Yarl Forum
தமிழீழக்காதல் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கதைகள்/நாடகங்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=53)
+--- Thread: தமிழீழக்காதல் (/showthread.php?tid=2157)

Pages: 1 2 3 4 5 6 7


- Saanakyan - 12-15-2005

þýЦÃñ¼¡ ÌÆó¨¾ ¦Àò¾ Á¡¾¢Ã¢ þÕ째! ÀòÐÁ¡¾õ ÍÁó¾ ÅÄ¢ ¦¾Ã¢ÂÅ¢ø¨Ä§Â! Å¢Á÷ºÉí¸¨Ç ¯ûÅ¡íÌÅÐ §ÅÚ, Å¢Á÷ºÉí¸Ù측¸ ¸¨¾ ÀñÏÅÐ §ÅÚ!


- தூயவன் - 12-15-2005

Saanakyan Wrote:þýЦÃñ¼¡ ÌÆó¨¾ ¦Àò¾ Á¡¾¢Ã¢ þÕ째! ÀòÐÁ¡¾õ ÍÁó¾ ÅÄ¢ ¦¾Ã¢ÂÅ¢ø¨Ä§Â! Å¢Á÷ºÉí¸¨Ç ¯ûÅ¡íÌÅÐ §ÅÚ, Å¢Á÷ºÉí¸Ù측¸ ¸¨¾ ÀñÏÅÐ §ÅÚ!

ஆமாம். இதில் சனையிட், ராஜிவ், இழிச்ச வாய்த்தனம் பற்றி ஒன்றுமே இல்லையே. நாம் எப்படி விமர்சனம் எழுதுவதாம்? :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- AJeevan - 12-15-2005

<b>திருத்தம் :
மேலே
</b>சுவிஸ் ஐரோப்பாவுக்குள்தான் இருக்கிறது.
ஐரோப்பிய யுனியனுக்குள் இணையவில்லை என்பதாக கருத்தில் கொள்ளவும். அதற்குள் இணைய முயற்சிக்கிறது.
சில பிரச்சனை காரணமாக தாமதமாகியுள்ளது.

யாழ் கள நண்பர்கள் கதையை ஒட்டிய விமர்சனங்களை வையுங்கள். தவிர தேவையற்ற வார்த்தை பிரயோகங்கள் இருந்தால் பொறுப்பாளர்கள் அவற்றை தயவு செய்து தூக்கவும்.
உதாரணமாக இங்கே தேவையற்ற ராஜீவ் பிரச்சனை போன்றவற்றை...............

நாம் நேர்மைக்காக போராடுபவர்களாக இருக்க வேண்டும்.
அப்படியில்லாமல் இது போன்ற அநாகரீக செயல்கள் தொடருமானால் இங்கே கருத்துக்காக மோதுவதில் பிரயோசனமில்லை. அது யாராக எழுதினாலும் சரி.

<b>தேவையற்ற வார்த்தை பிரயோகங்கள் இருந்தால் பொறுப்பாளர்கள் அவற்றை தயவு செய்து தூக்கவும்.</b>

நன்றி


- kurukaalapoovan - 12-15-2005

அஜீவன் ஒரு சந்தேகம்...

சுவிஸ் இற்கு சென்கன் அங்கத்துவ நாட்டு நிரந்தர வதிவிட அனுமதி இருந்தால் போதும். குடிவரவு அதிகாரிகள் உங்களின் நோக்கம் போன்றவற்றை அறிந்து உள்ளே விடுவதா இல்லையா மற்றும் எவ்வளவு காலம் என்பனவற்றை நீங்கள் எல்லையை கடக்கும் போது தீர்மானிக்கிறார்கள். இது 2003 இல் இருந்து நடைமுறையில் இருக்கு.

ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்தும் செங்கன் அங்கத்துவத்தில் இல்லாதவர்கள் பிரித்தானியா ஜயர்லாந்து. நோர்வே ஜரோப்பிய ஒன்றியத்தில் இல்லை ஆனால் செங்கன் அங்கத்துவத்தில் இருக்கிறது.

சுவிஸ் ஜரோப்பிய ஒன்றியத்திற்கு இணைய விரும்புகிறது விசேட சலுகைகளோடு. அதாவது உள்ளுர் தொழிலாளர்களை பாதுகாக்கவிரும்புகிறார்கள் ஆனால் தடையின்றி ஏனைய அங்கத்துவ நாடுகளுக்கு ஏற்றுமதி சந்தையை எதிர்பார்க்கிறார்கள்.


- AJeevan - 12-15-2005

kurukaalapoovan Wrote:அஜீவன் ஒரு சந்தேகம்...

சுவிஸ் இற்கு <b>சென்கன் அங்கத்துவ நாட்டு நிரந்தர வதிவிட அனுமதி இருந்தால் போதும். குடிவரவு அதிகாரிகள் உங்களின் நோக்கம் போன்றவற்றை அறிந்து உள்ளே விடுவதா இல்லையா மற்றும் எவ்வளவு காலம் என்பனவற்றை நீங்கள் எல்லையை கடக்கும் போது தீர்மானிக்கிறார்கள்.</b> இது 2003 இல் இருந்து நடைமுறையில் இருக்கு.

ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்தும் செங்கன் அங்கத்துவத்தில் இல்லாதவர்கள் பிரித்தானியா ஜயர்லாந்து. நோர்வே ஜரோப்பிய ஒன்றியத்தில் இல்லை ஆனால் செங்கன் அங்கத்துவத்தில் இருக்கிறது.
சுவிஸ் ஜரோப்பிய ஒன்றியத்திற்கு இணைய விரும்புகிறது விசேட சலுகைகளோடு. அதாவது உள்ளுர் தொழிலாளர்களை பாதுகாக்கவிரும்புகிறார்கள் ஆனால் தடையின்றி ஏனைய அங்கத்துவ நாடுகளுக்கு ஏற்றுமதி சந்தையை எதிர்பார்க்கிறார்கள்.

<b><span style='font-size:25pt;line-height:100%'>இங்கே நீங்கள் சொல்வது வேறு.
நான் சொல்வது வேறு.</span>

Quote:[b]கதை:</b>
அதாவது என் அப்பா தன் இந்தியஉரிமையை விட்டுத்தர மறுத்துவிட்டாலும் அம்மா இன்னும் பிரான்ஸ் தந்திருந்த பிரஜா உரிமையின்படி பிரஞ்ச் பிரஜையாக இருந்தார்.

அதனால் தஸ்தாவேஜ்கள் எல்லாம் சீக்கிரமே நகர ப்ரான்ஸ் நாட்டிற்கான விசாவும் விரைவாகவே கிடைத்தது.

<span style='font-size:22pt;line-height:100%'>செங்கன் வீசாவில் கீழ்வரும் நாடுகளுக்கு போகலாம்.
<i>(அவை ஆங்கிலத்தில் கீழ் உள்ளன.)</i>
<b>மேலதிக விபரங்கள்:</b>

Quote:<b>What countries are Schengen states? </b>
Germany, Austria, Belgium, Denmark, Finland, France, Greece, Iceland, Italy, Luxembourg, the Netherlands, Norway, Portugal, Spain and Sweden have acceded to the Schengen Agreement and are thus Schengen states.
These are the \"old\" EU member states (with the exception of Britain and Ireland) plus Iceland and Norway. The countries that joined the European Union on 1 May 2004 did not immediately accede to the Schengen Agreement.

Holders of valid Schengen visas (text on the visa reads \"valid for Schengen states\" in the respective language of the issuing country) or a residence permit of a member state can stay in the entire Schengen area for up to three months per half year (usually without having to go through passport control at internal borders).

<b>மேலதிக தகவல்கள்:-</b>

http://www.auswaertiges-amt.de/www/en/aamt...ce/faq/kat0/F15

<b>application form:-</b>
http://www.luxembourg.co.uk/docs/Schengen_...cation_Form.doc

<b>கதாநாயகன் பிரான்ஸ் வீசாவில் வந்திருக்கிறார்.
அவர் பிரான்ஸ் குடியுரிமையுள்ளவரல்ல.
தாய்க்கு இருக்கும் சலுகை இவர் 18 வயதுக்கு உட்பட்டவராக இருந்தால் உண்டு.
மற்றப்படி அவர் இந்தியப் பிரஜைதான்.
இவர் பிரான்ஸ் வீசாவில் வந்ததாகக் குறிப்பிட்டுள்ளாரே தவிர
வேலை வாய்ப்போ அல்லது வதிவிட உரிமையோ பெற்று வந்தவரல்ல.</b>

இங்கு வந்து வீசா எடுக்கலாமே என குறுக்குக் கேள்வி கேட்காதீர்கள்.

<b>அது நடை முறை சாத்தியமேயில்லை.</b>
அவர் இந்தியாவில்தான் வீசா பெற வேண்டும்.
இலங்கையராக இருந்தால் இலங்கையில்தான் வீசா பெற வேண்டும்.
இது சட்டம்.
<b>இவர் செங்கன் வீசாவில் லண்டன் சுவிஸ் எல்லாம் போய் வந்தாகக் குறிப்பிடுகிறார்</b> :?: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> </span>


[size=15]
இவர் கதை போலவே
விஜய் மற்றும் ரம்பா நடித்து
சுவிஸில் படமாக்கப்பட்ட ஒரு திரைப்படம்.
படத்தின் பெயர் நினைவுக்கு வரவில்லை.

ரம்பா சொல்வார்:-
இங்கிலீஸ் தமிழ் ஜெர்மன் மற்றும் <b>சுவிஸ் </b> பேசுவேன் என்று............

சுவிஸ் என்று ஒரு மொழி இங்கு இல்லை.
சுவிஸில்
<b>ஜெர்மன் - பிரென்ஞ் - இத்தாலி - ரொமானிஸ் மொழிகள் இருக்கின்றன.</b>
மற்றப்படி ஆங்கிலம் கற்று பேசுகிறார்கள்.
அனைவருமல்ல..............

