Yarl Forum
முதியோர்களை பாதுகாக்க ஜப்பானில் புது சட்டம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14)
+--- Thread: முதியோர்களை பாதுகாக்க ஜப்பானில் புது சட்டம் (/showthread.php?tid=2648)



முதியோர்களை பாதுகாக்க ஜப்பானில் புது சட்டம் - SUNDHAL - 11-02-2005

முதியோர்களை பாதுகாக்க வழிசெய்யும் சட்டம் ஜப்பானில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

முதியோர்கள் தங்கள் பிள்ளைகளாலும் மற்றவர்களாலும் கொடுமைக்குள்ளாவது ஜப்பானில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு மட்டும் ஜப்பானில் முதியோர்களுக்கெதிராக கொடுமை நடந்ததாக ஆயிரத்து 991 வழக்குகள் பதிவாகியுள்ளன.

ஜப்பானை பொருத்த வரை பெற்றோர்களை மூத்த மகன் தான் கவனிக்க வேண்டும், என்ற வழக்கம் உள்ளது. பிள்ளைகளின் ஆதரவில் வாழ்க்கை நடத்தும் முதியோர்கள் மகனாலும், மருமகளாலும் பல்வேறு கொடுமைக்கு ஆளாகின்றனர். இந்த கொடுமைக்கு முற்றுபுள்ளி வைக்கும் விதமாக ஜப்பான் அரசு புதிய சட்டம் இயற்றியுள்ளது.

அடுத்த ஆண்டு ஏப்ரல்முதல் இந்த சட்டம் அமலுக்கு வருகிறது. முதியோர்களை உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ துன்புறுத்துபவர்களை தண்டிக்க புதிய சட்டம் வழி செய்கிறது. முதியோர்களை பராமரிக்க மறுப்பவர்கள், அவர்களின் சொத்துக்களை தவறாக கையாள்பவர்களை தண்டிக்கவும் புதிய சட்டம் வழி வகுக்கிறது.
Thanks dinamalar..


Re: முதியோர்களை பாதுகாக்க ஜப்பானில் புது சட்டம் - vasisutha - 11-02-2005

செய்திக்கு நன்றி சுண்டல்.. இனி நானும் முதியேர்களை
கொடுமைப்படுத்த மாட்டேன்..


- SUNDHAL - 11-02-2005

இப்பிடி நம்மட நாட்டிலையும் சட்டம் போட்ட முதியோர் இல்லங்கள் அதிகரிக்கத்து செல்வது கட்டுப்படுத்தப்படுமே...
சில புலம்பொயர்ந்த நாடுகளில் வசிக்கும் எம்மவர்கள்...ஊரில் இருந்து தங்களுடைய பிள்ளைகளை வளர்பதற்க்காக அம்மா அப்பவை கூப்பிறது..அப்புறம் தேவைகள் முடிஞ்ஞ உடன கைகளுவி விடுறது...அல்லது சும்மா னண்டதுக்கும் அவங்கள திட்டிறது...எல்லா நாட்டிலையும் உப்பிடி சட்ம் கொண்டவந்தாதான் சரி. :evil: :evil:


- வியாசன் - 11-02-2005

உதென்ன பெரிய விடயமோ? எங்கடைநாட்டிலை சட்டத்தின்மூலம் அரசாங்கம் தமிழரை கொலை செய்கின்ற இராணுவத்தை காப்பாற்றுகினம்.


Re: முதியோர்களை பாதுகாக்க ஜப்பானில் புது சட்டம் - MUGATHTHAR - 11-02-2005

vasisutha Wrote:செய்திக்கு நன்றி சுண்டல்.. இனி நானும் முதியேர்களை
கொடுமைப்படுத்த மாட்டேன்..

தம்பி அப்பிடியே இதை பொண்ணம்மாக்காவின்ரை காதிலையும் ஒருக்கா போட்டு விடடீயப்பு........


Re: முதியோர்களை பாதுகாக்க ஜப்பானில் புது சட்டம் - Eelavan - 11-02-2005

vasisutha Wrote:செய்திக்கு நன்றி சுண்டல்.. இனி நானும் முதியேர்களை
கொடுமைப்படுத்த மாட்டேன்..

அப்படியே இரண்டு முழிகளைப் போட்டுவிட்டுப் போயிருக்கவேண்டிய வசிசுதாவை வலைஞன் ஒரு வழிக்குக் கொண்டுவந்துவிட்டார்.பாருங்கள் அவர்கூட அறிவுபூர்வமாக எழுத ஆரம்பித்துவிட்டார்


Re: முதியோர்களை பாதுகாக்க ஜப்பானில் புது சட்டம் - vasisutha - 11-02-2005

Eelavan Wrote:
vasisutha Wrote:செய்திக்கு நன்றி சுண்டல்.. இனி நானும் முதியேர்களை
கொடுமைப்படுத்த மாட்டேன்..

அப்படியே இரண்டு முழிகளைப் போட்டுவிட்டுப் போயிருக்கவேண்டிய வசிசுதாவை வலைஞன் ஒரு வழிக்குக் கொண்டுவந்துவிட்டார்.பாருங்கள் அவர்கூட அறிவுபூர்வமாக எழுத ஆரம்பித்துவிட்டார்


நீங்க வேற.. சின்ன வசனமா எழுதமுடியேல்லை
என்றுதான் சும்மா அப்படி எழுதினேன்..<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
இப்படி எழுதுறதுக்கு சும்மா ரெண்டு ஸ்மைலி போடுறது
அல்லது வெறும் நன்றி சொல்லுறது நல்ல விசயம்.. :roll: