![]() |
|
சாதனை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21) +--- Thread: சாதனை (/showthread.php?tid=8337) |
- kuruvikal - 10-29-2003 வீரா அவர்களே எங்கள் கருத்தில் எந்தச் திசைமாற்றமும் கிடையாது....முதலில் எளிமையாக சொன்னதை பின் சற்று விளக்கமாக வலியுறுத்திச் சொன்னோம்....சிவாந்தி என்பவரின் சாதனையை இப்போ ஒரு பழைய விடயத்துடன் தொடர்புபடுத்தி புலத்தில் வாழும் புலி ஆதரவு.. எதிர்ப்பு நிலைப்பாட்டுக்குள் கொண்டு சென்று அந்தச் சாதனையாளருக்கும் அதே சாயத்தை பூசி சாதனையை மலினப்படுத்துவது உங்களுக்குத் தெரியாமல் போனது வியப்பளிக்கிறது...இந்த விடயத்தில் தணிக்கை மற்றும் தாங்கள் அதிதீவிரமாக கருத்தாட முற்பட்ட விதமே எமக்கு இப்படியான ஒரு சந்தேகத்தைத் தோற்றுவித்தது அது இப்போ உண்மையாகக் கூடத்தெரிகிறது...இப்படியான பிரச்சாரங்களை எவர் செய்வதும் அது குறிப்பிட்ட சாதனையாளரையும் அவருடைய முயற்சியையுமே மலினப்படுத்தும் என்பதை மறந்துவிட வேண்டாம்...சாதனைக்கு முன்னால் புலி சார்பு எதிர்ப்பு என்பது அவசியமற்றது....அதை கின்னஸும் எதிர்பார்க்கவில்லை...புலத்து ஈழத்தமிழர்கள் முதலில் இந்த அரசியல் விரோத மனநிலையை, எங்கும் புகுத்தி பிரச்சாரம் செய்வதை எதிர்காலத்திலாவது ஒட்டு மொத்த தமிழ் மக்களின் நலன் கருதி தவிர்ப்பார்களா....?!! :twisted: :roll: :twisted: - தணிக்கை - 10-29-2003 குரவி அவர்களே நான் அந்த அறிவிப்பாளரின் சாதனையை ஏதாவது ஒரு அரசியல்கட்சியுடன் தொடர்புபடுத்தி எங்காவது பிரச்சாரம் செய்தேனா? இல்லவே இல்லை யார் யார் வாழ்து தெரிவித்தார்கள் என்பதை இங்கு தருகிறேன் அதில் என்ன பிளை? எரிக்சொல்கயிம் பு.......... இல்லை யெகத் கஸ்பவார் பு........ இல்லை ஆகவே நான் பல தரப்பட்டவர்களுடைய கருத்துகளையும் இங்கு தரும்போது ஏன் என்னை வம்புக்கு இளுக்கிறியள். - veera - 10-29-2003 குருவிகளே, கூச்சல் கூப்பாடுகளுக்கும் மேலதிகமாக உண்மையென்று ஒன்று இருக்கிறது. இதுவரை நான் முன்வைத்த கருத்துக்கள் எதிலும் சாதனைக்காகப் பயணித்துக்கொண்டிருக்கும் பெண்ணுக்கெதிராகவோ அவர் மீது சாயம் பூசுவதாக அமைந்ததாக நீங்கள் கருதும் விடயங்களை உடனடியாகச் குவோட் பண்ணிக் காட்டுங்கள். உங்களைப் போன்றன்று.<b>தவறுகள் செய்திருப்பின் பகிரங்கமாகவே ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் வீராவிடம் இருக்கிறது!</b> தவிரவும் இங்கு பழங்கதை எதுவும் வீணாக உதாரணங்காட்டப்படவில்லை.