![]() |
|
கேட்டதில் பிடித்தது.. - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37) +--- Thread: கேட்டதில் பிடித்தது.. (/showthread.php?tid=5651) |
- KULAKADDAN - 05-21-2005 Mathan Wrote:நன்றி உங்களுக்கு தான் சொல்லணும். அந்த பாடலை பல்லவியை கண்டு பிடிப்போம் பகுதியில் அறிமுகம் செய்ததற்காக.ம் ம் மதன் யாரோ நடிச்ச படத்துக்கு யாருடையதோ பாட்டு போட்டிருக்கு............ஏன் வெட்டு விழாத படமா ஜித்தனில கிடைக்கலையா? 8) - Mathan - 05-21-2005 பார்த்தன் கிடைக்கலை, இந்த பாடலுக்கு பொருத்தமாவும் இல்லை - KULAKADDAN - 05-21-2005 இன்னிசைபாடிவரும் இளங்காற்றுக்கு உருவமில்லை பாட்டு வரியெழுத முடியலை. இதில 3 பாட்டு இருக்கு. இப்ப பல பிடித்தமான பாட்டுகள் வந்துவிட்டாலும் இன்றும் மனது மறக்காத பாடல்கள் மூன்றும். மூன்றாவது பாடல்.....சோகமான சுகம். :wink: - Mathan - 05-21-2005 குளக்ஸ் இதோ சுட்ட் வரிகள். ஜித்தன் பட பாடல் நானே கேட்டு எழுதினேன். இவை இணையத்தில் இருந்து சுட்டேன் <span style='font-size:20pt;line-height:100%'> படம்: துள்ளாத மனமும் துள்ளும் இசை: எஸ்.ஏ.ராஜ்குமார் இன்னிசை பாடிவரும் இளங்காற்றுக்கு உருவமில்லை இன்னிசை பாடிவரும் இளங்காற்றுக்கு உருவமில்லை காற்றலை இல்லையென்றால் ஒரு பாட்டொலி கேட்பதில்லை ஒரு கானம் வருகையில் உள்ளம் கொள்ளை போகுதே ஆனால் காற்றின் முகவரி கண்கள் அறிவதில்லையே இந்த வாழ்க்கையே ஒரு தேடல்தான் அதை தேடித் தேடி தேடும் மனசு தொலைகிறதே (இன்னிசை) கண் இல்லையென்றாலும் நிறம் பார்க்க முடியாது நிறம் பார்க்கும் உன் கண்ணை நீ பார்க்க முடியாது குயிலிசை போதுமே அட குயில் முகம் தேவையா உணர்வுகள் போதுமே அதன் உருவம் தேவையா கண்ணில் காட்சி தோன்றிவிட்டால் கற்பனை தீர்ந்துவிடும் கண்ணில் தோன்றா காட்சி என்றால் கற்பனை வளர்ந்துவிடும் ஆடல் போலத் தேடல் கூட ஒரு சுகமே (இன்னிசை) உயிர் ஒன்று இல்லாமல் உடல் இங்கு நிலையாதே உயிர் என்ன பொருள் என்று அலை பாய்ந்து திரியாதே வாழ்க்கையின் வேர்களோ மிக ரகசியமானது ரகசியம் காண்பதோ மிக அவசியமானது தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் ருசியிருக்கும் ஆடல் போல தேடல் கூட ஒரு சுகமே (இன்னிசை)</span> - KULAKADDAN - 05-21-2005 மதன் நன்றி கேட்டு எழுத தான் யோசித்தென். அவ்வளவுக்கு பொறுமையில்லை. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- kavithan - 05-21-2005 <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - வெண்ணிலா - 05-21-2005 kavithan Wrote:<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :?: - Malalai - 05-23-2005 யாரிடமாவது சந்திரமுகி ராரா எனும் பாடல்வரிகள் இருக்கின்றனவா? தந்துதவ முடியுமா இருந்தால்.....நன்றிகள்.... - Eswar - 05-23-2005 Malalai Wrote:யாரிடமாவது சந்திரமுகி ராரா எனும் பாடல்வரிகள் இருக்கின்றனவா? தந்துதவ முடியுமா இருந்தால்.....நன்றிகள்....என்னட்டை இசையோடையே இருக்கு. வேணுமா? - Malalai - 05-23-2005 என்ன இமயமலை ஈசனே....எழுத்துருவில் இருக்கா எனக் கேட்டேன்..... :evil: :wink: :wink: - Eswar - 05-23-2005 அதில முக்கால்வாசி தெலுங்கு. அதை எப்படி எழுத்தில எடுக்கிறது. சொந்தமா வசனத்தை போட்டு பாடவேண்டியதுதான். - hari - 05-24-2005 Malalai Wrote:யாரிடமாவது சந்திரமுகி ராரா எனும் பாடல்வரிகள் இருக்கின்றனவா? தந்துதவ முடியுமா இருந்தால்.....நன்றிகள்....ஓ.. இப்ப உமக்கு தெலுங்கு பாட்டுதான் தேவையா? :evil: - Malalai - 05-24-2005 என்ன தந்தையே..அது நல்ல பாட்டு...நான் வேற என்னத்தைக் கேட்டன் யஸ்ட் பாட்டு தானே...வேற என்னத்தை கேட்டு உங்களால கொடுக்க முடியும் ஆஆஆஆ :twisted: :twisted: :twisted: - kavithan - 05-24-2005 <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Malalai - 05-24-2005 ஏன் மந்திரி நீங்க சிரிக்கிறிங்க...
- hari - 05-24-2005 நீர் அந்த பாட்டை கேட்டுட்டு ராரா...ராரா... என்று திரிவீர், நான் வந்து லக்க...லக்க...லக்க...லக்க சொல்லேலாது சொல்லிட்டன்! அது படத்திலதான் சரிவரும்! :evil: - hari - 05-24-2005 <img src='http://img153.echo.cx/img153/4606/aandavan6ha.gif' border='0' alt='user posted image'> - hari - 05-24-2005 பாடல்: கடவுள் அமைத்து வைத்த மேடை குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம் வரிகள்: கண்ணதாசன் கடவுள் அமைத்து வைத்த மேடை இணைக்கும் கல்யாண மாலை இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று (கடவுள்) நான் ஒரு விகடகவி இன்று நான் ஒரு கதை சொல்வேன் ஓங்கிய பெரும் காடு அதில் உயர்ந்தொரு ஆலமரம் ஆலமரத்தினிலே அந்த அற்புத வனத்தினிலே ஆண்கிளி இரண்டுண்டு பெண்கிலி இரண்டுண்டு அங்கேயும் ஆசை உண்டு அதிலொரு பெண் கிளி அதனிடம் ஆண்கிளி இரண்டுக்கும் மயக்கம் உண்டு அன்பே...ஆருயிரே...என் அத்தான் (கடவுள்) கொட்டும் முழக்கங்கள் கல்யாண மேளங்கள் கொண்டாட்டம் கேட்டதம்மா ஆசை விமானத்தில் ஆனந்த மேகத்தில் சீர் கொண்டு வந்ததம்மா தேன் மொழி மங்கையர் யாழிசை மீட்டிட ஊர்கோலம் போனதம்மா பல்லாக்கு தூக்கிடும் பரிவட்ட யானைகள் பல்லாங்கு பாடுதம்மா (கடவுள்) கன்றோடு பசு இன்று கல்யாணப் பெண் பார்த்து வாழ்த்தொன்று கூறுதம்மா கான்வெண்ட்டுப் பிள்ளைகள் போல் வந்த முயல்கள் ஆங்கிலம் பாடுதம்மா ????? (கடவுள்) ஒரு கிளி கையோடு ஒருகிளி கைசேர்த்து உறவுக்குள் நுழையுதம்மா உல்லாச வாழ்க்கையை உறவுக்குக் கொடுத்திட்ட ஒரு கிளி ஒதுங்குதம்மா அப்பாவி ஆண் கிளி தப்பாக நினைத்தது அப்போது புரிந்ததம்மா- அது எப்போதும் கிளியல்ல கிணற்றுத் தவளைதான் இப்போது தெரிந்ததம்மா (கடவுள்) பாடலை கேட்க - hari - 05-24-2005 பாடல்: தெய்வம் தந்த வீடு குரல்: கே ஜே ஏசுதாஸ் வரிகள்: கண்ணதாசன் தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு இந்த ஊரென்ன சொந்த வீடென்ன ஞானப் பெண்ணே? வாழ்வின் பொருளென்ன நீ வந்த கதை என்ன? நான் கேட்டுத் தாய்தந்தை படைத்தானா? இல்லை என் பிள்ளை எனைக் கேட்டுப் பிறந்தானா? தெய்வம் செய்த பாவம் இது போடி தங்கச்சி கொன்றால் பாவம் தின்றால் போச்சு இதுதான் என் கட்சி ஆதி வீடு அந்தம் காடு இதில் நான் என்ன அடியே நீ என்ன ஞானப் பெண்ணே? வாழ்வின் பொருளென்ன நீ வந்த கதை என்ன? (தெய்வம்) வெறும் கோவில் இதிலென்ன அபிஷேகம்? உன் மனம் எங்கும் தெருக்கூத்து பகல் வேஷம் கள்ளிக்கென்ன முள்ளில் வேலி போடி தங்கச்சி காற்றுக்கேது தோட்டக்காரன் இதுதான் என் கட்சி கொண்டதென்ன கொடுப்பதென்ன? இதில் தாய் என்ன? மணந்த தாரம் என்ன ஞானப் பெண்ணே? வாழ்வின் பொருளென்ன நீ வந்த கதை என்ன? (தெய்வம்) தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம் அது தெரியாமல் போனாலே வேதாந்தம் மண்ணைத் தோண்டித் தண்ணீர் தேடும் அன்புத் தங்கச்சி என்னை தோண்டி ஞானம் கண்டேன் இதுதான் என் கட்சி உண்மை என்ன பொய்மை என்ன? இதில் தேன் என்ன கடிக்கும் தேள் என்ன ஞானப் பெண்ணே? வாழ்வின் பொருளென்ன நீ வந்த கதை என்ன? (தெய்வம்) பாடலை கேட்க - tamilini - 05-24-2005 நன்றி அண்ணா.. அவள் ஒரு தொடர்கதையில வாற பாடல்கள் எனக்கு றொம்ப பிடிக்கும்.. இணைச்சிருக்கிறியள் றொம்ப நன்றி <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
|