Yarl Forum
Boys - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39)
+--- Thread: Boys (/showthread.php?tid=8154)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12


- Kanani - 09-16-2003

பாவாடை தாவணியில் பார்த்த உருவமோ?
இன்று பாவாடை இன்றி வர என்ன வருத்தமோ?


- sOliyAn - 09-17-2003

யார் யார் யாரது யாரோ
ஊர் பேர் தான் தெரியாதோ? :mrgreen:


- Paranee - 09-17-2003

வணக்கம் அண்ணா
விண்மீனாய் தொலைத்தவளை வெண்ணிலவாய் தேடி எடுத்தவர் தித்திக்குதே கவிப்பேரசு . . . .

பாடல் எனக்கு இதமாகவும் இணையாகவும் இருந்தமையால் எடுத்து தொடுத்துள்ளேன்.

விழிகள் என்று மாறிக்கொள்ளும்
சிறுத்தாலும் அந்த சீண்டல் என்றும் சிறுமையானதில்லை....
அனுபவம்................
உங்களிற்கு எப்படி ?


AJeevan Wrote:
Karavai Paranee Wrote:<img src='http://www.angelfire.com/alt2/paranee/paranee.jpg' border='0' alt='user posted image'>

உண்மையாவா Boy?
தொலைந்தவள் கிடைத்து விட்டாளா?
அதே கண்களா?
இதேமாதிரி கனவுகள்:கவிதைகள் அங்கேயும்.
நம்மக்குள்ளள இருக்கிறது நமக்கு தெரியல்லையேப்பா?

விண்மீனாயிருந்தவள்
வெண்ணிலவானால்?


டயட் கொண்ரோள்யா?.............So..... fat is not so goodya?

மகிழ்ச்சி , வாழ்த்துகள்.



- Paranee - 09-17-2003

உள்ளத்தை அள்ளித்தா
அருமையான தொரு நகைச்சுவைத்திரைப்படம்
அந்த திரைப்படம் வரமுதல் பாடல் கசெட் வெளிவந்துவிட்டது. அதுதானே வழமை. அதில் அழகிய லைலா .........
என்ற பாடல் மனதை கொள்ளை அடித்தது. எனவே திரைப்படம் வந்தபோது அந்த பாடல் காட்சிக்காக ஏங்கிக்கொண்டிருந்தோம். பாடல்காட்சியும் வந்தது. வீட்டில் அடிவேண்டாத குறை.
ஊரில் ஓரு குறிப்பிட்ட காலப்பகுதியில் ஒரு வீட்டில் திரைப்படம் ஓடுவதென்றால் பக்கத்துவீட்டுக்காரர் நண்பர்கள் என குழுமி இருந்து பார்ப்பார்கள். அந்த காலகட்டத்தில் திரைப்படம் ஓடுவது அரிது.

நண்பாகள் அயலவர்களுடன் அந்த திரைப்படத்தை பார்த்துக்கொண்டிருக்கும்போது அந்த அழகிய லைலா வந்தாள். அடிகிடைக்கமுதல் அந்த படம் எடுத்த நாம் ஓடியே விட்டோம்.


அம்மன் படங்கள் என எடுக்கப்படும் திரைப்படங்கள் மிக மிக மோசம். அங்கு அம்மன் வருவதைவிட அரைகுறை நடனக்காட்சிகள்தான் முன்னுக்கு வருகின்றன.

இதைவிடவா பாய்ஸ் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.

இதுவும் ஒரு விளம்பரம்தான். சண்டியரிற்கு ஏற்படுத்தும் விளம்பரம் போல. . .


- AJeevan - 09-17-2003

Karavai Paranee Wrote:வணக்கம் அண்ணா
விண்மீனாய் தொலைத்தவளை வெண்ணிலவாய் தேடி எடுத்தவர் தித்திக்குதே கவிப்பேரசு . . . .

பாடல் எனக்கு இதமாகவும் இணையாகவும் இருந்தமையால் எடுத்து தொடுத்துள்ளேன்.

விழிகள் என்று மாறிக்கொள்ளும்
சிறுத்தாலும் அந்த சீண்டல் என்றும் சிறுமையானதில்லை....
அனுபவம்................
உங்களிற்கு எப்படி ?
<img src='http://www.yarl.com/forum/files/ajvizhi.jpg' border='0' alt='user posted image'>
விழிகளுக்குள்
விதையாகக் - கண்ணுக்குள்
கண்ணீராகிக்
கலந்த அனுபவம்............

வடியும் போதும் - முழுவதுமாய்
வடிந்தேன்
வற்றும் போதும் - உப்பாய்
வழிந்தேன்.................

அஜீவன்


- kuruvikal - 09-17-2003

கண்கள் பேசிய
கவிதை
கண்ணீராய் என்
முகத்தாளில்
செய்தி தந்ததே....!
காதலியை நினைத்தல்ல
தாயின் அரவணைப்பை நினைத்து...!


- Paranee - 09-17-2003

விழி படித்தவர் என்பதால்தான் - உங்கள்
மனவெளி கடக்க எண்ணுகின்றோம்
மொழி படிப்பதால் இங்கு சுழியோட முடியவில்லை
விழி படிக்கவேண்டும் காந்தக்கண்களிற்குள்
வீழ்ந்து எழ வேண்டும்

வாழ்த்துக்கள் அஐPவன் அண்ணா
அருமையான தொரு கவிதை

AJeevan Wrote:
Karavai Paranee Wrote:வணக்கம் அண்ணா
விண்மீனாய் தொலைத்தவளை வெண்ணிலவாய் தேடி எடுத்தவர் தித்திக்குதே கவிப்பேரசு . . . .

பாடல் எனக்கு இதமாகவும் இணையாகவும் இருந்தமையால் எடுத்து தொடுத்துள்ளேன்.

விழிகள் என்று மாறிக்கொள்ளும்
சிறுத்தாலும் அந்த சீண்டல் என்றும் சிறுமையானதில்லை....
அனுபவம்................
உங்களிற்கு எப்படி ?
<img src='http://www.yarl.com/forum/files/ajvizhi.jpg' border='0' alt='user posted image'>
விழிகளுக்குள்
விதையாகக் - கண்ணுக்குள்
கண்ணீராகிக்
கலந்த அனுபவம்............

வடியும் போதும் - முழுவதுமாய்
வடிந்தேன்
வற்றும் போதும் - உப்பாய்
வழிந்தேன்.................

அஜீவன்



- AJeevan - 09-17-2003

Karavai Paranee Wrote:அம்மன் படங்கள் என எடுக்கப்படும் திரைப்படங்கள் மிக மிக மோசம். அங்கு அம்மன் வருவதைவிட அரைகுறை நடனக்காட்சிகள்தான் முன்னுக்கு வருகின்றன.

இதைவிடவா பாய்ஸ் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.

எங்கே பிரச்சனைகள் உருவாகிறது என்பது அநேகருக்கு தெரியாது. ஓரு திரைப்படத்தை தயாரிப்பது வெகு சுலபம்.காரணம் பணமிருந்தால் யாரும் ஒரு திரைப்படமல்ல,100 திரைப்படங்களைத் தயாரித்து விடலாம். ஆனால் அதை வாங்கி தியெட்டர்களில் ஓடும் விநியோகஸ்தர்கள் இருக்கிறார்களே அவர்களால்தான் பெரும்பாலும் இப்படியான நிலைக்கு இயக்குனர்களும் , தயாரிப்பாளர்களும் தள்ளப்படுகிறார்கள்.

ஓரு நல்ல படத்தைப் பார்த்து விட்டு அவர்கள் எடுக்கும் முடிவில்தான் பிரச்சனை உருவாகிறது.பிரிவீவ் எனப்படும் பிரத்தியேக காட்சி முடிந்ததும் ஒருவர் இப்படித் தொடங்குவார். இது சரியில்லை சார்,........... ரம்பா,ரம்மியா, யாரையாவது ஒருவாட்டி காட்டினாத்தானே சார் நமக்கு போணியாவும்............நீ போய் என்னவோ புதுமை பண்ணுறே சார்......இதுக்கெல்லாங் நம்ம துட்ட போட்டு தொலைச்சுட்டு பேமாளியாக முடியுமா?................
கிளமாரா (இவர்கள் கிளமர் என்பது செக்ஸாக,கிளாமர்என்பதன் உண்மையான அர்த்தம் கூட இவர்களுக்கு தெரியாது.) ஏதாவது சேத்து போணியாவ வழிய பாப்பியா?............"[/color]

என்று முகத்தில் கரியை வாரி இறைத்து உபதேசித்து விட்டு போய் விடுவார். அடுத்தவர்களை பற்றி இனி நினைக்க வேண்டியதேயில்லை.............

இவர்களால்தான் இது ஆரம்ப அடியாகத் தொடருகிறது. இவர்கள் படத்தை வாங்கா விட்டால் எடுத்தவர் வீட்டில் பெட்டியில் வைத்து சாம்பரானி காட்ட வேண்டியதுதான். இப்படி பல பெரிய இயக்குனர்கள் (பாரதிராஜாவின் ஒரு படமும்) படங்கள் பெட்டிகளுக்குள் கிடக்கின்றன.

சில தயாரிப்பாளர்கள்,இயக்குனர்கள்,நடிகர்களது படங்கள் மேல் உள்ள நம்பிக்கையால் விநியோகஸ்தர்கள் கண்ணை மூடிக் கொண்டு பட ஆரம்ப விழாவின் போதே அட்வான்ஸ் கொடுத்து வாங்கி விடுவார்கள். சில படங்களால் எதிர்பாராத யோகம்தான்........
சில படங்கள் அதாவது பாபா,அன்பே சிவம் போன்ற படங்கள் தோல்வியடைந்த போது நஸ்டம் தயாரிப்பாளளருக்கோ,இயக்குனருக்கோ,கலைஞர்களுக்கோ அல்ல,விநியோககஸ்தர்களுக்குத்தான்.இதில் திருட்டு VCD,DVD,Video போன்றவற்றால் நிலமை அதைவிட மோசம்.

அதற்குள் விமர்சனம் ஏழுத வேறு கவர் கொடுத்துக் கவனிக்க வேண்டும்.(கவர்=லஞ்சம்) . அவர்களோடு ஏதாவது பழைய பகை அல்லது அரசியல் மோதல்கள்,..............இப்படி ஏதாவது இருந்தால் நல்ல மதிப்பெண் போட்டு கவனித்து விடுவார்கள். இவர்கள் சினிமாவில் லஞ்சத்தை எதிர்த்தாலும் படத்தை ரிலீஸ் செய்ய எத்தனையோ விட்டுக் கொடுப்புகளை,விநியோகஸ்தர்களுக்கான நரபலிகளை (நடிகைகளை) திரை மறைவில் டிஸ்கஸனுக்கு அனுப்ப வேண்டியுள்ளது.

