04-23-2006, 11:13 AM
<b>மனித உரிமை கண்காணிப்பு அறிக்கையின் உண்மைத் தன்மை என்ன?: பிரான்ஸ் தமிழர் மனித உரிமை மையம் விளக்கம்</b>
[ஞாயிற்றுக்கிழமை, 23 ஏப்ரல் 2006, 06:59 ஈழம்] [ஐரோப்பிய நிருபர்]
சர்வதேச ஊடகங்களில் அண்மையில் பரபரப்பாக பேசப்பட்ட Human Rights Watch என்ற மனித உரிமை அமைப்பின் உண்மைத் தன்மை குறித்து பிரான்ஸ் தமிழர் மனித உரிமை மையம் விளக்கியுள்ளது.
பிரான்ஸ் தமிழர் மனித உரிமை மையத்தின் பொதுச் செயலாளர் ச.வி.கிருபாகரன் வெளியிட்டுள்ள அறிக்கை:
அமெரிக்காவை தளமாக கொண்டு இயங்கும் மனித உரிமை அமைப்பான Human Rights Watch இனால் (மனித உரிமைகள் கண்காணிப்பு) கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்ட அறிக்கை பல பொய்களையும், கட்டுக்கதைகளையும், கற்பனைகளையும், ஒரு பக்கச் சார்பாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான கருத்துக்களை மட்டுமே கொண்டவையாகவுள்ளது.
சிறிலங்கா அரசின் மனித உரிமை மீறல்கள் மிக அழகாக திட்டமிடப்பட்டு மறைக்கப்பட்டுள்ளதை நாம் காணக்கூடியதாகவுள்ளது.
Human Rights Watch இனால் 2004 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதலாவது அறிக்கையும், கடந்த மார்ச் மாதம் இரண்டாவது அறிக்கையும், விடுதலைப் புலிகளை மட்டுமே எவ்வித ஆதாரமும் இல்லாமல் குற்றம்சாட்டி அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
இதில் கூறப்பட்டுள்ள தகவல்களை அலசி ஆராயும் போது பல உண்மைகள், "முழுப் பூசணிக்காயை சோற்றில்" புதைத்துள்ளது தெரிகிறது.
ஒர் மனித உரிமை மீறல் பற்றிய அறிக்கையை, ஐ.நா. மனித உரிமை கோட்படுகள், சர்வதேச சட்டங்களுக்கு அமைய வெளியிடுவதனால் அந்த அறிக்கையின் தகவல்கள் ஆதரத்துடன்
(1) பாதிக்கப்பட்டவருடைய முழுப் பெயர்
(2) சம்பவம் நடந்த இடம்
(3) சம்பவம் நடந்த நாள்
(4) மனித உரிமை மீறலை மேற்கொண்டவர் யார் (அரச படை, அரச சார்பற்ற படை)
(5) சம்பவம் பற்றிய முழு விவரம்
(6) சாட்சிகள் யாரும் இருந்தால் அவர்கள் விபரங்கள்
(7) பாதிக்கப்பட்டவரின் பிறந்த நாள்,
(8) ஆணா? பெண்ணா?,
(9) பாதிக்கப்பட்டவரின் முன்னைய அல்லது தற்போதைய முகவரி
போன்றவறை மேற்கோள் காட்டி சர்வதேச மனித உரிமை மரபுகளுக்கமைய முறைப்பாடு செய்ய முடியும்.
இவ்விடயத்தில் ஆகக் குறைந்தது முதல் நான்கு தகவலும் இல்லாத முறைப்பாடு எந்த ஒரு சந்தர்பத்திலும் யாரலும் ஏற்றுக்க கொள்ளப்பட மாட்டது.
இக்காரணத்தினால் தான், இலங்கை தீவில் தமிழீழ மக்கள் மீது ஒர் இன அழிப்பு யுத்தத்தை சிறிலங்கா அரசு மேற்கொண்டு ஆயிரக்கானக்கான தமிழீழ மக்கள் கொல்லப்பட்ட போதிலும், சர்வதேச சட்டங்களின் கீழ் பல படுகொலைகள், பாலியல் வன்முறைகள், கைதுகள், காணாமல் போனோரின் முறைப்பாடுகள் ஐ.நா. மனித உரிமை கோட்பாடுகளின் கீழ் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
இந்த மனித உரிமை கோட்பாடுகள், சர்வதேச சட்டங்களையும் நிச்சயம் மேற்கூறிய இரு அறிக்கைகளை வெளியிட்ட Human Rights Watch இன் அறிக்கைகளின் ஆசிரியர் எனக் கூறப்படும் யோ பேக்கர் என்ற பெண்ஒமணியும் நன்கு அறிந்திருப்பார்கள் என்று நாம் நம்புகிறேம்.
