்கள அரசு வடக்குகிழக்கு பகுதிகளில் தமிழ்மக்களை கொன்று வருகின்றது. இந்த ஒரு மாதத்துக்குள் மட்டும் நூற்றுக்கு மேற்பட்ட தமிழ்மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதை எத்தனை பேர் வெளிநாட்டு தூதரங்களுக்கு சிங்களவரின் அநீதிகளாக வெளிப்படுத்தி இருக்கின்றீர்கள். அல்லது அதற்கு எதிரான ஆர்பட்டங்கள் எத்தனை செய்திருக்கின்றீர்கள்? ஒன்றுமே இல்லை. இது அவுஸ்ரேலியா மட்டுமல்ல, எல்லா நாட்டில் உள்ளவர்களுக்கும் பொருந்தும்.

ஆக எம் மக்கள் செய்வது என்னவென்றால், சிங்களவன் வெளிப்படையாக எதுவும் சொன்னால் அதற்கு பதிலாக நமக்குள்ளேயே அடிபட்டுக் கொள்வது தான். உருப்படியானதும் அது மட்டும் தான். சிங்கள அரசாங்கம் பிற்புலத்தில் எத்தனையோ கைங்காரியத்தில் ஈடுபட்டு வருகின்றது. ஒவ்வொரு நிகழ்ச்சியையும் புலிகள் செய்ததாக வெளிநாட்டு அரசாங்கங்களுக்கு சொல்லிக் கொண்டிருக்கின்றது. அதை எவ்வகையில் நாம் எதிர் கொண்டுள்ளோம்?

நண்பரே, பேராசிரியர் சொன்னதற்கு இவ்வளவு துடிப்புள்ள பதில் வருவது மகிழ்ச்சியே. ஆனால் அந்தத் துடிப்பை ஏன் போராட்டத்துக்கு எழுச்சியாக பயன்படுத்தக் கூடாது. இங்கே புலம்பெயர் தமிழ்மக்களைச் சிறப்புற்ற வகையில் சொன்னவிதம் மகிழ்வைத் தருகின்றது. இத்தனை பெரிய நிலையிலுள்ளவர்கள் கனடாவின் தடை நீக்க எவ்வகையில் பயன்படப் போகின்றார்கள்.
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
இதற்கு இரண்டு பதில்கள். ஒன்று இத்தனை காலம் எவ்வாறு இங்கு தடை செய்யப்படாது இருந்தது என உங்களைக் கேட்டுப்பாருங்கள். அதாவது இந்தியாஇ ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் தடைசெய்யப்பட்ட பின்னரும்இ கனடாவிற்கும் அமெரிக்காவிற்கும் வெளியுறவுக் கொள்கை வகுப்பில் பலத்த பிணைப்பு உள்ள போதிலும்இ சிங்களம் மில்லியன்களை ஒவ்வொரு ஆண்டும் செலவு செய்து \"சாச்சி அன்ட் சாச்சி\" போன்ற உலகப் புகழ்வாய்ந்த வல்லுனர்கள் வாயிலான டுழடிடிலiபெ இனைத் தொண்ணூறுகளின் நடுப்பகுதியில் இருந்து கனடாவில் செய்து வருகின்ற போதிலும்இ லக்ஸ்மன் கதிர்காமர் போன்றோர் இங்கு வந்து பொய்யுரைத்துச் சென்ற போதிலும்இ ஆனந்த சங்கரி அடிக்கடி இங்கு வந்து செல்கின்ற போதிலும்இ இந்தியாவின் இந்து பத்திரிகை ஆசிரியர் றாம் மற்றும் இலங்கையின் றாதிகா குமாரசாமி மற்றும் நீலன் திருச் செல்வம் போன்றோர் தமிழ் எதிர்ப்புப் பிரச்சாரத்தினை உயர்மட்டங்களில் செய்து வந்திருந்த போதிலும் எவ்வாறு கனடாவில் இத்தனை ஆண்டுகள் தடை வராது இருந்தது என்ற கேள்வியில் உங்களது சிந்தனையைக் குவியுங்கள்...பல விடயங்கள் உங்களிற்குப் புரியத் தொடங்கும். <!--QuoteEnd--><!--QuoteEEnd-->

