Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
திறக்கப்பட்ட கதவுகளின் வழியே...
#1
<span style='font-size:25pt;line-height:100%'>திறக்கப்பட்ட கதவுகளின் வழியே...</span>

<span style='font-size:25pt;line-height:100%'>கடந்துசெல்லும் காலங்களின் ஊடாக
திறக்கப்பட்ட
கதவுகள் மூடப்பட்டும்
மூடப்பட்ட கதவுகள்
மறுபடி திறக்கப்பட்டும்
சிலவேளைகளில் மட்டும்
காற்று வருமென்ற
எண்ணங்களோடுதான்
காத்திருப்பு தொடர்கிறது எங்களுக்கு...!

எங்களின் எதிர்காலம் குறித்த
பேச்சுக்களை விட்டால்
நிகழ்காலம் குறித்த
நாற்காலிகளின் கனவுகள்
வெறும்...
கனவாகவே போய்விடும் அவர்களுக்கு...!

இதனால்தான்
அன்போடு பேசலாமென
அக்கறையோடு அவர்கள்
இடைக்கிடையே வருவார்கள்...!

வாருங்கள்
ஊரெல்லாம் ஓடித்திரியலாமென
அழைத்துப்போவார்கள்
சுமக்கமுடியாத சுமைகளைஎல்லாம்
நெஞ்சிலே சுமந்துகொண்டு
அவர்களின் பின்னாலே ஓடித்திரிவோம்

கடைசியாகக்கூட அவர்கள்
ஒன்றிலிருந்து ஆறுதடவைகள்
நாடுநாடாய் அழைத்துப்போனார்கள்.
இருப்பினும்...
ஒரே ஒரு அதிருப்திதான்
அவர்களிகன்மீது எங்களுக்கு...!

ஆறுதடவைகள் பேசலாமென
எங்கெங்கோ அழைத்துப்போனவர்கள்
ஒரு தடவையாவது பேசியிருக்கலாம்...!!!</span>


த.சரீஷ்
27.01.2006 (பாரீஸ்)
enrum anpudan
Reply
#2
நன்றி சூரியமுகி.
எழுத்தின் நிறத்தை மாற்றிவிடுங்கள்.

சரீஷின் கவிதைகளில் வளர்ச்சி தெரிகிறது.
விரிவுபட்ட பார்வை தெரிகிறது.
நல்லதொரு உட்பொருள்.

Quote:ஆறுதடவைகள் பேசலாமென
எங்கெங்கோ அழைத்துப்போனவர்கள்
ஒரு தடவையாவது பேசியிருக்கலாம்...!!!

என்ற வரிகள் உண்மையை கவிஞருக்கேயுரிய நக்கலோடு சொல்லியிருக்கின்றன.


Reply
#3
சூரியமுகி கவிதைக்கு நன்றி. ஆனா வாசிக்க முடியல்ல..கலர் ரெம்ப லுமினியன்ரா இருக்கு... வேற கலருக்கு மாத்தினா நல்லா இருக்கும்..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#4
எனக்கு தனிமடலில் வந்த கவிதையை இங்கு உங்கள் பார்வைக்காக இணைத்தேன்.
சரீஷ் & சரீஷ் கவிதைகள் பற்றி தெரிந்தவர்கள் இங்கு இணைக்கவும்
enrum anpudan
Reply
#5
இணைப்புக்கு நன்றி சூரியமுகி
<b> .. .. !!</b>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)