![]() |
|
சாதனை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21) +--- Thread: சாதனை (/showthread.php?tid=8337) |
- veera - 11-01-2003 ..குமாரின் இத்தகைய நடவடிக்கைகளை சற்றுப் புரிந்து கொண்ட சுந்தர் இவர் மீது எப்போதும் ஒரு கண் வைத்திருந்தார்.அதே நேரம் இவர் இல்லாமல் வானொலியை எடுத்து நடாத்திச் செல்வதில் <b>தனக்குத் துணை நிற்கக்கூடிய அறிவிப்பாளர்களையும் தேட ஆரம்பித்தார்.</b> இருப்பினும் சிக்கல் எதுவென்பதையும் அவர் அறிவார்.அதாவது வானொலி நேயர்கள் தமக்கு விரும்பிய அறிவிப்பாளர்களேயன்றி மற்றவர்களின் நிகழ்ச்சிக்கு செல்வது அல்லது அவர்களை ஆதரிப்பதில் தயக்கம் காட்டும் ஒரு நிலை குறிப்பாக இந்த வானொலியில் நிகழ்ந்து வந்தது. எனவே மிகவும் மன உளைச்சலுக்குள்ளான சுந்தர் தனது மைத்துனனை வானொலியில் முழுமையாக ஈடுபட வைத்தார். இருந்தாலும் <b>நிகழ்ச்சிப் பணிப்பாளர் </b>என்ற பதவியில் இருக்கும் ..குமார் யாரை எந்த நேரத்தில எப்படி அகற்ற வேண்டும் கட்டுப்படுத்த வேண்டும் என்பதில் மிக மிகக் கவனமாக இருந்ததனால் அவராலும் வளர முடியாமல் போனது. சுந்தர் சோர்வடைந்திருந்தாலும் அப்போது அவருக்கு நம்பிக்கையாக இருந்தது கண்ணன் என்பவர். <b>காலப் போக்கில் தனது ஆளுமைத் திறமையினால் கண்ணனுக்கு அதிக வாய்ப்புக்களை அளித்தது மாத்திரமன்றி வெளியேறிய அறிவிப்பாளர் இர்பானின் சொந்த நிகழ்ச்சிகளான எசப்பாட்டு போன்ற தரமான நிகழ்ச்சிகளை இவருக்கு வழங்கி இவரைத் தூக்கிப் பிடிக்கத் தொடங்கினார்.</b> இன்னொரு அறிவிப்பாளனின் சொந்த நிகழ்ச்சிகளைச் செய்வதன் ஆழம் அறியாத இவர் பெயர் எடுக்கின்றேன் என்ற ஆர்வத்தில் தனது மதிப்பை இழந்து வந்தார்.பின்னர்..தான் செய்யாமல் கண்ணனைப் பலிக்கடாவாக்கின்றார் என்ற ஒரு குற்றச்சாட்டு எழவே குறிப்பிட்ட அறிவிப்பாளரின் இன்னுமொரு நிகழ்ச்சியினை தானும் செய்ய ஆரம்பித்தார். அதே போன்று வானொலியொன்றிற்குள் எப்படியாவது பெயர் எடுக்க வேண்டும் என்று ஆவலுடன் இருந்த இன்னுமொரு ஜேர்மனிய இளைஞருக்கு இன்னுமொரு நிகழ்ச்சியையும் வழங்கி <b>சுந்தரைத் திருப்திப் படுத்தினார்</b>. எனினும் தனது கண்ணைத் திறந்து வைத்திருக்க வேண்டும் என்ற எச்சரிக்கை சுந்தரை விட்டு அகலவில்லை.இதன் பயனாக ஹொலன்ட் நாட்டில் நடாத்தப்பட்ட வானரங்கம் நிகழ்ச்சி விடயத்தில் இருவருக்குமிடையே <b>தகராறு வலுவானது</b>. நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் வந்ததாகவும தமக்குப் பெரும் பணம் சேர்ந்திருப்பதாகவும் வானலைகளில் அறிவித்த ..குமார் பின்னர் வானொலிக்குள் வந்ததும் மிக மிகக் குறைந்த தொகையையே கணக்குக் காட்டியது சுந்தருக்கு பெரும் அதிருப்தியைக் கொடுத்தது. வானொலி தொடர்ந்து செல்கையில் பலவிதமாக பொருளாதாரச் சிக்கல்களைக் கொடுத்தது.