இரு அறிக்கையில் உள்ள விடயங்களை, எமது அமைப்பு அலசி ஆராயப்பட்ட போது பல பொய்களையும், கட்டுக்கதைகளையும், கற்பனைகளையும், பக்கச்சார்பான விடயங்களையும் ஆங்கிலத்தில் அறிக்கையாக நாம் வெளியிட்டுள்ள போதிலும், அதே விடயத்தை தமிழில் சுருக்கமாக சில முக்கிய தகவல்களுடன் இங்கு பிரசுரிக்கின்றோம்.
எமது முழு அளவிலான ஆங்கில அறிக்கையை எமது அமைப்பின் www.tchr.net என்ற இணையத் தளத்தில் பார்வையிடலாம்.
முதலவதாக, இரு அறிக்கைகளும் மனித உரிமை அமைப்புகளின் மரபுகளுக்கு மாறாக எழுதப்பட்டுள்ளது.
உதராணமாக இரு அறிக்கைகளிலும் பரிந்துரைகள் அறிக்கையில் முதலில் இடம்பெறுகின்றன. அறிக்கையில் பரிந்துரைகளின் பின்னரே குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றது.
இதை நாம் சட்ட வரையறையின் கீழ் எடுத்து கூறுவதானால்,
ஓர் வழக்கறிஞர் நீதிபதியிடம் ஒருவருக்கு என்ன தண்டனை கொடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விட்ட பின்னரே அவர் என்ன குற்றச்சாட்டை செய்துள்ளார் என விவாதிப்பது போலானது.
இதிலிருந்து இந்த அறிக்கையின் ஆவேசத்தையும் நோக்கத்தையும் சகலரும் இலகுவாக புரிந்து கொள்ளக்கூடியதாகவுள்ளது.
அத்துடன் அறிக்கையில் உள்ள அனைத்துப் பரிந்துரைகளும் அரசியல் நோக்கங்களை உள்ளடங்கியதுடன், இலங்கைத்தீவில் சுடர்விட்டு எரியும் இனப்பிரச்சனைக்கு எண்ணெய் ஊற்றுவது போல் அமைகின்றது.
இந்த அமைப்பினால் நவம்பர் 2004 இல் வெளியிடப்பட்ட முதலாவது அறிக்கையில் உள்ள பரிந்துரைகள் பல கேலிக்கூத்துக்கு ஒப்புள்ளதாக கொடுக்கப்பட்டுள்ளது.
மனித உரிமை அமைப்பினால் ஐ.நா. பாதுகாப்பு சபை, ஐ.நா. பொதுச்சபை, உதவி வழங்கும் நாடுகள் போன்று பல சர்வதேச அமைப்புக்களுக்கு பரிந்துரைகள் எழுதப்பட்டுள்ளது.
இங்கு ஒன்றை மட்டும் நாம் நினைவில் கொள்ள வேண்டியது மிக அவசியம். அனைத்துப் பரிந்துரைகளுமே விடுதலைப் புலிகளுக்கு எதிரானவையே. இது ஓர் மனித உரிமை அமைப்பின் வேலைத்திட்டாமா? என்ற கேள்வி அனைவரின் மனதில் இலகுவாக எழுகிறது.
ஐ.நா. பாதுகாப்புச் சபை, ஐ.நா. பொதுச்சபை போன்றவைக்கு ஓர் மனித உரிமை அமைப்பு பரிந்துரை செய்வது, பூமியில் வசிக்கும் ஓர் குடிமகன் சூரியனுக்கும் சந்திரனுக்கும் பரிந்துரை செய்வதற்கு ஒப்பானது.
இந்த அறிக்கைக்கான பிரச்சாரக் கூட்டம் பிரித்தானியாவில் லண்டனிலும், கனடாவில் ரொறேன்ரோவிலும் நவம்பர் 2004 இல் நடைபெற்றது. இதில் லண்டன் கூட்டத்தில் தமிழர் மனித உரிமைகள் மையத்தின் சில முக்கிய அங்கத்தவர்கள் பங்கேற்றனர்.
அறிக்கையின் ஆசிரியர் எனக் கூறப்படும் யோ பேக்கர் என்ற பெண்மணியினால் Human Rights Watch இன் பெயரில் லண்டன் கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்ட போதும், இக் கூட்டத்தை உண்மையில் முன்னின்று நடத்தியவர்கள், லண்டன் வானொலி நிலையமான ரி.பி.சி யின் ஊழியர்களும், தொண்டர்களும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
அத்துடன் இக்கூட்டத்தில் சிறிலங்காவில் துணை இராணுவத்துடன் தொடர்பு கொண்ட ஒருவர் தமிழில், தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் கொள்கைகளை மிகவும் காரசாரமாக கண்டித்து உரையாற்றினார்.
இவர் உரையைத் தொடர்ந்து ரி.பி.சி வனெலியின் தொண்டர்களின் ஒருவர் தனது நண்பரின் தமிழ் உரையை முற்று முழுதாக மாற்றி ஆங்கிலத்தில் வேறுபட்ட கருத்துக்களுடன், தமிழர் அல்லாதோருக்கு எடுத்து கூறிய போது, கூட்டத்தில் சிக்கல்கள் ஏற்பட்டது. யோ பேக்கரிடம் பலர் அறிக்கை பற்றி பல கேள்விகள் எழுப்பியிருந்த போதும் யோ பேக்கர் எந்தக் கேள்விகளுக்கும் எவ்வித பதிலும் அளிக்கவில்லை.
லண்டன் கூட்டத்தைவிட மோசமான நிலையே ரொறேன்ரோ கூட்டத்தில் ஏற்பட்டது.
மார்ச் மாதம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையை ஆராயும் போது பல பொய்களும், கட்டுகதைகளும், கற்பனை கதைகளையும், ஒருபக்கச் சார்பாக வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான கருத்துக்களை மட்டும் முன்வைத்துள்ளதுடன் சிறிலங்கா அரசின் மனித உரிமை மீறல்கள் மிக அழகாகத் திட்டமிட்டு மறைக்கப்பட்டுள்ளதை நாம் காணக்கூடியதாகவுள்ளது.
இந்த அறிக்கை Human Rights Watch இனால் வெளியிடப்படவிருந்த அதே நாள், லண்டனில் சிறிலங்காவின் வெளிநாட்டு அமைச்சர், இந்த அறிக்கை பற்றிய அறிவித்தலை கொடுத்தது பலரை பெரும் ஆச்சரியத்தில் உள்ளாக்கியது.
இந்த அறிவித்தல் மூலம் சிறிலங்கா அரசுக்கு சார்பான அறிக்கையொன்றை இன்று Human Rights Watch இனால் வெளியிடப்படவுள்ளது என்பதை தெளிவாக்கியது.
ஓருவரின் மனித உரிமை மீறப்பட்டிருந்தால், நாம் முன்கூறியது போல், மனித உரிமை கோட்பாடுகளுக்கு அமைய அச்சம்பவம் விசாரிக்கப்பட்டு, மீறப்பட்டவருக்கு நட்டஈடு கொடுக்கவும், மீறியவருக்கு அதற்குரிய தண்டனையை வழங்க வேண்டும் என்பது பொதுவிதி.
இந்த அடிப்படையில் 47 பக்கங்களை கொண்ட அந்த அறிக்கையில் நான்கு முறைப்பாடுகள் மட்டுமே பாதிக்கப்பட்டவர்கள் எனக் கூறப்படுபவர்களை இனம் காணக்கூடியதாகவுள்ளது.
இதில் இரண்டு முறைப்பாடுகள் மீக நீண்டகாலமாக அனைவரும் அறிந்தவை. இதில் ஒர் ஆழ்ந்த உண்மையை நாம் யாவரும் ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.
புலம்பெயர் வாழ் தமிழரின் வாழ்வில், ஒரு சில விடுதலைப் புலி ஆதரவளார்கள் தனிப்பட்ட காரணங்களுக்காக தம்மிடையே பிரச்சனைப்பட்டுக் கொண்டர்கள் என்பதை பலர் அறிவார்கள். ஆனால் Human Rights Watch இன் அறிக்கையில் மிரட்டி பணம் வாங்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டிற்கும், வெளிநாடுகளில் உள்ளோரின் தனிப்பட்ட பிரச்சனைகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
மற்றைய முறைப்பாடுகளும் அநாமதேயமாகவுள்ளது. இதற்கு இந்த அமைப்பு கொடுக்கும் விளக்கம் என்னவெனில், பாதிக்கப்பட்டோரின் பாதுகாப்பு கருதி தாம் அதை வெளியிடவில்லையாம்.