இவற்றை ஆரம்பத்தில் எதிர்போர் இல்லாமலில்லை.ஆனால் பெரும்பாலானவர்கள் காலப் போக்கில் தளர்ந்து விடுகிறார்கள்.(இவர்களுள் விரல் விட்டு எண்ணக்கூடிய நல்லவர்கள் பலரை தனிப்பட எனக்குத் தெரியும்.)

நமது உறவுகள் ஒரு முதலமைச்சரை ஒரு நாட்டிலிருந்து தெரிவு செய்ய முயன்றார்களே...........அவர் புகழ்வாய்ந்த டிஸ்கஸன் மன்னர்களில் ஒருவர்.

ஒரு காலத்தில் திரைப்பட மாணவர்களது வருகைதான் இவர்களுக்கு எமனாகியது..............அதனால் மாணவர்களது படத்தை தடை செய்ய அனைத்து தில்லு முல்லுகளையும் செய்தவர்கள் அன்றைய முதல் தர இயக்குனர்ககள்,தயாரிப்பாளர்கள்,நடிகர்கள்...............

அடித்தவனை விட்டு விட்டு அம்பை நோவதில் என்ன பயன்?
<img src='http://www.yarl.com/forum/files/ajcamera.jpg' border='0' alt='user posted image'>
அன்புடன்
அஜீவன்


- vaiyapuri - 09-17-2003

வணக்கம் அஜீவன்,
எல்லாத்தலைப்பிலயும் நிறையத் தத்துவம் சொல்லுறியள்..சந்தோசம்.

உந்த இந்திய சினிமாக் கதைகள விட்டுப்போட்டு உங்கட அனுபவங்கள எடுத்து வெளியில விடுங்கவன்...

ஓ..கேள்வி கேட்டாத்தானே பதில் எழுதறதற்கு...

அழியாத கவிதைகள் தயாரிப்பு,அதில் ஏற்பட்ட அனுபவங்கள்,நீங்கள் இந்த முறை கையாண்டிருக்கக்கூடிய புதிய வழிமுறைகள்,நுட்பங்கள் ஏதும் இருந்தால் அவைபற்றி விடயங்களைப் பகிர்ந்து கொண்டீர்களேயானால் நம்மவர் திரைப்படத்துறை பற்றியும் சற்று கலந்துரையாடலாமே..

ஆர்வத்துடன்.... :|


- vaiyapuri - 09-17-2003

நவம்பர் மாதத்தில் ஈழவர் குறுந்திரைப்பட விழாவொன்று நடைபெறவிருப்பதாக செய்திகள் அடிபடுகிறது உண்மைதானா அஜீவன் ?


- AJeevan - 09-17-2003

vaiyapuri Wrote:நவம்பர் மாதத்தில் ஈழவர் குறுந்திரைப்பட விழாவொன்று நடைபெறவிருப்பதாக செய்திகள் அடிபடுகிறது உண்மைதானா அஜீவன் ?

கனடாவில் ஒரு திரைப்பட விழா நடத்துவதற்கான ஒழுங்குகள் நடைபெறுவதாக அறிகிறேன்.முழுமையான விபரங்கள் கிடைத்த பின் எழுதுகிறேன்.

அழியாத கவிதை தயாரிப்பில் இருப்பதால் அது பற்றி எழுதுவது முறையல்ல. நடிக-நடிகையர் கொடுத்த அதிர்ச்சிகள் மிக சுவையானது. எங்கும் சிறு சிறு பிரச்சனைகளை எதிர்நோக்குவது பொதுவான ஒரு விடயம். அவற்றை இனிய அனுபவமாகவே கருதி நண்பர்களுடன் சிரிப்பதுண்டு..................நீங்களும் நண்பர்கள் என்பதால் பகிர்ந்து கொள்ளலாம்..........

கூடிய விரைவில் கடந்து வந்த புலம் பெயர் சினிமா வேதனை சிரிப்புகளை பகிர்ந்து கொள்வேன்.

எனது திரைப்பட ஆசான் சொன்ன ஒரு வாக்கை மறக்கவே முடியாது.அது:-

ஒன்று விசயம் தெரிந்தவர்களோடு வேலை செய். அல்லது விசயம் தெரியாதவர்களோடு வேலை செய்.

விசயம் தெரிந்தவர்களோடு வேலை செய்தால் நீ எதையாவது கற்றுக் கொள்வாய்.
விசயம் தெரியாதவர்களோடு வேலை செய்தால் நீ சொல்வதைக் கேட்டு உன்னோடு வேலை செய்வார்கள். அரை குறைகளோடு வேலை செய்தால் நீ சொல்வதை அவர்கள் ஏற்றுக் கொள்ளவும் மாட்டார்கள்.அவர்கள் சொல்வதை உன்னாலும் ஏற்றுக் கொள்ள முடியாது என்பார்.

அது வாக்கல்ல,தேவ வாக்கு.இந்த வசனம் இன்னும் என்னை சினிமாக் கலைக்குள் வைத்திருக்கிறது.


- vaiyapuri - 09-17-2003

Quote:விசயம் தெரிந்தவர்களோடு வேலை செய்தால் நீ எதையாவது கற்றுக் கொள்வாய்.
விசயம் தெரியாதவர்களோடு வேலை செய்தால் நீ சொல்வதைக் கேட்டு உன்னோடு வேலை செய்வார்கள். அரை குறைகளோடு வேலை செய்தால் நீ சொல்வதை அவர்கள் ஏற்றுக் கொள்ளவும் மாட்டார்கள்.அவர்கள் சொல்வதை உன்னாலும் ஏற்றுக் கொள்ள முடியாது என்பார்.