எனினும் வாடகை என்று ஒன்று இல்லாததனால் பல விதத்தில் இவர்கள் காப்பாற்றப்பட்டார்கள். எனினும் மூன்று தடவைகளுக்கு மேல் இனி இல்லையென்ற பொருளாதார இறுக்கத்திற்குள் சுந்தர் வீழ்த்தப்பட்டிருந்தார்.<b>கட்டிடம் சீல் வைக்கப்படும் அளவுக்கு சென்றிருந்தும் பங்குதாரன் பணிப்பாளன் என்று சொல்லித் திரிந்த ..குமாரினால் சுந்தருக்கு எந்த வகைப் பயனும் கிடைக்கவில்லை</b>. கஷ்டங்கள் வரும்போது சுகயீனம் என்று வீட்டில் தங்கி விடுவது இவர் வழக்கமாக இருந்த போது ஒரு தடவை,கணக்கு வழக்குப் பிரச்சினையை சுந்தர் முன்வைத்தார். அப்போதுதான் வானொலியில் இருந்து ..குமார் சுமார் <b>4000 பவுண்கள் </b>அளவிலான பணத்தினை இதுவரை எடுத்திருப்பது வெளியாகியது. அதே நேரம் வெளியர்ர் மத்தியிலும் கடந்த தடவை ரிபிஸியில் போன்றே வானொலிப் பெயரில் கடன் பெற்றிருக்கும் பல விடயங்கள் தெரிய வந்தது. சிக்கல் பெரிதாக விஸ்வரூபம் எடுத்தது.பிரியும் அளவிற்கு இது வளர்ந்தது.வழக்கம் போன்று <b>அறிவிப்பாளர்களை தன் பக்கம் இழுத்தெடுப்பதில் </b>..குமார் இறங்கலானார். இதையறியாத சுந்தர் தனிமையிலும் சிலவேளைகளில் தனது நண்பர்களிடமும் இந்த விடயங்களைக் கூறி ஆலோசனைகளைக் கேட்டும் கவலையுமடைந்து கொண்டிருந்தார். எனினும் சிக்கல் தனிந்து போனது.காரணம் <b>வானொலியின் முதலாவது ஆண்டு நிறைவு....</b> - Paranee - 11-01-2003 பொறுங்கோப்பா ! தலை சுற்றுவதுபோல இருக்கின்றது ! - Mathivathanan - 11-01-2003 Karavai Paranee Wrote:பொறுங்கோப்பா !பரணி.. முகஸ்துதி செய்துவிட்டு போனபின் வசைபாடுவதை நேரே கேட்டிருந்தால் உலகத்தை விட்டே ஓடவேண்டும் போலிருந்திருக்கும். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- shanmuhi - 11-01-2003 அஸ்பிரின் போட்டு விட்டு இனி வரும் விடங்களையும் வாசியுங்கள். எந்த புற்றுக்குள் எந்த பாம்பு இருக்கும் என்று யார் அறிவார் ? ? ? யாம் அறியோம் பராபரமே ! - veera - 11-01-2003 வானொலியின் முதலாவது ஆண்டு நிறைவு கொண்டாடப்பட்டபோது <b>..குமார் இதுவரை விதைத்த விதைகள் வளர்ந்து வெளியாகின</b>. அதாவது வாழ்த்துச்சொன்ன நேயர்களில் பெரும்பாலானோர் சுந்தரை மறந்தே போனார்கள். ஏற்கனவே இது தொர்பாக பல தடவை சுந்தருக்குக் சுட்டிக்காட்டப்பட்டிருந்தாலும் சுந்தர் இந்த விடயத்தில் <b>கவனக் குறைவாக </b>இருந்தது தான் உண்மை. எனினும் சந்தர்ப்பங்களை சரியான முறையில் பயன்படுத்தும் ..குமாரின் ஆதரவாளர்களும் வானலையில் வைத்தே <b>சுந்தரை வெறுப்பூட்டினர்</b>.இதே நேரம் சுந்தர் வெளியேறுவதற்கு என்ன விலை வேண்டும் என்ற கேள்வியை சுந்தரின் சில நெருங்கிய நண்பர்கள் ஊர்வாசிகளிடமும் ..