கதையின் யதார்த்தம் சம்பந்தமாக தர்க்கங்களை முன் வையுங்கள்.
அது பிரயோஜனமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

நன்றி.


- AJeevan - 12-15-2005

Vasampu Wrote:நன்றி <b>அஜிவன்</b> மோகன்தாஸின் கதையை இணைத்தமைக்கு. என்னால் செப்புப் பட்டயம் வாசிக்க முடியவில்லை. அதன் எழுத்துரு எங்கு பெறுவது?

இதை தரவிறக்கம் செய்யுங்கள்:-
http://www.tavultesoft.com/keyman/


- kurukaalapoovan - 12-15-2005

AJeevan Wrote:<span style='font-size:25pt;line-height:100%'>தமிழீழக்காதல்(1) - நீங்கள் கேட்டவை </span>
நான் முன்பே சிஸ்டம் சைட் புரோக்கிராமில் வேலை செய்துகொண்டிருந்ததால் அத்துனை தூரம் <b>பணிசார்ந்த</b> பிரச்சனைகள் இல்லை. பள்ளிப்படிப்பில் ப்ரெஞ்சை ஒரு பாடமாக படித்திருந்ததாலும் நான் ப்ரான்ஸில் வாழ்வதற்கான பிரச்சனை எதையும் சந்திக்கவில்லை. இங்கே வந்தது <b>செங்கன் விசா</b> என்பதால் ஆறுமாதம் கழித்து வந்த விடுமுறையில் ஐரோப்பிய யூனியனில் இருந்த அத்தனை நாடுகளுக்கும் சுற்றுலா சென்றுவந்திருந்தேன்.
அஜீவன்,
வேலை செய்யும் அனுமதி இருந்தால் அது செங்கன் நாடுகளிற்கு சென்றுவர அனுமதி தருகிறது. அதே அனுமதியோடு சுவிஸ் இக்கும் போகலாம்.

அவர் இந்தியாவில் ஆவணங்களை காட்டிப் பெற்றுக் கொண்டது entry clearence ஆ இல்லை visa வா?

பிறப்பினால் வரும் பிரஜா உரிமையையும் தகுந்த ஆவணங்களை சமர்ப்பித்து உறுதிப்படுத்தினால் தானே உள்ளே வரவிடுவார்கள். அவர் அதைத்தான் visa எடுத்ததாக கூறிப்பிட்டாரோ?


- Vasampu - 12-15-2005

நன்றி <b>அஜிவன் </b>எழுத்துரு பற்றிய தங்கள் தரவிற்கு. இது விடயமாக <b>வானம்பாடியும் </b>எனக்கு உடனடியாக உதவியிருந்தார். இத்தருணத்தில் அவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.


- AJeevan - 12-15-2005

kurukaalapoovan Wrote:[quote=AJeevan] <span style='font-size:25pt;line-height:100%'>தமிழீழக்காதல்(1) - நீங்கள் கேட்டவை </span>
நான் முன்பே சிஸ்டம் சைட் புரோக்கிராமில் வேலை செய்துகொண்டிருந்ததால் அத்துனை தூரம் <b>பணிசார்ந்த</b> பிரச்சனைகள் இல்லை. பள்ளிப்படிப்பில் ப்ரெஞ்சை ஒரு பாடமாக படித்திருந்ததாலும் நான் ப்ரான்ஸில் வாழ்வதற்கான பிரச்சனை எதையும் சந்திக்கவில்லை. இங்கே வந்தது <b>செங்கன் விசா</b> என்பதால் ஆறுமாதம் கழித்து வந்த விடுமுறையில் ஐரோப்பிய யூனியனில் இருந்த அத்தனை நாடுகளுக்கும் சுற்றுலா சென்றுவந்திருந்தேன்.
அஜீவன்,
வேலை செய்யும் அனுமதி இருந்தால் அது செங்கன் நாடுகளிற்கு சென்றுவர அனுமதி தருகிறது. அதே அனுமதியோடு சுவிஸ் இக்கும் போகலாம்.

அவர் இந்தியாவில் ஆவணங்களை காட்டிப் பெற்றுக் கொண்டது entry clearence ஆ இல்லை visa வா?

பிறப்பினால் வரும் பிரஜா உரிமையையும் தகுந்த ஆவணங்களை சமர்ப்பித்து உறுதிப்படுத்தினால் தானே உள்ளே வரவிடுவார்கள். அவர் அதைத்தான் visa எடுத்ததாக கூறிப்பிட்டாரோ?

ஒன்றும் தெரியாத பச்சைக் குழந்தையாக கதாசிரியர் இல்லை.
அவர் திறமைசாலியும்
நல்ல கற்பனா வளமும் கொண்டவர்.

இங்கே
அவர் எழுதிய கதையை பற்றியதே எனது கருத்து.

ஆரம்ப கதையில் அவருக்காக வாதாடினேன்.
அங்கே நியாயம் இருந்தது.

