![]() |
|
ஈழ இந்திய புரிந்துணர்வு - கருத்துப்பகிர்வு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: தமிழ் /தமிழர் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=20) +--- Thread: ஈழ இந்திய புரிந்துணர்வு - கருத்துப்பகிர்வு (/showthread.php?tid=782) |
- வடிவேலு - 02-22-2006 அடே அப்பிமார் அண்ணன் மேல சில சொற்கள் பிழையா எழுதி விட்டேன் ஒருக்கா சரி செய்து விடுங்கோவன். நான் எப்படி அதை மாற்றுவது? :roll: :roll: :roll: - Luckyluke - 02-22-2006 விடுதலைப்புலிகள் : நிச்சயமாக பாராட்டப்படவேண்டிய அமைப்பு.... இவர்களது ஒழுக்கம் உலகின் எந்த இராணுவத்துக்கும் இல்லை.... இந்தியாவில் சில விவகாரமான காரியங்களில் இவர்கள் ஈடுபடாமல் இருந்திருந்தால் இன்னொரு பங்களாதேஷ் இன்னேரம் உருவாகியிருக்கும்..... தமிழீழ விடுதலைப்போராட்டம் : அடக்குமுறைகளுக்கு ஆளான எந்த இனமும் செய்யக்கூடியது இது தான்.... தமிழீழம் : 1983 மற்றும் 1984 ஆம் ஆண்டுகளில் நான் குழந்தைப் பருவத்தை தாண்டிய நிலையில் சென்னை வடபழனி அருகே திமுகவினர் ஒரு சுவர் சித்திரம் தீட்டி இருந்தனர்... அதில் 'தமிழன் கறி விற்கப்படும்' என்று ஒரு கசாப்புக் கடை வாசலில் சிங்களக் காடையன் ஒருவன் போர்டு வைத்திருப்பது போல வரையப்பட்டிருந்தது... அப்போதே ஈழத்தமிழனுக்கு தனி நாடு அமையவேண்டும் என மனதில் நினைத்தேன்.... ஈழத்தின் அப்பாவி மக்கள் : ஈழம் என்றில்லை.... மனிதநேயத்துடன் பார்த்தால் பாதிக்கப்பட்ட எந்த மக்களுக்கும் நல்ல வாழ்வு அமையவேண்டும் என்பது தான் அனைவரி விருப்பமும்..... ஈழத்து மக்களின் தற்போதைய நிலைமை : எனக்கு தெரிந்து போரை வெறுக்கிறார்கள்.... இந்திய மக்களை போல நிம்மதியாக வாழ விரும்புகிறார்கள்..... அவர்களுக்கான எதிர்காலம் : நன்றாக இருக்கவேண்டும் என்பதே என் ஆசை... ஈழத்தில் ஜனநாயகம் மலர வேண்டும் என்பது என் அவா..... - காவடி - 02-22-2006 லக்கி, ராஜா..உங்கள் பதில்களைப் பார்த்தேன். நாங்களும் நீங்களும் கிட்டத்தட்ட ஒரே கோட்டில்,ஒருமித்த கருத்தில் நிற்க, எதற்காக இத்தனை சண்டைகளும் சச்சரவுகளும்.. ? எனக்கு புரியவில்லை! விடுதலைப்புலிகளின் தலைவர் தனது பத்திரிகையாளர் மாநாட்டில் ஒரு கேள்விக்கு கீழிக்கண்டவாறு கருத்துப்படதெரிவித்திருந்தார்." எந்த ஒரு உலக நாடும் தனக்கு இன்னொரு நாட்டிடமிருந்து கிடைத்த கசப்பான அனுபவங்களை தொடர்ந்தும் பேணிக்கொண்டிருப்பதில்லை. காலத்தின் ஓட்டத்தில் அவை மறக்கப்பட கூடியவை" ஈழத்தில் சில தடைகள் இருக்கின்றன என்பவற்றை ஏற்றுக்கொள்கிறேன். குறிப்பாக விடுதலைப்புலிகளின் சில தவறான அணுகுமுறைகளை பகிரங்கமாக விமர்சிக்க முடியாது என்பதனை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் லக்கி மிகுந்த நெருக்கடிகளுக்கு மத்தியில் போராடும் அமைப்பு, அந்த அமைப்பை அப்படியே அழித்தொழிக்க பல பலமான சக்திகளும், புலிகளை தனிப்பட்ட காரணங்களிற்காக விமர்சிக்க காத்திருப்போருக்கும் மத்தியில் சில