![]() |
|
கடவுள் நம்பிக்கை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34) +--- Thread: கடவுள் நம்பிக்கை (/showthread.php?tid=6763) |
- tamilini - 08-27-2004 Quote:அடடா கடவுளே இல்லை என்கிறேன். இதில் சாத்தான் வேறு இருக்குதென்று நம்பச் சொல்கிறீர்களா?உறுதியாக சொல்லுறிங்களா..... யாராலும் காப்பாற்ற முடியாது....! சிவ சிவ....! - tamilini - 08-27-2004 இளைஞன் அண்ணாவுக்கும்.. வசி அண்ணாவுக்கும் கடவுளுடன் அப்படி என்ன தான் வழக்கு...?? - vasisutha - 08-27-2004 சோழியான் அண்ணா காரணம் என்று சொன்னால் வழமையாக உலகத்தில் நடப்பது தான். ஆனால் சமீபத்தில் நடந்த ஒரு தீ விபத்து பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். உண்மையில் அந்த பிஞ்சுகள் என்ன பாவம் பண்ணினார்கள்? எனக்கு புரியவில்லை. - sOliyAn - 08-27-2004 நோய் வந்தால்தான் வைத்தியன் தேவை.. நோயே வராமல் செய்ய முடியாதா?! கட்டுப்பாட்டுக்குள் அடங்கக் கூடியவனா மனிதன்?! ஆகவே, மனிதன் தானாகவே நோயைத் தேடுகிறான்.. அதனால் வைத்தியனும் தேவைப்படுகிறான்! கட்டுப்பாடு என்பதைக் கோட்டைவிட்டு அழிவுகளுக்கும் அலங்கோலங்களுக்கும் வித்திடும் செயல்களை கடவுள்மீது சுமத்த முடியாது! பாவம் உள்ளவன் கடவுளை நாடிப் போகவேண்டும்! அப்போதுதான் கடவுள் எங்கும் நிறைந்துள்ளதை அவனால் உணர முடியும். - vasisutha - 08-27-2004 Quote:உறுதியாக சொல்லுறிங்களா..... யாராலும் காப்பாற்ற முடியாது....! சிவ சிவ....! ஒரு பாடல்- ஆத்திகம் பேசும் மனிதருக்கெல்லாம் சிவமே அன்பாகும்.. நாத்திகம் பேசும் நல்லவருக்கோ அன்பே சிவமாகும்..! - இளைஞன் - 08-27-2004 இயக்காமல் எதுவும் இயங்காது? - இளைஞன் - 08-27-2004 தமிழினி... கடவுளுக்கும் எனக்கும் வழக்கா? இதென்ன புதுக் கதையாக இருக்கு! சரி, அப்படியிருந்தாலும் கடவுளை கூட்டிக் கொண்டு வந்து விசாரிக்கிறதுக்கு யாரும் தயாராக இல்லையே <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- sOliyAn - 08-27-2004 ஒரு பரீட்சைக்கு படிக்கிதென்றால்.. எவ்வளவு காலம் படிக்கவேண்டும்.. எவ்வளவு மாதிரி வினாத்தாள்களை செய்யவேண்டும்.. எவ்வளவுதூரம் புறச்சூழலை மறந்து, மனதை ஒருநிலைப்படுத்தி பாடங்களை உள்வாங்க வேண்டும்?! ஒரு பரீட்சைக்கே இவ்வளவு முன்தயாரிப்புத் தேவை என்றால்.. கடவுளைக் கூட்டிக்கொண்டு வர?!! ஒரு 'எம்பி'யையே கூட்டிக்கொண்டு வர முடியாத காலத்தில.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 08-27-2004 உங்களுக்குள்ளும் கடவுள் இருக்கிறார்... உங்களை நீங்கள் கேள்வி கேளுங்கள் பதில் கண்டுபிடிக்க முயலுங்கள்... எல்லாருக்கும் வழக்கு விசாரிக்க அவர் வர முடியாது ரொம்ப பிசி ஆச்சே... அவரை உணர்ந்தவர்கள் எழுதிய நு}ல்களை படிப்பதன் மு}லமும் விசாரிக்கலாம் தானே.....! - இளைஞன் - 08-27-2004 அதுசரி! "எம்பி" சுயநலவாதி(?) எண்டுறதால கூட்டிக் கொண்டு வரேல்லாது! ஊழல் செய்வதால் அவரை விசாரணைக்கு அழைத்தால் பயந்து பயந்து ஒழிந்து கொள்வார்! அப்ப கடவுளும் "எம்பி"ன்ர இரகமோ? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->பரீட்சைக்கு படிச்சு பாஸ் பண்றது ஒரு வகை! படிக்காமல் படிச்சவனைப் பார்த்து பாஸ் பண்றது இன்னொரு வகை! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- இளைஞன் - 08-27-2004 கல்லுக்குள்ள கடவுள் இருக்குதென்று, கல்லைக் கடவுள் என்கிறார்கள்! எனக்குள்ள கடவுள் இருக்கென்றால், நானும் கடவுள் உங்களுக்கு!? கடவுள் இருக்கு என்பவர்களுக்குள் ஒற்றுமையான கருத்து இல்லை. இருக்கு என்று சொல்வதில் கூட பலவிதமான முரண்பாடு! -அதன் இயல்பைச் சொல்வதிலும் ஆயிரமாயிரம் முரண்பாடு! - ஆனால் கடவுள் இல்லை என்பவர்களுக்குள் ஒரே ஒருமித்த கருத்துத்தான் இருக்கு என்பதால் சண்டை! இல்லை என்பதால் சமாதானம்! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- sOliyAn - 08-27-2004 இருப்பதைத் தேடிச் செல்வதுதான் மனித மனம்! நீங்களே உங்க பெற்றோருக்கு மகனாகவும், தம்பிக்கு அண்ணாவாகவும், பிரண்டு பிரண்டினுக்கு பிரண்டாகவும்.. இவ்வாறு ஒவ்வொரு விதமாகத் தெரியும்போது.. ???!! மனிதனிலே கடவுளைக் கண்டால் அங்கே தெய்வீகம் (மனிதாபிமானம்) தோன்றும்! - tamilini - 08-27-2004 நீங்களும் கடவுள் தான் அதில என்ன சந்தேகம்...?? எல்லா உயிரிலையும் கடவுள் இருக்கிறார்..... ..... கடவுள் இருக்கிறார் என்பவர்களில் எந்த முரன்பாடும் இல்லை.. - kavithan - 08-27-2004 கடவுளே...! உனக்கே இந்த நிலையா..? - kavithan - 08-27-2004 எல்லாத்தையும் படம் பிடித்து முடித்து.. கடவுளையும் படம் பிடிக்க கிளம்பிட்டாங்கப்பா.... கிளம்பிட்டாங்க..... - இளைஞன் - 08-27-2004 இதில முக்கியமாக ஒரு விடயத்தைத் தெளிவுபடுத்திவிட்டு நான் தொடர்கிறேன். 1. நான் கடவுள் இருக்கிறார் என்று சொல்ல வரவில்லை <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->2. நான் கடவுள் இல்லை என்று சொல்ல வரவில்லை <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->நீங்கள் சொல்லும் பதில்களில் ஒழிந்திருக்கும், உங்களுக்கே சிலவேளைகளில் தெரியாத முரண்பாடுகளை மட்டுமே தெரியப்படுத்துகிறேன். <b>சரி... சோழியான் அண்ணாட்ட வாறன்:</b> அம்மாவக் கடவுளா நினைக்கலாம், பிரச்சினையில்ல அப்பாவக் கடவுளா நினைக்கலாம், பிரச்சினையில்ல அண்ணா, அக்கா, தம்பி, தங்கை அதுவும் பிரச்சினையில்லை ஆனால் (Freundin) காதலியில் கடவுளைக் கண்டால்? hock: <b>இனி... தமிழினிட்ட வாறன்:</b> Quote:எல்லாருக்கும் வழக்கு விசாரிக்க அவர் வர முடியாது ரொம்ப பிசி ஆச்சே... எல்லாம் வல்லவர் என்று நீங்கள் கருதுபவருக்கும் "பிசி"யா? Quote:அவரை உணர்ந்தவர்கள் எழுதிய நூல்களை படிப்பதன் மூலமும் விசாரிக்கலாம் தானே.....! கடவுள நம்புறதிலயே இங்க நிறையப் பிரச்சினை. அதில, கடவுளை உணர்ந்தவர்களை நம்புவது? Quote:எல்லா உயிரிலையும் கடவுள் இருக்கிறார் மனிதன் மனிதனைக் கொல்வது? கடவுள் கடவுளையே கொல்வதோ? பி.கு.: இங்கு எனது கருத்து எதுவும் இல்லை. எல்லாம் உங்கள் கருத்தில் இருந்து எடுத்தவை தான். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- tamilini - 08-28-2004 Quote:எல்லாம் வல்லவர் என்று நீங்கள் கருதுபவருக்கும் "பிசி"யா? என்ன இளைஞன் அண்ணா.. நாங்கள் இந்த களத்தில் உரையாடுகிற ஒரு rpலர் தான் மனிதர்களா..?? நாம் மட்டும் தான் கடவுளைபற்றி பேசிக்கொண்டிருக்கிறோமா...?? எம்மக்கு வந்து காட்சி தர... சொல்லுங்கள் அதனால் தான் காலத்திற்கு காலம் கடவுள் அவதாரங்காளாக வந்து மக்களது சந்தேகங்களை தீர்த்து நல்வழியும் காட்டியிருக்கிறார்.. ராமன் கண்ணண் ஜேசு இப்படி பட்டவர்கள் அவதாரங்களாக வர.... கடவுளை நன்று உணர்ந்த விபுலானந்தர் விவேகானந்தர் ராமகிருஸ்ணர்.. Nபhன்றவர்கள் தாம் உணர்ந்தவைகளையும்.. மக்களுக்கு எழக்கூடிய சந்தேகங்களுக்கும் உரிய சிறந்த பதில்களை எழுதியிருக்கிறார்கள்... Quote: கடவுள நம்புறதிலயே இங்க நிறையப் பிரச்சினை. அதில, கடவுளை உணர்ந்தவர்களை நம்புவது? அவர்களை நம்பச்சொல்லி நாம் சொல்லவில்லை.. முதல் அவர்கள் என்ன கூறியிருக்கிறார்கள் என்று வாசியுங்கள்.. அதன் பின் உங்களுக்கே புரியும் எல்லாம் தன்னால்.. பின்பு நம்புறதும் விடுறதும் உங்கள் விருப்பம்.... இப்படி கேள்விகளை கேட்கும் முன்னர்... முதல் அவற்றை படியுங்கள்... கடவுளை நம்புற நாங்கள்.. கடவுள் இருக்கிறார் என்று கதையை தொடக்க வில்லை.. இல்லை என்று நம்புறவர்கள் தான் கடவுள் இல்லை என்பதை பற்றியும் கடவுள் நம்பிக்கை பற்றியும் கதை தொடத்தார்கள்... அப்ப அவர்களுக்கு தான் பிரச்சனை இருக்கிறது... இவர்கள் செய்ய வேண்டியது முதல் அப்படி பட்ட புத்தகங்களை வாசித்து.. விரும்பினால் அதற்குரிய ஆராய்ச்சிகளையும் செய்யலாம்.... அதை விட இன்னும் ஓன்று கேட்கிறேன்.. மனிதன் எப்படி தோன்றினான்.. இதற்கு விடையை நீங்கள் கூறுங்கள்... நமக்கு மேல் ஒரு சக்தியிருக்கு அதனை தான் நாம் கடவுள் என்கிறோம்.....! Quote:மனிதன் மனிதனைக் கொல்வது? கடவுள் கடவுளையே கொல்வதோ? பிறந்வன் ஓவ்வொருவனுக்கும் மரணம் இருக்கிறது. அது உரிய நேரம் நடந்து தீரும்..... ஒரவரை மற்றவர்கள் கொள்வதற்கு காரணம்.. மனிதம் மனிதாபிமானம் அன்பு இவைகள் அற்ற நிலையில் தானே.. இவைகளை கூறுவது தான் மதங்களும் கடவுளும்.. கடவுளையே நம்பாத மனிதர்கள் எங்கு மற்றவர்களை கடவுள் என்று நம்புறது சொல்லுங்கள்... அதனால் தான் இந்த கொலைகள் மனிதனால் செய்ய படும் கொலைகள் நடைபெறுகிறது....! என்ன இளைஞன் அண்ணா உங்களுக்குள் கடவுள் இருக்கிறார் .. ஏன் அதைப்போல் காதலிக்குள்ளும் கடவுள் இருக்கிறார் தானே... அவர் தான் எல்லா உயிர்களிக்குள்ளும் இரக்கிறார். - kuruvikal - 08-28-2004 கடவுள் என்பது இயக்கும் சக்தி (Energy).... அது இருக்கிறபடியால்தான் அனைத்தும் இயங்குகிறது..இயக்கிவைத்ததும் அந்தச் சக்திதான்... எமது பூமிக்கும் வெளியில் இருந்து கிடைக்கும் ஒரே பெளதீக வடிவம் சக்தி மட்டும் தான்..மீதமெல்லாம் இங்கே உள்ளவைதான் மாறிமாறி சுழன்று கொண்டிருக்கின்றன...! மரணம் என்பது சக்தியின் நிலைமாற்றமே அன்றி வேறில்லை....அந்த நிலை மாற்றம் நிகழ்கின்ற போது உடல் செயலற்றுப் போகிறது புலன் அழிகிறது...உணர்வு இழக்கிறது....இது மனிதன் முதல் அனைத்துக்கும் பொது என்பதை தெளிவாகக் காணலாம்... எனவே கடவுள் சக்தியாக எங்கும் நிறைந்தே இருக்கிறார்...! உங்களிடம் ஒரு கேள்வி அந்த சக்தியின் முதல் எது...அந்தச் சக்தியை அகிலத்தில் அளித்தது எது...????! விடை என்ன...???! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 08-28-2004 என்ன யாரையும் காணவில்லையே...?? - kavithan - 08-28-2004 ஏன் யாரை தேடுறியள்...? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> |