புதிய கதை முழுவதும் செருகல்களும் நெருடல்களும் இருக்கின்றன.
அவை இலங்கை தமிழ் மக்களை பெருமைப்பட வைக்கலாம் என்று நீங்கள் நினைக்கலாம்.
இல்லை
இது முதல் கதையில் உள்ள
அவரது தவறான கருத்துகளுக்கு வலுச் சேர்த்துவிடும்.

இது நிச்சயம்.

உலகெங்கும் பரந்து வாழும் தமிழர் இதயங்களில்
இலங்கைத் தமிழரை தவறாக எடை போட வைக்கும்.

இதை கற்பனைக் கதை என்றால் பரவாயில்லை.

உண்மைச் சம்பவத்தை கொண்ட கதை என்பதாலே
நான் வாதாடுகிறேன்.

Quote:நாங்கள் நல்ல நண்பர்களாயிருந்தோம், இருக்கிறோம். இன்னமும் நான் கல்யாணம் பண்ணிக்கொள்ள வற்புறுத்தப்படும் ஒரு நாளில் அவள் பெயரை நிச்சயமாய்ப் பரிந்துரைப்பேன். இப்பொழுது படிப்பு முடிந்து அவள் இலங்கையில் இருக்கிறாள், இப்பொழுதும் தொலைபேசுவதுண்டு.

<b>இப்படி முதல் அத்தியாயத்தில் சொன்னவர்
அடுத்த அத்தியாயத்தில்</b>[quote]

.....................லூர்து மியூசியம், நெப்போலியனின் அரண்மனை முதற்கொண்டு பலவற்றை அன்று பார்த்துவிட்டு நான் தோரபெல் வந்தேன். அதைப்பார்த்துவிட்டு அதன் பிரமாண்டத்தில் வாயை மூடயியலாமல் இருந்தபொழுதுதான் அவளைப்பார்த்தேன் ஆனால் முதலில் தோற்றமயக்கம் என்றுதான் நினைத்தேன். ஆனால் அவளாய் வந்து அறிமுகப்படுத்திக் கொள்ளத்தான் கொஞ்சம் சுதாரித்துக்கொண்டேன்.

"ஏய் மோகன் நீங்கள் எப்பிடி இங்க?" என் கண்களை என்னால் நம்பவேமுடியவில்லை.

தொலைபேசித் தொடர்புகள் இருந்தது என்று சொன்னவர்.
திடீரென பிரான்சில் ஏற்படும் எதிர்பாராத சந்திப்பு? :?: Idea :?: Confusedhock:

இவர்களுக்குள் தொடர்புகள் அற்றுப் போய் இருந்ததாகவும்
திடீரென அவளை பிரான்ஸில் கண்ட போது அவரது கண்களையே அவரால் நம்ப முடியவில்லை என வந்திருந்தால்...............
ஆகா..........சுப்பர்ண்ணு சொல்லலாம்.

இங்கயும் தொதப்பீட்டீங்க.

Quote:பின்னே <b>அச்சு அசலாய் அமேரிக்க அக்சென்டில் சொரூபன் பேச </b>என் புருவங்கள் விரிவடைவதை தவிர்க்கவே முடியவில்லை...........

"அண்ணே நான் ஒண்டு கேட்டால் கோவிக்க மாட்டீங்கள்தானே" சந்திரா அந்த கடை நடத்தும் அன்பரின் வீட்டிற்குள் சென்றதும் சொரூபன் <b>உயர்தர ஆங்கிலத்தில் கேட்க,</b> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
"நிச்சயமாய் சொரூபா" தமிழில் தான் பதிலளித்தேன்.

பிரான்ஸில் அமேரிக்க அக்சென்டில் இங்கிலீசா?
பிரான்சஸுக்கு வந்தவங்க பிரென்ஞ்தான் கற்றுக் கொள்வாங்க.

பிரென்ஞ்காரர்கள் இலகுவில் வேற்று மொழிகளில் பேச மாட்டார்கள்.(தெரிந்தால் கூட)
அங்கு வருவோர் பிரென்ஞ்தான் கற்றிருக்க வேணும்.

சொருபன் மற்றும் சந்திரா அகதியாக வந்திருந்தால் கூட
அனுமதிக்காக காலமெடுக்கும்.
இக் காலங்கள்..........மொழி...........வேலை..........
இப்படி தொடர்ந்து செல்லும். :?: :?: :?: :?:

விடயம் தெரிந்தவர்களுக்கு விசர்தனமான(பைத்தியகாரத்தனமான) சமாளிப்பு (கதை)
விடயம் தெரியாதவர்களுக்கு ............. Idea :?:

<b>சுப்பர் சொதப்பல்.</b>


- Mathan - 12-15-2005

Vasampu Wrote:நன்றி <b>அஜிவன்</b> மோகன்தாஸின் கதையை இணைத்தமைக்கு. என்னால் செப்புப் பட்டயம் வாசிக்க முடியவில்லை. அதன் எழுத்துரு எங்கு பெறுவது?

அஜீவன் அண்ணா மற்றும் வானம்பாடி உதவியதில் தற்போது மோகன் தாஸின் செப்புப் பட்டயத்தை படிக்க முடிவதாக எழுதி இருந்தீர்கள். இருந்தாலும் இது போன்ற சில வலைப்பூக்களை படிக்க முடியவில்லை என்று சொன்னவர்களாக பதிலை இங்கே எழுதி விடுகின்றேன்.

உங்களுடைய Internet Explorer விண்டோவின் மேலே இடது பக்கத்தில் <b>File Edit View Favorites Tools Help</b> என்று இருக்குமல்லவா ... அதில் <b>View</b> என்பதை தெரிவு செய்து பின்பு அதில் <b>Encoding</b> என்பதில் <b>Unicode ( UTF-8 )</b> என்பதை தெரிவு செய்யுங்கள்.

<b>View -> Encoding -> Unicode ( UTF-8 )</b>

<img src='http://img413.imageshack.us/img413/5788/helpyarl5ww.jpg' border='0' alt='user posted image'>

ஆங்கிலம் தவிர்ந்த வேற்று மொழியில் Internet Explorer உபயோகிப்பவர்களுக்காக படத்தையும் இணைத்துள்ளேன்.


- Mathan - 12-15-2005

மோகன் தாஸின் தமிழீழ காதல் கதையின் இரண்டாம் பாகத்தை படித்தேன். கதை முதல் பாகத்தை போல் மனதில் ஒட்டவில்லை. கதை பல இடங்களில் யதார்தம் இன்றி செயற்கை தன்மையாகவும் அவசர கோலத்தில் முதல் கதை மீதான விமர்சங்களை சமாளிப்பதற்காக எழுதப்பட்டது போல் மனதில் பட்டது.

மோகன் தாஸ்,

படைப்புகள் மீதான விமர்சனங்கள் மூலம் படைப்பில் ஏதும் தவறுகள் இருந்தால் அதனை தெரிந்து கொண்டு அடுத்த படைப்பில் திருத்தி கொள்ள முயலலாம். ஆனால் விமர்சங்களை சமாளிப்பதற்காக எழுதுவது உங்கள் படைப்புக்களை தான் பாதிக்கும் என்பது எனது கருத்து. இயல்பை இழந்துவிடாமல் தொடர்ந்து படைப்புக்களை தாருங்கள்.


- kurukaalapoovan - 12-15-2005

அஜீவன், மட்டம் தட்டாமல் யதார்த்தமாக நல்ல கற்பனை வளத்தோடு எழுதியுள்ளார். உங்களுக்கு ஈழத்தமிழர் நல்லா இருக்கிறதை கதையில வாசிக்கக்கூட பிடிக்கவில்லை "சுத்த சொதப்பல்" "தமிழ் சினிமா மாதிரி இருக்கு" என்று கேவலப்படுத்துறீங்கள். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

புதுக்கதையில் அடுக்கடுக்கா பிழை பிடிக்கிறியளே அஜீவன், மேகன்தாஸ் தனது மேற்பார்வையாளர் சென்னதையும் கேக்காது யாழில் விமர்சனத்துக்கு விளக்கம் கேக்கவந்தது தவறு என் கூறியது நினைவிருக்கா? புதுக்கதையின் தலையங்கத்திற்கும் பழையதுக்கும் இருக்கும் வித்தியாசத்தை கவனிக்கவில்லை? ("நீங்கள் கேட்டவை")

லண்டன் டிகிரி (பிரித்தானியாவில எங்கை படிச்சாலும்), லண்டன் பாச்போரட், லண்டன் விசா, எண்டு எழுதினால் விளங்கிறவைக்கு ஏற்ற மாதிரி எழுதியிருக்கு.

அவைக்கு
தங்களை ஏதோ ஒருவகையில் சம்பந்தப்படுத்திப்பார்க்கக்கூடிய மாதிரி கதாபாத்திரங்களை, குறைபாடுகளை மறைத்து உயர்த்தி எழுதவேணும் அது தான் யதார்த்தமாக இருக்கும். அப்படி ஏதாவது குறைபாடுகள் இருந்ததாக ஆரம்பித்தாலும் அதையெல்லாம் விட்டெறிந்து தமிழ்ச்சினமா மாதிரி வெட்டி விழுத்தி முன்னேறிவிட்டதாக கதையை முடிக்கவேணும். ஆரோக்கியமாக இருக்கும் அவர்கள் பார்வையில்.

இல்லாவிடில் தங்களோடு எந்தவகையிலும் சம்பந்தப்படுத்தி பார்க்கமுடியாத கதாபாத்திரங்களை குறைபாடுகளோடு சித்தரித்தால் அதை பெருந்தன்மையாக அனுதாபம் செல்லி விமர்சிப்பினம்.