உண்மைதான்.

அழியாத கவிதையில் முழுக்கவும் புதுமுகங்கள் தானோ?
புலம்பெயர் சினிமாவின் பெரியவரும் நடிப்பதாகக் கேள்விப்பட்டேன்.

உங்கள் இரகசியங்களைத் தவிர சுவையான அனுபவங்கள்,ஈழவர் திரைக்கலை பற்றிய உங்கள் சொந்தக் கருத்துக்களை பகிர்ந்துகொள்ள முடிந்தால் பகிர்ந்துகொள்ளுங்கள்.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- AJeevan - 09-17-2003

<img src='http://www.yarl.com/forum/files/ajcamera.jpg' border='0' alt='user posted image'>
vaiyapuri Wrote:அழியாத கவிதையில் முழுக்கவும் புதுமுகங்கள் தானோ?
புலம்பெயர் சினிமாவின் பெரியவரும் நடிப்பதாகக் கேள்விப்பட்டேன்.

உங்கள் இரகசியங்களைத் தவிர சுவையான அனுபவங்கள்,ஈழவர் திரைக்கலை பற்றிய உங்கள் சொந்தக் கருத்துக்களை பகிர்ந்துகொள்ள முடிந்தால் பகிர்ந்துகொள்ளுங்கள்.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


அழியாத கவிதையில் இலங்கை தமிழ் திரைப்பட நடிகரும் தயாரிப்பாளருமான ரகுநாதன் அவர்களுடன் நடித்த பெரும்பாலானவர்கள் புது முகங்கள்.

சாஜகான் என்ற நடிகர் மட்டும் இந்திய திரைப்டங்களில் நடித்திருப்பவர்.
இவர் ஏற்கனவே நான் லண்டனில் நடித்திய திரைப்பட பயிற்சிப்பட்டறையில் கலந்து கொண்டவர்.

ஈழத்து திரைக்கலை மன்றம் நடத்திய ஒரு விழாவுக்காக என்னை அழைத்து,அங்கு வைத்துத்தான் பாரிஸ்டர் யோசேப்பு அவர்கள் 3 குறும்படங்களை செய்யும் வேண்டுகோளை முன் வைத்தார்.

கதையொன்றைத் தேர்வு செய்து குறும்படத்தை தொடங்கு முன் நடிகர்களைத் தேடிடலாம் எனும் நம்பிக்கை இருந்தாலும்,நம்மவர்கள் கடைசி நேரத்தில் வராமல் விட்டதும், ஒரு சிலரின் தாமதங்களும் எனக்குள் மகிழ்ச்சியற்ற தன்மையைதான் உருவாக்கியது.ஆனால் எதிர்பாராத புதியவர்கள் உதவியது , பங்கு கொண்டதுதான் படத்தை முடிக்க உதவியது.

பங்குபற்றிய அனைவரது உழைப்புக்கும் ரசிகர்கள்தான் முடிவு சொல்ல வேண்டும். எந்த ஒரு படத்தின் வெற்றியும் பார்வையாளனின் ஏற்றுக் கொள்ளலில்தான் தங்கியிருக்கிறது. அதுதான் உண்மையான வெற்றி. நான் இப்போது சொல்வது தவறு...............

பார்வையாளரின் மனதை அறிவது மிகக் கடினம். ஆனால் எதை எப்படிக் கொடுக்க வேண்டுமென்று தோல்விகளைப் பார்த்து கற்றிருக்கிறேன்.

எனவே (இயக்குனரானால்)வேலை செய்யுமுன் எல்லாவற்றிற்கும் காது கொடுப்பேன், கருத்து பரிமாற்றம் மோதலாகக் கூட இருக்கலாம். சரியென்றால் எவர் சொன்னாலும் ஏற்றுக் கொள்வேன். சரிப்பட்டு வராது என்று தெரிந்தால் விட்டுப் போய் விடுவேன். ஆனால் நான் வேலை செய்யத் தொடங்கி விட்டால் எவர் பேச்சையும் கேட்பதுமில்லை,பேச அனுமதிக்கவோ , குறுக்கீடு செய்யவோ விட மாட்டேன்,

காரணம் தோல்விகள் வந்தால் பழி என்னை மட்டுமே சாரும். வெற்றிகள் வந்தால் அது எல்லோருக்கும் உரியதாக மகிழ்வேன். தோல்விகளை எவர் தலையிலும் சுமத்த மாட்டேன்.இதனால் நான் சிலரது வெறுப்புக்கு ஆளாவதுண்டு................. என் மனச்சாட்சிக்கு ஏற்காத எதையும் யாராக இருந்தாலும் செய்ய மாட்டேன்.இது பலருக்கு பிடிப்பதில்லை.அது எனக்குப் பிடிக்கும்...........

சுவிஸ் கலைஞர்களோடு வேலை செய்யும் போது எனக்கு பிரச்சனைகள் வருவதேயில்லை. ஆரம்பத்திலிருந்தே அனைத்தும் திட்டமிடப்படுகிறது. எல்லோரும் ஒருவரை ஒருவர் புரிந்த கொள்ள சந்திப்புகள்-அறிமுகங்கள் இடம் பெறுகின்றன. இவர்கள் தமது வேலையை விட்டு அடுத்தவர் வேலைக்குள் தலை போடுவதில்லை. உதவியென்று வந்தாலும் சொல்வதை மட்டுமே செய்வார்கள். அறப்படித்த வேலைகள் செய்ய மாட்டார்கள். அவரவர் என்ன பொறுப்பு என்பது அவரவருக்குத் தெரியும். பட வேலைகள் முடிந்ததும் சுமுகமாக பழைய நட்பு நிலைக்கு மாறிவிடுவோம். வேலை செய்யும் நேரத்தில் ஏற்படும் பிரச்சனைகளை துாக்கித் திரிய மாட்டோம். சபலத்தை இவர்களிடம் பார்க்கவே முடியாது. நமது படைப்பு சிறப்பாகும் எண்ணத்துக்காக எந்த வேதனையையும் தாங்குவதுதான் அவர்களின் சிறப்பு. அதுபோலவே நல்லதை பாராட்டாமல் இருக்கவே மாட்டார்கள்.