அதாவது, பாதிக்கப்பட்டோரின் விவரங்களை வெளியிட்டால், அவர்களை துன்புறுத்தியோர் அல்லது பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்டோர் என நம்பப்படுவோர், முறைப்பாடு கொடுத்தவர்களை இனம் கண்டுவிடுவார்கள் என்பதே விளக்கம்.
ஆனால் அறிக்கையில் பாதிக்கப்பட்டோருக்கு எப்படியாக சம்பவம் நடைபெற்றது. அவர்களிடம் சென்றவர்கள் எதை, எப்படியாக கூறினார்கள் என்று மிக அழகாக குறியீடுகள் இட்டு கூறப்பட்டுள்ளது.
அப்படியானல், உண்மையில் இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றிருந்தால், Human Rights Watch யாரிடமிருந்து இந்த தகவலை மறைப்பதாக கூறுகிறார்களோ, அவர்கள் பாதிப்புக்குள்ளாக்கப்பட்டோர் எனக் கூறப்படுவோரை இனம் கண்டு கொள்ள மாட்டார்களா?
ஆகையால் தான் நாம் கூறுகிறோம். Human Rights Watch இன் அறிக்கையில் கூறப்பட்டுள்ள 95 வீதமான குற்றச்சாட்டுக்கள் பொய்களையும், கட்டுக்கதைகளையும், கற்பனைக் கதைகளையும் கொண்டவை. இல்லையெல் அவர்களின் பெயர், முகவரி, சம்பம் நடந்த நாள் போன்ற விடயங்களை அவர்கள் யாரிடமிருந்து மறைக்கிறார்கள்?
இதற்கு இன்னும் இரு உதரணங்களை இங்கு குறிப்பிட விரும்புகிறோம்.
விடுதலைப் புலிகள் கடந்த பல வருடங்களாக வடக்கு-கிழக்கில் வாழும் மக்களின் விடுதலைக்காக போராடி வருகின்றார்கள் என்பது யாவரும் அறிந்ததே.
தமிழீழ விடுதலைப் புலிப் போராளிகள், பிரதிநிதிகள், ஆதரவளார்கள் அனைவருமே தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்தை "தமிழ் ஈழம்" என்றும், புலம்பெயர் வாழ் பிரதிநிதிகள், ஆதரவளார்கள் "தமிழ் ஈழம்" அல்லது "நாடு" என்று விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை குறிப்பிடுவதுடன், இவர்கள் யாரும் தாம் "சிறிலங்கா"வை சேர்ந்தவர் என்று ஒரு போதும் குறிப்பிட்டது கிடையாது.
இதேபோன்று தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை "தலைவர்" அல்லது "அண்ணை" அல்லது முதியோரால் "தம்பி;" என்றே குறிப்பிடுகிறார்கள்.
இவர்கள் யாரும் இச் சொற்பதப் பிரயோகத்தில் ஒருபோதும் தவறுவதில்லை. இந்த உண்மை மிக நீண்ட காலமாக யாவரும் அறிந்ததே.
ஆனால் Human Rights Watch இனால் வெளியிடப்பட்டிருந்த அறிக்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளின், பிரதிநிதிகள் லண்டனிலும், ரொறோன்ரோவிலும் பணம் தருமாறு பலரைப் பயமுறுத்திய போது, - நீங்கள் சிறிலங்காவை சேர்ந்தவர்கள்- ஆகையால் நீங்கள் பணம் தர கடமைப்பட்டுள்ளீர்கள். பணம் தராவிட்டால் நீங்கள் சிறிலங்காவுக்குச் செல்ல முடியாது. இது திரு பிரபாகரனின் வேண்டுகோள் போன்ற வசனங்களை - விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளால் கூறப்பட்டதாக குறியீடுகள் இட்டு அறிக்கையில் கூறியுள்ளார்கள்.
ஆகையால் தம்மை "சிறிலங்கா" தேசத்தைச் சேர்ந்தவர் என என்றும் கொள்ளும் சிறிலங்காவில் உள்ள துணை இராணுவத்தினருடன் தொடர்புகொண்ட லண்டன், ரொறேன்ரோவிலிருந்து இயங்கும் தமிழ்க் குழுக்களினால் தான் இப்பயமுறுத்தல் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும்.