குமார் அவிழ்த்துவிட்டார். தான் முதலிட்ட வானொலி தன்னை விட்டு அபகரிக்கப்படப் போகிறது என்பதை சுந்தர் தற்போது மிகவும் வலுவாக உணர்ந்து கொண்டார். ..குமாரை வெளியேற்ற வேண்டும் என்று முடிவெடுத்தார்.எனினும் சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்தார். இந்த இடைவெளியில் ...குமாரின் இன்னும் சில விடயங்கள் அம்பலத்திற்கு வந்தன. <b>நிறுவனத்தின் காசோலையை சுந்தரின் கையெழுத்திட்டு உபயோகித்தது. வானொலிக்குள் இயக்கப் பாடல்களை தடை செய்தது. அவருக்குத் துணையாக அனைத்து அறிவிப்பாளர்களையும் மாற்றிக்கொண்டது என்று இன்னும் பல...!</b> பெரியளவு இடிந்து போன சுந்தர் என்ன செய்வதென்றறியாது திகைக்கலானார். அதாவது வானொலியை இழுத்து மூடுவதில் இவருக்கும் மானப்பிரச்சினை உள்ளது.தாயகத்தில் புலிகளின் குரல் நிர்வாகத்துடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருக்கும் இவர் வானொலியொன்றினைப் புலத்தில் தான் நடாத்த வேண்டுமென்பதிலும் அக்கறையுடன் இருக்கிறார்.அதே நேரம் ..குமாரை வெளியேற்றினால் வானொலி உடைந்து விடுமோ என்ற பயம் ஒரு பக்கம். இவற்றுக்கான நியாயமான காரணங்கள் முன்னர் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த சந்தர்ப்பத்தில் அவ்வப்போது இருவரும் வாக்குவாதப்படுவது சாதாரணமாக மாறியது. சந்தர்ப்பங்கள் கிடைக்கும் போதெல்லாம் வெளியார்,அறிவிப்பாளர்கள் என்ற பாகுபாடின்றி சுந்தரைப்பற்றி இல்லாததையும் பொல்லாததையும் மற்றவர்க்குப் பரப்புவதில் கடந்த ஒரு மாத காலமாகத் தீவிரமாக ஈடுபட்டு வந்தார் ....குமார். ஒன்றும் செய்ய முடியாது திகைத்துப்போயிருந்த சுந்தர் தனக்குத் துணை தேடினார். இது நடைபெற்றுக்கொண்டிருக்கும் போதுதான் சாதனை முயற்சியில் ஈடுபட்ட சிவாந்தி ஈரிபிஸியை நாடினார். சுந்தரை விட முந்திக்கொண்ட ..குமார் அவரை வானலையில் அறிமுகப்படுத்திய நாள் முதல் சிவாந்தியைத் தனது கட்டுப்பாட்டிற்குள் இயக்கி வந்தார். <b>பொருளாதாரச் சிக்கல்கள் மிக அதிகமாகத் தலை தூக்கியிருந்தது.இந்தத் தலையிடியின் இடை நடுவில் வானொலியினால் தனது வர்த்தக ஸ்தாபனத்தினை கை மாற்றியும் பின்னர் கடன் பட்டு அதை மீட்டுக்கொண்டதும் என்று சுந்தரின் பாடு திண்டாட்டமாக இருந்தது</b>. எனினும் ..குமாருக்குக் கொண்டாட்டம். சிவாந்தியின் சாதனை முயற்சியில் தான் அனைத்தையும் ஒருங்கிணைத்துக்கொடுப்பதன் மூலம் <b>தனது பெயரையும் புகழையும் உயர்த்திக்கொள்வது </b>தான் அது. இந்த வேளையில் தான் கடந்த 20ம் திகதியளவில் சுந்தர் ஒரு முடிவுக்கு வந்தார்.[b]அதுதான் ஜெயக்குமாரை வானொலியை விட்டு இடைநிறுத்துவது..! இதுதான் அவரது ஆரம்ப நடவடிக்கை. - veera - 11-01-2003 காலை வேளையில் ..குமாருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு,அதனை மேற்கொண்டவர் <b>சுந்தர்..</b> ..குமார் இனிமேல் நீங்கள் வானொலிக்கு வரவேண்டாம். இதனை எந்த வகையிலும் எதிர்பார்த்திருக்காத ..குமார் உடனடியாகக் வானொலி நிலையத்திற்குக் கிளம்பினார்.(வானொலி நிலையத்திலிருந்து 7 நிமிட பயண தூரத்தில் தான் இவரது வீடு). வானொலிக்குள் சென்றால் அவர் எதிர்பாராத பலதும் நடந்திருந்தது.<b>அதாவது அனைத்துக் கதவுகளின் பூட்டுக்களும் சுந்தரால் மாற்றப்பட்டிருந்தது</b>. எனவே உள்ளே நூழைய முடியாத ..குமார் கதவைத் தட்டிக்கொண்டு இருக்கவே அவரை உள்ளே அனுமதித்தார் சுந்தர்.. உள்ளே வந்த குமார் உடனடியாக உனக்கு என்ன பிரச்சனை .. நீ யாரு என்னை வரவேண்டாம் என்று சொல்வதற்கு என்ற ஆரம்பித்த போது... மிகவும் தெளிவாகவும் வலுவாகவும் சுந்தர் சொன்ன பதில் [size=18]நான் உன்னை சக் பண்ணுகிறேன்... என்பதுதான். இது ஒரு நிறுவன இயக்குனருக்கிருக்கும் அதிகாரம் என்பதும் அவ்விடத்தில் அவருக்குச் சுட்டிக்காட்டப்பட்டது. உடனடியாக கிளறியெழுந்த ..குமார் ஒலிபரப்பு அறைக்குள் சென்று தனக்குச் சொந்தமான <b>கணணியைப் பிடுங்கினார்</b>.இந்தக்கணணியில் தான் இரவு வேளைகளில் பாடல்கள் ஒலிபரப்புவது. கணணியைப் பிடுங்கிய அவரால் கணணியின் மொனிட்டரை. கணணியைப் பிடுங்கிய ..குமார் அடுத்து சுந்தருக்குச் சொன்னது 'எண்ணி ஒரு மாதத்திற்குள் ரிபிஸியை நான் ஆரம்பித்துக் காட்டுகிறேன்' என்று.. ஆனால் சுந்தரோ ..சரி சரி நீ முதலில் வெளிய போ என்று மட்டும் கூறினார் என்ற இளைஞரிடம் <b>'நம்பர் கொடுத்தா' நீ வேலை செய்கிறாய் </b>என்று ஆத்திரத்துடன் கேட்டுவிட்டு துண்டித்துள்ளார். அதாவது பிரித்தானியாவில் தமது இன்ஷ்யுரன்ஸ் இலக்கத்தில் பதியாமல் வேலை செய்வது சட்டப்படி குற்றமாம்.எனவே உன்னை நான் காட்டிக்கொடுப்பேன் என்பதுதான் விடயம். இதே அடிப்படையில்தான் முன்னர் றமணன்இப்போதைக்கு இதில் சம்பந்தப்படுத்தாமல் செல்வது நல்லது என்று நினைக்கிறேன். தற்போது வெளியேற்றப்பட்ட நிலையில் வீட்டிலிருக்கும் ..குமாருக்கு <b>வெறித்தனம்தான்</b> கூடியது.எனவே சுந்தரைப் பயமுறுத்தும் முயற்சிகளில் இறங்க எத்தனித்தார். எனினும் சுந்தருக்குப் பலமாக இருப்பவர்கள் என்று இரண்டு வர்த்தகர்களை ..குமார் அடையாளங் கண்டு கொண்டார்.எனவே அவர்களையும் பகைக்க விரும்பாதவர்..அவர்கள் உதவியை நாடினார். <b>அதாவது சுந்தர் போட்ட பணத்தினை நான் திருப்பிக்கொடுக்கிறேன் அவனை வெளியே போகச்செல்லுங்கள் என்று மன்றாடினார்</b>. யாரும் இவர் பேச்சைக் கணக்கிலெடுக்கவே இல்லை.அப்போதுதான் தனது <b>அடுத்த ஆயுதமான </b>சிவாந்தியைப் பாவித்தார். <b>அன்றிரவு சிவாந்தியும் இன்னுமொரு அறிவிப்பாளரும் சுந்தரைச் சந்தித்தனர்....