விடயங்களை பகிரங்கப்படுத்த முடிவதில்லை.. இந்தக் கவிதை புரிகிறதா என பாருங்கள். நான் அரச பயங்கர வாதத்தின் அட்டுழியம் பற்றிப் பேசினேன். அவர்கள் புலிகளின் பாசிசம் பற்றிப் பேசினார்கள் நான் அரச இராணுவத்தின் அடக்குமுறை பற்றிப் பேசினேன். அவர்கள் புலிகளின் பாசிசம் பற்றிப் பேசினார்கள். நான் அரசக் காடையர்களின் காடைத்தனம் பற்றிப் பேசினேன். அவர்கள் புலிகளின் பாசிசம் பற்றி பேசினார்கள். நான் புலிகளின் பாசிசம் பற்றிப் பேசினேன்.. அவர்கள் எனது வார்த்தைகளை கடன்வாங்கி கொண்டார்கள். அந்த அவர்கள் யாரென்பது உங்களுக்கு தெரியும். ஆனால்.. என்னால் 100 வழுத உறுதியுடன் சொல்ல முடியும்.. உங்கள் விமர்சனங்களை குழப்பங்களை கேள்விகளை சரியான முறையில் புலிகளுக்கு அவர்களுக்கு எடுத்துச் செல்ல முடியும். உண்மையில் அவர்கள் மீதான விமர்சனங்களை அவர்களிடம் மட்டுமே சொல்லுவது போராட்டம் வெற்றியடைய வேண்டும் என விரும்புகின்ற அனைவரும் செய்யக் கூடியது. புலிகள் மீதான விமர்சனங்களை, விசமத்தனமாக தமது மாற்று அரசியல் நோக்கத்திற்கு பயன்படுத்தி வெளியிடுபவர்கள் ஒருவகையினர். புலிகளின் மீதான விமர்சனங்களை புலிகளின் மீது நம்பிக்கையும் மதிப்பும் வைத்திருப்பவர்கள் அதனை புலிகளிடமே சொல்வது இன்னொரு வகை. எனக்கு தெரியவே.. புலிகளின் சில நடவடிக்கைகளை புலிகளிடம் தைரியமாக எடுத்துச் சொல்கின்றார்கள் சிலர். புலிகளின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பல கல்விமான்கள், பத்திரிகையாளர்கள் இவ்வாறு பலர் தங்கள் விமர்சனங்களை புலிகளிடம் சொல்கிறார்கள். இது தவிர புலிகள் இயக்கித்திலேயே உள்ள சில முக்கிய பிரமுகர்கள் மிகச்சரியாக தம்மையே விமர்சிக்கிறார்கள். உண்மையில் புலிகள் இயக்கம் தனது பொராட்டப்பாதையில் மிக வெற்றிகரமாக செல்ல வேண்டும் என நினைப்பவர்கள் அவ்வமைப்பு விடும் தவறுகளை சுட்டிக்காட்ட விரும்புவர்கள் அந்த அமைப்பிடமே சுட்டடிக்காட்டலாம் தானே.. அதுவல்லாமல்.. அதனை தமக்கான அரசியலுக்கு பயன்படுத்தி லாபம் தேடுகின்றவர்களை என்ன செய்வது - அருவி - 02-22-2006 Luckyluke Wrote:காவடி Wrote:ஆனால்.. அந்த அப்பாவி ஈழத்தமிழர்கள் தங்கள் விமோசனத்துக்கு புலிகளைத்தானே நம்பியாகவேண்டும். இலங்கையில் ஒரு காலத்தில் பல இயக்கங்கள் தமிழீழ விடுதலை என்ற பெயரின் கீழ் இயங்கின. அதில் பல இளைஞர்களும் சேர்க்கப்பட்டனர். அதைவிட அதிக இளைஞர்கள் பல இயக்கங்களில் வலுக்கட்டாயமாகவும் சேர்க்கப்பட்டனர். அதனால் அவ்வியக்கங்கள் தம் அளவிற்கு மீறிய அளவு அதிக உறுப்பினர்களைக் கொண்டிருந்தனர். இதனால் அவ்வியக்கங்களை நிர்வகிப்பதற்கு அவர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கினார்கள். அதனால் அவ்வியக்கங்களில் ஓழுக்கமின்மை பரந்து காணப்பட்டது. அவர்கள் பணத்திற்காக எதையும் செய்யக்கூடிய நிலைக்கு தள்ளப்பட்டார்கள். ஆனால் புலிகள் இயக்கம் ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் தம் உறுப்பினர்களை வைத்திருந்தார்கள். அதாவது தம்மால் முடிந்த அளவு உறுப்பினர்களை மட்டுமே வைத்திருந்தார்கள். அதனால் அவர்களால் ஒரு கட்டுப்பாட்டினுள் தம் உறுப்பினர்களை வைத்திருக்க முடிந்தது. தம் சக்தியை மீறி அதிக உறுப்பினர்களை சேர்ப்பதில் அவர்கள் அதிக ஆர்வம் காண்பிக்கவில்லை. அக்காலப்பகுதியில் புலிகள் இயக்கத்தில் சேர்வதற்கென்றே பல இளைஞர்கள் அவர்கள் பின்னால் மாதக்கணக்கில் திரிந்த வரலாறும் உண்டு. அவ்வாறு அவல நிலையில் இருந்த மற்றைய இயக்க உறுப்பினர்கள் ஒருகட்டத்தில் தம் மக்களையே அச்சுறுத்தும் நிலைக்கு இறங்கினார்கள். தமிழீழம் என்ற கொள்கைக்காகப் புறப்பட்டு அப்பிரதேச மக்களிற்கே தொல்லை கொடுக்க ஆரம்பித்ததனாால் அம் மக்களைப் பாதுகாக்க வேண்டிய கட்டாய தேவை நிலவியது. அன்றைய காலப்பகுதியில் ஓர் கட்டுப்பாடான இயக்கமாக மக்கள் மத்தியில் நற்பெயருடன் இருந்த ஒரே ஒரு இயக்கமான விடுதலைப்புலிகள் இயக்கம் அத்தேவையினை நிறைவேற்ற மற்றைய இயக்கங்களைத் தமிழீழப் பிரதேசங்களில் தடைசெய்தார்கள். புலிகள் அவர்களைத் தடைசெய்ய முன்பே அவ்வியக்கங்களில் இருந்த பலர் தம் தலைவர்களில் நம்பிக்கை இன்றி அவ்வமைப்புக்களை விட்டு வெளியேற ஆரம்பித்து விட்டார்கள். அதன் பின் அவ்வியக்கங்களைச் சேர்ந்தவர்கள் சிறீலங்கா இராணுவத்துடன் இணைந்து தாம் முன்பு கொண்டிருந்த தமிழீழம் என்னும் கொள்கையில் இருந்து விலகி அதற்கு எதிராகச் செயற்படத் தொடங்கினார்கள். அதன் பின்னர் அவர்கள் இரணுவத்தில் சம்பளம் பெற்றுக்கொண்டு இராணுவத்தின் ஒரு பிரிவாகச் செயற்படுகிறார்கள். - அருவி - 02-22-2006 Luckyluke Wrote:தமிழீழ விடுதலைப்போராட்டம் : அடக்குமுறைகளுக்கு ஆளான எந்த இனமும் செய்யக்கூடியது இது தான்....இதனைத்தானே நாம் அன்றிலிருந்து சொல்கிறோம். இதனை இத்தனை தெளிவாய் அறிந்திருந்தும் ஏன் இவ்வாறு :roll: :roll: - காவடி - 02-22-2006 லக்கி, ராஜா.. இது நிலாந்தன் எழுதிய ஒரு கட்டுரையிலிருந்து சில பதிகள்.. இந்த இடத்திற்கு பொருத்தமாயிருந்தது.. அதனால் இணைக்கிறேன்.. எனவே கொழும்பில் நடந்தவை அனைத்துப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான பயிற்சிப்பட்டறைகள் அல்ல. மாறாக பிரச்சினைகளைக் காலம் கடத்தவும் விடுதலைப்புலிகளை ஒரு புதிய பொறிக்குள் சிக்கவைப்பதற்குமாகத்தான் அவர்கள் புலிமனதைப் படிக்கிறார்கள். அமெரிக்கா தலைமையிலான மேற்கு நாடுகளுடன் ஒத்துப்போய் அல்லது அதிகம் விட்டுக்கொடுப்பதுபோல ஒரு போக்கைக்காட்டி அதன் மூலம் விடுதலைப்புலிகளை மேற்கு நாடுகளுடன் முரண்பட வைக்கும் விதத்தில் ஒருபொறி கொழும்பில் தயாராகி வருகிறது. இது 1987இல் ஜெயவர்த்தன இந்தியாவுடன் சேர்ந்து செய்த ஒரு பொறியைப்போன்றதே. அந்தப் பொறி நடுவராக வந்த இந்தியாவை விளையாட்டு வீரராக்கியது. முடிவில் அது தமிழர்களையும் இந்தியாவையும் மோத விட்டது. ஜெயவர்த்தனவின் யுத்தத்தை ராஜீவ்காந்தி நடத்தினார். அதிலிருந்து தொடங்கி சிதையத்தொடங்கிய இந்திய -ஈழத்தமிழ் உறவுகள் முற்றாக வழமைக்குத் திரும்பிவிடாத ஒரு பின்னணியில் இப்பொழுது புலிகளையும் மேற்குநாடுகளையும் மோதவிடும் விதத்தில் ஒரு புதியபொறி வடிவமைக்கப்பட்டு வருகிறது. இது முன்பு ரணில் வைத்திருந்த பொறியின் திருத்தப்பட்ட ஒரு வடிவமாகவும் இருக்கலாம். முன்பு ஜெயவர்த்தனவின் யுத்தத்தை ராஜீவ் காந்தி செய்தார். இப்பொழுது மஹிந்த தன்னுடைய யுத்தத்தை யாரைவைத்துச் செய்யலாம்? என்று யோசித்துக்கொண்டிருக்கிறார். - காவடி - 02-22-2006 ம்.. பொருத்தமான தலைப்பில் இட்டிருக்கிறீர்கள்.. யாரப்பா அதை செய்தது.. நன்றி - நர்மதா - 02-22-2006 லக்கிலுக் உங்களுக்கான பதில் 1) பெண்களுக்கு வலுக்கட்டாயமாக ஆயுதப் பயிற்சி கொடுப்பது (சமீபத்தில் அகதியாக வந்த பெண்ணொருவர் தன் இரண்டு பெண் குழந்தைகளையும் ஆயுத பயிற்சி பெறுமாறு புலிகள் வற்புறுத்தியதாக கூறினார்இ இது ஒரு உதாரணம் மட்டுமே) இதற்கு நான் பதில் கூறுகின்றேன் என்னை தவறாக யாரும் கருத வோண்டாம் முதலாவது தமிழிழ வரலாற்று போரில் சிங்கள அரசும் சிங்கள ஊடகங்களும் தமிழ் மக்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்வதை நாங்களும் அறிவோம் நீங்களும் அறிவீர்கள் அப்படி அறிக்கைகள் வரும் போது அ தை சிலர் (தமிழிழத்தை பற்றி நன்கு அறியாதவர்கள்) துாக்கிப் பிடிக்கிறார்கள் அல்லது பணத்துக்காக மாரடிக்கும் கும்பல்கள் அ தை பெரிதுபடுத்தி தமிழிழ பேராட்டத்தை இழிவு படுத்துகிறார்கள் ஏனெனில் அவர்களுக்கு தொரியும் விடுதலைப்புலிகளுடன் பேராடி வெல்லமுடியாது அதனால் அவர்களுக்கு மோல் பழிகளை சுமத்தி அவர்கள் மீது அவர்பெயரை ஏற்படுத்துகிறார்கள் இதை நாம் வெளியில் இருந்து பார்தால் அப்படித்தான் நினைப்போம் இரண்டாவது இராணுவத்தில் இருக்கும் ஒருவருக்கு பேராட்டத்தில் ஈடுபடுவதற்கு மணத்துணிவு வோண்டும் அந்த மணத்துணிவு இல்லாமல் பேராட முடியாது இதை நீங்கள் ஒத்துக் கொள்வீர்களா இன்று விடுதலைப் பேராட்டத்தை எடுத்து நோக்குவோமாயின் முன்னைய காலங்களில் விடுதலைப்புலிகள் இலங்கை இராணுவத்துடனே அல்லது இந்திய இராணுவத்துடனே பேராடும் போது நவீன ஆயுதங்களை வைத்து பேராடவில்லை கட்டுத்துவக்கு சக்கை(இது ஓரு வகை வெடிமருந்து) கைக்குண்டு சிறிய ரக தானியங்கி துப்பாக்கிகள் வைத்து பேராடினார் ஆனால் இராணுவங்கள் மிகப்பெரும் ஆயுத தளபாடங்களுடன் பேராடினார் அப்படி இருந்தும் அவர்களை எதிர்த்து பேராடினார்கள் என்றால் அது அவர்களின் மனத்துனிவு தான் முக்கிய காரணம் இந்தக்காரணங்களால் தான் இன்று வரை இந்த விடுதலைப்பேராட்டம் நிலைத்துநிற்கின்றது இல்லை என்றால் மாற்று இயங்கங்கள் போல் இல்லாமல் பேயிருக்கும் நினைத்துப் பாருங்கள் மக்களை வலுக்கட்டாயமகக இணைத்திருந்தால் இப்படி பேராடமுடியுமா மூன்றாவது இலங்கையில் இருந்து அகதிகளாக வெளியேறும் மக்கள் தாங்கள் செல்லும் நாட்டிடம் தாங்கள் அகதி என கூறுகிறார்கள் (இதில் ஒன்றை கவனிக்க வோண்டும் இதில் எத்தனை வீதம் உண்மையாக பாதிக்கப் பட்டவர்கள் என்று) அவர்கள் கோட்கும் கோள்விகளுக்கு இவர்கள் கூறும் பதில் நாங்கள் வன்னியில் இருந்தனாங்கள் என்ட பிள்ளையை இயக்கம் பிடிச்சுக் கொண்டு போய் 4 மாதம் கட்டாய பயிற்ச்சி குடுத்தவை பிறகு நாங்கள் கத்திக்குளரி மீட்டனாங்கள் இல்லாவிட்டால் எங்கடை பிள்ளையை இயக்கம் பிடித்து கொண்டு போனது பின்னர் அவ ஓடிவந்திட்டா இப்படி பல காரணங்களை கூறுவார்கள் ஏன் தாங்கள் செல்லும் நாட்டில் (அகதியாக தங்கியிருக்கும்) இருந்து திருப்பி அனுப்பக்கூடாது என்று இப்படி கூறுபவர்களிடம் நான் ஒன்று கோட்கிறேன் நான் ஒரு ஏ.கே ரக தானியங்கி துப்பாக்கியை தருகிறேன் அதை கழற்றி பிரித்து மீண்டும் பூட்டி குறிபார்த்து சுட்டுக் காட்டுமாறு அவர்கள் செய்தால் நீங்கள் கூறுவதை நான் ஆமோதிக்கிறேன் ஜக்கிய நாடுகள் சபையின் அறிக்கை ஒரு நாடு பேராட்டத்தை எதிர்கொள்ளும் போது நாட்டு மக்களும் அதில் இணைய வோண்டும் அமரிக்கவை எடுத்து பாருங்கள் அங்கு எல்லேருக்கம் க்டடாய இராணுவ பயிற்ச்சி உண்டு (அமரிக்க குடியுரிமை உள்ளவர்களுக்கு) - காவடி - 02-22-2006 ம்.. நர்மதா சொன்னது போல புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் அனைவருக்கும் இராணுவ பயிற்சி வழங்கப்படுகிறது. தற்பாதுகாப்பு பயிற்சி. குண்டுவீச்சின் போது எவ்வாறு உணிரைபாதுகாப்பது? இராணுவ முன்னேற்றங்களின் போது எவ்வாறு எதிர்கொள்வது முதலான பயிற்சிகளும் அடிப்படையான களப் பின்னிலையில் நின்று செயற்படுவதற்கான பயிற்சிகளும் அதாவது களத்தில் போராடுவோருக்கான பின்நிலை உதவிகள் பயிற்சிகள் அங்கே பொதுமக்களுக்கு வழங்கப்படுகின்றன. இன்று ஜனநாயகம் மிகச்சிறப்பாக நடந்து கொண்டிருக்கும் பல நாடகளில் கட்டாய இராணுவ பயிற்சியென்பது நடைமுறையில் இருக்கின்றது. மற்றது வலுக்கட்டாயமாக ஒருவரை போரில் கடைசிவரை ஈடுபடுத்த முடியாது. அது போரின் போக்கையே மாற்றிவிடும். இன்னொரு தகவல்.. இலங்கை இராணுவத்திடம் கைதாகி இருக்கும் ஒரு தமிழ் அப்பாவி மகன் தனக்கு புலிகள் மீது வெறுப்பு.. அவர்களின் நடவடிக்கைகள் பிடிப்பதில்லை என்று சொல்வதற்கு பின்னாலிருக்கும் அவன் தன் உயிர்மேல் கொண்டிருக்கும் விமர்சிக்க முடியா ஆசையின் விளைவே காரணம் என்பதனை புரிந்து கொள்ள முடிகிறது தானெ லக்கி லுக் - Luckyluke - 02-22-2006 நான் கேட்டிருந்த சில கேள்விகளை நிர்வாகம் வெட்டி இருக்கிறது.... இருந்தாலும் பரவாயில்லை... நிர்வாகத்தின் சங்கடம் எனக்கு நன்றாகவே புரிகிறது.... - நர்மதா - 02-22-2006 மிகுதிக் கோள்விகளை வையுங்கள் அதற்கான விளக்த்தையும் முடியுமால் இதிலே அல்லது தனிமடலிலே தெரிவிக்கின்றேன் இயலுமானவற்றை நான் கூறுவது சரியே பிழையே தெரியாது - காவடி - 02-22-2006 Quote:நான் கேட்டிருந்த சில கேள்விகளை நிர்வாகம் வெட்டி இருக்கிறது.... இருந்தாலும் பரவாயில்லை... நிர்வாகத்தின் சங்கடம் எனக்கு நன்றாகவே புரிகிறதுமீளவும் இந்த வசனங்களை படித்துப்பாருங்கள் லக்கி லுக் நான் அரச பயங்கர வாதத்தின் அட்டுழியம் பற்றிப் பேசினேன். அவர்கள் புலிகளின் பாசிசம் பற்றிப் பேசினார்கள் நான் அரச இராணுவத்தின் அடக்குமுறை பற்றிப் பேசினேன். அவர்கள் புலிகளின் பாசிசம் பற்றிப் பேசினார்கள். நான் அரசக் காடையர்களின் காடைத்தனம் பற்றிப் பேசினேன். அவர்கள் புலிகளின் பாசிசம் பற்றி பேசினார்கள். நான் புலிகளின் பாசிசம் பற்றிப் பேசினேன்.. அவர்கள் எனது வார்த்தைகளை கடன்வாங்கி கொண்டார்கள் -- இந்தியாவில் ஒரு காலத்தில் எமர்ஜென்சி நிலை பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது.. அதற்கு இந்தியாவின் பாதகாப்பு, இறையாண்மை என்பவற்றை தாண்டி வேறேதாவது காரணங்கள் இருந்தனவா? எமர்ஜென்சி நிலைபற்றி எனக்கு சரியான புரிதல்கள் இல்ல.. அது பற்றி சொல்ல முடியுமா, - காவடி - 02-22-2006 விமர்சனம் குறித்தான் விவாதம் நடந்து கொண்டிருக்க, அதற்கு பொருத்தமாய் இருக்கின்ற அருணன் எழுதியிருந்த ஒரு கட்டுரையின் சில பகுதிகளை இங்கே இடுகிறேன்.. --- விடுதலைப்புலிகள் அமைப்பு இன்று மாபெரும் அரசியல் இராணுவ அமைப்பாக மாறியிருக்கின்றமை பலநாடுகளுக்கும் கண்களைக்குத்தும் விடயம் என்பது யாவரும் அறிந்த உண்மை.மூன்று தசாப்த காலமாக தமிழ்மக்களின் உரிமைகளை வென்றெடுக்க அரசியல், இராணுவ ரீதியில் சிங்களப்பேரினவாத சக்திகளுடன் புலிகள் சளைக்காது போரிட்டுவருகின்றனர்.ஆரம்பத்தில் இவர்கள் குறித்த தப்பான முடிவுகளால் அந்த அமைப்பு மீது தடைகளை விதித்த நாடுகளே இன்று -பாலஸ்தீன விடுதலைப்போராட்டம்போல -புலிகள் அமைப்பையும் அங்கீகரிக்கும் நிலைக்கு வந்துவிட்டன.சர்வதேசச்சட்டம்பியான அமெரிக்காவே புலிகள் குறித்த தனது நிலைப்பாட்டில் அண்மைக்காலமாக சாதுவான நெகிழ்ச்சிப்போக்கை காண்பிப்பது மட்டுமல்லாமல் புலிகளின் தனிநாட்டுக்கோரிக்கையை என்றுமே எதிர்க்கவில்லை என்றும் கூறியுள்ளது. ஆனால் புலிகளின் வளர்ச்சி குறித்து எதுவும் புரிந்துகொள்ளாதவர்களாக சிலர் முட்டையில் மயிர் பிடுங்கிய கதையாக ஆங்காங்கே அரைவேக்காட்டுத்தனமாக அறிக்கைகள் விடுவதும் கருத்துக்களை பரப்புவதும் காலகாலமாக நடந்துவரும் சிறுபிள்ளைத்தங்கள்.இவற்றை நம்பி அந்தக்கதைகளின் அடிப்படையில் தமது ‘அரசியல் நிலைப்பாடுகளை’ கொண்டுள்ள சிலரும் உள்ளனர். இதில் ஆச்சரியப்படவேண்டிய விடயம் என்னவென்றால் விடுதலைப்புலிகளும் தமிழ்மக்களும் தமது போராட்டம்பற்றி சர்வதேச சமூகத்துக்கும் தென்னிலங்கை மக்களுக்கும்கூட எடுத்துக்கூறி அவர்கள் ஈழப்போராட்டத்தின் யதார்த்தத்தை உணர்ந்துகொண்டுவிட்டார்கள்.ஆனால் தமிழர்களில் ஒரு சிறுபகுதியினர் உலகம் தட்டையானது என்ற பிடிவாதத்துடன் பிரான்ஸிலிருக்கும் ஒரு தொகுதியினர்போல ஈழப்போராட்டத்தின் உண்மைநிலையை உணர மறுத்துநிற்பதுதான். ----- தொடர்ச்சியாக கதைத்துவிட்டு கொஞ்சம் மூச்சை விட்டவர்,“அது சரி தமிழ் தமிழினம் என்று சண்டை பிடிக்கிற பிரபாகரன் ஏன் தன்ர மகனுக்கு சார்ள்ஸ் அன்ரனி எண்டு ஆங்கிலப் பெயர் வச்சவர்.வெதுப்பகம் வெதுப்பி எண்டு தூயதமிழ் பெயர்களை வைக்க சொல்லிறவர் தன்ர மகனுக்க நல்ல தூயதமிழில ஒரு பெயரை வச்சிருக்கலாமே?” எண்டு அப்போதுதான் என்னிடம் பதில் எதிர்பார்த்து ஒரு கேள்வியைக்கேட்டார். ஒரு தேசிய இனத்தின் விடுதலைப்போராட்டம் வளர்ச்சி கண்டுள்ள அளவுக்கு அதை விமர்சிப்பவர்களின் விமர்சனங்கள் ஆரோக்கியமாக இல்லாவிடினும் இப்படியான கொஞ்சக்கேள்விகளுடன்தான் சிலர் தமிழ்த்தேசியத்துக்கு எதிரான பிரசாரத்தில் இறங்கியிருப்பதால் இந்தக்கேள்வியை கேட்டவருக்கு நான் ஆதாரத்துடன் அளித்த பதிலை இங்கு பதிகிறேன். ----- வரலாறைத்தெரிந்து கொள்ளாதவர்களும் உண்மையைப்புரிந்து கொள்ளாதவர்களும் பரப்பும் இத்தகைய வீண்வம்புகள் தமிழர்களாலேயே கூறப்படும்போது அது உண்மை என்ற தோற்றப்பாடு எழுகிறது.ஆகவே தமிழ் இனத்தின் வரலாற்றை அறிந்து புரிந்து நடுநிலையான கருத்தை வெளியிடவேண்டிய அவசியத்தை உணரவேண்டும். இங்கு புலிகளுக்கு ஆதரவளிக்கும்படி யாருக்கும் நான் விண்ணப்பம்போடவில்லை.ஒரு இனத்தின் விடுதலைப்போராட்டத்தை உண்மையின் பக்கம் நின்று நடுநிலையாளனாக விமர்சிக்கக்கோருகிறேன்.தமிழ்நாடு தினமலரில் வெளிவந்ததது போன்ற செக்ஸ் டாக்டர் பிரகாஷடன் புலிகளுக்கு தொடர்பு என்ற செய்திகளை வைத்து ஆராய்ந்து சந்தேகிக்காமலிருக்கவே இந்த வேண்டுகோள். - Aaruran - 02-23-2006 வடிவேலு Wrote:[quote=Luckyluke][size=12]இந்தியா ஈழம் அமைவதை விரும்பவில்லை என்று இதுவரை அறிவித்துள்ளதா? காவடி இதற்கு பதில் சொல்லுங்கள்.....<b>அப்படி போடு அருவளை விடிய விடிய ராமன் கதை விடிச்ச பிறகு சீதைக்கு ராமன் சித்தப்பாவா???? </b><!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> [b]எப்படியப்பா இப்படிய்யான ஆக்களுக்கு எல்லாம் பதில் சொல்லி கொண்டு இருக்கிறிங்கள் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Sujeenthan - 02-23-2006 'ரா'வுக்கு உள்நாட்டிலேயே ஏகப்பட்ட வேலைகள் இருக்கும்போது.... ஈழம் ஒரு முக்கியப் பிரச்சினையாக அந்த அமைப்புக்கு இருக்க முடியாது..... நீங்கள் எந்த உலகத்தில் இருக்கிறீர்கள். சிறிது காலத்துக்கு முன் புூசாரிகளாய் ஈழத்துக்கு போன றோவைப்பற்றியும் அவர்களுக்கு என்ன நடந்தது என்றும் தெரியாதோ? - paandiyan - 02-23-2006 Luckyluke Wrote:காவடி Wrote:நடந்த சம்பவங்களை வைத்து ஈழத்துடனான உறவை இந்தியா அணுகக் கூடாது. யுத்தம் புரிந்து, இன்றளவும் ஒருவித முறுகல் நிலையிலேயே இருக்கின்ற பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தைகளை செய்ய இந்தியாவால் முடியும் போது ஈழத்துடன் ஏன் முடியாது? அவ்வாறு முடியாமல் இருப்பதற்கான காரணங்கள் என்ன ? நாம் எழுதுவதால் வெறுப்பேற்படுகிறது எனச் சொன்ன லக்கி இப்ப என்ன எழுதியிருக்கிறீரகள். நீங்கள் என்ன சிறுபிள்ளைத்தனமாய் கதைத்தாலும் அது சரி, எங்களுக்கு வெறுப்பு வரக்கூடாது அப்படித்தானே. - Maruthankerny - 02-23-2006 - paandiyan - 02-23-2006 Luckyluke Wrote:Niththila Wrote:என்ன