இந்த வார்த்தைகள் தப்பித்துக் கொள்ளும் விதமாகத் தான் உங்களை அடையாளப்படுத்துகின்றது. எப்போதுமே வெளிவிவகாரக் கொள்கைகள் உடனே மாற்றம் பெறுவதில்லை என்பதை நீங்கள் அறியாது அல்ல. லக்ஸமன் கதிர்காமர், கனடா அரசுடன் கதைத்தவுடன் சடுதியான மாற்றத்தை கனடா அரசு எடுக்கப் போவதில்லை என நீங்கள் தெரிந்திருப்பீர்கள். ஒவ்வொரு எதிராளிகளும் ஒவ்வொரு தடவையும் கொடுக்கும் அழுத்தங்களும், தவறான தகவல்களும் தான் இந்த தடைகளுக்கு தூண்டு கோலக இருக்கும். கனடா இவ்வளவு காலமும் தடையைத் தள்ளிப் போட்டமைக்கு அங்கிருக்கும் தமிழ்மக்கள் காரணமாக இருக்கலாம்.

உலகப் பகழ்பெற்ற வல்லுனர்களை விடுங்கள். பதிலுக்கு நீங்கள் எவ்வகை முயற்சியைச் செய்துள்ளீர்கள்? எங்கள் தரப்பு புூச்சியமாகத் தானே இருக்கின்றது.நான் அறிந்தவரை இன்று வரைக்கும் கனடாவில்.... ஏன் அவுஸ்ரேலியா, பிரித்தானியா, அமெரிக்க நாடுகளில் விடப்பட்ட தடைகளுக்கு பதிலடியாக எம் மக்கள் மத்தியில் இருந்து எதிர்ப்பை முழுமையாகக் காட்டவில்லை. முக்கியமாக போராட்டத்துக்கு ஆதரவானவர்கள் தங்களை அவ்வாறு காட்டுவதில் இருந்து தப்பிக்கப் பார்க்கின்றனர்.

தாம் ஏன் இதில் மாட்டிக் கொள்ளுவான் என்று ஒதுங்கிக் கொள்கின்றனர். ஒரு காலத்தில் பிரித்தானியாவில் காட்டப்பட்ட ஆதரவுக்கும் இப்போது காட்டுகின்ற ஆதரவுக்கும் எவ்வவோ வித்தியாசமாக உள்ளது. மனதில் ஆதரவு நிலை இருந்தாலும் வெளியே காட்ட பலர் பின்நிற்கின்றனர்.

கனடாவில் புலிகள் தடை செய்யப்பட்ட பின்பு எந்தெந்த தமிழ் அமைப்புக்கள் அதற்கு எதிராகக் குரல் கொடுத்தன. யாவரும் மௌனமாக இருப்பின் அரசாங்கங்கள், தடையை ஆமோதிப்பதாகத் தான் கருதுவார்கள்.

உங்களுக்குத் தெரியும் என நினைக்கின்றேன். nationalpost உள்ள சிங்களப்பத்திரிகையாளருக்கும் கனடாவின் துணைப் பிரதமருக்கும் உள்ள நெருக்கம் எப்படியானது என்று. அந்தச் சிங்கள பத்திரிகை எழுத்தாளர் தனது நட்புரீதியான உறவை புலிகள் மீதான தடைக்கு பயன்படுத்தி இருக்கக் கூடும் என்பதையும் மறுக்கக் கூடாது.