இதுக்குள்ளை சுவிசுக்கு விசா எடுக்காமல் வரமுடியாது எண்டு நீங்கள்... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- AJeevan - 12-15-2005

Quote:மோகன்தாஸ் said...
அஜீவன் உங்கள் செங்கன் பற்றிய செய்தியை நீங்கள் இங்கேயும் வைத்திருக்கலாம். ,
உங்கள் விமரிசனத்திற்கு நன்றி.
http://imohandoss.blogspot.com/2005/12/1.html


- Vasampu - 12-15-2005

நன்றி மதன் நீங்கள் இணைத்த அதே வழிமுறையைத்தான் வானம்பாடியும் எனக்கு அனுப்பியிருந்தார். இப்போது நீங்களும் இணைத்திருப்பது என்போன்ற மற்றவர்களுக்கும் உதவும்.


- mohandoss - 12-16-2005

அஜீவன் இது உங்களுக்கு,

// யாரு உங்க அட்வைசர்? //

புரியலைங்க, என்னுடைய மென்டர் பத்தி கேக்குறீங்கன்னா தனிமடலிடுங்க பதில் சொல்றேன்.

mohandoss.i @ gmail.com

செங்கன் கதையை சொல்லிடுறேன் முதலில். அதுவந்து என் மாமாவின் உதவியுடன் ப்ரான்சில் வேலைவாய்ப்புக்காக நான் விசா அப்ளை செய்ய, என் தாய்க்கு சிட்டிஷன்ஷிப் இருப்பதால் பிரச்சனையாகாமல் கிடைத்தை சொல்லியிருந்தேன்/சொல்ல நினைத்திருந்தேன்.

மற்றபடிக்கு பாண்டிச்சேரியில் பிறந்தவர்களுக்கு, இந்தியாவின் லஞ்ச/லாவண்யங்களின் உதவியுடன் பிரான்ஸ் சிட்டிஷன்சிப் பெறுவது அத்தனை பிரச்சனையான ஒன்று அல்ல, அதற்கு வயது ஒரு பிரச்சனையும் அல்ல. இதை நான் நேரில் பார்த்திருக்கிறேன். :-)))))

அப்புறம் இங்கிலாந்து ஸ்விஸ். இங்கிலாந்தைப்பற்றி குறிப்பிட்டதற்கு சம்மந்தமான வாழ்வியல் நிகழ்ச்சி நடந்திருந்தது. என்னுடைய நண்பர் ஒருவர் இதே போன்ற விசாவில் போயிருந்து வேலை சம்மந்தமாக இங்கிலாந்து போயிருந்தார். எனக்கு மற்ற விஷயங்களை பற்றி தெரியாது அஜீவன் நாங்கள் ஐடி மக்கள் ஊர்சுற்ற போவதாக இருந்தால் கூட வேலைசம்மந்தமாக போவதாகத்தான் ரெக்கார்ட் சொல்லும். அதுவும் ஐடி மக்களுக்கு இங்கிலாந்து போவதோ இல்லை சுவிஸ் போவதோ விசாவின் படி பிரச்சனை வராது என்பதே நான் சொல்லவந்ததே.

//அது நடை முறை சாத்தியமேயில்லை.
அவர் இந்தியாவில்தான் வீசா பெற வேண்டும். //

எங்களுக்கு இப்படி வராதுன்னு நினைக்கிறேன் அஜீவன். நான் நேரில் சென்றேனான்னு கேட்கக்கூடாது எல்லாமே எங்கோ ஒரிடத்தில் நடந்ததுதான். காதில் கேட்டவை தான் பயன்படுத்தியிருக்கிறேன்.

//இங்கிலீஸ் தமிழ் ஜெர்மன் மற்றும் சுவிஸ் பேசுவேன் என்று............ //

நான் அந்த அளவிற்கு இறங்கவில்லையே. :-))))))))))))))))))

//தொலைபேசித் தொடர்புகள் இருந்தது என்று சொன்னவர்.
திடீரென பிரான்சில் ஏற்படும் எதிர்பாராத சந்திப்பு?//

அண்ணாத்தை இதை,

//அதற்கு பின் சில மாதங்கள் அவளுடன் தொலைபேசித்தொடர்பு இருந்து வந்தது. அதற்குப்பின்னர் என் வேலை காரணமாக புனேவிற்கு மாறியதிலிருந்து தொடர்பில்லாமல் போய்விட்டது.//

நீங்கள் கவனிக்கலையா இல்லை வேண்டாமென்று விட்டுவிட்டீர்களா????

//பிரான்ஸில் அமேரிக்க அக்சென்டில் இங்கிலீசா?
பிரான்சஸுக்கு வந்தவங்க பிரென்ஞ்தான் கற்றுக் கொள்வாங்க.

