Yarl Forum
சாதனை - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21)
+--- Thread: சாதனை (/showthread.php?tid=8337)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13


- mohamed - 10-28-2003

அட நானெப்ப சொல'கைமா மாறினனான்? தணிக்கை உங்களுக்கு நல்ல குசும்புதான்! சரி சரி வாழ்த்துச்செய்தியை இதிலை போடுங்கோவன்! (உந்த பணிப்பாளர்களின் சவாகாசம் வேணம் எண்டு விட்டிலை கிடந்த றேடியோவையுமெல்லை புடுங்கி எறிஞ்சுபோட்டன்)


- தணிக்கை - 10-28-2003

நீங்கள் எரிக்சொல்கயிம் இல்லை உன்மையில் எரிக்சொல்கயிம் தற்போது வாழ்த்தி சென்றார்.

முதல் அரசியலா என அறிந்து பயப்பட்டார் பின்னர் அவர் துனிந்து வாழ்த்தினார்.


- தணிக்கை - 10-28-2003

சிவாந்தியின் உலகசாதனை திட்டத்தின் ஒரு நடவடிக்கையாக டாக்டர் முhத்தி அவர்களுடன் சேர்ந்து வென்புறாதிட்டத்தின்படி செயற்கைகால்களை சேகரித்துக்கொன்டு தாயகம் போகப்படப்போகின்றது.

இதுவரை 17 கால்கள் சேர்கப்பட்டுள்ளது.


- ganesh - 10-28-2003

சிவாந்திசாதனை ஏற்படுத்தும் முன்
நம்மவர்கள் ஒருவரை ஒருவர் குற்றம் காண்பதிலும் குழப்பத்தை
உண்டு பண்ணுவதிலும் சாதனை
ஏற்படுத்தி விடுவார்கள்


- sOliyAn - 10-28-2003

இதுனுள் இதுவரை குழப்பம் வரவில்லை.. அவை மறைவதைத்தான் அவதானிக்கிறேன்.. நினைவூட்டாதீர்கள்.


- yarl - 10-28-2003

இன்று ரிபிசி கொழும்பிலிருந்து ரமணன்கூட தொலைபேசி எடுத்து வாழ்த்தியிருந்தார்.ஜெயக்குமாருடன கூட வானொலியில் உரையாடியிருந்தார்.

நல்லதொரு ஆரோக்கியமான வானொலி நாகாPகம் வளர்கிறதுபோல படுகிறது.


- sOliyAn - 10-28-2003

உண்மைதான் யாழ்.. எதுக்கும் இன்னும் 3 நாட்கள் பொறுத்திருங்கள்..!


- ganesh - 10-28-2003

ரமணனுக்கு வாழத்துக்கள்


- தணிக்கை - 10-28-2003

றமனன் மறுத்திருந்தார்.
நான் பல ஆலோசனைகளை கூறினேன் அதன்பின் சம்மதித்தார்.
பின்னர் வானலைக்கு வந்தார்.


- தணிக்கை - 10-28-2003

சிவாந்தி தனது 85 மனித்தியாலங்களை முடித்துவிட்டார் என தெரிவித்துள்ளா


- kuruvikal - 10-28-2003

பணிப்பாளர் நல்லவரா அவரது சேவைகள் அவரது குணநலன்கள் எப்படிப்பட்டவை இதையெல்லாம் கின்னஸ் பதியப் போவதில்லை.....எத்தனையோ ஆயிரம் பாடல்கள் படித்து சாதனை படைத்த பாலசுப்பிரமணியம் கின்னஸில் பதியப்பட்ட போது அவரை திரையுலகிற்கு பின்னணி பாட அழைத்தவரின் பெயரையும் பதிந்தாவிட்டனர் அல்லது அவருக்கு இவரின் சாதனை கொண்டு விளம்பரமா செய்தனர்....மிகவேக அரைச்சதம் அடித்த ஜனத் ஜெயசூரிய கிரிக்கேட் சாதனை ஏட்டில் பதியப்பட்ட போது...அவரை கிரிகெட்டுக்குள் கூட்டிவந்தவர் விளம்பரமா செய்து கொண்டார்....? சாதனையை சாதனையாக விளம்பர நோக்கமற்றதாக தூய்மையான எண்ணத்தில் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்துவதே எமது கருத்தின் நோக்கமே தவிர எவரையும் தனிப்பட்ட வகையில் தாக்குவதல்ல...அதற்கான அவசியமோ தேவையோ எமக்குக் கிடையாது...சாதனையாளரின் சாதனை விளம்பரமாகாது கேலிக்கிடமாகாது தகுந்த கனத்துடன் உலகின் பார்வையில் இருக்க முதலில் அனுமதியுங்கள்...பிறகு தனிப்பட்ட முறையில் பணிப்பாளரை... வானொலி நிறுவனத்தை... பிரித்தானிய அரசை பாராட்டுங்கள்...அவர்கள் தானே வாழ வழியும் காட்டி சாதனைக்கும் இடம் தந்தவர்கள்...!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:


- ganesh - 10-29-2003

றமணனுக்கு ஆழ்ந்தஅனுதாபங்கள்
றமனன் இனியாவது சொந்தக்காலில் நில்லுங்கள் வானொலியில் சிவாந்திக்கு வாழ்த்துசொன்னது
வரவேற்கத்தக்கது ஆனால் மற்றவர்களின் வற்புறுத்தலினால்
வந்து வாழ்த்து சொல்வது ஏற்கமுடியாது இவர்களை ஒருபோதும்
நம்பாதீர்கள் பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டுவார்கள் இவர்கள் சிலர் தங்களை பத்திரிகையாளர் என்று
சொல்வார்கள் ஆனால் தமிழ் எழுதத்தெரியாது உகண்டாவின்
முன்னால் ஐனாதிபதி இடிஅமின்
போன்றவர்கள் அவர் ஒருமுறை
தான் சாகும் முன் தனது சிலையை அமைத்து தானே திறந்து வைத்தவர் அவர்களைப்போல்தான் இவர்களும்
இருப்பார்கள் ஆகவே இனியாவது
சொந்தக்காலில் நில்லுங்கள்

உங்கள் நண்பன்
கணேஸ்

உங்களுக்காக ஆயிரக்கணக்கான
நேயர்கள் இங்கு இருப்பதை மறந்துவிடாதீர்கள்


- தணிக்கை - 10-29-2003

றமணன் மறுத்ததிற்கும் காரனம் இருக்கு ஆனால் அவற்றை இங்கு போடமுடியாது ஆனால் நீதியான காரனங்களே அவை.

எப்படியோ அவன் மறந்து மன்னித்து வாழ்த்து தெரிவித்தது நல்ல ஒரு மன நிலையை உணர்த்துகிறது.


- தணிக்கை - 10-29-2003

சிவாந்தியின் சாதனையை பார்த்து மார்க்கோனி தனது இத்தாலிய கல்லறையில் இருந்து விளித்தெளுவார் என எதிர்பார்க்கப்படுவதாக நேயர் ஒருவர் வாழ்த்தி சென்றார்.


- தணிக்கை - 10-29-2003

மன்னிக்கவும் நான் துன்டு துன்டாக கருத்துகளை எளுதுகிறேன் தவிர்கமுடியவில்லை முடியும்வரை திருத்துகிறேன்.


சிவாந்தி தனது 96 மனித்தியாலத்தில் பிரவேசித்துள்ளா.
வாழ்த்துக்கள்.


- yarlmohan - 10-29-2003

2,3 நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து கருத்துக்கள் எழுதியிருக்கின்றீர்கள். (ஒவ்வொரு கருத்து எழுத எடுக்கும் கால அவகாசம் கூட இவ் நேர இடைவெளியாகவே இருக்கும்.) ஆதலால் [b]இவ்வாறானபோக்கினை அனுமதிக்க முடியாதுஇது கருத்துக்களின் எண்ணிக்கையைக்கூட்டும் என்பதும், வாசிப்பவர்களை எரிச்சலுற வைக்கும் விடயமுமாகும்.

ஆதலால் கருத்து எழுத முன் எதைச் சொல்லவருகின்றீர்கள் என சிந்தித்துவிட்டு கருத்துக்களைத் தந்தால் மேற்குறிப்பிட்ட பிரச்சனையைத் தவிர்க்கலாம்.


- தணிக்கை - 10-29-2003

சிவாந்தி தனது இறுதிநாள் பயனத்தை தற்போது ஆரம்பித்துள்ளா.

இதுவரை சுமார் 1600 தொலைபேசி வாழ்த்துக்கள் கிடைத்துள்ளதாக தெரியவருகிறது.
தொடரும்..........


- தணிக்கை - 10-29-2003

<span style='font-size:19pt;line-height:100%'>தமிழ் ஈழ விடுதலைப்புலிகளின் விளையாட்டுத்துறை பொறுப்பாளர் பாப்பா தனது வாழ்த்துகளை வன்னியில் இருந்து தொலைபேசி ஊடாக தெரிவித்துள்ளார் அதன் முளு கருத்தும் இங்கு தருகிறேன்.

எனது வாழ்த்துகளை எமது அமைப்பின் சார்பாகவும் தேசியத்தலைவரின்சார்பாகவும் போராளிகள் சார்பாகவும் மாவீரர்கள் சார்பாகவும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்ளுகின்றேன்.

எமது தேசத்திற்கும் எமது சமுதாயத்திற்கும் இது மிகப்பெரும் வெற்றி தாயகத்தில் இந்த உலகசாதனை பற்றிய தகவல்கள் அனைத்துப்பத்திரிகைகளிலும் வந்தது அதை பார்த்து எமது போராளிகளும் பொதுமக்களும் சந்தோசப்பட்டனர்.

தமிழ ஈழ மண் பெற்ற சிவாந்தியின் சாதனை நிற்சயம் வெற்றிபெறும்.

எமது போராளிகளின் வாழ்த்துகள் தொடர்ந்து உங்கள் வானொலிக்குவரும் அதற்கு எமக்கு இடம் தரவும்.

எமது போராளிகள் அனைவரும் உங்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதுடன் அதிகமாக எமது உறுப்பினர்கள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வேன்.

எமது அனைத்துப்போராளிகளும் உங்கள் சாதனைகளை அறிந்து கொள்வார்கள் என தொடர்ந்து அவருடைய வாழ்த்து செல்கிறது.</span>


- yarl - 10-29-2003

ஊடக ஆற்றலை திறமையாக சிவாந்தி பயன்படுத்துகிறார்.
மற்றவர்கள் கறறுக்கொள்ளவேண்டும்.


- veera - 10-29-2003

kuruvikal Wrote:இதென்ன பாருங்கோ சிவாந்தி என்பவருக்கூடாக பணிப்பாளரும் சாதனை படைகிறாரோ......அப்ப சாதனையை பதியிற கின்னசுக்கும் சிவாந்தி என்றும் கடமைப்பட்டவர் என்று சொல்லுவியள் போல....!எது எப்படியோ இலங்கை வானொலிதான் இனங்கண்டு அறிவிப்பாளராக்கியது...

குருவிகளே நீங்கள் ஆரம்பித்தது இப்படித்தான் ஆனால் இறுதிக் கருத்தில் பெரும் சிந்தனை வாதியாக மாறியிருக்கிறீர்கள்.

<b>அப்படியென்றால் தாயின் கருவறையின்றியே குழந்தை! அப்படித்தானே?</b>

இங்கே புலம் பெயர் நாட்டிலே ஒரு தமிழரிடம் சென்று வேலை செய்ய இன்னுமொரு தமிழர் வெறுக்கிறார்.ஒரு தமிழரை வேலைக்கமர்த்தக் கூட ஒரு தமிழ் நிறுவனம் தயங்குகிறது போன்ற சூழ்நிலையிருக்கின்றதே அது ஏன் தெரியுமா? இப்படிப்பட்ட நன்றி கெட்ட போக்கிற்காகத்தான்.

இந்த இடத்தில் ஒரு சாதனையாளரை வாழ்த்த வேண்டிய சூழ்நிலையில் அவருக்கு அதனை வழி சமைத்துக் கொடுத்தவரும் <b>நன்றியுடன் நினைவு கூறப்படவேண்டும் என்பதுதான் எனது கருத்தாக இருந்ததே ஒழிய..</b>நீங்கள் கேட்பது போன்று சாதனையாளரோடு சேர்த்துப் பெயர் பதிவதற்காக அல்ல.இது உங்களுக்குத் தெரியாத ஒன்றும் அல்ல.இருந்தாலும் கருத்தின் திசையை மாற்றுகிறீர்கள்.

றமணன் விவகாரத்திற்கு முன்பதாக திருவாளர் சுரதா ஒரு விடயத்திற்காக ஒரு உதாரணம் காட்டியிருந்தார் அதாவது கவுண்டமணியின் அரசியலில் சகஜமப்பா..என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த இடத்தில் ஒரு கேள்வியுள்ளது.அந்தக் கேள்விக்கு நீங்கள் பதிலளிக்கும் போது உங்கள் மனநிலை என்னவென்பதைப் புரிந்து கொள்ளலாம்.

றனணன் அகதி அந்தஸ்த்து நிராகரிக்கப்பட்ட நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் போது கோர்ட்டுக்கு கேஸ் எடுபடாமல் வாழும் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் போன்று தான் அவரும் வாழ்ந்து வந்தார்.