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
விவாதத்திற்காக ஒரு கேள்வி: நீங்கள் படித்தவர். கொழும்பைத் தளமாகக் கொண்டவர் ஓரளவிற்கு சிங்கள மொழிப் பரீட்சயம் பெற்றிருப்பீர்கள் என நம்புகின்றேன். அவ்வாறாயின் ஏன் உங்களால் சிங்கள பேரின வாதத்தினை கருத்தாடல் செய்து தமிழரைத் தாக்காது செய்ய முடியவில்லை? கொழும்பிலே உங்கள் பணி எவ்வாறு உள்ளது. அறிய ஆவலாய் உள்ளோம். 83 கலவரத்தில் கொழும்பில தமிழர்கள் கொழுத்தப்பட்டது தமிழர் கருத்தாடல் செய்யத் தவறியதால் தான் என்றா கூறுகின்றீர்கள்?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

இக் கேள்வி கேலியாக இருப்பினும், உங்களை நினைத்து வலிக்கின்றது. போராட்டத்தின் வரலாறுகளைக் கூடத் தெரியாமல் தான் இருக்கின்றீர்களோ என்று உங்கள் குறித்து அச்சம் வருகின்றது. தந்தை செல்வா காலத்திலிருந்து சிங்களத் தலைமைகளுடன் நடந்த கருத்தாடல்கள் என்ன? அறிக்கைகள், ஒப்பந்தங்கள் எல்லாம் எங்கு போயின? ஒன்றுக்குமே சிங்களத் தலைமைகள் மதிப்பு கொடுக்கவில்லையே. அதன் பிற்பாடு வெளிப்பட்ட ஆயுதரீதியிலான போராட்டமே தேசியத் தலைவர் தலைமையில் நடக்கும் போராட்டம் என்பதை தாங்கள் அறியாதது என்னவோ?

பேச்சுரீதியான செயற்பாடுகள் சரிவரவில்லை என்ற பின்பு தான் ஆயுதப் போராட்டத்தை கையில் எடுத்தோம். அப்படியிருக்க மீண்டும் கருத்தாடல் ஏன் நடக்கவில்லை என்ற கேள்வியை நீர் கேட்பதன் மாயம் என்னவென்றால் போரசிரியர் சுட்டிக்காட்டிய விடயங்களில் இருந்து தப்புக்களை மறைக்கும் பொதுவான செயற்பாடாகும்.

கடைசியில் பேராசிரியரின் மனதைப் புண்படுத்தும் எண்ணம் எமக்கில்லை என்று தாங்கள் கூறினாலும், சில கடுமையான வார்த்தை பிரயோகங்கள் இருப்பதையும் மறுக்க முடியாது.

ஏதோ பேராசிரியர் புலம்பெயர்ந்தவர்களை பத்தாம் பசலிகளாகவும், அவர்களை உயர்த்தி கூறுவது பேராசிரியருக்கு பிடிக்கவில்லை என்ற விதத்திலும் கூறியிருக்கின்றீர்கள். அதில் உள்ள உள் அர்த்தம் என்ன வென்றால் ஏதோ அவர் வெளிநாட்டுக்கு வரமுடியாமை காரணமாக பொறாமையில் புலம்பெயர்வாளர்களைப் பழிப்பதாகக் காட்டுவதாகத் தான் தெரிகின்றது.

உங்களுக்கு தெரியும். அவ்வாறான நிலை அவருக்கில்லை என்பதையும், அவர் நினைத்தால் "சட்டரீதியாகக்" கூட வந்து செல்லும் தகுதி கொண்டவர் என்பதும். யுத்த காலத்தில் வெளிநாட்டுக்கு தப்பி சென்று இங்கே தொழில்பெற்ற பேராசிரியர்களை விட, அவர் தாயகத்தில் இருந்தே வாழ்வை நடத்தினார் என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டும்.

மேலும், அவர் கடிதத்துக்கு துரோகக் கும்பல்களின் தளங்கள் கடுமையான மிரட்டல்தொனியில் பதில் கடிதங்கள் வருகின்றன என்பதையும் கருத்தில் கொள்ளுங்கள். கொழும்பில் இருந்தபடியே அவ்வாறன அறிக்கைகள் வெளியிட்டு ஏற்படும் சங்கடங்கள் அதிகமானவை. இப்போது படித்தவர்களையே சிங்கள இனம் வாதம் குறி வைக்கும்போது இவ்வாறன செயற்பாடுகள் அவருக்கு அவசியமானதல்ல.

எனவே புலத்தில் இருந்து வெளியிடப்பட்ட செயற்பாடுகள் போதுமாதாக இல்லதால் ஏற்பட்ட ஆதங்கங்களின் வெளிப்பாடுகள் தான் இவை என நான் கருதுகின்றேன். ஏன் என்றால் அவ்வாறான நிலைமையில் தான் நாம் இருக்கின்றோம். பேராசிரியருக்கு பதில் கடிதம் வந்த அளவு வேகம் கூட, 103 தமிழ்மக்கள் கொல்லப்பட்டதாக செய்திகள் வந்தபேர் அது குறித்து என்னும் வரவில்லை என்பதையும் அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. ஏனென்றால் செத்தவர்கள் உங்களின் தன்மானத்தையோ, அல்லது தனிப்பட்ட வாழ்வையோ தாக்கவில்லை என்பதே உண்மை.

கண்ணன், இது உங்களுக்கு என்ற வித்திலேயே பதில் எழுதியிருக்கின்றேன். அது உங்களிடம் இருந்து வந்த மடல் என்பதால் தான். ஆனால் இவை புலம்பெயர்ந்த அனைத்து தமிழ்மக்களுக்கும் பொருந்தும்.

எதையுமே முடியாது என்ற வார்த்தைகளால் மூட வேண்டாம். அப்படியான நிலை என்றால் தமிழீழ விடுதலைப் போராட்டம் சந்ததித்த சவால்களால் என்றோ பணிந்திருக்கும்.
[size=14] ' '
Reply
#25
தூயவன் நல்ல பதில்,

ஆனால் புலத்தில் இப்போது மாறி இருக்கும் நிலமைகள் என்ன?ஏன் இவ்வாறு நடந்தது என்று சற்று ஆளச் சிந்திக்க வேண்டும்.எழுதமாற்றாக ஆளை ,மாறி மாறிக் குற்றம் சாட்டுவதால் ஒரு பயனும் இல்லை.

ஈழத்தில் இருந்து புலம் பெயர்ந்த உடன் இருந்த கொதிப்பு நிலை இன்று புலத்தவர் மத்தியில் ஆற்றப்பட்டுள்ளது என்பதே இதன் பிரதான காரணம் என்று நினக்கிறேன்.

களத்தில் இருந்து தூக்கி எறியப்பட்ட விதை இன்று புலத்தில் வித்தாகி செடியாகி மரமாகி விட்டது,இதனால் அது உணர்விளந்து மரத்து விட்டது.செடி மரமாகிய போது நாம் அதை உணர்வுடன் வளர்த்தோமா என்பது முக்கியமான கேள்வி?

உதாரணத்திற்கு புலத்தில் இருக்கும் தமிழ் ஊடகங்களை எடுத்துக் கொள்ளுங்கள் சுனாமி அனர்த்ததின் போது அவை எவ்வாறு நடந்து கொண்டன?அண்மைய நிகழ்வுகளின் போது அவை எவ்வாறு நடந்து கொண்டன?

ஊடகத்தவரைக் கேட்டால் நாம் அவதானிக்கப் படுகிறோம் அதனால் எம்மால் நாம் விரும்புவனவற்றைச் செய்ய முடியாமல் கூற முடியாமல் இருகிறது என்பார்கள்.இந்தக் காரணம் எவ்வளவு தூரத்திற்கு உண்மயானது என்பது அவர்களுக்குத் தான் தெரியும்.

மேலும் இவன் நான்கு அறைகள் கொண்ட வீட்டை வாங்கி விட்டான் அவன் பி எம் டபுல்யு காரை வாங்கி விட்டான்,எனது மகளின் சாமத்திய வீட்டுக்கு ஆயிரம் பேரைக் கூப்பிட வேணும் என்று மிக முகிய பிரச்சினைகளில் மூழ்கி இருக்கும் புலத் தமிழனுக்கு அங்கு என்ன நடகிறது என்பதை அறியவே நேரம் இல்லை. இதற்கு எதிராகக் குரல் குடுக்க எங்கு நேரம் இருக்கும்?

இளயோர் அமைப்பின் செயற்பாடுகள் நம்பிக்கை குடுப்பனவாக இருகின்றன,இவர்களையாவது ஊக்கப் படுத்தி செயற்பட முடியும் என்றால் அது குறிப்பிடத்தக்க வெற்றியாக இருக்கும்.ஆனால் விடுவார்களா எங்கள் விமர்சகர்கள்?
Reply
#26
நன்றி நாரதர்
நான் இந்த நண்பனைத் தாக்கிப் பேசவேண்டும் என்று எழுதவில்லை. ஆனால் இப்படியான சந்தர்ப்பங்களில் மக்களை எழுச்சி பெறச் செய்வதற்கு வழிகளைத் தேடாமல் தங்கள் பக்கத்தின் நியாயங்களை கற்பித்தலுக்காகத் தான் நிற்கின்றார்கள்.

பேராசிரியர் சொன்ன பிரச்சனைகளை மூடி மறைக்கின்றார்களே தவிர, அக் காயத்தை ஆற்றுவதற்கு என்ன செய்யப் போகின்றோம் என்று சிந்திக்கவில்லை. ஆக சிந்திப்பது எல்லாம் சட்டத்தின் பின்னால் மறைந்து தங்களை நியாயப்படுத்துவது தான்.

இளையோர் அமைப்பு தொடர்பாக விழிப்பு வரவேண்டும். மீண்டும் ஒரு மக்கள் எழுச்சிக்கு அது வழி சமைக்க வேண்டும். யாழ் பல்கலைக்கழகம் எப்படி தமிழ்மக்களுக்கு வழி காட்டியாக இருந்ததோ அது போல இதுவும் வெற்றி பெற வேண்டும். அப்போது பொங்குதமிழ் நடத்தும் போது தமிழ் உணர்வு வேண்டும் என்பதற்காக எல்லோரும் வேட்டி, சேலையோடு தான் வர வேண்டும் என்று யாரும் புலம்பியிருக்கவில்லை. ஏனென்றால் அப்போது தமிழ்மக்களின் வாழ்வாதாமே பிரச்சனையாக இருந்தது

இதைத் தான் இளையோர் அமைப்பு மீது சேறு புூசுபவர்கள் நினைவில் கொள்ள வேண்டும். இன்று மிகப்பெரிய பிரச்சனை நடக்கும்போது இப்பவும் சின்னச்சின்ன விடயத்தை தூக்கிப் பிடித்து, பிரச்சனைகளின் திசைகளை மாற்றமடையச் செய்ய வேண்டாம்.
[size=14] ' '
Reply
#27
[size=18]அரோகரா...

<b>ம்ம்ம்ம்ம்ம் ... குட்டுப்பட வேன்டியவர்களை குட்டாமல் உண்மையை சொன்னவர்களை குட்டப் பார்க்கிறார்கள்!

ஒரு சிறிய உதாரணம்...

