![]() |
|
பிரபாவைச் சந்திக்க ஆவலாக இருக்கின்றாராம் மஹிந்த - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: பிரபாவைச் சந்திக்க ஆவலாக இருக்கின்றாராம் மஹிந்த (/showthread.php?tid=2388) |
பிரபாவைச் சந்திக்க ஆவலாக இருக்கின்றாராம் மஹிந்த - Vaanampaadi - 11-19-2005 பிரபாவைச் சந்திக்க ஆவலாக இருக்கின்றாராம் மஹிந்த விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை நேரில் சந்தித்துப் பேசுவதற்கு தாம் ஆவலாக இருக்கின்றார் என மீண்டும் தெரிவித் திருக்கின்றார் இன்று ஜனாதிபதியாக பொறுப் பேற்கவுள்ள மஹிந்த ராஜபக்ஷ. ஜனாதிபதித் தேர்தலை தமிழர் தாயக மக்கள் புறக்கணிப்பர் என விடுதலைப்புலிகள் விடுத்த அறிவிப்பினையடுத்தே மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றி வாய்ப்பு அதிகரித்தாக நம்பப்படும் நிலை யில் நேற்று வெளிநாட்டு ஊடகமொன்றிற்கு மஹிந்த ராஜபக்ஷ கருத்து வெளியிட்டார். ""புலிகளுடன் பேச்சு நடத்தத் தயாராகவே இருக்கின்றேன் பிரபாகரனை சந்திப்பதற்கும் நான் ஆவலாக இருக்கிறேன்'' என்று தேர்தலில் வென்ற பின்னரும் கூறினார் மஹிந்த ராஜபக்ஷ. Uthayan - Thala - 11-19-2005 தலைவரைப் பாக்க எனக்கும்தான் ஆசை....... தூரத்தில இருந்து பாத்தாலே சந்தோசப்படுவேன்....... அதுக்கு ராஜபக்ஸவுக்கு அதிஸ்ரம் வேணும்........ - MUGATHTHAR - 11-19-2005 தனது கடைசிக் கூட்டத்தில் ராணுவ சீருடைத் தொகுதியொண்டு இருந்ததாலை வீட்டு பாத்தூறுமிலை இருந்து கொண்டு தொலைபேசிலை உரையாற்றிய மகிந்தா தலைவரை நேரிலை பார்ப்பதாவது இதெல்லாம் சும்மா அரசியல் விளையாட்டுகள் - kurukaalapoovan - 11-19-2005 அடிச்சுப்படிச்சாபிறகு கை குலுக்கப்போறன் எண்டும் ஒருதர் சொன்வர் எல்லோ. அரசியல் என்னும் தென்னிலங்கைத் தெருக்கூத்தில் உதெல்லாம் சகஜமுங்கோ. ரணில் அரசியலில் இருந்து விலகுறன் எண்டு சொல்லலாம் எண்டுதான் எதிர்பார்க்கப்படுகிறது. அப்போ பொதுவாழ்விலிருந்து இராஜதந்திர நடவடிக்கைகள் மூலம் ஒற்றையாட்சி நடத்த உதவுவாரா? :roll: |