ஆனால் இந்த வருட முற்பகுதியில் அவருக்கு எதிராக பலமாக அனுப்பப்பட்ட பெடிசன் ஒன்றினால் அவரது விடயங்கள் மீண்டும் அலசப்பட்டு அவர் திருப்பியனுப்பப்பட்டார்.அந்த விடயத்தில் வானொலியில் நேரடியாகவே பிரகடனம் செய்துவிட்டு அந்த வேலையை செய்தவர் இந்த மனிதர்.

இவருடன் றமணன் இன்று நேரடியாகவே கதைத்தவர் என்பது சிலருக்குப் பாராட்டக்கூடிய விடயம்.

<b>ஆனால் இது வரை இந்தப் போராட்டத்தில் றமணனுக்காக குரல் கொடுத்த ( இந்த மனிதரை எதிர்த்து ) றமணனுக்காக திட்டிய, வானலையில் வீரம் பேசிய,சாபமிட்ட பல நூற்றுக்கணக்கானோரின் நிலை என்ன?</b>அவர்களுக்கு என்ன தேவையிருந்தது றமணனுக்காக இன்னுமொருவரைப் பகைத்துக்கொள்வதற்கு?

றமணனுக்காகக் குரல் கொடுத்தவர்கள் எல்லாம் புலி எதிர்ப்பாளர்களாகவும் இவரோடு வெளிச்சென்றவர்கள் எல்லாம் தங்கள் பிரதேசத்தின் அமைப்பின் பொறுப்பாளர்கள் என்றும் இப்போது கரடி விட,தானும் ஒரு பழம் புலி என்று கதைவிட்டு இவர்கள் புண்ணியவான்களாக மாறிப் புலித்தோல் போர்த்தி வாழ்கிறார்கள்,

<b>இன்று றமணனுக்காகக் கதைத்தவர்கள்,நோகடிக்கப்பட்டவர்கள்,புலி எதிர்ப்புச் சாயம் பூசப்பட்டவர்கள் எத்தனை பேர் என்று தெரியுமா

ஓ றமணன் கதைத்துவிட்டார் என்று மீண்டும் சென்று இவரை அணுகவேண்டியதுதான் அவர்கள் கதியா? [b]அது எல்லாருக்கும் பொருந்தாது</b>.

சாதனையாளருக்கு ஐரோப்பாவில் வாழும் அனைத்து தரப்பு அறிவிப்பாளர்களும் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.தெரிவிப்பது கடமையானதும் கூட.அதில் சில இவருக்குப் பிடிக்காத அறிவிப்பாளர்களின் வாழ்த்துக்களை வாசிக்க விடாமல் இவர் தடுத்துள்ளார்.அது பிரச்சனைக்குரிய விடயமுமல்ல.ஏனெனில் அவர்கள் வாழ்த்துக்களை அனுப்பியிருந்தனர் என்பது சிவாந்திக்குத் தெரிந்ததுதானே.

<b>எதுவென்றாலும் செஞ்சோற்றுக்கடன்,செய்நன்றிக்கடன் ஊட்டி வளர்க்கப்பட்ட கலாச்சாரத்திற்குரிய நான் இதன் பின்ணணியில் இருந்த ஒரு மனிதரை சுட்டிக்காட்டியதற்கு நீங்கள் தந்த பதில் தவறானது.
அதை ஏற்றுக்கொள்ள வேண்டிய தேவை எனக்கில்லை.ஆனால் விளக்க வேண்டிய கடமையுள்ளது.எனவே விளக்கியிருக்கிறேன்.</b>

பண்பாடு இல்லையென்றால் அவன் தமிழனே இல்லை என்பது எனது கொள்கை.

சிறிய வயதில் பாடசாலை ஆசிரியர்கள் வி...வீ...என்ற சொற்களில் சில வார்த்தைகளை விளக்கும் போது ஏற்றுக்கொள்ள கஷ்டமாகத்தான் இருந்தது.ஆனால் நான் எழுதியவற்றிற்கு நீங்கள் தந்திருந்த பதில்களைப் பார்க்கும் போதுதான் அந்த அர்த்தங்கள் எனக்கு நன்கு புரிந்தது.

கருத்துக்களின் வேகத்தைவிட அதன் ஆழமும் உணர்வுகளும் முக்கியமானவை.எனவே அவற்றிற்கு மதிப்பளிக்க வேண்டுமா இல்லையா என்பதை முடிவெடுங்கள்.