நேற்றைய தினம் களத்தில் பகிர்ந்து கொள்ளப்பட்டதும் அதே நேரம் வானலையில் நடைபெற்றதுமான சம்பவங்களும் அவற்றிற்குத் தொடர்பான விடயங்களும் தான் முன்வைக்கப்பட்டுள்ளன. <b>இவை உங்களுக்கு வியப்பளிக்கின்றது என்றால் எனக்கு எந்த ஆச்சரியமும் இல்லை.</b> சாதனையாளரைத் தாக்காத கருத்துக்களை ஆதரவாக வைத்துக்கொண்டு யாரையோ காப்பாற்றுவது போன்று உங்கள் கருத்துக்கள் அமைந்திருப்பது எனக்குந்தான் <b>சந்தேகத்தை உண்டுபண்ணியுள்ளது</b>. இங்கே சிவாந்தியின் சாதனையை மலினப்படுத்த யாரும் முனையவில்லை.அப்படி ஒரு முயற்சி நடந்திருந்தால் நீங்கள் சுட்டிக்காட்டலாம்.இங்கு அவரைப்பற்றியோ அவரது தனிப்பட்ட விடயங்களைப்பற்றியோ யாரும் கதைக்க வில்லை. இந்தக்கருத்துக்களத்தில் நான் முன்வைத்தது ஒரு சாதாரண விடயம்..அதாவது இந்த வாய்ப்பினை அவருக்கு லண்டனில் இயங்கும் ஐபிசியில் தனது சாதனை முயற்சியை எடுத்து நடாத்தத்தான் அவர் ஆரம்பத்தில் ஆயத்தமாகவிருந்தார்.துரதிஷ்டவசமாக ரிபிசி மூடப்படுவதாக இருந்த சூழ்நிலையின் விளைவுதான் அவர் இந்த வானொலிக்கு வந்தது. <b>இதிலே இந்த வானொலி நிர்வாகம் அதாவது வானொலியின் உரிமையாளன் மறுத்திருந்தாலோ அல்லது கட்டணம் அறவிட்டிருந்தாலோ இதை அவரால் செய்ய முடியாது என்பதை மீண்டும் உங்களுக்கு வலியுறுத்துகிறேன்.</b> ரிரிஎன், ஐபிசி தனிப்பட்ட தொடர்பும் முயற்சியுமே தவிர வேறு எந்தட் டை கட்டியவர்களுக்கும் இதில் உரிமையில்லை. 22ம் திகதி இழுத்து மூடுவதற்குக்கூட தயாராகவிருந்த வானொலிதான் இது என்பது நீங்கள் அறிந்திருக்காவிட்டால் கேட்டுத்தெரிந்துகொள்ளுங்கள்.சிவாந்தியின் சாதனை முயற்சியொன்றிற்காகத்தான் தனது போக்கில் மாற்றத்தைக் கடைப்பிடிக்கிறார் உரிமையாளர். <b>தொடர்ந்தும் அவரையும் அவரது பெரையும்,சேவையையும் திட்டமிட்டு மறைத்து வருகிறார்கள்</b>.மறைத்துக்கொண்டேயிருக்கிறார்கள்.இவர் என்னடா என்றால் அப்பாவித்தனமாக செக்யூரிட்டியும் போட்டுக்கொடுத்து செய்திகளை மட்டும் வாசித்து விட்டு மூலையில் ஒதுங்கி நிற்கிறார். நாளை அவர் சாதனை முடிவடைந்தால் கூட இவர் மறைக்கப்படுவார் என்பதில் இதுவரை எனக்கு எள்ளளவும் சந்தேகமில்லை. <b>உண்மைகளை அறிந்துதான் நீங்கள் எழுதுகின்றீர்களா அல்லது நான் ஒருவருக்காக வாதிட்டதனால் வீம்புக்காக நீங்கள் மற்றவருக்கு சார்பாக முன்வருகிறீர்களா என்று தெரியவில்லை</b>. எதுவாயிருந்தாலும் பரவாயில்லை.