பிரென்ஞ்காரர்கள் இலகுவில் வேற்று மொழிகளில் பேச மாட்டார்கள்.(தெரிந்தால் கூட) அங்கு வருவோர் பிரென்ஞ்தான் கற்றிருக்க வேணும். //

அண்ணா நான் சொல்லவந்தது என்னைப்பொறுத்தவரை சொரூபனின் ஆங்கிலக்குறைபாடு என்பது ஒருவருடத்தில் நிவர்த்தி செய்துவிடக்கூடிய மிகச்சுலபமான ஒன்றுதான் என்பதையே. அதையும் விடுத்து எங்கள் வழக்கில் (ஐடி) ஒன்று உண்டு அது லாங்குவேஜ் நியூட்டர்ல் ஆக்குவது என்று அதன் உண்மை என்னவென்றால் எங்கள் அக்சென்டில் இருக்கும் இந்திய வாடையை இல்லை தமிழ் வாடையை நீக்குவது ஆனால் உண்மையில் என்ன நடக்கும் தெரியுமா அமேரிக்க அக்சென்ட் கற்று கொடுக்கப்படும்.

அதைத்தான் சொல்லியிருந்தேன் இது உங்கள் தவறு கிடையாது என்னுடையதுதான், சிறுகதை எழுதுவது சாதாரணமாய் படிப்பவர்களுக்கும் புரியவேண்டும் என்பது அதன் விதிகளில் ஒன்று. ஆனால் இந்தக்கதை அந்த விதிகளின் கீழ் வராது. :-)))))))

உங்களின் பிரஞ்ச் பற்றியதற்கும் சொல்லியிருந்தேன் சொரூபன் ஆங்கிலம் தவிர ப்ரெஞ்சையும் நன்றாக பேசுவதை; கவனித்துப்பாருங்கள். எங்கள் சைடில் (ஐடி) மொழி பற்றிய பிரதாபங்கள் உதவாது என்ன ஆனாலும் நாங்கள் எழுதும் சாப்ட்வேரை அதிகம் உபயோகிப்பது ஆங்கில அறிவுள்ள மக்களே. அதனால் ஆங்கிலத்தின் தெரிவு தேவையானதே.

//சொருபன் மற்றும் சந்திரா அகதியாக வந்திருந்தால் கூட
அனுமதிக்காக காலமெடுக்கும்.
இக் காலங்கள்..........மொழி...........வேலை..........
//

இவையெதுவும் ஐடி மக்களுக்கு சம்மந்தப்படாதது. எங்களின் தேவை பிரான்சில் நிச்சயப்படுத்தப்பட்டால் விசா (வேலைக்கான) நிச்சயமாகக்கிடைக்கும்.

நான் இரண்டாம் கதையை எந்த நோக்கத்தில் எழுதினேனோ அது நிச்சயமாய் வெற்றியடைந்திருக்கிறது. இதன் கடைசி இரண்டு பக்கங்களை பாருங்கள் புரியும். :-))))))))))))))))))

இது உங்களின்(total) விமரிசனத்திற்கான பதிலாய் மட்டும் சோகமாய் முடிக்கவில்லை, என்னுடைய அத்துனை கதைகளிலுமே ஒரு சோகமுடிவை(ரியலிஸ்டிக்கான) நான் வைக்க பயந்ததில்லை.

இது விமரிசங்களுக்கான கதையாய் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நான் நிச்சயமாய் இன்னொறு பாகம் எழுதியிருப்பேன். வரவேற்புத்தான் எழுதவைப்பது அதன் படி என் தமிழீழக்காதலுக்கு கிடைத்த வரவேற்புக்கு நிச்சயமாய் எழுதப்பட்டிருக்கும். இத்தனை விரைவாகவாய்னு கேட்டால் இருக்காது ஆனால் இந்தப்பாகம் நான் என்ன நினைத்தேனோ அந்த வகையிலேயே விமரிசங்களை பெற்றிருக்கிறது. உண்மையிலேயே, சினேகிதி, அஜீவன், பிருந்தன், வசந்தன் படிக்கேண்டா அப்படின்னு ஒரு டிஸ்கிளெய்ம்பர் போட நினைத்திருந்தவன் விட்டுவிட்டேன். உங்களின் விமரிசன்ங்களின் தேவையறிந்து.

மற்றபடிக்கு இங்கே யாழில் என்னுடைய இந்தக்கதைக்கு விமரிசனம் அளித்தவர் அனைவருக்கும் நன்றிகள். பெயர் குறிப்பிட்டு நன்றி சொல்ல ஆசைதான், விமரிசனத்தைப்பார்த்ததுமே பதில் சொல்லவேண்டும் என்பதைப்போல ஆனால் நேரம் கிடைப்பதில்லையே. மீண்டும் ஒருமுறை யாழ்வாழ் மக்களுக்கு நன்றி.