</b> எனினும் தனது முடிவில் எந்தவிதமான மாற்றங்களும் இல்லை யென்று சுந்தர் உறுதியாகத் தெரிவத்தார். சிவாந்தி கண்ணீர் சிந்தத்தொடங்கினார். அப்போது சுந்தர் அவருக்கு அளித்த வாக்குறுதியானது நீங்கள் உங்கள் சாதனையைச் செய்யுங்கள் ஆனால் அவன் இங்கு வரக்கூடாது என்பதாகும். சிவாந்தியின் வேண்டுகோள்கள் நிராகரிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் <b>வெறுங்கையுடன் திரும்பினார்.</b>இருப்பினும் அந்த வேளையில் சிவாந்தியின் சாதனை முயற்சி பற்றி பல விடயங்கள் தாழ்மையாக சுந்தருக்கு எடுத்துரைக்கப்பட்டது. அதில் ஒன்றுதான் சிவாந்தியின் நிகழ்வின் போது தொடர்ந்து இருக்க வேண்டிய நேயர்கள் வருகை. இப்படிப்பட்ட ஒரு சந்தர்ப்பத்தில் நேயர்கள் ஒத்துழைப்பு இல்லையென்றால் சாதனை முயற்சியில் அவர் இறங்கவே முடியாது என்பதை நன்கு அலசி பின்னர் ஏற்றுக்கொண்ட சந்தர், <b>சில நிபந்தனைகளின் பெயரில் ..குமாரை அனுமதிக்க இணங்கினார்.......</b> - தணிக்கை - 11-01-2003 இதவரை வீரா சொன்னவற்றில் 99 வீதம் உன்மை இருக்கிறது. தேவை ஏற்படின் பதில் தருகிறேன். ஒரு சிறுமாற்றம்வீரா சேது என்பவருக்கு தாயக உனர்வு யப்பானில் உருவான ஒன்று அல்ல. என்னைப்பற்றி தங்களுக்கு அது தெரிந்திருந்தால் அப்படி சொல்லி இருக்கமாட்டியள் சரி 99 வீதம் உங்கள் இந்த தகவலை ஏற்றுக்கொள்கிறேன். - veera - 11-01-2003 மீண்டும் வானொலிக்குள் வருவதற்காக அவருக்கு வழங்கப்பட்ட நிபந்தனைகளாவன : <b>30ம் திகதி சாதனை முடிவடைந்ததும் வெளியேறிவிட வேண்டும் இந்த 9 நாட்களில் நிர்வாகத்தில் எந்த விதத்திலும் தலையிடக்கூடாது வானொலியில் வைத்து நேயர்களின் அநுதாபத்தைத் திரட்டக்கூடாது அலுவலக தொலைபேசியை பாவிக்கக்கூடாது நிகழ்ச்சி முடிந்தால் வீடு சென்று விடவேண்டும்.</b> இந்த நிபந்தனைகளுக்கு இவர் இணங்குவாரா என்ற சந்தேகம் சொல்லும் போது இருந்தாலும் உடனடியாகத் தான் இணங்குவதாகத் தெரிவித்தது மட்டுமன்றி மறுநாளே நிகழ்ச்சியை நடாத்த வரவேண்டுமென்றும் அடம் பிடித்தார்.. சரி 3 நாட்கள் தானே அதன் பின்னர் சாதனை முயற்சி ஆரம்பித்து விடும்.இவர் என்ன செய்யப் போகிறார் என்ற எண்ணத்தில் உரிமையாளர் இதற்கிணங்கினார். <b>வரலாற்றில் அவர் செய்த இன்னுமொரு தவறு அது என்பதை உரிமையாளர் மறுநாளே உணர்ந்தார்</b>. அதாவது தான் கதவு பூட்டப்பட்ட நிலையில் வெளியில் காத்திருந்ததாகக் கூறி வானலையில் அநுதாபத்தினைத் தேடினார். பங்குதாரர் விண்ணப்பப் படிவம் ஒன்றினைக் கொண்டு வந்து உரிமையாளர் சுந்தரின் முன் வீசி ்இப்போ உனது ஆட்டம் முடிந்து விட்டது..