நல்லவை எங்கிருந்தாலும் ஏற்றுக்கொள்ளவும்,பாராட்ட வேண்டியவற்றை எதிரியானால் (நாளைய நண்பன்) கூட மனம் திறந்து பாராட்டவும் (ஐஸ் அல்ல)கூடிய மனசு எமக்கு ஏற்பட்டால் அவனே சுயநலமற்ற கலைஞனாக முடியும்.

அன்புடன்
அஜீவன்


- Mullai - 09-18-2003

Quote:AJeevan[/color]
எனவே (இயக்குனரானால்)வேலை செய்யுமுன் எல்லாவற்றிற்கும் காது கொடுப்பேன், கருத்து பரிமாற்றம் மோதலாகக் கூட இருக்கலாம். சரியென்றால் எவர் சொன்னாலும் ஏற்றுக் கொள்வேன். சரிப்பட்டு வராது என்று தெரிந்தால் விட்டுப் போய் விடுவேன். ஆனால் நான் வேலை செய்யத் தொடங்கி விட்டால் எவர் பேச்சையும் கேட்பதுமில்லை,பேச அனுமதிக்கவோ , குறுக்கீடு செய்யவோ விட மாட்டேன்,
அப்படியாயின்
[quote]AJeevan[/color]
காரணம் தோல்விகள் வந்தால் பழி என்னை மட்டுமே சாரும். வெற்றிகள் வந்தால் அது எல்லோருக்கும் உரியதாக மகிழ்வேன். தோல்விகளை எவர் தலையிலும் சுமத்த மாட்டேன்
நீங்கள் தனித்து வேலைசெய்து அதில் தோல்வி வந்தால் பழி உங்களுக்கு. வெற்றி வந்தால் அது எல்லோருக்கும். என்றா சொல்ல வருகிறீர்கள்?
உங்களுக்குப் <span style='font-size:25pt;line-height:100%'>பெரிய மனது</span>


- AJeevan - 09-19-2003

[quote=Mullai]கூட்டு முயற்சி, ஒரு குழுவாக இயங்குவது


கூட்டு முயற்சி,குழுவாக இயங்குவது எல்லாம் கூட்டு சேர்ந்து செய்யும் செயலைத் தெரிந்தவர்களோடு மட்டும்தான் முடியும்.எல்லோருடனும் முடியாது என்றுதான் சொல்கிறேன் முல்லை.

சினிமா என்பது எல்லாத் தொழில்களையும் விட மிகக் கடினமானது,ஆபத்தானது. அதில் இறங்கி அதைச் செய்து பார்த்தால்தான் புரியும்.நான் எனது 13வயதில் இத்துறைக்குள் நுழைந்தேன்.இதுவரை என்ன செய்து விட்டேன்? ஒன்றுமேயில்லை..............

பெரிய உதாரணங்கள் தேவையில்லை. கயிறிழுக்கும் போட்டியை பார்த்திருப்பீர்கள். இரு பக்கமும் இரு குழுவாக இழுப்பதுதான். இதில் பெரிதாக எதுவுமிருப்பதாக பார்ப்பதற்கு தெரியாது. ஆனால் ஒரு பக்கத்தில் இழுக்கும் குழுவின் ஒருமித்த ரிதத்துடனான இழுவையும், புரிந்துணர்வும், பயிற்சியும்தான் அந்த குழுவின் வெற்றியைத் தீர்மானிக்கிறது. யார் எப்போது தளர்த்தி, ஏமாற்றி இழுப்பது என்பதைக் கூட அந்தக் குழு பயின்றிருப்பதால்தான் வெற்றி பெற முடிகிறது.


நாம் சினிமா பற்றிய அடிப்படையைக் கூட தெரியாமல் இயக்குனராக நினைப்பது எப்படி?
எல்லோருக்குள்ளும் ஆர்வமிருக்கிறது.தவறில்லை. ஆனால் ஒருவரே எல்லாவற்றையும் தலையில் சுமப்பது தாய்மையை விட பயங்கரமான சுமை.

ஒருவன் தெரியாத் தனமாகக் கூட தவறான ஒருவரோடு சேர்ந்தாலே,உனக்கு அறிவில்லையா? என்பார்கள்........................அது எங்கும் பொருந்தும்.