- அருவி - 12-16-2005

Quote:மற்றபடிக்கு பாண்டிச்சேரியில் பிறந்தவர்களுக்கு, இந்தியாவின் லஞ்ச/லாவண்யங்களின் உதவியுடன் பிரான்ஸ் சிட்டிஷன்சிப் பெறுவது அத்தனை பிரச்சனையான ஒன்று அல்ல, அதற்கு வயது ஒரு பிரச்சனையும் அல்ல. இதை நான் நேரில் பார்த்திருக்கிறேன். :-)

<b>பண்டிச்சேரியில் பிறந்தவர்களிற்கு மட்டுமல்ல பிரான்சின் காலணித்துவ நாடுகளாய் இருந்த நாடுகளில் பிறந்தவர்களிற்கு பிரான்சின் குடியுரிமைபெறுவது என்பது கடினமான விடயமில்லை, அதற்கு பிரான்சின் சட்டங்கள் மட்டுமே காரணம் வேறொன்றும் இல்லை.</b>



Quote:அப்புறம் இங்கிலாந்து ஸ்விஸ். இங்கிலாந்தைப்பற்றி குறிப்பிட்டதற்கு சம்மந்தமான வாழ்வியல் நிகழ்ச்சி நடந்திருந்தது. <b>என்னுடைய நண்பர் ஒருவர் இதே போன்ற விசாவில் போயிருந்து வேலை சம்மந்தமாக இங்கிலாந்து போயிருந்தார்</b>. எனக்கு மற்ற விஷயங்களை பற்றி தெரியாது அஜீவன் நாங்கள் ஐடி மக்கள் ஊர்சுற்ற போவதாக இருந்தால் கூட வேலைசம்மந்தமாக போவதாகத்தான் ரெக்கார்ட் சொல்லும். அதுவும் ஐடி மக்களுக்கு <b>இங்கிலாந்து போவதோ இல்லை சுவிஸ் போவதோ விசாவின் படி பிரச்சனை வராது</b> என்பதே நான் சொல்லவந்ததே.


<b>விசா எடுத்துப்போவதில் பிரச்சினை வராது என்பதை ஒத்துக்கொள்கிறோம், ஆனால் செங்கன் விசாவில் போய் வந்ததைத்தான் ஏற்கவில்லை. அதனையே சுட்டிக்காட்டினார்கள்.( அதென்னுங்க ஐடி மக்கள்)</b>


Quote://அது நடை முறை சாத்தியமேயில்லை.
அவர் இந்தியாவில்தான் வீசா பெற வேண்டும். //

எங்களுக்கு இப்படி வராதுன்னு நினைக்கிறேன் அஜீவன். நான் நேரில் சென்றேனான்னு கேட்கக்கூடாது எல்லாமே எங்கோ ஒரிடத்தில் நடந்ததுதான். <b>காதில் கேட்டவை</b> தான் பயன்படுத்தியிருக்கிறேன்.


<b>நீங்களும் முயன்றுபாருங்கள், அப்ப தெரியும் பிரச்சினை வருதா இல்லையா என்று. (தொழில் விடயம் என்றால் உங்கள் தொழில் வழங்குனர் அதனை உறுதிப்படுத்தவேண்டும், அதற்கும் பல பேப்பர் வேர்க் செய்யவேண்டும்)</b>




Quote://சொருபன் மற்றும் சந்திரா அகதியாக வந்திருந்தால் கூட
அனுமதிக்காக காலமெடுக்கும்.
இக் காலங்கள்..........மொழி...........வேலை..........
//

இவையெதுவும் ஐடி மக்களுக்கு சம்மந்தப்படாதது. எங்களின் தேவை பிரான்சில் நிச்சயப்படுத்தப்பட்டால் விசா (வேலைக்கான) நிச்சயமாகக்கிடைக்கும்.

ஐடி மக்கள் என்பது விளங்கவில்லை விளங்கியபின் இது என்னவென்று பார்க்கலாம் :?


- mohandoss - 12-16-2005

ஐடி மக்கள் என்பது விளங்கவில்லை விளங்கியபின் இது என்னவென்று பார்க்கலாம்

IT( Information Technology)


- mohandoss - 12-16-2005

செங்கன் விசாவை வைத்துக்கொண்டு வேலை விஷயமாக இங்கிலாந்திற்கோ, இல்லை சுவிஸ்ற்கோ போய்வந்தவர்களை நான் சந்தித்திருக்கிறேன். அது ஒரு சாதாரணமான வரிகள் அதில் இன்னும் தீவிரமாய்ப்போய், நாடுகளை ஏமாற்றிவிட்டு, வேலைவிஷயமாய் போவதாய் பொய்சொல்லிவிட்டு ஊர்சுற்றுவதாக சொல்ல விரும்பாமலே அப்படியொரு வரியை விட்டிருந்தேன்.


- அருவி - 12-16-2005

mohandoss Wrote:செங்கன் விசாவை வைத்துக்கொண்டு வேலை விஷயமாக இங்கிலாந்திற்கோ, இல்லை சுவிஸ்ற்கோ போய்வந்தவர்களை நான் சந்தித்திருக்கிறேன். அது ஒரு சாதாரணமான வரிகள் அதில் இன்னும் தீவிரமாய்ப்போய், நாடுகளை ஏமாற்றிவிட்டு, வேலைவிஷயமாய் போவதாய் பொய்சொல்லிவிட்டு ஊர்சுற்றுவதாக சொல்ல விரும்பாமலே அப்படியொரு வரியை விட்டிருந்தேன்.


அண்ணா அதற்கான சந்தர்ப்பத்தை முயன்று பார்த்ததனால் தான் நானும் எனது கருத்தை சொல்லியிருந்தேன். :wink: