Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கணவன் மனைவி ஆசை குறைகிறது
#1
<span style='font-size:22pt;line-height:100%'><img src='http://www.dailythanthi.com/magazines/IMAGES/GIF/sm/Page03d.jpg' border='0' alt='user posted image'>
- அதிர்ச்சி சர்வே
<img src='http://www.dailythanthi.com/magazines/IMAGES/GIF/sm/Page03g.jpg' border='0' alt='user posted image'>
\"கணவன், மனைவிக்கு இடையே படுக்கை அறையில் காதல் காணாமல் போய்க் கொண்டிருக்கிறது. இதனால் அவர்களுக்குள் நிகழும் செக்ஸ் உறவில் நேசமும், மனம் லயிக்கும் நெருக்கமும் இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. இருவருக்குமே இருக்கும் மனநெருக்கடியும், பிரச்சினைகளும், சோர்வும் படுக்கை அறையை பெயரளவுக்கு உடல்கள் மட்டும் இணையும் இடமாக மாற்றிக்கொண்டிருக்கிறது. கணவன்-மனைவி படுக்கை அறை உறவு ஏதோ ஒரு சடங்கு, சம்பிரதாயம் போல் ஆகிவிட்டது. இந்த நிலையை சமூகம் உணர்ந்து விழித்துக்கொள்ளா விட்டால் எதிர்காலத்தில் கணவன், மனைவி இடையே ஏற்படும் பிரச்சினைகள் எல்லையில்லாமல் போய்விடும்'' -என்கிறார், பிரபல செக்ஸாலஜிஸ்ட் டாக்டர் டி.காமராஜ்.

இவரது `இந்தியன் அசோசியேஷன் பார் செக்ஸாலஜி' சார்பில் சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வு மேற்கண்ட தகவல்களை தெரிவிக்கிறது.


\"எங்கள் குழுவின் சர்வேயில் நகரத்தில் வாழும் நாற்பத்தி நான்கு சதவீத திருமணமான ஆண்கள் தங்களுக்கு செக்ஸ் மீது இருக்கும் ஆர்வம் குறைந்து கொண்டே இருப்பதாகச் சொல்கிறார்கள். இதனால் அவர்களது தாம்பத்ய வாழ்க்கை நெருக்கடிக்குள்ளாகுகிறது. மேற்கண்டவர்களில் 29 சதவீதம் பேர் நிறைய சம்பாதிக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் \"எங்கள் வேலையிலே நாங்கள் மிகவும் சோர்ந்து போகிறோம். வாரத்தில் ஒரு முறையாவது உறவு வைத்துக்கொள்ளாவிட்டால் மனைவி, அவள் மீது எங்களுக்கு பாசம் இல்லை என்று நினைத்துவிடுவாள். அப்படி ஒரு எண்ணம் அவளுக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் படுக்கையை பகிர்ந்துகொள்கிறோம்.''-என்று கூறி இருக்கிறார்கள்.

இந்த மாதிரியான எண்ணத்துடனே அவர்கள் படுக்கையை பகிர்ந்து கொள்வதால் அவர்களையே அவர்கள் ஏமாற்றிக்கொள்வதோடு, தங்கள் மனைவிகளின் உணர்வு களையும் மழுங்கடிக்கிறார்கள் என்பது அவர்களுக்கே தெரியாமல் போய்விடுகிறது. இப்படி திருப்தியில்லாமல் உறவு வைத்துக்கொள்வதாலும், அதிக நாட்கள் இடைவெளி விட்டு உறவு கொள்வதாலும் காலப்போக்கில் அந்த கணவன், மனைவி இருவருக்குமே உறவில் எந்த சுகமும் இல்லாமல் போய்விடும். முடிவில் ஆசையே குறைந்துபோய் `திருப்திதராத இந்த உறவு நமக்குள் தேவையா?'-என்ற ரீதியில் சிந்திக்கத் தொடங்கிவிடுவார்கள். அதன் விளைவுகளால் குடும்ப உறவுகளில் சிக்கல் ஏற்படுகிறது. மட்டுமின்றி குழந்தை இல்லாத தம்பதிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது''-என்கிறார்.

ஆசியா-ஓசியானிக் செக்ஸாலஜிஸ்ட் சங்கத்தின் துணைத்தலைவரான டாக்டர் காமராஜ் வெளியிட்டிருக்கும் சர்வே தொடர்பான ஆய்வறிக்கையில் கணவன்-மனைவி உறவில் சிக்கல் ஏற்பட என்னென்ன காரணங்கள் என்பதையும் விளக்கியுள்ளார்.

நேரமின்மை: கணவன், மனைவி உறவுச்சிக்கலுக்கு முக்கிய காரணமாக இருப்பது நேரமின்மைதான். இரண்டு பேரும் வேலை பார்க்கும் குடும்பங்களில் இதுவே பெரிய வில்லன். மனைவி அலுவலக வேலையை முடித்துக்கொண்டு வேகவேகமாக வீட்டிற்கு வருவார். வந்த வேகத்திலே சமையல் அறைக்குள் அவர் நுழையவேண்டும். பிரிஜ்ஜில் ஏற்கனவே வாங்கி வைத்த மீனோ, இறைச்சியோ இருக்கும். அதை எடுத்து சமையல் செய்யவேண்டும். மறுநாள் காலை உணவுக்கு என்ன தயாரிப்பதென்று முடிவெடுக்க வேண்டும். வீட்டை சுத்தம் செய்தல், பாத்திரம் தேய்த்தல் என்று அவள் சுழல்கிறாள். அதோடு நின்று விடுவதில்லை. குழந்தை படித்துக்கொண்டிருக்கும். அதன் சந்தேகத்தை தீர்த்துவைக்கவேண்டும்.

இந்த நிலையில் கணவர் வீடு திரும்புவார். அவர் எப்போது தூங்கலாம் என்ற நிலையிலே வருகிறார். கணவன், மனைவி இருவர் நேரமும் வேலை, அலுவலகம், குழந்தை, டெலிவிஷன் நிகழ்ச்சி, உறவினர்கள் வட்டம், வீட்டு வேலைகள் போன்ற அனைத்துக்கும் ஒதுக்கப்பட்டுவிடுவதால் கணவன், மனைவி இருவருக்கும் அவர்களுக்கென்று நேரம் ஒதுக்க முடியாமல் போய்விடுகிறது. அன்றன்றைய வேலை முடிந்து இருவரும் படுக்கைக்கு செல்லும் போது சோர்ந்து போய், எப்போது தூங்கலாம் என்ற நிலைக்குச் சென்றுவிடுகிறார்கள். கணவனும், மனைவியும் சந்தோஷமாக பேசிக்கொண்டிருக்கவோ, அவர்கள் விரும்பிய பொழுதுபோக்குகளில் ஈடுபடவோ, அவர்கள் அந்தரங்கமாக பேசிக் கொண்டிருக்கவோ நேரமில்லாமல் போய்விடுகிறது. அதிக சோர்வு, களைப்பு, மறுநாள் பணி பற்றிய சிந்தனை போன்றவைகளுடன் அவர்கள் படுக்கைக்குச் செல்லுவதால் படுத்ததும் தூங்கிவிடுகிறார்கள். அதை மீறி அவர்கள் உறவு கொள்ள விரும்பினால், அது முழுமையான மன ஈடுபாட்டோடு அமையாமல் ஏதோ அவசர கோலத்து சடங்கு போல் ஆகிவிடுகிறது. இதில் குறிப்பிடவேண்டிய இன்னொரு விஷயமும் இருக்கிறது. கணவர், மனைவியிடம் அன்பு செலுத்தாமல் இருந்தாலோ, அவருடைய அன்றாட செயல்பாடுகள் பிடிக்காமல் இருந்தாலோ அவளுக்கு பிறப்பு உறுப்பு இறுக்க நிலைத்தோன்றிவிடும். அதனால் உறவு, வலி நிறைந்த அவஸ்தையாக மாறி, உடலுறவில் நிரந்தர வெறுப்பை உருவாக்கிவிடும்.

பலகீனநிலை: வேலையில் ஏற்படும் மனநெருக்கடியும், பொருளாதார சிக்கலும் ஆண்க ளுக்கு சோர்வு மனநிலையை அதிகம் ஏற்படுத்துகிறது. அந்த சோர்வு நிலை, ஆண்க ளுக்கு செக்ஸ் பலகீனத்தை உருவாக்கும். இந்த பலகீனத்தை அப்படியே வைத்துக் கொண்டிருந்தால், அது செக்சில் வெறுப்பு நிலையை உருவாக்கும். அதனால் மனச் சோர்வில் இருந்து ஆண்கள் விடுபடவேண்டும். அவர்களுக்கு செக்ஸ் பலகீனங்கள் இருந்தால் அதற்குரிய சிகிச்சையை உடனடியாக மேற்கொள்ளவேண்டும். இப்போது எல்லாவிதமான செக்ஸ் பலகீனங்களுக்கும் சிகிச்சைகள் உள்ளன.