சினிமாவுக்கான திரைக் கதை எழுதுபவவருக்கு காட்சிகளுக்காக என்ன என்ன Shots தேவை.அதுவும் என்ன கோணத்தில் Camera வைக்கப்பட வேண்டும்.(விளக்கம் கேட்டால் அதற்கான விளக்கம் கொடுக்கத் தெரிய வேண்டும்) போன்ற எத்தனையோ விடங்களைக் குறிப்பிடத் தெரிந்திருக்க வேண்டும். அதுபோல இயக்குனருக்கு அதை புரிந்து ஒளிப்பதிவாளருக்கு விளக்கி அவரிடம் வேலை வாங்கத் தெரிய வேண்டும்.ஒளிப்பதிவாளருக்கு இயக்குனரின் எண்ணங்களை புரிந்து கொள்ளக் கூடிய , அவரின் எண்ணங்களை திரையில் செதுக்கக் கூடிய தன்மை வேண்டும்.ஒளிப்பதிவாளர் ஒளிப்பதிவு செய்தவற்றை தொகுப்பாளரான Editorடம் கொடுத்து தொகுப்பதற்கு தேவையான விளக்கங்கள்,அதற்கான இசை எப்படியாக அமைய வேண்டும் என்பது பற்றிய ஞானமெல்லாம் ஒரு இயக்குனருக்கு தேவை.இப்படி...............தொடர்கிறது.

ஒரு கடிதத்தை அல்லது கவிதையை எழுத சில விதிகள் உண்டு.இவற்றை பாடசாலைகளில் கற்க எவ்வளவு காலம் எடுத்துக் கொண்டோம்.சினிமா என்பது??????????????ஆனால் அப்படி எதுவும் தெரியாதவர்களோடு எப்படி கூட்டு சேர்வது? பேசுவது இலகுவானது.ஆனால் செயல் படுத்துவது இருக்கிறதே...........????????

நான் எப்போதும் எல்லோருக்கும் சொல்வது நீங்கள் ஏதாவது செய்ய விரும்பினால் அதைப் பற்றிய அடிப்படை அறிவை எங்காவது படியுங்கள் என்பதுதான்.


அடிப்படையாக 4வருடம் கற்றுக் கொள்ளும் ஒன்றைப் பற்றி 4வார்த்தையில் சொல்ல எனக்குத் தெரியாது.தயவுடன் மன்னிக்கவும்.

[quote=Mullai]
[quote]AJeevan[/color]
காரணம் தோல்விகள் வந்தால் பழி என்னை மட்டுமே சாரும். வெற்றிகள் வந்தால் அது எல்லோருக்கும் உரியதாக மகிழ்வேன். தோல்விகளை எவர் தலையிலும் சுமத்த மாட்டேன்
[/quote]
நீங்கள் தனித்து வேலைசெய்து அதில் தோல்வி வந்தால் பழி உங்களுக்கு. வெற்றி வந்தால் அது எல்லோருக்கும். என்றா சொல்ல வருகிறீர்கள்?
உங்களுக்குப் <span style='font-size:25pt;line-height:100%'>பெரிய மனது</span>

நன்றி.தோல்விகளை எவர் தலையிலாவது போட்டுவிட்டு தப்புபவர்களையும்,

வெற்றி பெற்றால் மட்டும் "நான் மட்டுமில்லையென்றால்.................என்பவர்களைத்தான் அதிகமாகப் பார்த்திருக்கிறேன்.எனவே அது தவறானால்.......................?

Boys திரைப்டத்தில் எத்தனை பேர் வேலை செய்திருப்பார்கள்????????????? வெற்றி பெற்றிருந்தால் எல்லோரும் முண்டியடித்துக் கொண்டு பேட்டி கொடுத்திருப்பார்கள். ஆனால் இன்று எல்லாவற்றிற்கும் பொறுப்பு சங்கர் மட்டுமே!

மு.கு:சில வேலைகள் காரணமாக நாளை முதல் ஒரு மாதம் யாழுக்குள் வர முடியாதிருக்கும். இப்போது அதிகாலை 01.50 (Swiss Time) என் இனிய விமர்சகருக்கு பதில் கொடுத்து விட்டு உறங்க நினைத்தேன்.

மீண்டும் விரைவில் உங்கள் அனைவரையும் யாழ் ஊடாக சந்திப்பேன் எனும் நம்பிக்கையுடன் இனிய நண்பர்கள் அனைவருக்கும் நல்-வாழ்த்துகள்.

என்றும் உங்கள்
AJeevan


- vaiyapuri - 09-19-2003

எங்கடையாக்கள் கூட்டுசேர்ந்தாலே குழப்பத்துக்கு வழி வந்திடுமே.

சில விடயங்களில் கொள்கைப் பிடிப்புடன்தான் இருக்கனும் பாருங்கோ..அஜீவன் தொடருங்கோ !


- kuruvikal - 09-19-2003

<img src='http://thatstamil.com/images13/cinema/boys-300.jpg' border='0' alt='user posted image'>

Boys..........

பாய்ஸ் படம் மாணவர்களின் மரியாதை, ஒழுக்கம், மன நிலையைக் குலைக்கும் விதமாக இருப்பதாக வந்த புகார்களையடுத்து, படத்தின் இயக்குனர் ஷங்கர், தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம், சென்சார் போர்ட், மத்திய அரசின் தகவல் ஒளிபரப்புத் துறை ஆகியோருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கடந்த வாரம் மனித உரிமைகள் ஆணையம் சார்பில் நடந்த நிகழ்ச்சியொன்றில், பாய்ஸ் படத்தில், ஆபாச காட்சிகள், வசனங்கள் இடம் பெற்று இருப்பதற்கு, நிகழ்ச்சியில் பேசிய சில பள்ளித் தலைமை ஆசிரியர்கள், கல்லூரி முதல்வர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மனித உரிமை ஆணைய உறுப்பினர் நீதிபதி சம்பந்தத்திடம் புகார் மனுக்களையும் கொடுத்தனர்.

