![]() |
|
திருகோணமலையில் 6 சிங்கள விவசாயிகள் சுட்டுக் கொலை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: திருகோணமலையில் 6 சிங்கள விவசாயிகள் சுட்டுக் கொலை (/showthread.php?tid=98) |
திருகோணமலையில் 6 சிங்கள விவசாயிகள் சுட்டுக் கொலை - adsharan - 04-23-2006 திருகோணமலையில் 6 சிங்கள விவசாயிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிக்கேடியர் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: திருகோணமலை கோமரங்கடவெல களனியபுரத்தில் மாலை 5 மணியளவில் நெல் வயலில் இருந்த சிங்கள விவசாயிகளை கடத்திச் சென்று சுட்டுக் கொன்றுள்ளனர். இனங்களுக்கிடையேயான மோதலை உருவாக்க விடுதலைப் புலிகள் முயற்சிப்பதையே இது காட்டுகின்றது என்றார் அவர். http://www.eelampage.com/?cn=25724 - மின்னல் - 04-23-2006 அப்பாவி மக்கள் கொல்லப்படுவது கண்டிக்கத்தக்கது. எனினும் தமிழ் மக்களை கொன்றால் அவர்களின் உடமைகளை அழித்தால் கேட்க ஆளில்லை என்ற நிலையில் இருப்போருக்கு இது ஒரு எச்சரிக்கையாக இருக்கும். இருந்தாலும் இது போன்ற தாக்குதல்கள் தவிற்கப்பட வேண்டும். - mathuka - 04-23-2006 பாவம் அப்பாவி விவசாயிகள். அவன் செய்கிறான் என நாமும் செய்தால் அவனுக்கும் நமக்கும் வித்தியாசம் இல்லை என யாரோ அடிக்கடி கூறுவர். அழிவு,சாவு தமிழர்க்கும் மட்டுமா ? - Vasan - 04-23-2006 திருகோணமலையில் தமிழ்மக்கள் மீது தாக்குதல் நடாத்திய காடயர்களாகவும் இவர்கள் இருக்கலாம் அல்லவா? ஆத்திரத்திரம் அடைந்த மக்களால் இவர்கள் தண்டிக்கப்பட்டிருக்கலாம். புலிகள் மீது பழிபோடுவதர்காகவே இது ஓட்டுக்குழுக்களாலும் நடத்தப்பட்டிருக்கலாம். எது எப்படியோ போரின்வடுக்களை சிங்களவரும் அனுபவிக்கதொடங்கியுள்ளனர். அழிவு,சாவு தமிழர்க்கும் மட்டுமா ? - aathipan - 04-23-2006 அப்பாவி ஏழை சிங்கள விவசாயிகளைக் கொன்;றது கண்டிக்கத்தக்கது. - ஜெயதேவன் - 04-23-2006 அரோகரா... வாழ்த்துக்கள்!! தொடரட்டும் .... "முட்களை முட்களால் ..." அரோகரா... - நேசன் - 04-23-2006 இப்போ தான் சிங்களவர்களுக்கு போர் நிறுத்தம் இல்லாமல் தமிழர்களை கொன்றால் எப்படி தங்களையும் பாதிக்கும் என்று உணர்வார்கள் - gowrybalan - 04-23-2006 நேசன் Wrote:இப்போ தான் சிங்களவர்களுக்கு போர் நிறுத்தம் இல்லாமல் தமிழர்களை கொன்றால் எப்படி தங்களையும் பாதிக்கும் என்று உணர்வார்கள் <span style='font-size:25pt;line-height:100%'>நீங்கள் சொல்வதனைப் பார்த்தால் தமிழர்கள் தான் இதனை செய்ததாக கூறுவது போல் உள்ளது... இது ஒரு சதி வேலை ...எமது வீரர்கள் கோழைகளாக இப்படி அப்பாவி சிங்களவரை கொல்ல மாட்டார்கள். அப்படிச்செய்தால் அவர்களிற்கும் எமக்கும் என்ன வித்தியாசம் இருக்கப் போகிறது. நாம் பயங்கர வாதிகள் இல்லை என்பதனை உலகநாடுகளிற்கு தெரியப்படுத்தும் கட்டாய சூழ்நிலையில் உள்ளோம் என்பதனை மனதில் கொள்ளுதல் அவசியம்.</span> - தூயா - 04-24-2006 உண்மையில் தாங்களே கொன்றுவிட்டும் இப்படி கதை சொல்லலாம் அல்லவா?!! - வர்ணன் - 04-24-2006 அன்றாட வாழ்க்கையோட போராடும் அப்பாவிகள் கொல்லப்படுவது -மனசுகனக்கிற விசயம்தான்! ஆனால் இந்த நிலமையை உருவாக்கும் அரசை தேர்வு செய்ததில் - இவர்களின் பங்கும் இருந்திருக்குமோ என்னமோ! மத்தும்படி கேடியர் சொன்னது: <b>இனங்களுக்கிடையேயான மோதலை உருவாக்க விடுதலைப் புலிகள் முயற்சிப்பதையே இது காட்டுகின்றது என்றார் அவர். </b> அப்போ - கொஞ்சநாளைக்கு முன்னால உங்க பூரண ஆசீர்வாதத்துடன் - செய்யப்பட்ட தமிழர்கள்மீதான படுகொலைகள் - இன நல்லுறவை வளர்க்கவா? சொன்னாதானே தெரியும் அண்ணா! 8) |