சிவாந்தியை <b>மலினப்படுத்தும் அளவுக்கு </b>இந்தக்கருத்துக்களத்தில் இந்தக் கருத்தினை நான் எழுத முன்வரை எங்கே எழுதியிருக்கிறேன் என்று நீங்கள் சுட்டிக்காட்டவேண்டும் அல்லது உங்கள் வார்த்தைகளை வாபஸ் பெறவேண்டும். சாயம் பூசுவோர் யார் என்பது அடையாளங்காட்டப்படவேண்டும். - தணிக்கை - 10-29-2003 சிவாந்தி எந்த முhடியவானொலியிலும் இந்த சாதனையை செய்ய முயற்சிக்கவில்லை இது முற்றிலும் பொய். காரனம் அவ அந்த வானொலி நேயர்களிடம் பன மோசடி செய்ததாக அந்த வானொலியின் பனிப்பாளர் இடை நிறுத்தியிருந்தார் அவரை ஒரு கள்ளி என பகிரங்கமாகவும் அந்த அடித்து முhடப்பட்ட வானொலி பனிப்பாளர் தெரிவித்திருந்தார் ஆகவே அது தவறான கருத்து. அந்த வானொலியால் துரத்தப்பட்ட சிவாந்தியை மீன்டும் எடுத்த தனது வானொலியை தப்பவைக்க ஒரு முயற்சி நடந்தது அதற்க தேசத்தின் துரோகிகளிடம் நான் கூட்டுச்சேரமாட்டேன் என சிவாந்தி வெளிப்படையாக தெரிவித்திருந்தா அதை இங்கு வீரா என கருத்தெளுதும் நபருக்கும் தெரிவித்திருந்தா. உன்மைகளை மறைத்து குருவியை பேக்காட்டி இங்கு அவவின் வெற்றிக்கு வேறு ஒரு வானொலிக்கு ஆதரவு தேடுவது விரும்பத்தக்கதன்று. - veera - 10-29-2003 இப்போதாவது அனைவருக்கும் புரியட்டும்.இந்தக் கருத்தாளருக்கும் எனக்கும் எந்த விதத் தொடர்புமில்லையென்று. ஈரிபிஸியை நாட முன்னர் கங்கா லூசியனின் உதவியோடு ரிபிஸியில் சிவாந்தி உள் நுழைவதற்கு அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டதைத் தாங்கள் அறிந்திருக்காதது துரதிஷ்டமே. அவருக்கு வழங்கப்பட வேண்டிய சம்பளத் தொகை முதல் அவர் வரவேண்டிய தினங்கள் கூட குறிக்கப்பட்டிருந்த நிலையில் அவரை முழுமையாக இந்த ஒப்புதலுக்குள் இழுத்து வந்தவர் தமிழ் லிங்க் இணையத்தளத்தினை நடாத்தும் சுகுவாகும். எனினும் வானொலி தொடர்ந்து நடாத்தப்படப்போவதில்லை பிரச்சனைகள் அதிகரித்துக்கொண்டு வருகின்றன என்ற உண்மை அவருக்கு சிலர் மூலம் புரிய வைக்ப்பட்டிருந்தது.அவர் வானொலியில் திரும்ப வேலை செய்வதற்கு பெரியளவு நேயர் கூட்டம் எதிர்ப்புத்தெரிவித்திருந்தது. தங்களால் மீண்டும் அவரை ஏற்றுக்கொள்ள முடியாது என்று வானொலியின் பிரதான ஆதரவாளர்களின் கருத்துக்களுக்குப் பின்னர் தான் ... நடாமோகனை தங்களோடு இணைத்துக்கொள்வதற்கு ரிபிஸி நிர்வாகம் முடிவெடுத்தது. நடாமோகனின் முடிவினையடுத்து நீங்கள் இந்தக் களத்தில் போட்ட ஆட்டமும் பின்னர் அடங்கிய கதைகளும் அனைவரும் அறிந்ததுதான். நீங்கள் அழுததையும் தான் வானொலியில் கேட்டிருந்தோமே. இந்த சூழ்நிலையில் தான் அவர் இந்த வானொலியில் இணைந்திருந்தார்.விசயங்கள் தெரியாவிடின் அறிந்தவர்களைக் கேளுங்கள்.சொல்லுவார்கள். தயவு செய்து அவரை யாரும் அப்படி இப்படி அழைத்தார்கள் என்று நீங்கள் அவருக்குப் பெயர் சூட்ட வேண்டாம். இங்கு குருவிகள் சொன்னது போன்று நேரடியாகவே அவரை மலினப்படுத்துகின்றீர்கள். இத்தோடு நிறுத்திவிட்டு இது வரை எப்படி செய்திகளைத் தந்தீர்களோ அதே போன்று உங்கள் சேவையைத் தொடருங்கள். சாதனையெல்லாம் முடிந்த பிறகு உங்களது டபுள் கேம் பற்றியும் பேசுவோம்.இப்போதைக்கு வேண்டாம். - nalayiny - 10-29-2003 வெற்றிகரமாக ஏற்கனவே உள்ள சாதனையை முறியடித்து வீறுநடை போடுகின்றார் சிவாந்தி. அவருக்கு யாழ் களம் சார்பாக எமது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம். - தணிக்கை - 10-29-2003 சிவாந்தி வெற்றிகரமாக தனது சாதனையை முறியடித்துள்ளா தமிழ் ஈழ விடுதலைப்புலிகளாகிய நாங்கள் தமிழ் ஈழ தேசியத்தலைவரின் சார்பில் தமிழ் ஈழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறை தலைமை செயலகத்தில் இருந்து இந்த வாழ்த்து தற்போது வந்துள்ளது வன்னியின் தெலைபேசியின் முhலமும் தேசியத்தலைவரின் வாழ்துடன் அவவின் வெற்றி கொன்டாடப்படுகிறது. - தணிக்கை - 10-29-2003 தயவு செய்து தவறாக எடுக்கவேன்டாம் நான் மேல் கூறிய கருத்தை திழிழ் ஈழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் தங்கன் தெரிவித்தார். - தணிக்கை - 10-29-2003 தமிழ் ஈழ அரசியல் துறை துனைப்பொறப்பாளர் தங்கன் அவர்களால் பாராட்டுடனும் வாழ்த்துடனும் முறியடிக்கப்பட்ட உலகசாதனை தொடர்ந்து புதிய உலகசாதனையை படைக்க தொடர்ந்துகொன்டு இருக்கிறது. இதவரை 2010 தொலைபேசி வாழ்த்துகள் பெற்றுள்ளதாக தெரியவருகிறது. இவவின் உலகசாதனையின்முhலம் அவுஸ்ரேலியாவில் வைக்கப்பட்ட 2 சாதனைகள் முறியடிக்கப்பட்டு மலேசியாவில் வைக்கப்பட்ட சாதனையும் முறியடிக்கப்பட்டு தற்போது புதிய சாதனை 123 மனித்தியாலங்கள் பதிய சிவாந்தி பயனிக்கின்றா எனது வாழ்த்துக்கள். - தணிக்கை - 10-29-2003 யாழ் நேயர்களின் நன்மைகரதி இதை இங்கு போடுகிறேன் அதாவது சுவீடன் நாட்டவரை து}க்கி எறிந்துள்ளா இதோ அவருடைய சாதனைகள். The current record is Disc jocky kristian Bartos’ broadcast on WOW 105 radio, Stockholm, Sweden, lasted for 103 hr 30 min. He began his marathon attempt at 6.40 am on 8 October 2001 and finally closed his programme at 2.10 pm on 12 October 2001. The event was recorded for Guinness Rekord TV, Sweden. - ganesh - 10-29-2003 தணிக்கை அவர்களே புனிதமான சின்னத்தை தங்களது தவறான செயல்களுக்கு இனியும் பயன்படுத்தாதீர்கள் - kuruvikal - 10-29-2003 veera Wrote:[quote=kuruvikal]இதென்ன பாருங்கோ சிவாந்தி என்பவருக்கூடாக பணிப்பாளரும் சாதனை படைகிறாரோ......அப்ப சாதனையை பதியிற கின்னசுக்கும் சிவாந்தி என்றும் கடமைப்பட்டவர் என்று சொல்லுவியள் போல....!எது எப்படியோ இலங்கை வானொலிதான் இனங்கண்டு அறிவிப்பாளராக்கியது... குருவிகளே நீங்கள் ஆரம்பித்தது இப்படித்தான் ஆனால் இறுதிக் கருத்தில் பெரும் சிந்தனை வாதியாக மாறியிருக்கிறீர்கள். <b>அப்படியென்றால் தாயின் கருவறையின்றியே குழந்தை! அப்படித்தானே?</b> இங்கே புலம் பெயர் நாட்டிலே ஒரு தமிழரிடம் சென்று வேலை செய்ய இன்னுமொரு தமிழர் வெறுக்கிறார்.ஒரு தமிழரை வேலைக்கமர்த்தக் கூட ஒரு தமிழ் நிறுவனம் தயங்குகிறது போன்ற சூழ்நிலையிருக்கின்றதே அது ஏன் தெரியுமா? இப்படிப்பட்ட நன்றி கெட்ட போக்கிற்காகத்தான். இந்த இடத்தில் ஒரு சாதனையாளரை வாழ்த்த வேண்டிய சூழ்நிலையில் அவருக்கு அதனை வழி சமைத்துக் கொடுத்தவரும் நன்றியுடன் நினைவு கூறப்படவேண்டும் என்பதுதான் எனது கருத்தாக இருந்ததே ஒழிய..நீங்கள் கேட்பது போன்று சாதனையாளரோடு சேர்த்துப் பெயர் பதிவதற்காக அல்ல.இது உங்களுக்குத் தெரியாத ஒன்றும் அல்ல.இருந்தாலும் கருத்தின் திசையை மாற்றுகிறீர்கள். றமணன் விவகாரத்திற்கு முன்பதாக திருவாளர் சுரதா ஒரு விடயத்திற்காக ஒரு உதாரணம் காட்டியிருந்தார் அதாவது கவுண்டமணியின் அரசியலில் சகஜமப்பா..இந்த விடயத்திற்குப் பிறகு ஜெயகுமாரும் றமணனும் வானெலியில் கதைத்தது நல்லதொரு வானொலி நாகரிகம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த இடத்தில் ஒரு கேள்வியுள்ளது.அந்தக் கேள்விக்கு நீங்கள் பதிலளிக்கும் போது உங்கள் மனநிலை என்னவென்பதைப் புரிந்து கொள்ளலாம். <b>றனணன் அகதி அந்தஸ்த்து நிராகரிக்கப்பட்ட நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் போது கோர்ட்டுக்கு கேஸ் எடுபடாமல் வாழும் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் போன்று தான் அவரும் வாழ்ந்து வந்தார். ஆனால் இந்த வருட முற்பகுதியில் அவருக்கு எதிராக பலமாக அனுப்பப்பட்ட பெடிசன் ஒன்றினால் அவரது விடயங்கள் மீண்டும் அலசப்பட்டு அவர் திருப்பியனுப்பப்பட்டார்.அந்த விடயத்தில் வானொலியில் நேரடியாகவே பிரகடனம் செய்துவிட்டு அந்த வேலையை செய்தவர் இந்த மனிதர்.</b> <b>இவருடன் றமணன் இன்று நேரடியாகவே கதைத்தவர் என்பது சிலருக்குப் பாராட்டக்கூடிய விடயம். ஆனால் இது வரை இந்தப் போராட்டத்தில் றமணனுக்காக குரல் கொடுத்த ( இந்த மனிதரை எதிர்த்து ) றமணனுக்காக திட்டிய, வானலையில் வீரம் பேசிய,சாபமிட்ட பல நூற்றுக்கணக்கானோரின் நிலை என்ன?அவர்களுக்கு என்ன தேவையிருந்தது றமணனுக்காக இன்னுமொருவரைப் பகைத்துக்கொள்வதற்கு? றமணனுக்காகக் குரல் கொடுத்தவர்கள் எல்லாம் புலி எதிர்ப்பாளர்களாகவும் இவரோடு வெளிச்சென்றவர்கள் எல்லாம் தங்கள் பிரதேசத்தின் அமைப்பின் பொறுப்பாளர்கள் என்றும் இப்போது கரடி விட,தானும் ஒரு பழம் புலி என்று கதைவிட்டு இவர்கள் புண்ணியவான்களாக மாறிப் புலித்தோல் போர்த்தி வாழ்கிறார்கள், இன்று றமணனுக்காகக் கதைத்தவர்கள்,நோகடிக்கப்பட்டவர்கள்,புலி எதிர்ப்புச் சாயம் பூசப்பட்டவர்கள் எத்தனை பேர் என்று தெரியுமா [b]ஓ றமணன் கதைத்துவிட்டார் என்று மீண்டும் சென்று இவரை அணுகவேண்டியதுதான் அவர்கள் கதியா? அது எல்லாருக்கும் பொருந்தாது. சாதனையாளருக்கு ஐரோப்பாவில் வாழும் அனைத்து தரப்பு அறிவிப்பாளர்களும் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.தெரிவிப்பது கடமையானதும் கூட.அதில் சில இவருக்குப் பிடிக்காத அறிவிப்பாளர்களின் வாழ்த்துக்களை வாசிக்க விடாமல் இவர் தடுத்துள்ளார்.அது பிரச்சனைக்குரிய விடயமுமல்ல.ஏனெனில்</b> அவர்கள் வாழ்த்துக்களை அனுப்பியிருந்தனர் என்பது சிவாந்திக்குத் தெரிந்ததுதானே. எதுவென்றாலும் செஞ்சோற்றுக்கடன்,செய்நன்றிக்கடன் ஊட்டி வளர்க்கப்பட்ட கலாச்சாரத்திற்குரிய நான் இதன் பின்ணணியில் இருந்த ஒரு மனிதரை சுட்டிக்காட்டியதற்கு நீங்கள் தந்த பதில் தவறானது. அதை ஏற்றுக்கொள்ள வேண்டிய தேவை எனக்கில்லை.ஆனால் விளக்க வேண்டிய கடமையுள்ளது.எனவே விளக்கியிருக்கிறேன். பண்பாடு இல்லையென்றால் அவன் தமிழனே இல்லை என்பது எனது கொள்கை. சிறிய வயதில் பாடசாலை ஆசிரியர்கள் வி...வீ...என்ற சொற்களில் சில வார்த்தைகளை விளக்கும் போது ஏற்றுக்கொள்ள கஷ்டமாகத்தான் இருந்தது.ஆனால் நான் எழுதியவற்றிற்கு நீங்கள் தந்திருந்த பதில்களைப் பார்க்கும் போதுதான் அந்த அர்த்தங்கள் எனக்கு நன்கு புரிந்தது. கருத்துக்களின் வேகத்தைவிட அதன் ஆழமும் உணர்வுகளும் முக்கியமானவை.எனவே அவற்றிற்கு மதிப்பளிக்க வேண்டுமா இல்லையா என்பதை முடிவெடுங்கள். உங்கள் கருத்தில் குருவிகள் Bold செய்தவற்றிற்கும் குருவிகளின் கருத்து அல்லது தற்போதய சாதனை நிகழ்வுக்கும் இடையில் என்ன தொடர்பு உள்ளது...அப்படித் நேரடியற்ற தொடர்பு இருந்தாலும் அதை தற்போது வெளிவிடக் காரணம்...? வீரா அவர்களே ஏட்டிக்குப்போட்டியாக கருத்தெழுதும் தாங்களும் தணிக்கையும் எழுதியவற்றில் பலது தற்போதைய சாதனை நிகழ்வுக்கும் அதன் வெற்றிக்கும் புறம்பானவை...பணிப்பாளரைப் பற்றியோ அல்லது சாதனையின் பின்னணி பற்றியோ கதைக்க விரும்பின் அதனை பிறிதொரு தலைப்பில் ஆரம்பித்து நீங்களும் தணிக்கையும் கருத்தாடி இருக்கலாம்....