இந்தப் புகார்களை பரிசீலித்த நீதிபதி சம்பந்தம், ஷங்கர், ஏ.எம்.ரத்னம் ஆகியோரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

இது குறித்து சம்பந்தம் நிருபர்களிடம் கூறுகையில், பாய்ஸ் படம் சென்னையில் தணிக்கை செய்யப்படவில்லை. ஹைதராபாத்தில் தணிக்கை செய்துள்ளனர். இந்தப் படம் மாணவர்களின் ஒழுக்கம், நெறிமுறைகள், மன நிலையை மட்டும் பாதிக்கவில்லை,

ஒட்டுமொத்தமாக பெண்களை தரக்குறைவாக சித்தரித்துள்ளதாக கருத்து நிலவுகிறது. எனவே தான் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம் என்றார்.

இதற்கிடையே, இந்தப் படத்தை மீண்டும் சென்சார் செய்ய வேண்டும் என்று அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஷங்கரின் 'ஓவர் திறமை':

இந்தப் படத்தை ஷங்கர் அண்ட் கம்பெனி, திட்டமிட்டே தான் ஹைதராபாத் சென்சார் போர்ட் அலுவலகத்தில் வைத்து தணிக்கை செய்ததாகத் தெரிகிறது.

சென்னையில் தணிக்கை செய்தால் இரட்டை அர்த்த வசனங்களுக்கு கத்திரி விழும் என்பதால், அதைத் தவிர்க்கவே வேறு வசனங்கள் கொண்ட தெலுக்குப் பதிப்புக்கு மட்டும் தணிக்கை சான்றிதழை வாங்கிக் கொண்டு, அதே படம் தான் என்ற போர்வையில் தமிழ் பதிப்புக்கு தணிக்கை சான்றிதழே வாங்காமல் ரிலீஸ் செய்துள்ளனர்.


செய்தி அப்படியே பிரதி செய்யப்பட்ட இடம்...தற்ஸ்தமிழ் டொட் கொம்...!


- vaiyapuri - 09-19-2003

எவனோ கஸ்டப்படறான்.காலுக்கு மேலை காலைப் போட்டுக்கொண்டு யார் யாரோ விமர்சிக்கறான்...

நாட்டுல நடக்காததுகளே உதெல்லாம்..உந்த ஐரோப்பிய நாடுகளில இருக்கிற இந்திய வம்சாவளி மாணவர்களைக் கேட்டால் சங்கருக்கே பாடம் படிப்பிப்பினம்.....

நைட்டுல மிட்நைட் மசாலா..பாக்குறவனெல்லாம் வெய்யிலைக் கண்டதும் சின்ஸியர் ஆகிடுறான்...


- kuruvikal - 09-19-2003

நல்லாச் சொன்னியள் வையாபுரியண்ண...முழுக்க நனைஞ்சாப்பிறகும் முக்காடு போடுதுகள் ஏன்....அதுதான் போல...!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- AJeevan - 09-20-2003

<b>''கிளு கிளு இல்லாமல் சினிமாவா?</b> இயக்குனர் செல்வராகவன்

<img src='http://www.yarl.com/forum/files/selvaragavan.jpeg' border='0' alt='user posted image'>

'பாய்ஸ்' படம் பரபரப்பான சர்ச்சைகளைப் பற்றியெரிய வைத்திருக்கிறது. தமிழ் சினிமாவில் அதற்கு ஆரம்ப விதை ஊன்றியது 'துள்ளுவதோ இளமை' படம்தான். அதன் இயக்குநர் செல்வராகவன் 'பாய்ஸ்' பற்றி என்ன நினைக்கிறார்?

''நான் பாய்ஸ் படம் பார்த்தேன். படம் ரொம்ப நல்லா இருந்தது. பிரமாதமான படம் பார்த்த திருப்தி என்றவர், சூடாக பேச ஆரம்பித்தார். ''உலகம் எங்கேயோ போய்ட்டிருக்கு. இன்னமும் மரத்தைச் சுத்தி ஆடச் சொல்றீங்களா..? இப்போதான் தமிழ் சினிமா அதோட பாதையிலே சரியா பயணிச்சிட்டிருக்கு. ஊர்ல என்ன நடக்குதுனு அப்டேட் பண்ணி படம் எடுத்தா, ஏதோ இல்லாததைக் காட்டிட்ட மாதிரி மிரள்றாங்க. நாங்க ஒண்ணும் ஃப்ளூ பிலிம் எடுத்துடலையே. சென்ஸார் போர்டுங்கிற அரசாங்க அமைப்பைத் தாண்டி, சட்ட திட்டங்களுக்கு உட்பட்டுதானே எங்க படங்கள் வருது. பேச, எழுத கருத்து சுதந்திரம் இருக்கிற மாதிரி படம் எடுக்கவும் சுதந்திரம் இருக்கே... அப்புறம் எதுக்கு பாய்ஸ் படம் ஓடற தியேட்டருக்கு முன்னால போய் ஆர்ப்பாட்ட மெல்லாம் பண்ணணும்? இதெல்லாம் அநாவசியமான வேலை. இவங்க எதிர்ப்பார்க்கிற மாதிரியெல்லாம் படம் எடுக்க ஆரம்பிச்சா, ஜவஹர்லால் நேரு, காந்தி படங்கள்தான் எடுக்க முடியும். இது சினிமாவுக்கு உள்ள சுதந்திரம். இதிலே தலையிடாதீங்க.

''சினிமா வசனங்களிலே வக்கிரமும், காட்சிகளில் விரசமும் இருப்பதில் தப்பில்லேங்கறீங்களா?

