Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தாக்குதல் தொடர்வது குறித்து புலிகளின் தலைமை கடும் அதிருப்தி
#1
தாக்குதல் தொடர்வது குறித்து புலிகளின் தலைமை கடும் அதிருப்தி புலித்தேவன் தெரிவிப்பு


<b>தமிழீழ விடுதலைப் புலிகளின் மீது தொடரும் தாக்குதல்கள் குறித்து விடுதலைப் புலிகளின் தலைமை கடும் அதிருப்தியடைந்திருப்பதாக விடுதலைப் புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் தெரிவித்துள்ளார். நோர்வேயின் விஷேட தூதுவர் எரிக்சொல்ஹெய்ம் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனைச் சந்தித்து உரையாடிய மறுதினமே மட்டக்களப்பில் விடுதலைப் புலிகளின் போராளி ஒருவர் கொல்லப்பட்டார். அவரது அஞ்சலி நிகழ்விற்காக அழைத்துச் செல்லப்பட்ட அவரது மனைவியும் பிள்ளைகளும் பயணித்த வாகனத்தை குறிவைத்து கிளைமோர் தாக்குதலும் நடத்தப்பட்டது. இந்த சம்பவங்களாலேயே விடுதலைப் புலிகளின் தலைமை கடும் அதிருப்தியடைந்திருப்பதாக வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு புலித்தேவன் தெரிவித்துள்ளார். இது குறித்து புலித்தேவன் மேலும் தெரிவிக்கையில், இந்த தாக்குதல் சமாதான முன்னெடுப்புகளுக்கு வலுச்சேர்க்கப் போவதில்லை. இத்தகைய தாக்குதல்களால் சிக்கல்கள் ஏற்படலாம். வன்முறைகளை நிறுத்துவதாக வழங்கிய உறுதி மொழிகளுக்கு மாறாக இரட்டை வேட அணுகுமுறையை இலங்கை அரசு கைக்கொள்கிறது. சமாதான நல்லெண்ண சமிக்ஞையாக தடுப்புக் காவலில் இருந்த பொலிஸார் ஒருவரை விடுதலைப் புலிகள் விடுதலை செய்திருந்த நிலையிலேயே தென் தமிழீழத்தில் விடுதலைப் புலிகளின் முகாம் மீது படையினர் மோட்டார் எறிகணை வீச்சு தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இது நோர்வேயின் அனுசரணையுடன் இடம்பெறும் சமாதான முன்னெடுப்புகளுக்கான பற்றுறுதியை கேள்விக்குறியாக்கியிருக்கிறது. அதேவேளை விடுதலைப் புலிகள் மீதான தாக்குதல்கள் ஜெனீவாவில் இடம்பெறுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள பேச்சுக்களுக்கு நம்பிக்கையான சூழ்நிலையைக் கட்டியெழுப்பாது என்றார். இதேவேளை விடுதலைப் புலிகளின் தலைமையை எரிக்சொல்ஹெய்ம் சந்தித்த பின்னர் இருதரப்பும் போர்நிறுத்தம் குறித்த பேச்சுக்கு தயாராகிவரும் நிலையில் யாழ். குடாநாட்டிலும் கிழக்கிலும் இராணுவ நெருக்குவாரங்கள் குறையவில்லை என்று பல்வேறு தரப்புகளும் பொதுமக்களும் குற்றஞ்சாட்டியுள்ளன. குறிப்பாக இராணுவக் கட்டுப்பாட்டு பகுதிகளில் தொடர்ந்தும் பதற்ற நிலையே காணப்படுவதாகவும் பொதுமக்களும் பொது அமைப்புகளும் குற்றஞ்சாட்டியுள்ளன. </b>

http://www.virakesari.lk/VIRA/html/head_vi...iew.asp?key=312
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)