தணிக்கை சாதனை பற்றிய செய்திகளுடன் கருத்துப்பரிமாறினாலும் நல்ல கருத்தாளனான தாங்கள் பணிப்பாளருக்கும் வானொலிக்கும் வாழ்த்துவதில் முழுக் கவனமும் செலுத்துவது ஏன்....?! எது எப்படியோ தமிழ் சகோதரியின் சாதனை வெற்றி பெற இறை நல்லாசிகள் வேண்டி எமது வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொள்கின்றோம்...! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- தணிக்கை - 10-29-2003 காலவரையறையற்ற முறையில் தொடர்ந்து தனது உடல் இடம் கொடுக்கும்வரை தனது சாதனையை செய்யப்போவதாக சிவாந்தி அறிவித்துள்ளா. தொடர்ந்து சாதனை தொடர்பான தகவல்களுடன் வருகிறேன்........... - தணிக்கை - 10-29-2003 இறுதியாக கிடைத்த தகவல்களின்படி 1900 தொலைநகல்கள் சிவாந்திக்கு சென்றுள்ளது தொடரும்............... - தணிக்கை - 10-29-2003 4250 க்கு மேற்பட்டவர்கள் இனையத்தளம் உடாக சிவாந்தியின் நிகள்வுடன் இனைந்துள்ளதாக இனையம் தெரிவிக்கின்றதாக கலயக வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. தொடரும்................. - shanthy - 10-29-2003 சிவாந்தி தன் சாதனையைத் தொடர்ந்து சாதித்து முடிக்க அவருக்கு ஆதரவு கொடுத்த வானொலியின் இயக்குனர்களைத்தான் முதலில் பாராட்ட வேண்டும். சாதிக்கும் கனவுகளோடு எத்தனையோ இளையவர்கள் ஐரோப்பிய ஊடகங்களுக்குள் தங்கள் பொருளாதாரத்தைக்கூட இழந்து போனார்கள். இழந்தார்கள். ஆனால் அவர்களை ஊடகம் என்ற நிறுவனம் தனது தேவைகள் முடிந்ததும் உதறிவிட்டது. உளக்கிவிட்டது என்றே சொல்லலாம். ஆனால் ஒரு சாதனைக்கு தங்கள் ஊடகத்தைக் கொடுத்து அந்த சாதனையாளரையும் ஊக்குவித்த பெருமை ஈரிபீசியினரைத்தான் சாரும். சிவாந்தி என்கின்ற பெண்ணுக்குத் தளம்கொடுத்த தமிழ் ஊடகம் எம்மவரது ஊடகங்கள் அனைத்துக்கும் உதாரணமாக தனது பரந்த நோக்கைத் வெளிப்படுத்தியுள்ளது. ஆனாலும் வரட்டுக்கௌரவம் இடம் கொடுக்காமல் இன்னும் அந்தச்சாதனைப் பெண்ணை வாழ்த்தாது வாய்மூடியிருக்கும் ஊடகத்தின் ஆணவம் வேதனைக்குரிய விடயமே. - veera - 10-29-2003 சரி,குருவிகளின் விடயத்தில் தங்களிடம் நான் இறுதியாகச் சுட்டிக்காட்ட விரும்புவது,தாங்கள் bold செய்திருக்கும் விடயங்களாவன <b>நடைமுறை உதாரணங்களாகும்</b>. தவிரவும் இதுவரை வீரா தொடர்ந்து வாதிட்ட சில விடயங்களுக்குப் பின்ணனியில் உண்மை ஒரேமாதிரியானது தான். <b>அதுதான் நல்ல வாயன் சம்பாதிக்க நாறின வாயன் திண்ணும் கதை தங்களது சந்தேகத்திற்கு நான் இதுவரை எழுதிய அத்தனை விடயங்களும் பதிலாகவும் (உங்களுக்கு விளங்கவில்லை என்றால் அது விடிய விடிய இராமாயணம் கேட்ட கதைதான்) தங்கள் கேள்விக்கு அதாவது Quote:நல்ல கருத்தாளனான தாங்கள் பணிப்பாளருக்கும் வானொலிக்கும் வாழ்த்துவதில் முழுக் கவனமும் செலுத்துவது