''வலியத் திணிச்சாத்தான் தப்பு. கதையோட இயல்பிலே வந்தா அது எப்படித் தப்பாகும்? 'பாய்ஸ்' படத்திலே வர்ற மாதிரியான காட்சிகள் நாட்டிலே நடக்காமலா இருக்கு? தமிழ்நாட்ல விபச்சாரமே இல்லியா? சினிமாங்கறது ஒரு பொழுதுபோக்கு. மாய உலகம். அது ஒரு போதை. கிளுகிளு இல்லாம சினிமா எப்படி பண்ண முடியும்? நீதிக்கதை சொல்லணும்னாகூட, அநீதியைக் காட்டித்தான் சொல்லணும். தவிரஇ இன்னிக்கு பசங்களுக்கு செக்ஸ் அறிவு வளர்றது நல்லதுதானே! இளைஞர்களோட இயல்பைஇ ரசிக்கிற மாதிரி காட்சியாக்கறோம். அது எப்படி குற்றமாகும்?''


''இந்த கலாசாரத்தை இப்போதைய சினிமால ஆரம்பிச்சது நீங்க தானே... அதனாலதான் இந்த அளவு சப்போர்ட் பண்றீங்கனு சொல்லலாமா?

''இதிலே என்ன கிரெடிட் வேண்டி யிருக்கு.. தப்பான பழக்கங்களெல்லாம் இருந்த பசங்க, கடைசில நாசமாப் போய்ட்டாங்கனு யாரும் படம் எடுக்கலையே! அப்படி இப்படி இருந்த பசங்க கடைசியில பக்குவப்பட்டு, சொந்தக் கால்ல நின்னு, வாழ்க்கையிலே ஜெயிச்சுக் காட்டறாங்கன்றதுதானே மெசேஜ். பசங்களுக்கு உத்வேகம் தர்ற படம்தான் இது.

ஒரு கதையைப் படமா பண்றப்போ சில உண்மைகளையும் சொல்ல வேண்டி இருக்கு. அது சிலருக்கு அதிர்ச்சியா இருக்கு. ஆனா, பலருக்குப் பிடிச்சிருக்கு. அமெரிக்காவிலே இதெல்லாம் சர்வ சாதாரணம். எதையும் மூடி மறைக்காம வெளிச்சம் போட்டுக் காட்டிடறதாலதான் அங்கே கற்பழிப்பும், எய்ட்ஸ் பிரச்னைகளும் குறைவு. இங்கே எல்லாத்தையும் மறைச்சு மறைச்சே மொத்த சமுதாயத்தையும் கெடுத்து வெச்சிருக்கோம்.''

''தப்பான விஷயத்துக்கு வக்காலத்து வாங்கற மாதிரி இருக்கே?

''என்னைப் பொறுத்தவரை இதிலே தப்பேதுமில்லே. எதிர்ப்பு வரும்னு தெரிஞ்சேதான் நானும் 'துள்ளுவதோ இளமை' எடுத்தேன். விவரம் புரியாத விடலைப் பசங்க பற்றிய கதை அது. நல்லது கெட்டது தெரியாத பக்குவமில்லாத பசங்க. உடம்பும் மனசும் முழிச்சுக்கற பருவம். அவங்களோட உலகம் பற்றி பேச ஆசைப் பட்டோம். நாம எல்லோரும் கடந்து வந்த வயசு அது. அதை எனக்குள்ள நேர்மையுடனும் தைரியத்துடனும் அணுகினேன்... ஜெயிச்சேன்.


மரத்தடியிலே உட்கார்ந்து வெத்தலை போட்டபடியே தீர்ப்பு சொல்றதும்இ பக்கம் பக்கமா டயலாக் விடறதும் இனிமே சினிமால பண்ண முடியாது. துரத்திடுவாங்க. பல கோடி ரூபாய் செலவு பண்ணிஇ ஹாலிவுட் தரத்துக்குப் படம் பண்ற நாம ஆஸ்கர் வரைக்கும் போகணும் சார்.''

''ஏ.எம். ரத்னத்துக்கு அடுத்த படம் பண்றதாலதான் இவ்வளவு ஸ்ட்ராங்கா பேசறீங்களோ?''

''அவருக்குப் படம் பண்ணலேன்னாலும் நான் இதேதான் சொல்வேன். ஏன்னா, இதுதான் எப்பவும் என் கருத்து. அதைச் சொல்றதுக்கான உரிமை எனக்கு இருக்கு.''

- எஸ்.பி. அண்ணாமலை
படங்கள்: என்.விவேக்

[u]அட சீ என்று சொன்ன அதே ஆனந்த விகடனில்
கவர் பரிமாறப்பட்டிகும் போல கிடக்குதே?

பிள்ளையை கிள்ளிவிட்டு,தொட்டில் ஆட்டப்படுகிறதே சார்!

முழு விபரங்கள்:-
http://www.vikatan.com/av/2003/sep/2109200...03/av0503.shtml

SUN தொலைக் காட்சியில் திரைப்படம் முடிந்து வெளியேறும் ரசிகர்கள் சொல்லும் கருத்துகளை மட்டும் விளம்பரமாக காட்டுகிறார்கள்.

சில சமயம் Boys லேட் பிக்கப் எனப்படும் விதத்தில் களைக் கட்டலாம். உதாரணமாக கரகாட்டக்காரன், ஒரு தலை ராகம் , அழியாத கோலம் , பாடும் பறவைகள் ,...............(ஏத்தனையோ) போன்றவை லேட் பிக்கப் படங்கள்.

நல்லதை நினைப்போம்.நல்லவை நடக்கும்
AJeevan