திருமணத்திற்கு முந்தைய உறவுகள்:

திருமணத்திற்கு முன்பு செக்ஸ் உறவில் ஈடுபட்டிருப்பதும், அதில் தோல்வி எற்பட்டு மனநெருக்கடிக்குள்ளாகுவதும் திருமணத்திற்குப்பிறகு செக்ஸ் மீது ஒரு வித வெறுப்பை யும், பலகீனத்தையும் உருவாக்குகிறது. ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் திருமணத்திற்கு முன்பு உறவு வைத்துக்கொள்ளும் போது அந்த உறவினை ஹோட்டல் அறையிலோ, தெரிந்த வீட்டிலோ வைத்துக்கொள்கிறார்கள். அப்போது அவர்கள் போலீஸ் பயம், தெரிந்தவர்கள் யாராவது பார்த்துவிடுவார்களோ என்ற அச்சம், பெற்றோருக்கு தெரிந்து விடுமோ என்ற கவலை போன்றவைகளுக்கு ஆட்படுகிறார்கள். அந்த பயத்தால் அவர்களால் முழுமையான உறவில் ஈடுபடமுடியாது. அது அவர்களுக்கு ஒரு வித தோல்வி மனப்பான்மையை தந்துவிடும். அதையே நினைத்து மனநெருக்கடிக்கு உள்ளாகி திருமணத்திற்குப் பிறகும் முழுமையாக செக்ஸ் உறவு வைத்துக்கொள்ள முடியாமல் தவித்துப்போகிறார்கள்.

உடற்கூறு அறிவின்மை:

ஆண்களும், பெண்களும் இப்போது எவ்வளவோ படித்தவர்களாகவும், பொது அறிவில் சிறந்தவர்களாகவும் இருந்தாலும் உடற்கூறு பற்றிய அறிவில் ஏதும் அறியாதவர்களைப் போல்தான் இருக்கிறார்கள். ஆணின் உடற்கூறு பற்றி பெண்ணும், பெண்ணின் உடற்கூறு பற்றி ஆணும் சரியாக அறிந்திருப்பதில்லை. இப்போது பெரும்பாலனவர்களுக்கு செக்ஸ் பற்றிய விழிப்புணர்வு இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. ஆனால் எங்களிடம் கவுன்சலிங்குக்கு வரும் தம்பதிகளில் சிலருக்கு சரியான முறையில் உறவு கொள்ளவே தெரிந்திருக்கவில்லை என்பதைக் கண்டறிய முடிகிறது.

கடந்த வருடத்தில் குழந்தைபேறு சிகிச்சை பெற்ற தம்பதிகள் அனைவரிடமும் எடுத்த கருத்துக் கணிப்பில் இன்னொரு விஷயம் தெளிவாகப்புலப்பட்டுள்ளது. அந்த தம்பதிகளில் பெரும்பாலானவர்களுக்கு மன உளைச்சல் மிக அதிகமாக இருந்தது. மனஉளைச்சல் அதிகமாக இருக்கும் போது அவர்களுக்கு செக்ஸ் ஆர்வம் குறைந்து போவது மட்டு மின்றி ஆண்களின் உயிரணுக்களின் எண்ணிக்கை குறைந்து, அதன் உயிரோட்ட தன்மையும் மிகக்குறைந்து போகிறது. அதுவே குழந்தையின்மைக்கான காரணமாகிறது.

பெண்களில் பலர் இப்போது வேலைக்குச் செல்கிறார்கள். அவர்கள் பெரும்பாலும் புடவையைத்தவிர இதர ஆடைகளையே அணிகிறார்கள். அப்போது உள்ளாடை அணிகி றார்கள். அவர்கள் முழுநேரமும் பேன்டீஸ் அணிவது நல்லதல்ல. ஏன்என்றால் கோடைகாலத்தில் நன்றாக பெண்களுக்கு வியர்க்கும். அப்போது மலத்துவாரப்பகுதியில் தொற்றுக்கிருமிகள் இருக்கும். அவை வியர்வையுடன் சேர்ந்து தண்ணீர் தன்மையுடன் பிறப்பு உறுப்பு பகுதியில் பிரவேசிக்கும். அங்கு தொற்றுக்கிருமிகள் தாக்குதல் உருவாகி விடும். அந்த தாக்குதலுக்கு உடனடியாக முறையான சிகிச்சை எடுக்காவிட்டால், உறவின் போது கணவருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் பெண்கள் 24 மணிநேரமும் பேன்டீஸ் அணியும் பழக்கத்தை உருவாக்கிக்கொள்ளக்கூடாது.

ஆண்களும் இறுகிய உள்ளாடை அணியக்கூடாது. விரைப்பகுதி எப்போதும் உடலை ஒட்டிய நிலையில் இருக்கக்கூடாது. இறுக்கமான உள்ளாடை அதற்கு மாறான நிலையை உருவாக்கிவிடுகிறது. விரைப்பகுதியின் தட்பவெப்பநிலை உடல் தட்பவெப்பநிலையை விட ஒரு டிகிரி குறைவாக இருக்கும். உள்ளாடை அணிந்திருக்கும் போது உடலோடு விரைப்பை ஒட்டி உடலின் தட்பவெப்ப நிலைக்கு மாறிவிடுகிறது. அதனால் உயிரணுவின் உயிர்தன்மையில் பாதிப்பு ஏற்பட்டுவிடுகிறது.

இப்போது வாழ்க்கை சூழல், வாழும் முறை, உடை கலாசாரம், உணவுக் கலாசாரம், போட்டி மனப்பான்மை, மனநெருக்கடி போன்ற அனைத்தும் கணவன்- மனைவி நேசத்திற்கும், படுக்கை அறை உறவுக்கும், திருப்தியான தாம்பத்ய வாழ்க்கைக்கும் எதிராக இருக்கிறது. அதை எல்லாம் உணர்ந்து கணவனும், மனைவியும் நடந்து பாசத்தையும், நேசத்தையும் பெருக்கிக்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம்.
<img src='http://www.dailythanthi.com/magazines/IMAGES/GIF/sm/Page03f.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.dailythanthi.com/magazines/IMAGES/nyayiru_malar/sunhead.gif' border='0' alt='user posted image'></span>
Reply
#2

என்ன கூறவந்தீர்கள் மெளனமாகிவிட்டீர்கள். அல்லது மெளனமாக்கப்பட்டுவிட்டீர்களா? :roll:
Reply
#3
கணவன் மனைவிக்கும் இடையில் இப்ப ஆசை குறைஞ்சிருக்கலாம்

நான் அடிச்சு சொல்லுவன்...ஆணுக்கு பெண்ணில் மேலுள்ள ஆசையோ...பெண்ணுக்கு ஆண்களின் மேலுள்ள ஆசையோ ஒருபோதும் குறையாது....
Reply
#4
அதானே சின்ன குட்டியாருக்கு இந்த வயசிலையும் ஆசை இருக்காம் என்டா பாத்துகோங்க...என்ன அப்பு correct ஆ? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply
#5
எல்லாத்துக்கும் மனம் தான் காரணமே தவிர வேறொண்டும் பெரிசா இல்லை பாருங்கோ....ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொண்டு....விட்டுக்கொடுப்புகளோடு....மனதால (உதட்டளவில அல்ல) பேசிப்பழக....எல்லா கடினமான வாழ்கை முறையும் இனிதே அமையும் பாருங்கோ........????? :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply
#6
sinnakuddy Wrote:கணவன் மனைவிக்கும் இடையில் இப்ப ஆசை குறைஞ்சிருக்கலாம்

நான் அடிச்சு சொல்லுவன்...ஆணுக்கு பெண்ணில் மேலுள்ள ஆசையோ...பெண்ணுக்கு ஆண்களின் மேலுள்ள ஆசையோ ஒருபோதும் குறையாது....


யார் இல்லையெண்டது ஆனால் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது கணவன் மனைவியைப்பற்றி.
.....

<img src='http://img423.imageshack.us/img423/5060/sabi40ck4xv.gif' border='0' alt='user posted image'>
Reply
#7
மனைவியிடம் தினமும் பேச்சும் அடியும் வாங்கும் கணவர்களுக்கு எங்கே அப்பு அன்பு வரும்?. சிட்னியில ஒருவருக்கு மாமியாரிடம் இருந்து அடி வாங்கிய அனுபவமும் இருக்குது. அடிதாங்கமால் ஒடி விட்டார்
! ?
'' .. ?
! ?.
Reply
#8
உங்கட உடம்ப பார்த்தால் அப்படி தான் இருக்கு?அப்பு அவதாரில இருக்கிறது உம்மன்ட கடை குட்டியோ அல்லது பேரப்பிள்ளையோ???

அப்ப தினமும் அடி வாங்கிறிங்க,இவ்வளவு அடி வாங்கியும் எப்படி உங்களாள் சிரித்து கொண்டு இருக்க முடியுது???
"To think freely is great
To think correctly is greater"
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)