ஈழத்தமிழ் மக்களின் போராட்டமோ அன்றி அடக்கு முறைகளோ எப்போதோ தோன்றி விட்டாலும், சிங்கள இனவெறியின் கோரமுகமும், தமிழர் போராட்டமும் உலகிற்கு தெரியத் தொடங்கியது 1983 யூலைக் கலவரத்திற்குப் பின் தான்!! அந்த கறுப்பு யூலையின் அதிர்வலைகளை நாம் மறப்போமாயின் எம் போராட்டத்தை மறந்ததற்குச் சமமானது! அந்த 83 யூலையின் பின் வருடா வருடம் "கறுப்பு யூலையை" நினைவூட்டி பாரிய ஆர்ப்பாட்டம், லண்டன் பிரபலமான வீதிகளினூடே நடைபெற்று, புகழ்பெற்ற "ரவல்கார் சதுக்கத்தில்" ஒன்று கூடல் நிகழ்ச்சியுடன் நிறைவுறும். அந்திகழ்வில் பிரித்தானிய பாரளுமன்ற பல உருப்பினர்கள் கூட பங்கு பற்றுவார்கள். அந்த "கறுப்பு யூலை நிகழ்வு" லண்டனில் ஈழத்தமிழர்களின் ஓர் அடையாள நிகழ்வாக நடைபெற்று வந்தது. உணர்வு பொங்க ஆயிரக்கணக்கான எம்மக்கள் லண்டன் வீதிகளில் பதாதைகளை கைகளில் ஏந்தி ஆர்ப்பரித்து, உலகின் மனச்சாட்சியை தட்டியெழுப்பும் நிகழ்வாக நடைபெறும். ஆனால் இன்றோ ....??? பல ஆண்டுகளாக ...????

... என்ன நடந்தது!!!!! அந்த "கறுப்பு யூலை நிகழ்வு நிறுத்தப் பட்டதற்கு?????

யாராவது எந்த ஊடகத்திலாவது வந்து பதில் சொல்வார்களா??????...

கருப்பு யூலை நிகழ்வு, லண்டனில் தமிழ்த் தேசியத்திற்கு தடை விதிக்கப்படும் முன்பே கைவிடப் பட்டிருந்தது!!!!

இல்லை தடைதான் இருப்பினும், இப்படியான ஜனநாயகச் செயற்பாடுகளுக்கு லண்டனில் தடையுள்ளதா??????

...............

ஆயிரம் கேள்விகள் !!!!! ... விடைகள் ??????

இப்போ புரிகிறதா எங்கு பிழை என்று????????????

எம்மினத்திற்க்கான என்ன சாபமோ தெரியவில்லை!!!!! ... பலத்தில் தற்போதும் இதைப்போல பல பல தொடர்கதைகளாகத் தொடர்கின்றன ....</b>

அரோ.....
Reply
#28
<!--QuoteBegin-தூயவன்+-->QUOTE(தூயவன்)<!--QuoteEBegin-->
தாம் ஏன் இதில் மாட்டிக் கொள்ளுவான் என்று ஒதுங்கிக் கொள்கின்றனர். ஒரு காலத்தில் பிரித்தானியாவில் காட்டப்பட்ட ஆதரவுக்கும் இப்போது காட்டுகின்ற ஆதரவுக்கும் எவ்வவோ வித்தியாசமாக உள்ளது. மனதில் ஆதரவு நிலை இருந்தாலும் வெளியே காட்ட பலர் பின்நிற்கின்றனர்.  

கனடாவில் புலிகள் தடை செய்யப்பட்ட பின்பு எந்தெந்த தமிழ் அமைப்புக்கள் அதற்கு எதிராகக் குரல் கொடுத்தன. யாவரும் மௌனமாக இருப்பின் அரசாங்கங்கள், தடையை ஆமோதிப்பதாகத் தான் கருதுவார்கள்.  
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

நல்ல ஒரு கேள்வி தூயவன். இதற்குப் பதிலளிக்க வேண்டிய கடமைப்பாடு எமக்கும் உண்டு.

கனடாவினிலே தடைசெய்யப்பட்டபோது எந்தவொரு முன்னணி அமைப்புக்களையும் தடைசெய்யவில்லை. மற்றும் வெளியிடப்பட்ட அரசாங்க அறிவிப்பில் ஓர் தெளிவில்லாத ஒரு நிலைமை காணப்பட்டது. அதனால் கனடியத் தமிழராகிய நாம் சட்டஉதவி பெறவேண்டிய நிலையில் இருக்கின்றோம். சட்ட உதவி என்பது உடனே கிடைக்கக்கூடிய ஒன்றல்ல. அது சட்டத்தினை நுணுக்கமாக ஆராய்ந்து எவை செய்யக்கூடாது எவை செய்யக்கூடியது என்பது தொடர்பாக ஆராயப்பட வேண்டியது. கனடாவில் நாம் கனடியச் சட்டதிட்டங்களிற்கு மதிப்பளித்து செயற்படுவதன் மூலமே எதிர்காலச் செயற்பாடுகளைக் கொண்டு நடத்தக்கூடியதாக இருக்கும். இவ்வாறு தெளிவில்லாது காணப்படும் சட்டத்தின் முன்னால் நாம் ஏதாவது செய்யப்போய் அது பாரிய தாக்கங்களை ஏற்படுத்த இடமளிக்கக் கூடாது.

மற்றும் புலிகள் அமைப்பின் மீது தடை கொண்டுவரப்பட்டதன் பின்னர் முன்னணி அமைப்புக்களை தடைசெய்திராதிருந்தும் உலகத்தமிழர் இயக்க அலுவலகங்கள் சோதனை இடப்பட்டது அனைவரும் அறிந்த விடயம். இதுவும் தமிழர்கள் இதுவரை வாய்மூடி மெளனித்திருப்பதன் ஒரு காரணம். நிச்சயமாக இத்தடைக்கு எதிராக கனடியத்தமிழ் சமூகம் தனது உச்ச எதிர்ப்பினைப் பதிவுசெய்யும். ஆயினும் அதற்கு முன் எடுக்கவேண்டிய சில நடவடிக்கைகளையும் மிகவும் நிதானமாகச் செய்து வருகின்றது. ஆர்பாட்டங்கள் செய்யவேண்டும் என்பது அனைவரதும் எதிர்பார்ப்பு. ஆயினும் அதனைச் செய்வதற்கும் பாதுகாப்புத்தரப்பினரிடம் அனுமதி வாங்கவேண்டும் என்பது நடைமுறை.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>


.
Reply
#29
அமெரிக்காவில் புலிகள் தடை செய்யப்பட்டதற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டு ஓரளவு வெற்றியும் கண்டவர்கள் என்று நினைக்கிறேன். அதாவது favourable court ruling கிடைத்தது என்று நினைக்கிறன். ஆனால் அரசாங்கம் எந்த மாற்றத்தையும் கொண்டுவரவில்லை. முழுமையான விபரம் தெரிந்தவர்கள் தெளிவு படுத்துங்கள்.

மற்றைய நாடுகளில் இப்படியான முயற்சிகள் நடக்கவில்லை.
Reply
#30
<!--QuoteBegin-kurukaalapoovan+-->QUOTE(kurukaalapoovan)<!--QuoteEBegin-->அமெரிக்காவில் புலிகள் தடை செய்யப்பட்டதற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டு ஓரளவு வெற்றியும் கண்டவர்கள் என்று நினைக்கிறேன். அதாவது favourable court ruling கிடைத்தது என்று நினைக்கிறன். ஆனால் அரசாங்கம் எந்த மாற்றத்தையும் கொண்டுவரவில்லை. முழுமையான விபரம் தெரிந்தவர்கள் தெளிவு படுத்துங்கள்.

மற்றைய நாடுகளில் இப்படியான முயற்சிகள் நடக்கவில்லை.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

அதிலே சட்டத்தரணி உருத்திரகுமாருக்கும் பங்கு இருக்கின்றது என நினைக்கின்றேன்.
[size=14] ' '
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)