ஏன்....?! இந்தக் கேள்விக்கு நான் மேற்குறிப்பிட்ட நல்ல வாயன் சம்பாதிக்க நாறின வாயன் திண்பதும் அதனை வீராவால் சகிக்க முடியாததும் தான் காரணம். தவிரவும் தாங்கள் வீம்புக்காக என்னையும் தணிக்கை என்பவரையும் இணைத்துக் கதைப்பதை இத்தோடு நிறுத்த வேண்டும். இப்படி ஒருவரையொருவர் மூட்டிவிடும் உங்கள் மெத்தப் போக்கினை நிறுத்துங்கள். எனது கருத்து சம்பந்தமான உங்கள் கேள்விகள் எதுவும் இருந்தால் முன்வையுங்கள்.வேறு யாரையும் என்னோடு இணைப்பதை தயவு செய்து நிறுத்துங்கள். சிந்தனை வாதிகளுக்கு இது அழகல்ல. [b]வீராவிற்கென்றொரு கொள்கையுண்டு.இதுவரை நலிந்தவர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுத்ததேயன்றி யாரையும் வீண் பழிச்சொல்லுக்காளாக்கியதாக சரித்திரம் இல்லை.எந்தவிதமான ஆதாரமற்ற கருத்துக்களையும் முன்வைத்ததுமில்லை.</b> தாயின் கருவறையின்றி சேயில்லை! சாதனைப் பெண்ணுக்கு எங்கள் ஆதரவை தெரிவிக்க வேண்டிய வகையில் நேரடியாகவே தெரிவித்தும் விளக்கியும் கூறியுள்ளோம்.இதில் எந்தவித ஒளிவு மறைவும் இல்லை. உண்மைகள் உறையக்கூடாது. இணையத்தில் இணைந்துள்ள நேயர் எண்ணிக்கையொன்று ஒரு எண்ணிக்கையை ஒருவர் இங்கு சேர்த்துள்ளார்.இதன் உண்மை நிலையை அறிந்தவர்கள் இங்கு எத்தனை பேர்? இந்த வானொலியின் இணையத்தளம் வேலை செய்கிறதா? அப்படி வேலை செய்தாலும் எத்தனை பேரால் ஒரே நேரத்தில் கேட்க முடியும்? 32க்கும் 4250க்கும் எவ்வளவு தூரமென்று தெரியுமா? எழுத வேண்டும் என்பதற்காக எழுதி சிவாந்தியின் சாதனையைக் கொச்சைப்படுத்துவதையும் இங்கு நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். நன்றி குருவிகள் : தங்களுக்கு சந்தேகங்களென்றால் நேரடியாகச் சுட்டிக்காட்டி நேரடியாக வீராவுடன் கதையுங்கள்.வரவேற்கிறேன். - தணிக்கை - 10-29-2003 ஆம் இனையம் வேலை செய்கிறது சுமார் 3 இனையங்கள் அவவின் தொடர்சதனையை தொடர்ந்து அறிவித்துவருகின்றன. அவுஸ்ரேலிய தமிழ் ஒலிபரப்புக்கூட்டுத்தாபனம் கடந்த 2 நாட்களாக இவவின் சாதனையை இரவுபகல் நேரடியாக வழங்கி வருகிறது இது இனையத்தினு}டாக பெற்று கொடுக்கப்படுகிறது சுமார் 4500 பேர் இப்போது இனையத்தில் இதுவரை வந்ததாக இனைய அறிக்கைகள் அலுவலகத்திற்கு கிடைத்துள்ளது. அதுமட்டுமா கனடாவில் இருந்து தொடர்ந்து அழைப்புகள் வருகின்றது அவர்கள் இனையத்தினு}டாகத்தான் கேட்கின்றார்கள். - yarl - 10-29-2003 http://www.flash.com.pl/wnm.htm - Mathivathanan - 10-29-2003 தயவுசெய்து சண்டைகளை நாளை 12 மணிவரை ஒத்திவைத்து பின்னர் தொடருங்கள்.. அதுவே போதும். நன்றி. |