Yarl Forum
ஈழத்த்து அன்னை மடியில் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: ஈழத்த்து அன்னை மடியில் (/showthread.php?tid=691)



ஈழத்த்து அன்னை மடியில் - anuraj.nl - 02-26-2006

ஈழத்து அன்னை மடியில்
அழகழாய் பூத்த பூக்கள்
தேசத்து மண்ணைக் காக்க
செங்குருதி குளித்த பூக்கள்
கார்த்திகைப் பூக்களே -எங்கள்
மா வீரர்களே!
கல்லறையில் உறங்கும் எங்கள்
கார்த்திகைத் தீபங்களே!

கையில் பூக்கள் கொண்டு வந்து
கல்லறையில் பணிகின்றோம்
கண்ணீரில் கவிவடித்து
காவியங்கள் பாடுகின்றோம்
கல்லறையில் முகம் புதைத்து
கதறிக் கதறி அழுகின்றோம்
கரிகாலன் பிள்ளைகளே
கண்திறந்து பாருங்களேன்!

உங்களுக்கு மட்டும் தானா
இப்படியோர் மனத்துணிவு
மரணத்தைக் கூட இங்கு
மண்டியிட்டு அழைப்பதற்கு!

உம்மைப் பெற்ற அன்னை முகமோ
இறுதிவரை பார்க்கவும் இல்லை
உம்மைப் பெற்ற அன்னை மடியில்
இறுதி மூச்சும் போனதில்லை
அண்ணன் வழி சென்றவரே
அடிமை விலங்கை அறுத்தவரே
இறுதிவரை அன்னை மண்ணில்
உங்கள் புகழ் வாழும் வாழும்!


- வர்ணன் - 02-27-2006

மாவீரர் நினைவில் மலர்ந்த வரிகள் - வலிகள் சுமந்தவையாக இருக்கின்றன- வாழ்த்துக்கள் - அனுராஜ்- 8)


- Thulasi_ca - 02-27-2006

Quote:கையில் பூக்கள் கொண்டு வந்து
கல்லறையில் பணிகின்றோம்
கண்ணீரில் கவிவடித்து
காவியங்கள் பாடுகின்றோம்
கல்லறையில் முகம் புதைத்து
கதறிக் கதறி அழுகின்றோம்
கரிகாலன் பிள்ளைகளே
கண்திறந்து பாருங்களேன்!

எத்தனை எத்தனை இழப்புக்கள்.....
எத்தனை அன்னையின் கண்ணீர்கள்.....
எத்தனை உள்ளங்களின் துடிப்புக்கள்....
துன்பம் மனித வாழ்வின் ஒர் பக்கம்...
ஏன் எமக்கு மட்டும் துன்பம் முழுப்பக்கம்...
:?


- Nilavan. - 02-27-2006

வேள்வித் தீயில்
வீழ்ந்தவருக்காய் மலர்ந்த கவிதை நன்று...