அப்படியில்லாத பட்சத்தில் இந்த அறிக்கையில் கூறப்பட்டவை கட்டுக்கதைகளையும், கற்பனைகதைகளையும் உள்ளடக்கியது என்பது நிரூபிக்கப்படுகின்றது.
அறிக்கையில் ஒரு பட்சமாக தமிழீழ விடுதலைப் புலிகளை மட்டும் வலிந்து குறை காணப்பட்டுள்ளது என்பது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பல சம்பவங்கள் மூலம் தெளிவாகின்றது.
<b>கடந்த வருடம் ஒக்ரோபர் மாதம், யாழ். மத்திய கல்லூரி அதிபர் இராசதுரையின் கொலைக்கு தமிழீழ விடுதலைப் புலிகளை குற்றம் சாட்டியுள்ள இந்த அறிக்கை இக்கொலைக்கு முதல் நாள் படுகொலை செய்யப்பட்ட கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரியின் அதிபர் நாடரசா சிவகடாட்சத்தின் படுகொலையை முழுதாக மூடி மறைத்துள்ளது.</b>
<b>இதேபோன்று லண்டனில் நடைபெறும் ரி.பி.சி. வானெலி நிலையத்தின் பொறுப்பாளர் வி.ராமராஜ் என்பவரை நாளாந்தம் மிரட்டுவதாக குற்றம்சாட்டியுள்ள அறிக்கை, ராமாராஜ் தற்பொழுது எங்கே, அவரின் சரித்திரம் என்ன என்பது போன்ற விடயங்கள் அறிக்கையில் மறைக்கப்பட்டுள்ளது.
உண்மையில் அறிக்கை வெளியாவதற்கு முன்பே, ரி.பி.சி. வானொலி நிலலையத்தின் பொறுப்பாளர் எனக் கூறப்படும் வி. ராமராஜ், கடந்த பெப்ரவரி மாதம் ஜெனீவாவில் சுவிஸ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை மிக நீண்ட காலமாக சுவிஸ் காவல்துறையினர் பல கிரிமினல் குற்றங்களுக்காக - போதைவஸ்து கடத்தல், ஆசியாவிலிருந்து ஐரோப்பாவுக்கு ஆட்கடத்தல், வங்கி அட்டை மோசடி போன்ற குற்றங்களுக்காக தேடி வந்துள்ளனர்.
அவர் இன்றும் சுவிஸ் நாட்டின் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
பலரைப் பயமுறுத்திப் பணம் வாங்குவதாக அறிந்த Human Rights Watch இற்கு ரி.பி.சி. வானொலி நிலையத்தின் பொறுப்பாளர் வி. ராமராஜ் சுவிஸ் காவல்துறையினரால் தேடப்பட்டதும், கடந்த பெப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டதும் அறவே தெரியமல் போயுள்ளது பெரும் வியப்பாகவுள்ளது.</b>
<b>இறுதியாக, அறிக்கையின் ஆசிரியர் எனக் கூறப்படும் யோ பேக்கர், விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு சிறப்பாக வன்னிக்கு குறைந்தது இருமுறை சென்று வந்துள்ளார். அறிக்கையை யோ பேக்கரினால் தான் உண்மையில் தயாரிக்கப்பட்டிருந்தால், அறிக்கையில் எப்படி, ஒமந்தை இராணுவ காவல் அரண்களை கடந்து சென்றதும், பல மைல்கள் தூரம் செஞ்சிலுவைச் சங்கத்தின் மேற்பார்வையின் கீழ் "சூனியப்" பிரதேசம் உள்ளதாக கூற முடியும்?
இது ஓர் முழு பொய்யான தகவல். ஆகையால் நிச்சயம் அறிக்கையை யோ பேக்கர் எழுதியிருக்க முடியாது.
இதன் மூலம் வன்னிக்கே சென்றிருக்காத யாரோ ஒருவர் தாயாரித்த அறிக்கையை, யோ பேக்கரின் பெயரால் Human Rights Watch வெளியிட்டுள்ளது.</b>
தமிழர் மனிதர் உரிமை மையத்தின் பார்வையில் இந்த அறிக்கை பல பொய்களையும், கட்டுக்கதைகளையும், கற்பனைகளையும், பக்கச் சார்பாக உள்ளடக்கியதுடன், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான கருத்துக்களை ஆழ்ந்த அரசியல் நோக்கங்களுக்காக எழுதியுள்ளனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
<b>நன்றி புதினம் இணையம்</b>