Yarl Forum
மூளைக்கு வேலை - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: மூளைக்கு வேலை (/showthread.php?tid=6978)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35


- பரஞ்சோதி - 08-03-2004

kuruvikal Wrote:சா..நாங்க நினைச்சம்... பிழையா இருக்குமோ எண்டிட்டு சொல்லல்ல....சா... அடுத்த முறை நேரம் இருந்தாப் பாப்பம்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

இது என்ன காசா, பணமா, சும்மா தானே, சொல்லிவிடுங்க, பதில் தவறாக இருந்தால் நஷ்டம் ஒன்றும் இல்லையே, அதுவே சரியாக இருந்தால் நீங்கள் நினைத்தது சரி என்ற நம்பிக்கை வருமே நண்பரே!


- kirubans - 08-05-2004

[b][size=14]எனது நாய்க்குட்டி Rocky இன் புதிர் விளையாட்டு.
--------------------------------------------

ஒரு நாள் நானும் எனது செல்ல நாய்க்குட்டி Rocky உம் உலாவுக்குப் புறப்பட்டோம். நானும் Rocky உம் வீட்டு வாசலை அடைந்தவுடன் Rocky ஒரே தாவலாக ஒழுங்கையில் சீரான கதியில் தெருமுனையை நோக்கி ஓடியது. அதே கணத்தில் நானும் தெருமுனையை நோக்கி சீரான கதியில் நடக்க ஆரம்பித்தேன்.

தெருமுனையை அடந்த Rocky திரும்பவும் அதே கதியில் என்னை நோக்கி ஓடி வந்தடைந்து மீண்டும் தெரு முனைக்கு ஓடியது. இவ்வாறு மொத்தமாக நான்கு தடவை Rocky அதே கதியில் தெருமுனைக்கு ஓடுவதும் என்னை வந்தடைவதுமாக விளையாட்டுக் காட்டியது.

Rocky நான்காவது தடவை என்னிடம் வந்த இடத்திலிருந்து தெருமுனை 27 யார் தூரத்தில் இருந்தது. இந்த 27 யார் தூரத்தையும் Rocky எனது கதியிலேயே எனக்கு சமாந்தரமாக ஓடி என்னுடனேயே தெருமுனைக்கு வந்தடைந்தது.

எனது வீட்டு வாசலுக்கும் தெரு முனைக்கும் உள்ள தூரம் 625 அடியாகவும், நான் மணிக்கு 4 மைல் என்ற கதியிலும் நடந்திருந்தால், Rocky என்ன கதியில் தெரு முனைக்கும் எனக்குமாக ஓடி விளையாட்டுக் காட்டியிருந்திருக்கும்?

விளக்கமான விடையுடன் வாருங்கள்.



- kuruvikal - 08-05-2004

உந்த யார் அடி மைல்.... அளவீடு தந்தா நல்லம்.... உது பிரிட்டனில பாவனையில் இருக்கலாம்... நாங்கள் SI யுனிற்றிலதான் அறிஞ்சி வச்சிருக்கிறம்...குழப்புதே....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- kavithan - 08-05-2004

1ft=0.3048m
1yd=0.9144m
1mi=1.609 km

1 ft=30cm
1 yd=3 ft


- kuruvikal - 08-05-2004

எத்தினை யார் ஒரு மைல்...!கணித்துப் பாக்கப் பஞ்சியா இருக்கு சொல்லுங்கோ....மிச்சம் நாங்க பாக்கிறம்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- kavithan - 08-05-2004

1760 யார் 1 மைல்


- kuruvikal - 08-05-2004

நன்றி கவிதன்....!


- kirubans - 08-05-2004

[b]<span style='font-size:21pt;line-height:100%'>1 அடி = 12 அங்குலம் [30.48 cm]
1 யார் = 3 அடி [91.44 cm]
1 மைல் = 1760 யார் = 5280 அடி [1600 metres]
</span>


- kuruvikal - 08-05-2004

நன்றி கிருபன்....!


- kirubans - 08-05-2004

<b>[size=14]அலகுகளை வேண்டுமானால் பின்வருமாறு எடுக்கவும்.

வாசல் -> தெருமுனை = 625 m
கடைசித் தூரம் (27 * 3) = 81 m

எனது கதி = 4 km/h
</b>


- வெண்ணிலா - 08-05-2004

<b>என்ன இரண்டு பேரையும் காணோம்.....விடையையும் காணோம்.....யூனிற் எல்லாம் கேட்டுக்கிடக்கு..ஆனால், ஆக்கள் எஸ்கேப்..</b>


- kirubans - 08-05-2004

வெண்ணிலா, நீங்களும் முயற்சி செய்யுங்கள்.

விடுமுறையில் செல்வது காரணமாக திங்கள்தான் திரும்பவும் யாழ் களத்துக்கு வரமுடியும். அதற்கிடையில் யாராவது விடையுடன் வருவார்கள் என நினைக்கிறேன்.
8) 8) 8)


- kuruvikal - 08-05-2004

எங்களுக்கும் கொஞ்சம் வேலைப்பழு.... அதால இப்ப ஈக்குவேசன் ஸோல்வ் பண்ண ரைம் எடுக்கும்...அதுக்க றை பண்ணுறவங்க பண்ணுங்க.... சரியா....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- kavithan - 08-07-2004

நாயின் வேகம் 15.35 கிலோமீற்றர்



|-------------------------------------------------------|
625m
|------------|-2(4x81)-----------------------------------|
|--------------------------|--2(3x81)-------------------|
|----------------------------------------|---2(2x81)-----|

|----------------------------------------------------|-81-|


நாய் சென்ற தூரம்=
625+648+486+324+81=2164


எடுத்த நேரம் =(625-81)/4000 =0.141 மணித்தியாலம்
ஃ நாயின் வேகம்= 2.164/0.141=15.35 கிலோமீற்ரர் ஒரு மணித்தியாலத்துக்கு


இது சரியா? <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :roll:


- kavithan - 08-08-2004

[quote=kirubans]<b>[size=14]அலகுகளை வேண்டுமானால் பின்வருமாறு எடுக்கவும்.

வாசல் -> தெருமுனை = 625 m
கடைசித் தூரம் (27 * 3) = 81 m

எனது கதி = 4 km/h
</b>


இவ் அளவீடுகளை தான் நான் பயன் படுத்தினேன்..... என்ன வேரு ஒரு வரும் முயற்சி செய்ய வில்லையா?...... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- kirubans - 08-09-2004

kavithan Wrote:625+648+486+324+81=2164

எவ்வாறு முதல்தரம் நாய்க்குட்டி திரும்ப வரும்போது அது வாசலுக்கும் தெருமுனைக்கும் உள்ள தூரத்தைவிட அதிகம் ஒடியிருக்கும் கவிதன்?


- kavithan - 08-09-2004

kirubans Wrote:
kavithan Wrote:625+648+486+324+81=2164

எவ்வாறு முதல்தரம் நாய்க்குட்டி திரும்ப வரும்போது அது வாசலுக்கும் தெருமுனைக்கும் உள்ள தூரத்தைவிட அதிகம் ஒடியிருக்கும் கவிதன்?
அண்ணா ஒருக்கால் 324மீற்றர் தூரம் வந்து உங்களை சந்திது திரும்பி போகும் அல்லவா அது தான் போட்டிருக்கிறேன் அல்லவா

2(4x81) என்று... ஏன் விடை பிழையா?


- kavithan - 08-09-2004

-----625m------------>
<-------324m--- } 1

----324m------------>
<-------243m------ }2

----------------243m------->
<----------162m--------- } 3

-------------------162m----->
<--------------81m------- } 4


--------------81m------> 4km/h

kirubans Wrote:Rocky நான்காவது தடவை என்னிடம் வந்த இடத்திலிருந்து தெருமுனை 27 யார் தூரத்தில் இருந்தது. இந்த 27 யார் தூரத்தையும் Rocky எனது கதியிலேயே எனக்கு சமாந்தரமாக ஓடி என்னுடனேயே தெருமுனைக்கு வந்தடைந்தது.



- kirubans - 08-09-2004

நான்காவது தடவையிலிருந்து நாய்க்குட்டி எனது வேகமாகிய 4 மைல்/மணி ( அல்லது க்ம்/க்) வேகத்தில் ஓடும். அதாவது அதன் வேகம் குறைந்து விட்டது. உங்களின் விடையிலிருந்து அது எப்போதுமே ஒரே வேகத்தில் ஓடுவதுபோல் தெரிகிறது.

சற்று முயற்சி செய்யுங்கள்.

யாரும் விடையளிக்காவிடில் நான் விடையை நாளை தருகிறேன்.


- kavithan - 08-09-2004

kirubans Wrote:நான்காவது தடவையிலிருந்து நாய்க்குட்டி எனது வேகமாகிய 4 மைல்/மணி ( அல்லது க்ம்/க்) வேகத்தில் ஓடும். அதாவது அதன் வேகம் குறைந்து விட்டது. உங்களின் விடையிலிருந்து அது எப்போதுமே ஒரே வேகத்தில் ஓடுவதுபோல் தெரிகிறது.

சற்று முயற்சி செய்யுங்கள்.

யாரும் விடையளிக்காவிடில் நான் விடையை நாளை தருகிறேன்.
நன்காவது தடவை உங்களிடம் வந்த இடத்தில் இருந்து தான் உங்கள் வேகத்தில் நாய் தெரு முனையை அடைந்ததாக கூறி உள்ளீர்கள்.... எனவே நாய் நான்காவது தடவை உங்களை நோக்கி வரும் போது அதன் சம வேகத்தில் தானே வந்திருக்கும்