![]() |
|
தீபாவளி திருநாள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: தீபாவளி திருநாள் (/showthread.php?tid=2667) |
தீபாவளி திருநாள் - hari - 11-01-2005 <b>தீபாவளி திருநாள்</b> அன்று, சீயக்காயிலும், எண்ணையிலும் தொடங்கிய தீபாவளி ! வாழ்த்து அட்டைகளில் வழிபடும் கடவுள் படங்கள் ! தாயார் கையால் சுடச்சுட செய்த நெய்மணக்கும் அதிரசம் ! புத்தாடை அணிந்து, கூதுகுலத்துடன் கோவில்களையும் அடையும் தீபாவளி ! வீடுகளிளும், வீதிகளிலும் விளக்குகளால் ஒளிர்ந்த தீபாவளி என பண்டிகைகள் பண்பாட்டுச் சின்னங்களாக ஒளிர்ந்தது ! இன்று, சின்னத்திரையிலும், வண்ணத்திரையுலும் அடங்கிய தீபாவளி ! வாழ்த்து அட்டையில் கவர்ச்சி நாயகிகளும், அடிதடி நாயகர்களும் ! தயாராய் அங்காடியில் என்றோ செய்த இனிப்பு பலகாரங்கள் ! பத்தாடையுடன், விசில் ஒலியுடன் திரையரங்கின் இருளில் மறையும் தீபாவளி ! வீதியைத்தாண்டி, திரை அரங்குகளுக்கு இடம்பெயர்ந்த தீபாவளி என பண்டிகைகள் கடமைச் சடங்குகளாக சிதைந்து ! சிரிக்கும் மத்தாப்புகளில் சிவகாசி சிறுவர்களின் சிரிப்பும், வெடிக்காத ஊசி வெடிகளில் கடற்கோளால் அமிழ்ந்த சோக முகங்கள் தெரிய, இன்னும் அடங்காத துக்கத்தால், தீபாவளியின் மங்களமான ஒளிவிளக்கும் மங்கலாகத்தான் தெரிகிறது ! <b>கோவி.கண்ணன், சிங்கப்பூர்- </b> - RaMa - 11-01-2005 அன்றுஇ சீயக்காயிலும்இ எண்ணையிலும் தொடங்கிய தீபாவளி ! வாழ்த்து அட்டைகளில் வழிபடும் கடவுள் படங்கள் ! தாயார் கையால் சுடச்சுட செய்த நெய்மணக்கும் அதிரசம் ! புத்தாடை அணிந்துஇ கூதுகுலத்துடன் கோவில்களையும் அடையும் தீபாவளி ! பழைய நினைவுகளை மீட்டு தந்திருக்கின்றீர்கள்... நன்றி இங்கு இனைத்தமைக்கு.. - வெண்ணிலா - 11-01-2005 அன்றைய தீபாவளியும் இன்றைய தீபாவளியும் பற்றிய கவி நன்று. நன்றி மன்னா - ப்ரியசகி - 11-01-2005 Quote:அன்றுஇ ஐயோ...ஆசையா இருக்கு...ம்ம்..எப்ப பழைய படி அப்படி ஒரு தீபாவளி வருமோ.. நன்றி ஹரி அண்ணா |