லக்கி நான்ஒண்டும் தெரியாம எழுதுறன் எண்டீங்க எனக்க இந்திய அணி பற்றி தெரியாட்டி அது அவமானமில்லை உங்கட நாடு பங்களாதேஸ்அமைய உதவிய போது அது அங்கீகரிக்கப்பட்ட நாடாகவா இருந்தது இப்படித்தான் உங்கட நாட்டு வரலாறே தெரியாம இருக்கிறீங்களே எந்த விடயத்தில் இலங்கை அரசு இந்திய அரசுடன் நட்புடன் நடக்கிறது எனச் சொல்ல முடியுமா? அந்த நட்புதான் சுனாமி வத்தபோது அமெரிக்க இராணுவத்தை இலங்கைக்குள் இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி கொண்டுவந்ததா? - Maruthankerny - 02-23-2006 திரு ராஜாதிராஜா..... இணைந்தது: 13 மார்கழி 2005 கருத்துக்கள்: 572 எழுதப்பட்டது: செவ்வாய் மாசி 21இ 2006 2:29 pஅ Pழளவ ளரடிதநஉவ: -------------------------------------------------------------------------------- திரு காவடி புலிகள் இந்திய தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளதாக உள்ள செய்திகள் பொய்யா இருந்தால் எங்களுக்கு எந்த விதமான் நெருடல்களும் இல்லை.இது சமீபத்தில் வந்த செய்தி hவவி:ஃஃறறற.சநனகைக.உழஅஃநெறளஃ2005ஃனநஉஃ15டிihயச.hவஅ _________________ இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம். இணைந்தே இன்னும் பல சாதனை புரிவோ பல நண்பர்கள் இந்தியா மீது ஏறிப்பாய்வதற்கும்... துற்றுவதற்கும் இதுவே காரணம்... நீங்கள் மேல்கோள் காட்டடிய செய்தியில் ஒரு துளி ஆதாரமேனும் இருக்கிறதா? இது மட்டுமல்ல ...... அல்கெய்தா அமைப்புடன் புலிகளை இணைக்க இந்திய உளவு படையான றோ இலங்கை அரசுடன் கூடி அரும்பாடு படுகிறது. எம்முடைய கேள்வி எல்லாம் ஏன் என்பதே????? அமெரிக்க நாடு சிங்களவன் போல முட்டாள் இல்லை அதனால் இவர்களின் பரப்புரைக்கு செவிசாய்பதில்லை. அமெரிக்காவிற்கு இந்தியாவை சிங்கள அரசை பார்க்க புலிகளை பற்றி அதிகம் தெரியும்.அப்துல் கலாம் பாவம் இந்திய இளைஞர்களை தட்டியெழுப்பி 2020ல் எனினும் இந்தியாவை மீட்க கனவு காண்கிறார். இந்தியாவின் உளவு துறையோ இப்போதுதான் தவழபழகிறது.... புலிகள் எத்தனை முறை முகத்தில் கரி புூசிவிட்டாலும் இவர்கள் திருந்திய பாடில்லை. இதிலும் விட நேரடியாகவே புலிகளுடன் போர் செய்யலாம். இந்த கூத்தை உற்று பார்க்கும் பிற நாட்டு உளவாளிகள் எவ்வளவு ஏளனமாக நினைப்பார்கள், - pepsi - 02-23-2006 பாகிஸ்தான் இந்தியா யுத்தம் நடந்தபோது பாகிஸ்தான் யுத்த விமானங்கள் இலங்கை வந்து எரிபொருள் நிரப்பிபோக அனுமதித்தது இலங்கை அரசு. அது தான் இலங்கை அரசின் நட்ப்பா? எங்களிடம் அப்போது விமானப்படை இருந்திருந்தா பாகிஸ்தான் விமானத்தை குருவி சுடுறமாதிரி சுட்டுவிழுத்தியிருப்பம் அல்லவா. இப்ப எங்களிடம் விமானப்படை இருக்கிறது விமானம் சுட்டுவீழ்த்தும் கருவி இருக்கிறது இனி பாகிஸ்த்தான் விமானம் எங்கள் எல்லைக்குள் வந்தா நாங்கள் சுட்டுவீழ்த்துவோம். இது இந்தியாவுக்காக இல்லை நாங்கள் துன்பப்படும்போது எல்லாம் எங்களுக்காக கண்ணீர் விட்ட தமிழ்நாட்டு தமிழனுக்காக. |