இனி எனது ஆட்டத்தினைப் பார் என்று' கர்ஜித்தார் சாதனை முயற்சியின் போது இரவு பகலென்று பாராது சாதனையாளரின் தூணாகச் செயற்படுவது போன்ற பிரம்மையை ஏற்படுத்தினார். முடிந்தளவு விருந்தாளிகள் நேயர்கள் என்று அனைவரிடமும் தானே கதைக்குமளவுக்குக் கதைத்தார்.. எனினும் பொறுமை காத்த உரிமையாளன்..சாதனை நிறைவான நாள் அன்று காலை இறுதியாக இவரோடு சேர்ந்து வானலையில் உரையாடினார். அப்போது அந்த நேரத்தினைப் பயன்படுத்திக்கொண்ட இவர் உரிமையாளன் தனக்கு அடங்கி விட்டான் என்ற நினைப்பில் வானலையில் சில அட்டகாசங்களைப் புரிந்து விட்டு... <b>சாதனை முயற்சி நிறைவுக்கான வாழ்த்து நிகழ்ச்சியினை நான் திரும்பி வரும் வரை நடாத்தக் கூடாது என்று கட்டளையுமிட்டு வீடு சென்றார்.</b> அதுதான் கடைசி.அதற்குப் பிறகு அவர் வந்தும் கூட வானொலி நிலையத்தின் கதவுகள் திறக்கப்படவில்லை. இடைநிறுத்த நடவடிக்கையை மதித்து ஒரு ஊழியனாக இவர் நடந்து கொண்டிருந்தால் இப்படி வெளியேற்றப்பட வேண்டிய நிலையிலிருந்து ஒரு வேளை தப்பியிருக்கலாம். தனது வீராப்பின் உச்சத்தில் லண்டனில் வெளியாகும் இந்தவார உதயன் பத்திரிகையில் : தான் பணிப்பாளராகவும் தனது துணைவியாருடன் அந்த வானொலியில் பணி புரிவதாகவும் உரிமையாளனோ சாதாரண அறிவிப்பாளன் என்றும் பேட்டி கொடுத்துள்ளார். எனவே இவ்வகை அடாவடித்தனங்கள் அத்தனைக்கும் ஒரு முடிவு தான் இந்த <b>வெளியேற்றம். எனினும் அவர் இத்தோடு நிறுத்துவாரா என்பது சந்தேகம் தான். ஆனாலும் நிறுத்துவதுதான் நல்லது.போதும் போதும் என்கின்ற அளவுக்கு ஐரோப்பிய வானொலி நேயர்கள் பாதிக்கப்பட்டுவிட்டார்கள். இதற்கு மேலதிகமாக கிடைத்த சில தகவல்கள் ஆதாரங்கள் குறைவானதாக இருக்கின்றது : அதாவது ITBC எனும் பெயரில் இவர் ஒரு புதிய வானொலியை ஆரம்பிக்கப் போவது அல்லது VECTONE தொலைக்காட்சியில் இணைய முயற்சிப்பது போன்றவையாகும். இவை தவிர அரசியல்,போராட்டம்,தனிப்பட்ட வாழ்க்கை என்று எதையும் இழுத்து அவரை தனிப்பட்ட ரீதியில் தாக்கும் நோக்கம் எனக்கில்லை.அவை நமக்குத் தேவையும் இல்லை. [b]ஐரோப்பிய வானலைகளுக்கு இதுவரை இவர் செய்தவை எல்லாம் போதும்.</b> ஆக இவர் வெளியேற்றப்பட்டுள்ளார். தொடர்ந்தும் வானலைகளில் நிலைக்க வேண்டும் என்றால் இவர் செய்ய வேண்டியது இரண்டு... [b]1. தான் தனியாக ஒரு வானொலியை ஆரம்பிப்பது - இனியும் ஐரோப்பா தாங்காது அல்லது 2. உரிமையாளனின் கால்களில் விழ வேண்டியது - நடந்தாலும் நடக்கலாம் ஐரோப்பிய நேயர்கள்தான் முடிவெடுக்க வேண்டும்.உங்கள் கடந்த கால அநுபவங்களை மீட்டிப்பார்க்க வேண்டும். [b]ஆதரிப்போர் இருக்கும் வரை இன்னும் எத்தனை பேர் என்றாலும் வெளிவருவர் - Mathivathanan - 11-01-2003 சேது.. வீரா உங்கள் ஆசானாக்கும். கொடுக்கவேண்டிய மரியாதையைக் கொடுங்கள். :!: :?:
- veera - 11-01-2003 தணிக்கை Wrote:இதவரை வீரா சொன்னவற்றில் 99 வீதம் உன்மை இருக்கிறது. நன்றி. ஜப்பானில் வைத்து உரிமையாளனோடு நெருக்கமான நட்பு மலர்ந்ததாகத்தான் கூறியுள்ளேன்.எதற்கும் மீண்டும் ஒரு முறை பாருங்கள். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - தணிக்கை - 11-01-2003 இல்லை உன்மையை உன்மையாக ஏற்றுக்கொள்கிறேன் பொய் என்றால் அதற்கு மறுப்பு தந்திருப்பேன். மீன்டும் சொல்கிறேன் யாவும் உன்மை 99 வீதம். - shanmuhi - 11-01-2003 தந்த தகவல்கள் அனைத்தும் உண்மை என்று சொல்கிறீர்கள். அப்படியாயின் அவை யாழ்களத்தினையும் மேலும் மெருகேற்றும் என்பதில் சந்தேகமில்லை. - ganesh - 11-01-2003 நீண்ட நாட்களின் பின் அருமையான உண்மையான கருத்தை தந்த வீராவுக்கு ஒவ்வொரு தமிழ் மக்களும் நன்றி சொல்ல கடமைப்பட் டுள்ளனர் ஒரு அருமையான திரைப்படம் பார்த்தது போன்ற அனுபவம் ஏற்பட்டுள்ளது தொடர் எப்பொழுது - vasisutha - 11-02-2003 நன்றி வீரா. பல சந்தேகங்களுக்கு தெளிவான பதில் கொடுத்து விட்டீர்கள். - தணிக்கை - 11-02-2003 உண்மையில் வீரா தந்த கருத்துகள் ஏற்கக்கூடியவை. - shanmuhi - 11-02-2003 உண்மைகளைத் தந்த வீராவுக்கு விசேடமான பாராட்டுக்கள் ............... - yarl - 11-02-2003 வீராவின் கட்டுரை ஜூனியர் விகடன் கட்டுரைப் பாணியில் கூடியவரையில் ஒரு நடுநிலைமையான கட்டுரை போலமைந்திருந்தது. உங்கள் கட்டுரை நடை நன்றாகவிருந்தது.இதே போல் வேறு விடயங்களும் கணனி;;, விளையாட்டு,சினிமா என உங்கள் பலத்தை பரவலாக்கிக்கொள்ளுங்கள்.பாராட்டுக்கள் இனி கட்டுரை சம்பந்தமான உள்விடயங்களுக்கு வருகிறேன். எனக்கும் சில விடயங்கள் அரசல் புரசலாக தெரிந்திருந்தது.எனினும் மறுபக்கம் என்று ஒனறு இருப்பதால் என்னால் இந்த கட்டுரையின் உண்மைத்தன்மையை முழுமையாக ஏற்றுக்கொளளமுடியவில்லை. இன்னொரு சந்தேகம்.. நேயர்கள் அறிவிப்பாளரின் எல்லைகளை கடந்து அவரை விசுவாசிக்க ஆரம்பிப்பதால்தானோ இப்படியான பிரச்சனைகள் ஆரம்பிக்கின்றன..அல்லது நேயர்களால் வானொலிகளில் தூண்டிவிடப்படுகின்றன..???? - Paranee - 11-02-2003 ஆஹா வானொலிகள் அலைகளில் மட்டுமல்ல பல விடயங்களில் சாதனை புரிகின்றார்கள். - shanmuhi - 11-02-2003 <b>நேயர்கள் அறிவிப்பாளரின் எல்லைகளை கடந்து அவரை விசுவாசிக்க ஆரம்பிப்பதால்தான் இப்படியான பிரச்சனைகள் ஆரம்பிக்கின்றன.....</b> இது தான் என்னுடைய அபிப்பிராயம். - தணிக்கை - 11-02-2003 இந்த வானொலியிலை இப்ப 24 மனி நேரத்திலை அதிகநேரம் தாயக பாடல் போடுப்படுது நல்லவிடயம் தொடருங்கோ. நல்ல புதிய தாயகப்பாடல்கள் இலன்டனில் இந்தவானொலியில் இருந்து ஒலிபரப்பப்படுவதால் மிகவும் சந்தோசமாக இருக்கு. http://www.etbclondon.com/listen.pls |