Yarl Forum
மெல்ல வாய் திறக்கும் தமிழகம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: மெல்ல வாய் திறக்கும் தமிழகம் (/showthread.php?tid=6272)

Pages: 1 2 3 4


- Mathan - 12-15-2004

ஈழம் தமிழகம் இந்தியா சில குறிப்புக்கள்

முதற்தடவையாக இலங்கைக்கு வெளியே விடுதலைப் புலிகள் சார்ந்த ஒரு நிகழ்வுக்கு கடந்த சனிக்கிழமை (04.12.2004) போயிருந்தேன்.

அது மெல்பேர்ண் நகரில் நிகழ்ந்த மாவீரர் தினம்!

இம்முறை இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்காக தமிழகத்திலிருந்து ஓவியர் புகழேந்தி அவர்கள் வருகை தந்திருந்தார். அவர் சொல்லியிருந்த ஒரு கருத்துக் குறித்து இன்னமும் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்.

அவர் சொல்லுகிறார். தமிழகத்தில் ஈழத் தமிழர்களின் போராட்டத்திற்கான ஆதரவென்பது நீறு பூத்த நெருப்பாக இருக்கிறது. சட்டங்களாலும் அடக்குமுறைகளாலும் அவர்கள் தமது உணர்வுகளை வெளிப்படுத்த முடியாதவர்களாக இருக்கிறார்கள். என புகழேந்தி தொடர்கிறார்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பயணம் செய்பவன் என்கிற முறையில் இதனைத் தான் சொல்லுவதாக வேறு புகழேந்தி குறிப்பிட்டார்.

இதனை நம்பி மனதின் எங்கோ ஒரு ஓரம் மகிழ்ச்சி கொள்வதா அல்லது அழைத்த காரணத்திற்காக புகழேந்தி அதனைச் சொல்லியிருப்பார். அது தவிர அதில் உண்மை எதுவும் கிடையாது என மனதைத் தேற்றிக்கொள்ளவா என எனக்கு தெரியவில்லை.

----------------------------------------------------------------------------

விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவன் இலங்கை சென்று திரும்பியிருக்கிறார். வீரச்சாவடைந்த விடுதலைப் புலிகளின் உறுப்பினர் கப்டன் மலரவன் எழுதிய போருலா என்னும் இலக்கியம் உட்பட மூன்று புத்தகங்களின் வெளியீட்டு நிகழ்வு கிளிநொச்சியில் நடந்தது. அதில் கலந்து கொண்ட திருமாவளவன் கொழும்பில் இலங்கைப் பிரதமரையும் சந்தித்திருக்கிறார்.

2002 ஒக்ரோபரிலும் திருமாவளவன் யாழ்ப்பாணம் வந்திருந்தார். விடுதலைப் புலிகளின் கலை பண்பாட்டுக் கழகம் ஏற்பாடு செய்திருந்த மானுடத்தின் தமிழ்க் கூடல் 2002 இல் பங்கு கொள்வதற்காக அப்போது அவர் யாழ்ப்பாணம் வந்திருந்தார்.

----------------------------------------------------------------------------

இயக்குனர் பாரதிராஜாவும் இலங்கையின் வடபகுதி சென்று வந்திருக்கிறார். போரின் வடுக்கள் குறித்தும் அவர் அங் தங்கியிருந்த போது நிகழ்ந்த மாவீரர் தினம் குறித்தும் புலிகளின் போர் வீரம் குறித்தும் அவர் தமிழக இதழ் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டிருக்கிறார்.

----------------------------------------------------------------------------

தமிழ்க் கருத்துக்கள தளம் ஒன்றில் அண்மைக்காலமாக ஒரு குறித்த கருத்தின் மீதான விவாதம் ஒன்றினை அவதானித்து வருகிறேன். ஈழத்தமிழர்களும் புலிகளும் தமது ராஜதந்திர நடவடிக்கைகள் மூலமாக தமிழக அரசின் நட்பினைப் பெற வேண்டும் என்பதே அந்த விவாதத்தின் மையப் பொருளாகிறது.

அண்மைக்காலமாக சர்வதேச நாடுகளின் நல்லெண்ணத்தினைப் பெறுகின்ற நோக்கில் புலிகள் காய்களை நகர்த்தியிருக்கிறார்கள். ஈழநாதம் பத்தி எழுத்தாளர் நிலாந்தன் எழுதியது போல கிளிநொச்சி விளையாட்டு மைதானத்தில் வாரா வாரம் வந்து இறங்கும் ஹெலிகொப்ரர்களையும் அதிலிருந்து இறங்கும் வெள்ளை மனிதர்களையும் பார்த்தால் புலிகளின் நகர்த்தல்கள் சர்வதேசத்தின் கவனத்தைப் பெற்றிருக்கின்றது என்பது தெளிவாகிறது.

இதே நோக்கில் தமிழ்க் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்களை ஓர் தூதுக்குழுவாக இந்தியாவுக்கு அனுப்பி அரசியல் வாதிகளை சந்திக்கின்ற ஏற்பாடுகளைச் செய்யலாம் என அக் கருத்துக் களத்தில் பலர் எழுதுகின்ற அதே வேளை இன்னும் சிலர் இதெல்லாம் வேலைக்காவாது என்றும் எழுதுகிறார்கள்.

----------------------------------------------------------------------------

சில காலங்களுக்கு முன்பு வெரித்தாஸ் ஜெகத் கஸ்பார் சொன்னது எனக்கு நினைவிருக்கிறது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையில் பெரும் யுத்தம் மூண்டால் இலங்கைத் தமிழர்கள் இந்தியாவிற்குத் தான் தார்மீக ஆதரவினைக் கொடுப்பார்கள் என்கிறார் அவர்.

என்னளவில் எனக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எந்த கசப்பும் இல்லை. இருந்த போதும் கடந்த கார்கில் சண்டையில் இந்திய வெற்றிச் செய்தியைக் கேட்ட போது எனக்கு ஏற்பட்ட நிறைவிற்கு என்ன காரணம் எனச் சிந்தித்தால் விடைகளாகக் கூடிய மூன்று காரணங்களை என்னால் பட்டியல் இட முடியும்.

1. நான் ஒரு துரோகி (எங்கள் பசிக்கு அரிசி போட்டு வந்து இறுதியில் வாய்க்கரிசி போட்டுப்போன ஒரு நாட்டினை நான் ஆதரித்ததால்.)

2. இந்து மதம்.

3. ஆயிரம் பிரச்சனைகள் வரும். ஆனாலும் நாங்கள் அண்ணன் தம்பி என்கிற மாதிரியான ஒரு வித உணர்வு ரீதியான பிணைப்பு.

இறுதி விடையே எனக்கான விடை என்பது எனக்கு தெரிகிறது. மற்றவர்களுக்கு எப்படியோ?

----------------------------------------------------------------------------

இன்றைக்கு சர்வதேசத்திடம் இலங்கைத் தமிழர்கள் கேள்வி ஒன்றினைத் தொடுத்திருக்கிறார்கள்.

எங்களுக்கு என்ன தீர்வு?

இடைக்கால நிர்வாக சபை குறித்து பேசவே கூடாது என்கிறது அரசின் பங்காளிக் கட்சியான ஜே வி பி.

பேசினால் வீதியில் இறங்கி போராடுவோம் என்கிறார்கள் அவர்கள்.

அண்மைக்காலங்களாக புலிகள் மேற்கொண்டு வரும் ஆளுமை மிக்க அரசியல் நகர்வுகளுக்கூடாக இப்பிரச்சனையை சர்வதேசத்திடம் கொண்டு செல்வார்கள் என்ற கருத்து எனக்கு உண்டு.

ஒரு வேளை புலிகளே மீண்டும் யுத்தத்தை தொடங்கினாலும் அவ்வாறான யுத்தம் ஒன்றிற்கான தேவை நிலை ஒன்றினை உலகம் ஓரளவுக்காவது உணர்ந்து கொள்ளும் வரை அவர்கள் காத்திருப்பார்கள் என்றே கருதுகிறேன்.

அதன் முன்பாக அதனை உணர்த்துவதற்கான வேலைத் திட்டங்களில் அவர்கள் ஈடுபட வேண்டிருக்கும்.

உலகம் செய்ய வேண்டியது ஒன்று இருக்கிறது.

புலிகள் பேசலாம் வாருங்கள் என்கிறார்கள். என்ன சிக்கலானாலும் பேச்சு மேசைக்கு வாருங்கள் பேசி முடிவு காணலாம் என்கிறார்கள். நீங்கள் ஏன் இன்னும் போக வில்லை என அது இலங்கை அரசிடம் கேள்வி கேட்க வேணும். இலங்கை அரசு தெளிவாக பதில் சொல்ல வேணும்.

முடிப்பதற்கு முன்னால் மற்றொன்று!

இன்று இலங்கைக்கான கோடிக்கணக்கான நிதியுதவிகளை தடுத்து நிறுத்தி பேச்சுக்களை ஆரம்பியுங்கள். ஆரம்பித்தால்த்தான் காசு தருவோம் என உலக நாடுகள் இலங்கை அரசினை வற்புறுத்துகின்றன.

இப்படியான ஒரு வாய்ப்பில் இந்தியா கூட பேச்சுக்களை புலிகளோடு மீள ஆரம்பியுங்கள்.. ஆரம்பித்தால்த்தான் பாதுகாப்பு ஒப்பந்தம். படைத்தளபாடங்கள் அன்பளிப்பு என்று ஒரு வார்த்தை சொல்லலாமே!

அந்தப் பாதுகாப்பு ஒப்பந்தமும் படைக்கலங்களும் ஈழத்தமிழரை அழிப்பதற்கே பயன்பட்டாலும் பரவாயில்லை!

நன்றி - சயந்தன்


- kuruvikal - 12-15-2004

BBC Wrote:
kuruvikal Wrote:பதிலுக்கு உங்களிடம் ஒரு கேள்வி...அன்று தமிழ் மக்கள், புலிகள் தொடர்பாக இந்தியாவின் கொள்கை என்ன இன்றைய கொள்கை என்ன.....??! அவங்களே மாற்றி இருக்கேக்க புலிகள் மாறேல்ல என்று எப்படி எதிர்பார்க்கிறீங்க....! :?: Idea

புலிகளின் இராஜதந்திரம் தெரிந்திருந்தா கருணா அம்மான் இப்ப எங்கையோ போயிருப்பார்...அந்தாளுக்கே தெரியாத ரகசியங்கள் நமக்கு...????! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:

இந்தியா மட்டுமல்ல எந்த நாடாக இருந்தாலும் அவர்களுடைய சொந்த நலனுக்கே முதலிடம் கொடுப்பார்கள். அன்றில் இருந்து இன்றுவரை அவர்கள் கொள்கையை மாற்றியதாக எனக்கு தெரியவில்லை.

புலிகளின் இந்தியா தொடர்பான கொள்கையை பற்றி எனக்கு சரியாக தெரியாது. ஆனால் அவர்கள் அதே கொள்கையைதான் பின்பற்றுகின்றார்கள் என்று நினைத்தேன். நீங்கள் அது பால்குடி கால கொள்கை என்று சொன்னதாலேயே புதிய கொள்கை என்ன என்று கேட்டேன்.

அப்படியாங்க அப்ப சரி... அவர்கள் அவர்களோட கொள்கையோட இருக்கட்டும் நீங்க உங்க கொள்கையோட இருங்க... புலிகள் தங்கள் கொள்கையோட இருக்கட்டும்...அதுபோக நீங்கள் சோவியத் காலம் இப்பவும் இருக்கெண்டுவியள் நமக்கு இப்ப விதண்டாவாதத்திற்கு நேரமில்லையுங்கோ....அப்படி மிணக்கட்டு கொள்கை விளக்கம் செய்தாலும் எந்தப் பிரயோசனமும் இல்ல...இன்னும் இரண்டு கேள்விய சின்னக் குழந்தைகள் போல கேட்டிப்போட்டு இருப்பியள்... அதற்கு.... ஒரு விஞ்ஞானச் செய்தியைப் படிச்சாக் கூட கூடின பலன்கிடைக்கும்....! Idea

என்ன வின்ரர் விடுமுறை போல...வெட்டி ஒட்டுறது பலமா இருக்கு....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Mathan - 12-15-2004

kuruvikal Wrote:அப்படியாங்க அப்ப சரி... அவர்கள் அவர்களோட கொள்கையோட இருக்கட்டும் நீங்க உங்க கொள்கையோட இருங்க... புலிகள் தங்கள் கொள்கையோட இருக்கட்டும்...அதுபோக நீங்கள் சோவியத் காலம் இப்பவும் இருக்கெண்டுவியள் நமக்கு இப்ப விதண்டாவாதத்திற்கு நேரமில்லையுங்கோ....அப்படி மிணக்கட்டு கொள்கை விளக்கம் செய்தாலும் எந்தப் பிரயோசனமும் இல்ல...இன்னும் இரண்டு கேள்விய சின்னக் குழந்தைகள் போல கேட்டிப்போட்டு இருப்பியள்... அதற்கு.... ஒரு விஞ்ஞானச் செய்தியைப் படிச்சாக் கூட கூடின பலன்கிடைக்கும்....! Idea

என்ன வின்ரர் விடுமுறை போல...வெட்டி ஒட்டுறது பலமா இருக்கு....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

ம் குளிர் கால விடுமுறை ஆரம்பித்துவிட்டது. உங்களுக்கு எப்போது?


- sethu - 12-15-2004

இவர் என்ன போராளி என்டு நினைப்போ சயந்தன் என்னை தங்கள பத்தி கேவலமா ஒரு களத்திலை புலம் ஓ ஊடகம் என்ட தலைப்பிலை தீட்டி இருக்கு .


- Mathan - 12-15-2004

சயந்தனுடைய கருத்துக்களுக்கு டோண்டுவும் சீலனும் எழுதிய பதில்கள் .........

புலிகள் இந்தியாவில் ஆயுதக் கலாசாரத்தை புகுத்தியவர்களில் முக்கியமானவர்கள். ஏனைய ஈழப் போராளிகளும் இதைச் செய்தனர். ஆனாலும் புலிகள் அளவுக்கு இல்லை.

அவர்கள் உபயத்தில் கீழக் கடற்கரையில் கள்ளக் கடத்தல் அமோகமாக நடக்கிறது. உண்ட வீட்டுக்கு இரண்டகம் நினத்து தமிழ் மண்ணில் ராஜீவ் காந்தியைச் சாய்த்தவர்கள். பேச்சு வார்த்தைக்கு வந்தப் புலிகள் பிரதிநிதிகளை அமிர்தலிங்கம் அவர்கள் பெருந்தன்மையாக சோதனையிட வேண்டாமென்றுக் கூறியதற்குப் பதிலாக அதே இடத்தில் அவரைக் கொன்ற நம்பிக்கைத் துரோகிகள். பால சிங்கத்துக்கு மருத்துவ உதவி வேண்டும் என்று வெட்கமின்றிக் கேட்டவர்கள். அவர்களுக்கு வக்காலத்து வாங்க தமிழகத்தில் ஒரு கூட்டம். ஒன்றும் நல்லதிற்கல்ல.

புலிகளின் வரலாற்றில் பலவீனம் அடையும் தருணத்தில் பேச்சு வார்த்தைக்கு வருவது, அதே நேரத்தில் ஆயுதங்களைச் சேகரிப்பது, பிறகு சமயம் பார்த்து முதுகில் குத்துவது ஆகியவையே அவர்கள் வேலையாகி விட்டது. இதில் நம்பிக்கை எங்கிருந்து வரும்? எந்த முகத்தை வைத்துக் கொண்டு இந்தியாவின் உதவியைக் கேட்கிறார்கள்?

அவர்களை தூரத்தில் வைத்திருப்பதே இந்தியாவுக்கு நல்லது. அதைச் செய்வதாலேயே ஜெயலலிதா ஆதரவு பெறுகிறார்.

<b>அன்புடன்,
டோண்டு

Posted by Dondu at December 14, 2004 02:46 AM</b>

அமைதிப் படையென்ற பெயரில் வந்து தமிழ்ச் சனத்திற்கு பாடை கட்டியவர்கள், சயந்தன் எழுதியிருந்தது போல பசிக்கு அரிசி போட்டு வந்து பின்னர் வாய்க்கு அரிசி போட்டு போனவர்கள் என்று தெரிந்தும் ஈழத் தமிழர்கள் இந்தியாவின் பங்களிப்பு குறித்து சிந்திக்கிறார்கள் என்றால் ஏன் இந்தியா சிந்திக்க கூடாது.

சயந்தனின் சாராம்சம் என்ன சொல்கிறது. சமாதான பேச்சுக்களை மீண்டும் ஆரம்பிக்க இந்தியா இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று அது சொல்கிறது.

மற்றும் படி புலிகளுக்கு ஆயுத உதவி செய்ய சொல்ல வில்லை. ஆரம்பத்தில் செய்த வரையில் நன்றி. இப்போது உதவி கேட்கிற நிலையில் புலிகள் இல்லை.

வன்முறை கூடாது என்பவர்கள், தீவிர வாதம் நசுக்கப் பட வேண்டும் என்பவர்கள் ஏன் சமாதானம் மலர வேண்டும் என குரல் கொடுப்பதில்லை.

இத்தனை நாளும் யுத்தத்தை கைவிடுங்கள் தீவிர வாதத்தை கைவிடுங்கள் என புலிகளுக்கு ஆலோசனையும் அழுத்தமும் கொடுத்தார்கள். இப்போது யுத்தத்தை நிறுத்தி விட்டு சமாதான பேச்சை ஆரம்பிக்க சொல்லி புலிகள் இலங்கையை கேட்கிறார்கள். அதற்கான அழுத்தங்களை இலங்கைக்கு கொடுக்கும் படி உலக நாடுகளைக் கேட்கிறார்கள்.

அவ்வாறான ஒரு அழுத்தத்தை தான் இந்தியா கொடுக்க வேண்டும் என தமிழர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

வன்முறைக்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் சமாதானத்திற்கு ஆதரவாகவும் குரல் கொடுக்க வேண்டும் தானே.

மற்றும் படி ஜெயலலிதா... நாளைக்கே கருணாநிதி புலிகளை வன்முறையாளர்கள் கொடியவர்கள் என்றால்.. ஜெயலலிதா அவர்களை விடுதலைப் போராளிகள் என்பார். ஏற்கனவே சொன்னவர் தானே! தமிழக ஜனநாயக அரசியல் எமக்கும் தெரியும்.

<b>Posted by சீலன் at December 15, 2004 06:12 AM </b>


- KULAKADDAN - 12-15-2004

சில காலங்களுக்கு முன்பு வெரித்தாஸ் ஜெகத் கஸ்பார் சொன்னது எனக்கு நினைவிருக்கிறது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையில் பெரும் யுத்தம் மூண்டால் இலங்கைத் தமிழர்கள் இந்தியாவிற்குத் தான் தார்மீக ஆதரவினைக் கொடுப்பார்கள் என்கிறார் அவர்.

என்னளவில் எனக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எந்த கசப்பும் இல்லை. இருந்த போதும் கடந்த கார்கில் சண்டையில் இந்திய வெற்றிச் செய்தியைக் கேட்ட போது எனக்கு ஏற்பட்ட நிறைவிற்கு என்ன காரணம் எனச் சிந்தித்தால் விடைகளாகக் கூடிய மூன்று காரணங்களை என்னால் பட்டியல் இட முடியும்.

1. நான் ஒரு துரோகி (எங்கள் பசிக்கு அரிசி போட்டு வந்து இறுதியில் வாய்க்கரிசி போட்டுப்போன ஒரு நாட்டினை நான் ஆதரித்ததால்.)

2. இந்து மதம்.

3. ஆயிரம் பிரச்சனைகள் வரும். ஆனாலும் நாங்கள் அண்ணன் தம்பி என்கிற மாதிரியான ஒரு வித உணர்வு ரீதியான பிணைப்பு.

இறுதி விடையே எனக்கான விடை என்பது எனக்கு தெரிகிறது. மற்றவர்களுக்கு எப்படியோ?

.......................................................................................................
இப்படியான சிந்தனை நமக்கும் வருவதுண்டு....
கிாிகெட்டில் வெல்லும் நாடுகளிலும் சாி உலக பிரசினைகளிலும் சாி


- Kanani - 12-15-2004

Quote:புலிகளின் வரலாற்றில் பலவீனம் அடையும் தருணத்தில் பேச்சு வார்த்தைக்கு வருவது,

இதிலிருந்து தெரிவது டோண்டு கனவுலகிலிருந்து எழுதுகிறார் என்பது

டோண்டு
டோண்டு ரைட் ஸ்ரோரிசு <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Mathan - 12-16-2004

ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம் - வாசக அனுபவம்

இந்தியாவை விட்டுத் தொலைவில் வசிப்பதில் இருக்கும் பல சங்கடங்களில் இதுவும் ஒன்று; புத்தகம் வந்தவுடன் இந்தியாவிலிருந்து யாராவது ஒருவர் பரபரப்பாக விமர்சனம் எழுதியிருப்பார். உடனே அதை வாங்கிப் படிக்க வேண்டும் என்று தோன்றும். ஆனால் முயற்சி எடுத்து அதை அடைவதற்குப் பலமாதங்கள் தேவைப்படும். இன்றைய அவசர யுகத்தில் இப்படி ஆறிப்போய் வரும் புத்தகத்தை உடனே கையிலெடுக்கவும் முடியாது. பல சமயங்களில் முக்கியமான புத்தகத்தைவிட நேற்று முன்தினம் நிகழ்ந்த சாமியார் கைது நம்முடைய நேரத்தை அதிகம் இழுத்துக் கொள்ளும். இதுதான் புஸ்பராஜாவின் புத்தகத்துக்கும், என்னைப் பொருத்தவரை, நிகழ்ந்திருக்கிறது. காலம் கடந்துவரும் இந்த வாசிப்பு அனுபவப் பகிர்வு இன்னும் சிலருக்காவது ஆர்வமூட்டும் என்று நம்புகிறேன்.

இதில் நுழைவதற்கு முன்னால் ஈழத்தைப் பற்றிய எனது மிகக் குறைந்த புரிதலை நான் வெளிப்படையாகச் சொல்லியாக வேண்டும். இதற்கு முக்கிய காரணம் விலகாத விமர்சன நிலையிலிருந்து ஈழப்போராட்டத்தை அணுகி எமக்குச் சொன்னவர்கள் மிகக் குறைந்தவர்களே. இந்தியாவிலிருந்து ஈழத்திற்கு ஆதரவாக ஒரு வார்த்தை சொல்ல முற்படுபவர்களுக்கு, ஒரு காலத்தில் கொல்லப்பட்ட அவர்களது பிரதமரின் உருவம் ஒருகனம் வந்துபோவது தவிர்க்க முடியாதது. அதேபோல ஈழத்திலிருந்து இந்தியாவின் நிலையைப் பார்ப்பவர்களுக்கு சிலகாலம் இந்திய அமைதிப்படை செய்த அட்டூழியங்கள் பொங்கியெழுவதும்தான். இரண்டையும் தவிர்த்து வெளியிருந்து எழுதுபவர்களுக்கென்னவோ கொஸவோ, பாலஸ்தீனம், ஏன் கஷ்மீர் அளவுக்குக் கூட இலங்கை முக்கியமானதாகத் தோன்றாத அலட்சியப் போக்கு இருந்திருக்கிறது. இந்த நிலையில் ஈழத்தின் போராட்ட வரலாறு கால ஓட்டத்தில் மறக்கடிக்கப்படாமலிருக்க தொடர்புடையவர்கள் நேரடியாக அதைப் பதிவு செய்வதும் முக்கியம். அந்த வகையில் புஸ்பராஜாவின் இந்த நூல் மிகவும் வரவேற்கப்பட வேண்டியது.

அறுநூறு பக்கங்களுக்குச் சற்று அதிகமான இந்த நூலை என்னால் ஐந்து நாட்கள் காலை-மாலை அலுவல்-வீடு இரயில் பயணங்களில், கிட்டத்தட்ட எட்டு மணி நேரத்தில் வாசித்து முடிக்க முடிந்திருக்கிறது. இதற்கு இந்த நூல் எழுதப்பட்ட நேரடி அனுபவ நடை மிகவும் முக்கியமானதாக இருந்திருக்கிறது. 1950-60 களில் பூசலாகத் தோன்றிய தமிழர் உரிமைப் போரட்டத்திலிருந்து நூல் துவங்குகிறது என்றாலும் புஸ்பராஜா மாணவராக இருந்த காலங்களில் தமிழ் மாணவர் பேரவையின் தோற்றம், செயல்பாடுகள் குறிந்த நேரடி அனுபவங்கள்தான் நூலின் ஆரம்பமாகக் கொள்ளப்பட வேண்டும். பின்னர் தமிழ் இளைஞர் பேரவையின் தோற்றம், தமிழர் கூட்டணியின் துவக்கம், செல்வநாயகத்தின் செயல்பாடுகள், இளைஞர் பேரவையின் பிளவு, விடுதலைப் புலிகளின் தோற்றம், ஈபிஆர்எல்எ·பின் தோற்றமும் வளர்ச்சியும், உள்ளிட்டுப் பல இயக்கங்களின் வரலாறுகள் ஆரம்பகாலத்திலிருந்து பதிவு செய்யப்பட்டிருக்கிறன. இவற்றினூடாக, வங்கிக் கொள்ளை, போலிஸ் அதிபர் கொலை, சிறையில் சித்திரவதை அனுபவங்கள், நூலக எரிப்பு, ஜனாதிபதிகள் கொலை, சகபோராளிகளின் அழிவுகள், என்று சம்பவங்களின் கோர்ப்புகள் பெரும்பாலான இடங்களில் நேரடிப் பார்வையில் பதிவு செய்யப்பட்டுள்ளன. பின்னர் ஒரு காலகட்டத்தில் போராட்டத்தை விட்டு நீங்கி ஐரோப்பாவில் போராளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டதும் விளக்கப்பட்டிருக்கிறது. எனவே இந்த நூலை ஒரு முக்கியமான காலகட்டத்தின் நேரடி வரலாற்றுப் பதிவாகக் கொள்ள வேண்டும்.

இப்படி நேரடி வரலாற்றுப் பதிவில் ஈடுபடுவதில் சில சிக்கல்கள் இருக்கின்றன. அதுவும் சம்பவங்களில் தொடர்புள்ள ஒருவர் அதைப் பதிவு செய்தால் தன்னை முன்னிலைப்படுத்தியாக வேண்டும். அதுவும் இந்த நூலில் இருக்கிறது. இந்த நூலை மாத்திரமே படிக்கும் ஒருவருக்கு ஈழப் போராட்டத்தில் புஸ்பராஜாவின் பங்கு மிகைப்படுத்தப்பட்டுத்தான் காட்சியளிக்கும். பல இயக்கங்களைத் துவக்கியது, ஆரம்ப நாட்களிலேயே மலையகத் தமிழர்களின் நலனை மனதில் கொண்டு செயல்பட்டது, பின்னாளில் மிக முக்கியமான தலைவராகக் கருதப்பட்ட பத்மநாபாவைப் பின்னின்று இயக்கியது உள்ளிட்டுப் பல விஷயங்களில் தன்னை முதன்மைப்படுத்தியிருக்கிறார் புஸ்பராஜா. தன்னை முதன்மைப்படுத்திக் கொண்டதைப் போலவே தான் சார்ந்திருந்த ஈபிஆர்எல்எ·ப் இயக்கத்தையும் உயர்த்திப் பிடித்திருக்கிறார். தமிழீழ விடுதலைப் புலிகளின் செயல்பாடுகள், பிரேமதாசாவும் விடுதலைப் புலிகளும் என்று ஒருசில தனி அத்தியாயங்களில் புலிகளைக் குறித்த தன்னுடைய விரிவான விமர்சனங்களை முன்வைத்த புஸ்பராஜா, தான் சார்ந்திருந்த இயக்கத்தைப் பற்றியும் தன்னுடைய நிலைப்பாடுகளைத் தெளிவாக எழுதியிருக்கலாம். ஈபிஆர்எல்எ·ப் தொடங்கி சில வருடங்களிலேயே ஈழத்தைவிட்டு வெளியேறிவிட்ட புஸ்பராஜாவுக்கு பல இடங்களில் அந்த இயக்கத்தின் வெற்றிகளுடனும், நேர்மையான வழிமுறைகளுடனும் தன்னை அடையாளம்காணும் ஆர்வம் இருக்கிறது. ஆனால் விட்டேத்தியாகச் சில இடங்களில் எனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்று உணர்த்தவும் தன்னுடைய சாட்சியத்தில் பாடுபடுகிறார். உதாரணமாக, அமைதிப்படை காலங்களில் ஈபிஆர்எல்எ·ப்-பின் நாட்களில் அவர்கள் பாதுகாப்புடன் ஈழத்தைச் சுற்றிவரும் புஸ்பராஜா அங்கு தன் இயக்கத்தவர்களால் நடத்தப்படும் கொடுமைகளைப்பற்றி போகிறபோக்கில் மாத்திரமே எழுதிவிட்டுப் போகிறார். எண்பதுகளின் பிற்பகுதியில் ஆட்சியிலிருந்த தன் இயக்கத்தினரின் செயல்கள் தனக்குப் பிடிக்காமல் போனது பற்றியும், பிரசைகள் தொண்டர் படை என்ற பெயரில் அவர்கள் சிறுவர்களைப் போர்க்களத்தில் புகுத்தியமையும் பற்றி மேம்போக்காகப் பதிவு செய்திருக்கும் புஸ்பராஜா, 1993ல் பிரேமச்சந்திரனால் ஈபிஆர்எல்எ·ப்பிலிருந்து நீக்கப்படும்வரை அவர்களுக்குத் தொடர்ந்து செயல்பட்டதன் நோக்கங்கள் என்ன என்பதைத் தெளிவுபடுத்தவில்லை.

சில இடங்களில் புஸ்பராஜாவின் பார்வை அதிசயிக்கக்கூடியதாக இருக்கிறது.

... இப்படி இந்திய மக்களும் அதிகாரிகளும், பொலிசாரும் எம்முடன் ஒரு காலத்தில் எவ்வளவு மரியாதையாகத் தமது உத்தியோகத்தையும் வெறுத்து சலுகைகள் தந்து பழகினர். அவர்களுக்கு நாங்கள் செய்த கைங்கரியங்களின் பிரதிபலன்தான் இன்று இலங்கையர் இந்தியாவில் படும் அவமானங்கள் அவதிகள் என்று சொன்னால் மிகையாகாது. (பக்கம் 315)

இயக்கங்கள் தீவிரமடைவதற்கு முன்னால் இந்தியாவில் இருந்தவர் என்ற முறையிலும், அமைதிப்படை காலங்களில் ஆட்சி செலுத்திய ஈபிஆர்எல்எ·ப் இயக்கத்தைச் சார்ந்தவர் என்ற முறையிலும் புஸ்பராஜாவின் இந்தப் பார்வை புரிந்துகொள்ள முடிவதாக இருக்கிறது. இன்றைக்கு இந்தியாவைக் குறை சொல்வது மாத்திரமே சாத்தியம் என்றான நிலையில் இவ்வளவு தெளிவாகத் தன் எண்ணத்தைப் பதிவு செய்யும் துணிவு ஆச்சரியமளிக்கிறது.

கும்பகோணத்தைச் சேர்ந்தவன் என்ற முறையில் ஈபிஆர்எல்எ·ப் இயகத்தின் சிலரை நான் நேரில் கண்டிருக்கிறேன். பள்ளி இறுதியிலும் கல்லூரித் துவக்கதிலும் இருந்த காலங்கள் அவை. அந்த வயதில் பத்மநாபாவை கும்பகோணத்தின் பல உணவுவிடுதிகளிலும் தெருக்களிலும் நான் கண்டிருக்கிறேன். 1981ல் கும்பகோணத்தில் நடந்த ஈபிஆர்எல்எ·ப் துவக்கவிழா பல நாட்களுக்கு என் பள்ளி நண்பர்கள் மத்தியில் பேசப்பட்டது. இதற்குத் தலைமைதாங்க லண்டனிலிருந்து பத்மநாபா என்று ஒருவர் வந்திருப்பதாகப் பல மாணவர்கள் பேசிக் கொண்டனர். அந்தவயதில் ஒரு இனம்புரியாத கதாநாயகன் மதிப்பு அவர்மீது எனக்கும் என் நண்பர்களுக்கும் இருந்தது உண்மை. நான் வசித்த கும்பகோணமும் (ஈபிஆர்எல்எ·ப்), என் உறவினர்கள் வசித்த ஒரத்தநாடு (பிளாட்), வேதாரண்யம்-கோடியக்கரை (புலிகள்), பல ஈழப் போராளிகளுக்கு அடைக்கலம் கொடுத்திருந்த நாட்கள் அவை. முதலில் மோட்டார் சைக்கிள் திருட்டு, தனி நபர்கள் வீட்டில் கொள்ளை, மிராசுதார் கொலை என்று துவங்கிய அனுபவம் பின்னர் பரபரப்பான பாண்டி பஜாரில் பிளாட் உமாமகேஸ்வரனைப் பிரபாகரன் சுட்டுக் கொன்றது சுட்டது, சூளைமேட்டில் பத்மநாபா கொலை என்று போராளிகள் ஒருவரை ஒருவர் அழித்துக் கொள்ள தமிழகத்தைத் தேரிந்தெடுத்தமை தொடர்பாகப் பொதுவில் போராளிகளின் மீது இருந்த ஆர்வம் சிதைந்துபோயிற்று. பல சமயங்களில் ஏன் இவர்கள் ஒருவரை ஒருவர் கொல்கிறார்கள் என்று தெரியாத நிலையில், அது ஏன் இங்கே நடக்க வேண்டும் என்ற கேள்வி எழத் தொடங்கியது. அந்த நிலையில் ஈழப் போராட்டங்களுடன் தங்களைச் இனங்காணப் பலர் தயங்கினர். பின்னர் ரஜீவ் காந்தி கொலையில் இதுவே எதிர்ப்புணர்வாக மாறியது. அந்தக் காலங்களில் இவர்களின் ஆரம்ப வரலாறுகள், பிரிவுகள், பிளவுகள் இவை தெரியாத நிலையில் போராளிகள் எமக்கு ஒரு புதிராகவே இருந்தனர். இப்படியரு விரிவான வரலாறு அந்த நாட்களில் கிடைத்திருக்கக் கூடாதா என்று தோன்றுகிறது. உண்மையில் சொல்லப்போனால், இன்றுவரை மொழியாலும் கலாச்சாரத்தாலும் ஒன்றுபடும் தமிழகத்தினர் - ஈழத்தினர்களுக்கு இடையில் ஒருவரை ஒருவர் ஆழப் புரிந்துகொள்ளும் ஆர்வமும் அதற்கான வாய்ப்புகளும் மிகவும் குறைவாகவே இருப்பதாகத் தோன்றுகிறது. இரு பிரிவினருக்கும் நம்பகத்தன்மை குறித்த விரக்தியும், இனம்புரியாத கவர்ச்சியும் மாறிமாறித் தலையெடுத்துக் கொண்டிருப்பது வருத்தத்திற்குரியது.

நான் ஜேவிபி மீது கொண்டிருந்த சில கருத்துக்களை இந்த நூல் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது. பொதுவில் தமிழர்களுக்கு முற்றும் எதிரானவர்களாகவே அவர்களை நான் மதிப்பிட்டிருக்கிறேன். இந்த நூலின் சில பகுதிகளில் ஜேவிபியினருக்குப் போராளிகளுடன் புரிதலுக்கான முயற்சிகள் இருந்ததாகத் தெரிகிறது. இதைப்பற்றித் தெரிந்து கொள்ள நான் இன்னும் வாசித்தாக வேண்டும். இதன் மறுபக்கமாக இந்த நூலை வாசிக்கத்துவங்குமுன் ஈழப் போராட்டத்தின் போக்கைக் கட்டுப்படுத்தியதில் புத்த பிக்குகளுக்கு இருந்த பங்கைப்பற்றி தெரிந்து கொள்ளமுடியும் என்று நம்பியிருந்தேன். ஆனால் இந்தக் கோணம் இந்நூலில் ஆராயப்படவில்லை. தமிழ்ப் போராளிகளுக்குள்ளே இருக்கும் குழு உணர்வுகள், மாற்றுக் கருத்துக்கு மதிப்பின்மை இவற்றில் தொடங்கி சாதாரண மக்களிடமும் பரஸ்பர நம்பகத்தன்மை நீர்த்துபோனது குறித்த ஆதங்கம்தான் இந்த நூலின் அடிநாதமாகப்படுகிறது. அந்த வகையில் மிகத்தெளிவாக அந்த அவலத்தின் தோற்றத்தையும் வளர்ச்சியையும் இந்த நூல் பதிவு செய்திருக்கிறது.

நூலின் குறைகளாக நான் காட்டிருப்பவற்றுக்கான புஸ்பராஜாவின் பதில் இந்த நூலின் முதல் அத்தியாயத்திலேயே இருக்கிறது. மிகத் தெளிவாக எழுதப்பட்டிருக்கும் "நான் சொல்ல நினைப்பது" அத்தியாயம் இந்த நூலின் நோக்கம், முக்கியத்துவம், இதற்கான எதிர்ப்பார்ப்புகள் இவற்றைச் சரியாக வரையறுக்கிறது. புஸ்பராஜாவே மாவை சேனாதிராஜா, பிரபாகரன் போன்றவர்களும் தங்கள் கோணத்தை முன்வைக்க வேண்டும் என்று வேண்டியிருக்கிறார். இது எனக்கும் மிகவும் அவசியமாகப்படுகிறது. இப்படிப் பல 'சாட்சியங்களில்' ஈரோஸ்-க்கும் பாலஸ்தீனிய விடுதலை இயக்கத்திற்கும் இருந்த தொடர்புகள், இந்தியாவின் ரா-உளவுப் படைக்கும் டெலோவிற்கும் நடந்த பரிவர்த்தனைகள், மாலத்தீவில் நடந்த ஆட்சிக் கவிழ்ப்பு, ஈரோஸ், ஈபிஆர்எல்எ·ப், ப்ளாட் இயக்கங்களுக்கு ரா அளித்த பயிற்சிகள், ரா-வுக்கும் பிரபாகரனுக்கும் இடையில் நடந்த பரிமாற்றங்கள், பிரேமதாசாவும் புலிகளும் இந்திய அமைதிப்படையைத் துரத்த இணைந்தமை, போன்ற விபரங்கள் துல்லியமாகப் பதிவு செய்யப்பட வேண்டும். சுயச்சார்பு மற்றும் இயக்கப்பரிவு கொண்ட பார்வைகளாயினும் ஆர்வமுள்ளவர்கள் அவற்றின் மூலம் தங்களுக்கான வரலாற்றுப்பார்வையை உருவாக்கிக் கொள்ளமுடியும். அந்த வகையில் புஸ்பராஜாவின் சாட்சியம் மிகவும் முக்கியமானது. துரதிருஷ்டவசமாக இதற்கு வாய்ப்பில்லாமல் அமிர்தலிங்கம், நீலன் திருட்செல்வம், பத்மநாபா, சிறிசபாரட்னம், உமாமகேஸ்வரன், மாத்தையா, சாம் தம்பிமுத்து போன்றவர்கள் சகபோராளிகளாலேயே அழிக்கப்பட்டுவிட்டனர்.

(ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம் - சி. புஸ்பராஜா, அடையாளம் 2003).



<b>நன்றி - வெங்கட்</b>


- cannon - 12-16-2004

அப்பு பி.பி.சி,

எங்கே எவனெவன் புலிகளுக்கு எதிராக எழுதியதை இங்கு கொண்டு வந்து ஒட்டுகிறீர்? உதுகளை விட பல கட்டுரைகள் பார்ப்பணியப் பத்திரிகைகளான "துக்ளக்". "இந்து", "தினமலர்", .... போன்றவற்றில் தொடர்ச்சியாக வந்து கொண்டிருக்கிறது! அதுகளையும் கொண்டு வத்து ஒட்டும்?


- cannon - 12-16-2004

அங்கே ஆதரவான குரல்கள் கேட்கத் தொடங்குதோ இல்லையோ எங்கடைகளிலை ஒண்டு இரண்டுக்கு வயிறெரியத் தொடங்கி விடும். பழையதுகளை கிண்டிக் கிண்டி சேறாக்கி நாற்றுவதில் ஒரு தனி இன்பம். ஈனப்பிறவிகள்!!!!!!


- kuruvikal - 12-16-2004

இல்ல அவர் தான் வாசிப்பவற்றை பகிர்ந்து கொள்கிறார்..நீங்கள் ஒன்று....அவர் எப்படியானவற்றை வாசிக்கிறார் என்பது தெரிய வேண்டாமோ... நெருப்புக்கு தேனீக்குத் தடை...இல்லாட்டி அதுகும் ஒட்டுவார்...ஒட்டினவர்தானே....அதுகள் அவர் விரும்பிப் படிப்பது...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea


- KULAKADDAN - 12-16-2004

எதி÷ தளத்தை பா÷ப்பது .... எதிாி எமக்கெதிராக பிரச்சாரம் செய்யிறானெண்டு அறிந்து பதிலடி கொடுக்க உதவாதோ


- Mathan - 12-17-2004

உபகண்ட மேலாதிக்கம்?

அருணின் வலைக்குறிப்பில் நான் ஏதோ கருத்துச்சொல்லப்போக அங்கே ஒரு முகமூடி ஏதோ ஒரு பிரச்சனையை இழுத்து என்னை இந்த குறிப்பை எழுத வைத்திருக்கிறார்

ஒருமுறை நான் தமிழ் மணம் தளத்தின் கருத்துப்பகுதியில், எம்மை இந்திய உபகண்டம் என்று பிரிக்க வேண்டாம் ஈழம் என்று குறிப்பிடுங்கள் என்று கோரிக்கை விடுத்திருந்தேன்.
காசி ஏதோ சில காரணங்களுக்காக இவ்வாறு வகைபிரிப்புச்செய்திருக்கலாம்.
அவர் நேர்மையான நோக்கத்துடன் தான் செய்திருக்கக்கூடும் என நம்புகிறேன்.

அனாலும் எனக்கு இந்தப் பிரிப்பு அந்தர உணர்வையே தந்தது.
இந்த உணர்வுக்கு ஒரு வலுவான அரசியல் பின்னணி இருக்கிறது.

முன்பு ஒருநாள், எனக்கு 5 அல்லது ஆறு வயதிருக்கலாம்.
நான் குடியிருந்த திருக்கோணமலையில் உவர்மலை எனப்படும் சற்றே மேடானபகுதியில், உயரமான ஓரிடத்திலிருந்து, திருக்கோணமலைத்துறைமுகத்தில் வந்திறங்கிய ஒரு கப்பலை ஊரே கூடி நின்று பார்த்துக்கொண்டிருந்தோம்.

அனைவரும் தமிழர்கள்.
அனைவர் முகத்திலும் மகிழ்ச்சி, வெற்றிக்களிப்பு.

"இந்தியன் ஆமி வந்து இறங்கிட்டாங்க"

தமிழ் விடுதலை இயக்கங்கள் மட்டில் இந்திரா காந்தியின் (உள் நோக்கத்துடனான) அரசியல் அணுகுமுறைகள்,
யாழ்ப்பாணத்தில் இலங்கை அரசினை எரிச்சலூட்டி உணவுப்பொதிகளை இந்திய வானூர்திகள் போட்டமை,
காலகாலமால இருந்த வரலாற்றுத்தொடர்புகள்,
தமிழ் நாட்டுடனான மிக நெருங்கிய சகோதர உணர்வு எல்லாம் சேர்ந்த உணர்வெழுச்சியை அந்த சின்ன வயதிலேயே நான் உணரும்படி ஊர்மக்கள் வெளிக்காட்டினார்கள்.

எம்மூர் மக்கள் மட்டுமல்ல. முழு ஈழத் தமிழரும்......

பிறகு சில வருடங்கள் கடந்த நிலையில், அதே திருக்கோணமலையில்,
உட்துறைமுக வீதி வழியாக அப்பாவுடன் மோட்டர்சைக்கிளின் பின்புறம் அமர்ந்தபடி உட்துறைமுக வீதி வழியாக போய்க்கொண்டிருந்தேன்.

உட்துறைமுக வீதி நெடுகலும் இருபக்கமும் சிறீ லங்கா இராணுவம் அணிவகுத்திருக்க,
இந்திய அமைதிகாக்கும் படையின், எரிச்சலூட்டும் நாற்றமடிக்கும் வாகனங்கள் தொடரணியாக போய்க்கொண்டிருந்தன.
அப்பா சற்றே தாமதித்து அந்த மகிழ்ச்சியான காட்சியை ரசித்தார்.
அப்பாமட்டுமல்ல, ஊரே, முழுத் தமிழீழமே இச்சம்பவத்தை ஆறுதல் பெருமூச்சோடு ரசித்தது.

"போய்த் துலைஞ்சான்கள் பேய்கள்.....!"

இந்த சம்பவங்களைவிட எமது மனநிலையை விளக்க வேறு சுருக்கமான இறுக்கமான வழி எனக்கு தெரியவில்லை.

இந்தியன் ஆமி என்றால், உயரமான தலைப்பாகை கட்டிய திடமான மனிதர்கள்.
தகரத்தில் அடைக்கப்பட்ட உணவுப்பொருட்கள் தருவார்கள்.
துப்பாக்கியை தொட்டுப்பார்க்கவிடுவார்கள்.
ஒருவித நாற்றம் அவர்கள் எல்லோர்மீதும் வீசும். (தூரத்தில் வரும்போதே அந்த நாற்றத்தை வைத்து கண்டுபிடித்துவிடுவோம்)
"ஏக், தோ, தீ" என்று தமது பாஷையை சொல்லித்தருவார்கள்.

இவ்வாறான படிமம்தான் திருக்கோணமலை நகரில் வளர்ந்த சிறுவனான என் மனதில் இருக்கிறது.
இதில் திருக்கோணமலை நகர் என்பதை அடிக்கோடிட்டுக்கொள்ளுங்கள். கூடவே சிறுவன் என்பதையும்.

இந்திய அமைதிகாக்கும் படையினர் செய்த கொலைகள், சித்திரவதைகள், கூட்டுக்கொலைகள், பாலியல் தாக்குதல்கள், துன்புறுத்தல்கள், மக்கள் மீதான எரிச்சலூட்டல்கள். எல்லாம் வளர்ந்த பிறகு ஒவ்வொன்றாக அறியக்கிடைத்தது.

திருக்கோணமலை நகர் (நகர் மட்டுமே. எல்லையோரங்களில் இனப்படுகொலைகள் நடைபெற்றுக்கொண்டிருந்தது) வரதராஜப்பெருமாளின் நிர்வாகத்தின் கீழ், புலிவாடை வீசாமல், மாகாணசபை அமைந்திருந்த "பிரச்சனை இல்லாத" நகரமாக இருந்ததாலும் நான் ஓர் ஆண் சிறுவனாக இருந்ததாலும் என் மனதில் நல்ல படிவுகள் வந்ததேதவிர இந்திய அமைதிகாக்கும் படை என்பது இராணுவ அராஜகத்தின் மொத்த வடிவம்.

நியாயமான கோரிக்கைகள் வைத்து உண்ணாவிரதமிருந்த திலீபன் இறந்துபோகும் வரையில்,
அகிம்சையால் விடுதலை பெற்றதாக கூறிக்கொள்ளும் பாரதத்தின் எந்தவொரு அதிகாரியும் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை.

அது காந்தியாரின் முகத்தில், தமது தேசபிதாமீது தாமே பூசிய பீ.
அவர்கள் செய்த பாலியல் தாக்குதல்கள், .............?

மக்களை வரிசையாக படுக்கவைத்தூ, அவர்கள் மீது கனரக வாகனங்கை ஏற்றி செத கூட்டுக்கொலைகள்,
சித்திரவதைகள் எல்லாம்
தமது புனித கங்கைகளில் அவர்களே ஊற்றிய மனித ரத்தம்.

இவர்களுக்கு, ஆயிரக்கணக்கான மனிதப்படுகொலைகளை ஆசீர்வதித்துக்கொண்டிருந்த ரஜீவ்காந்தி எனும் கோர சிந்தனைகள் கொண்ட சந்தர்ப்பவாதியின் சிதறுகை என்பது மனிதாபிமானமற்ற செயலாய்ப் பட்டிருக்கிறது.

மனிதப்படுகொலைகள் எதுவும் நியாயப்படுத்தப்படக்கூடியதல்ல.

ரஜீவ் காந்தியின் கொலைபற்றிய உண்மைகள் யாருக்கும் முழுமையாகத்தெரியாது.

புலிகளின் தற்கொடைப்போராளியான பானுவினால் அவர் கொலை செய்யப்பட்டார் என்பது உண்மையாக இருந்தால், அந்த பானு வேறு யாருமில்லை,

பாலியல் தாக்குதலுக்குள்ளான ஆயிரக்கணக்கான பெண்களின், இந்திய அரசால் விதவைகளாக்கப்பட்ட லட்சக்கணக்கான பெண்களின்,
பாரதத்தாயினால் ஆசீர்வதிக்கப்பட்ட சித்திரவதைகளின்போது கொல்லப்பட்ட பலலட்சம் இளைஞர்களின் பாசமிகு தாய்மார்களின் பிரதிநிதி.

அவளது கோபம், தன்னைக்கொடுத்து, ஒரு கொடூர அரசியல் சந்தர்ப்பவாதியை கொலைசெய்யுமளவுக்கு போயிருக்குமானால், அதனை நான் நியாயப்படுத்துவேன், நியாயப்படுத்துவேன்,
நியாயப்படுத்தியே தீருவேன்.

இத்தனைக்கும் நானொரு தீவிர விடுதலைப்புலி ஆதரவாளனோ, தமிழை , தமிழரை காப்பற்ற வெளிக்கிட்ட தேசியவாதியோ அல்ல.
அதற்கு நேர்மாறானவன்.

சார்க் ஒன்றியம் ஒன்று அமரிக்க மேலாதிக்கத்துக்கெதிராக தன்னை கட்டியெழுப்புமானால், அதில் சோஷலிச தமிழீழமும் சுய நிர்ணயம் கொண்ட தேசமாக தன்னை இணைத்துக்கொள்ள வேண்டும் என்பதை கடுமையாக வலியுறுத்தும் அரசியல் நிலைப்பாடுடையவன்.

ஒருமுறை இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நடுவண் குழு உறுப்பினரான திரு Prakash Karat உடன் தனிப்பட உரையாடிய பொழுது, இந்திய இடதுசாரிக்கட்சி ஒன்று ஈழத்தமிழர்பற்றிய எத்தனை பிழையான எண்ணங்களை கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்தேன்.

தமிழீழ இடதுசாரிகள் இந்தியா எமது நாட்டில் கால்வைப்பதை விரும்பவில்லை என்பதை அவரால் புரிந்துகொள்ளவே முடியவில்லை.

ஆனால் அதுதான் உண்மை.

அமரிக்க பேரரசுவாதத்துக்கு எதிரான செயற்பாடாகத்தான் இந்தியாவுடனான "சேர்ந்தியங்குதலை" நாம் காண்கிறோமேதவிர வேறு காரணங்கள் இல்லை.

எமக்குத்தெரியும். இந்தியா தன் மேலாதிக்க நலன்களில் மட்டுமே அக்கறை கொண்ட பிராந்திய வல்லரசு என்பது.

அவருக்கு , ஏன் தமிழீழ இடதுசாரிகள் தமிழீழ தேசியத்தை முழுசாக உதறித்தள்ளுவதற்கு இன்றைக்கு தயாரில்லை என்பதை புரிந்துகொள்ள முடியாது.

"ஆட்சிமாறினாலும் மாறாத இந்திய பிராமணீய கட்டமைப்பு" என்ற எனது சொல்லாடல் அவரது முகத்தை சுருங்கவைத்ததையும் நான் உணர்ந்தேன்.(bramin establishment or whatever you wish to call என்று இழுத்தார்)

பேராசிரியர் சிவத்தம்பி இந்தியாவை எதிர்த்து மூச்சுவிடுவதில்லை. அப்படி செய்வது நல்லதல்ல என்பது அவரது கருத்து. சிவத்தம்பி மட்டுமே ஈழத்து இடதுசாரி அல்ல. இதில் மட்டுமே யை அழித்துவிடலாம்.

பேரரசுவாதத்துக்கு எதிராக சார்க் ஒன்றியத்துடன் சேர்ந்தியங்குதலை நாம் விரும்புகிறோம். இந்தியாவின் ஒரு மாநிலமாக மாறுவதற்கு அல்ல.

நாம் தனி தேசிய இனம். எமக்கென்றொரு தேசம் இருக்கிறது. இந்தியாவின் சுயனலமிக்க சமஷ்டிக் கதைகளுக்கு மயங்க நாம் தயாராயில்லை.

கருணாவை இன்றைக்கும் தூக்கிப்பிடிக்கும் தமிழக சஞ்சிகைகள் அனைத்தும் இந்த மேலாதிக்க வாதிகளின் கைக்கூலிகள்தான். கிழக்கிலங்கையைச்சேர்ந்தவன் என்ற வகையிலும், யாழ் மேலாதிக்கத்தின் மீதான கடும் கசப்புணர்வு கொண்டவன் என்றவகையிலும் நான் இதை சொல்கிறேன்.

கருணாஎன்பது இன்று எதுவுமில்லை.
இன்னொரு ப்ளொட்மோகன் அவ்வளவுதான்.

கருணாவால் யாழ்மேலாதிக்கத்தைவைத்து அரசியல் பண்ண முடிந்திருக்கும் அளவுக்கு அப்பிரச்சனைமீது கவனக்குறைவாக இருந்திருக்கிறார்கள்புலிகள் என்பதுதான் பிரச்சனை.

ரஜீவ்காந்தி கொலை, அல்லது பழிவாங்கல், அல்லது அவருக்கான மரண தண்டனை எதுவானாலும்,
அதற்காக எமது கைகளின் கறையை நாம் கழுவ தயாராக இருக்கிறோம்.

பாரதம் செய்த கொலைகளின் ரத்தத்தை அவர்கள் எங்கே கழுவுவார்கள்?

எமது சுய நிர்ணய உரிமையை மதிக்கத்த இந்திய பிராமணீய கட்டமைப்பை நாமும் மதிப்பதாயில்லை.

மக்கள் போராட்டமென்பது நாட்டின் , படைய்களின் எண்ணிக்கையில் இல்லை.
அது நீதி சார்ந்த விஷயம்.

Thanx: Mayooran

http://mauran.blogspot.com/2004/11/blog-po...3418472082.html


- Mathivathanan - 12-17-2004

kuruvikal Wrote:இல்ல அவர் தான் வாசிப்பவற்றை பகிர்ந்து கொள்கிறார்..நீங்கள் ஒன்று....அவர் எப்படியானவற்றை வாசிக்கிறார் என்பது தெரிய வேண்டாமோ... நெருப்புக்கு தேனீக்குத் தடை...இல்லாட்டி அதுகும் ஒட்டுவார்...ஒட்டினவர்தானே....அதுகள் அவர் விரும்பிப் படிப்பது...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
உங்களின்ரை பத்திரிகைச்சுதந்திரம் பற்றி சர்வதேச பத்திரிகையளிலை எழுதித்தள்ளுறாங்கள்.. அதுக்கு உதாரணம் தேவைதானே..
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Mathan - 12-18-2004

இந்தியமாயை

<b>எழுதியவர் - யதீந்திரா</b>


இந்தியா எங்களது தந்தை நாடு; அது எங்களை ஒரு போதும் கைவிடாது என்பதெல்லாம் எங்களது பழைய நம்பிக்கை. பின்னர் இந்தியாவின் உண்மை முகம் அறிந்தபோது எங்களது கனவுகள் கலைந்து போயின. இந்தியாவை மையப்படுத்திய அரசியல் கனவுகளிலிருந்து யதார்த்ததிற்கு திரும்பவேண்டிய அவசியத்தை காலம் உணர்த்தியது. அரசியல் கனவுகள் கலைந்துவிட்டாலும் சில பழைய ஜென்மங்கள் இந்தியா குறித்த மாயைகளிலிருந்து விடுபட்டதாகத் தெரியவில்லை. சமீபத்தில் eye அலைவரிசையில் கம்ப வியாபாரி; மன்னிக்க வேண்டும் கம்பவாரிதி என்று சிலரால் அழைக்கப்படும் திரு.ஜெயராஜின் நேர்காணலொன்று இடம்பெற்றது. அதில் “ஈழத்தில் கவிஞர்கள் பெரிதாக வளரவில்லை. இருக்கிறார்கள்தான் ஆனாலும் தமிழகத்தோடு ஒப்பிடுமிடத்து இங்கு கவிஞர்கள் இல்லை. அதனால்தான் நாங்கள் தமிழகத்திலிருந்து கவிஞர்களை அழைக்கின்றோம்.” என்று தனது கண்டுபிடிப்பை பறைசாற்றியிருக்கிறார். மனச்சாட்சிக்கு விரோதமில்லாமல் சொல்லுங்கள் இந்த ஆண்டிற்கான சிறந்த நகைச்சுவையாளருக்கான விருதை நாம் ஜெயராஜ்ற்கு வழங்காமல் இருப்பது நியாயமாகுமா? இதுவரை இவரால் நடாத்தப்பட்ட கம்பன் கழக விழாவின்போதான கவியரங்குகளில் ஈழத்து கவிஞரொருவர் தலைமைதாங்கிய வரலாறில்லை. நமது கவிஞர்கள் சிலரும் இந்தியத் தலைமையின்கீழ் அடக்கமாக வாசித்து வந்ததுமுண்டு. இன்னும் வாசிப்பதற்கு தயாராக இருக்கிறார்கள் என்பது வேறுவிடயம். எனது இலக்கிய நன்பரொருவர் கூறினார் அங்கு தலைமைதாங்குவோருக்கு இந்தியர் என்ற தகுதியைத் தவிர வேறு எந்தத் தகுதியிருப்பதாக் கொள்ளமுடியாது. அதே வேளை அந்த நன்பர் ஜெயராஜ் பற்றிச் சொல்லும்போது அவர் தன்னையொரு இலக்கியச் சன்னிதானமாகக் கருதிக் கொண்டிருக்கிறார். அதனது நீட்சிதான் இப்படியான அபத்தங்களெல்லாம் என்றார்.

இதே போன்று வேறு சிலரும் அறைகளுக்குள் இருந்தவாறு ஈழத்து கவிதையின், இலக்கியத்தின் எதிர்காலம் குறித்து ஆருடம் கூறி வருவதையும் நான் கேட்டிருக்கிறேன். இவ்வாறானவர்களுக்கு புறச் சூழல் குறித்து எந்தவிதமான அறிவோ உணர்வோ கிடையாது. தங்களது சாளரத்தின் வழியாக ஒரு போதும் எட்டிப் பார்ப்பதற்கு விரும்பாதவர்கள் இவர்கள்.
முதலில் இலக்கியம் என்றாலே அது கம்பராமாயாணம்தான், என்று நினைக்கும் ஜெயராஜின் குற்றச்சாட்டைப் பார்ப்போம். ஈழத்தில் கவிஞர்கள் இல்லையென்றால் புதுவைஇரத்தினதுரை, வ.ஜ.ச.ஜெயபாலன், சு.வில்வரெத்தினம், சி.சிவசேகரம், சேரன், சேலைக்கிளி, மு.பொன்னம்பலம், மு.புஸ்பராஜன் இவர்களெல்லாம் யார்? இன்று புதிய தலைமுறையில் எத்தனையோ கவிஞர்கள் உருவாகியிருக்கிறார்கள். குறிப்பாக போராளிகளுக்குள்ளிருந்து எத்தனையோ கவிஞர்கள் உருவாகியிருக்கிறார்கள். புலம்பெயர் சூழலில் பல்வேறு கவிஞர்கள் தோன்றியிருக்கிறார்கள். வேற்று மொழிகளிலேயே கவிதையாக்கும் ஆற்றல் பெற்றிருக்கிறார்கள். ஈழத்து இலக்கியத்தின் சமகாலப்போக்கு பற்றி எந்தவிதமான அறிவுமில்லாமல் கருத்துக் கூறுவது ஒரு வகையில் சிறுபிள்ளைத்தனமானது. இதில் வேடிக்கை என்னவென்றால் தமிழகத்தின் கவிஞர்களும் (கவனிக்க சினிமாக் கவிஞர்கள் அல்ல) உயரிய இலக்கிய கர்த்தாக்களும் கவிதை ஈழத்திலேயே வளர்ந்திருப்தாகக் கூறிவருகின்றனர். அதற்கு காரணம் எமது கவிதைகள் போராட்டத்தின் நீட்சியாக இருப்பதும் மானுடவிடுதலையை அடித்தளமாகக் கொண்டிருப்பதும்தான். இன்றைய சூழலில் தலித்திய அடிப்டையிலும் பெண்விடுதலை நோக்கிலும் எழுதப்படும் கவிதைகளைத் தவிர்த்து பார்த்தால் தமிழகத்தின் கவிதைகள் பற்றி பெரிதாக சொலவதற்கு ஒன்றமில்லை. இது பற்றியெல்லாம் ஜெயராஜ்ற்கு தெரிந்திருக்க நியாயமில்லை. பாவம் அவருக்கு கம்பராமாயணத்தை மனனம் செய்வதற்கே நேரம் போதுமானதாக இருக்கும். அதனை நாம் பிழையாகச் சொல்லுதலும் கூடாது. செய்யும் தொழிலே தெய்வம்.
ஒருவேளை சிலரால் தமிழ்காப்போனாக உளரப்படும் ஜெயராஜ் ஜயா வைரமுத்து வாலி பழனிபாரதி தரத்தில் கவிஞர்களை மதிப்பிடுகிறாரோ தெரியவில்லை. அப்படியானால் நிட்சயமாக ஈழத்தில் கவிஞர்கள் வளரவில்லை என்பதை நாம் ஏற்கத்தான் வேண்டும்.


2
பொதுவாக நமது சூழலில் ஒரு வகையான இந்தியமாயை நிலவுகிறது. அவர்களிடமிருந்து வருவதெல்லாம் அற்புதங்கள் என்னும் அறியாமை நிலவுகிறது. குறிப்பாக சில வியாபார நலன் கருதிச் செயற்படும் ஊடகங்களால் அவ்வாறானதொரு கருத்து கட்டமைக்கப்படுகிறது. குறிப்பாக சக்தி என்னும் வியாபார ஊடகத்தின் வருகையினுடனேயே இந்நிலைமை முன்னரைக்காட்டிலும் வலுவடைந்தது. இவ் ஊடகம் ஈழத்துச் சூழலில் தமிழகத்தின் திராவிட வழித்தோன்றல்களால் நடாத்தப்படும் சண்-தெலைக்காட்சியின் பிரதி விம்பமாகத் தொழிற்பட்டது தொழிற்படுகிறது. உண்மையில் சக்திக்கு என்று எந்தவிதமான தனித்துவமோ சுயசிந்தனைத்தேடலோ கிடையாது. இன்றுவரை இதுதான் நிலை. முழுக்க முழுக்க தமிழக்ததையே சார்ந்திருக்கிறது. தமிழக சினிமாப் பாடல்களும் தமிழக மெகா (எ.கா-அண்ணாமலை) தொடர்களும் இல்லாவிட்டால் சக்தியில்லை. சக்தி நிகழ்ச்சிகளை நடாத்துவதற்குக் கூட தமிழக சினிமா நடிகைகளையும் பாடகிகளையும் அவ்வப்போது பயன்படுத்திவருகிறது. ஓ-போடு இளையகானங்கள் தீம்திமிதக போன்ற நிகழ்ச்சிகளை உதாரணங்களாக குறிப்பிடலாம். ஓ-போடு போன்ற உதவாத நிகழ்சிசிகளை நடாத்த சினிமா நடிகைகளை பயன்படுத்துவது வேறுவிடயம். இதில் வேடிக்கை என்னவென்றால் இறுதியாக நடாந்த பாராளுமன்ற பொதுத் தேர்தல் பற்றி மதிப்பிடுவதற்கு இந்திய அவுட்லுக் பத்திரிகையின் முன்னாள் செய்தி ஆசிரியர் பன்னீர் செல்வன் என்பவர் அழைக்கப்பட்டார். ஈழத்து வாசகர்கள் முன்னாள் இந்தியா டுடேயின் ஆசிரியர் மாலனிடம் தமிழ்தேசியம் பற்றி விளக்கம் கேட்கும் துர்பாக்கிய நிலை ஏற்பட்டது. இது ஒரு வகையில் இந்தியமேலாதிக்கத்தை திணிப்பதற்கான முகவர் தெழிற்பாடாகும். உண்மையில் இது பலரும் பார்க்கத் தவறுகின்றதொரு விடயமாகும். இதைத்தான் ஜெயராஜ்ஜூம் செய்து வருகிறார். இந்த விடயத்தில் ஜெயராஜ்ஜை சக்தியின் தந்தை எனச் சொல்லலாம். ஆனால் காத்திரமான குறிப்பாக ஈழத்து தமிழரில் அக்கறைகொண்ட தமிழக சிந்தனையாளர்களை இலக்கியகர்த்தாக்களை அழைப்பதும் கௌரவிப்பதும் அவசியமானதுதான்.

3
நம்மவர்கள் சிலர் தென்னிந்திய மாயையில் கிடக்க தமிழகத்தின் சிந்தனையாளர்கள் சிலர் தமிழ் சிங்கள முரண்பாடும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட போர்ச்சூழலும் தமிழ் அறிவுத்துறையைப் பொறுத்த வரையில் பேரிழப்பெனக் கூறிவருகின்றனர். சமீபத்தில் ஈழம் வந்திருந்த SVR என அழைக்கப்படும் S.V.இரைஜதுரை அவர்கள் ஈழத்தின் போர்ச் சூழல் தங்ளைப் பொறுத்தவரையில் சிந்தனைத்துறையில் பெரியதொரு இடைவெளியை ஏற்படுத்தி விட்டதாகக் கூறினார். ஒரு கைலாசபதி போன்றோ ஒரு கா.சிவத்தம்பி போன்றோ அல்லது எ.ஜே.கனகரட்ணா, நுஃமான் போன்றோ இன்றுவரைக்கும் தங்களது சூழலில் ஆட்கள் இல்லை என்றார். போர்ச் சூழலால் சிந்தனைத்துறையில் கவனம் செலுத்தமுடியாமை, புல்ப்பெயர்வு போன்றவற்றால் ஏற்பட்ட இடைவெளி என்பவை தமிழ் ஆறிவுத்துறையைப் பொறுத்தவரையில் பேரிழப்பாகும். மாக்சியரான திரு.S.V.இரைஜதுரை அவர்கள் தமிழகச் சூழலின் மிக முக்கிய ஆழுமைகளில் ஒருவராவார்.
இது சில திருந்தாத ஜெனமங்களுக்கு விளங்கப் போவதில்லை. உண்மையில் சிங்களத்தின் ஒடுக்குமுறையும் அந்த ஒடுக்குமுறைக்கு எதிராக ஒன்றுபடவேண்டிய தேவைப்பாடும் தத்துவார்த்த சிந்தனைப் போக்குகளில் கவனம் செலுத்த முடியாத நிலையைத் தோற்றுவித்துவிட்டது. நாம் ஒரு சிந்தனை வறுமைக்கு ஆட்பட்டோம். குறிப்பாக தமிழ் ஆய்வுச் சூழலில் பெரியதொரு வறுமை நிலை தோன்றியது எனலாம். ஆனால் இது இயாலாமையால் தோன்றிய வறுமை நிலையல்ல புறச்சுழலால் ஏற்பட்ட நிலை. இது மாற்றிமைக்கக் கூடிய ஒன்றே. இலக்கியத்தைப் பொறுத்தவரையில் இந்த நிலை ஏற்படவில்லை குறிப்பாக கவிதைத்துறையில் சிறந்ததொரு வளர்ச்சி ஏற்பபட்டிருக்கிறது. அது எத்தகைய வளர்ச்சி என்பதை இலக்கியமும், ஈழத்து இலக்கியச் சூழலும் அறிந்தோர் அறிவர். சிறுபிள்ளைத்தனமான ஜென்மங்களுக்காக இதனை விளக்கிக் கொண்டிருக்க முடியாது. அந்த நேரத்தில் உருப்படியாக எதையும் செய்துவிடலாம்.. இப்படியும் சிலர் நமது சூழலில் இருக்கிறார்கள் என்பதையும் குறிப்பாக அவர்கள் கருத்துச்சொல்லும் அளவிற்கு பெரியமணிதர்களாக வலம்வருகிறார்கள் என்பதனையும் இனங்காட்டுவதே இச் சிறு குறிப்பின் நோக்கம்.


நன்றி - அப்பால் தமிழ்


- manimaran - 12-18-2004

cannon Wrote:அங்கே ஆதரவான குரல்கள் கேட்கத் தொடங்குதோ இல்லையோ எங்கடைகளிலை ஒண்டு இரண்டுக்கு வயிறெரியத் தொடங்கி விடும். பழையதுகளை கிண்டிக் கிண்டி சேறாக்கி நாற்றுவதில் ஒரு தனி இன்பம். ஈனப்பிறவிகள்!!!!!!

வெறுமனே புலி எதிர்ப்பு ஒன்றையே குறியாக கொண்டு எழுதும் தமிழக எழுத்தாளர்களை விடுத்து மற்றைய தமிழக எழுத்தாளர்கள் என்ன சொல்கின்றார்கள் அல்லது எண்ணுகின்றார்கள் என்பது பற்றி நாங்கள் அறிந்திருத்தல் அவசியமானது. அப்போதுதான் நாங்கள் அவர்கள் கருத்துக்கு பதிலளிக்கவோ அல்லது எதிர்காலத்தில் அவர்களை எம்பால் இழுக்கக்கூடியதாகவோ செயலாற்ற முடியும்.

தமிழ்தேசியம் மீதான எமது பற்று அல்லது புலிகள் மீதான நேசம் என்பது எமது இனத்தின் ஆக்கபூா்வமான வளா்ச்சிக்கு உதவுவது என்பதனை குறியாக கொண்டதொன்றே. மாறாக அது உணா்ச்சிவசப்பட்ட வெறித்தனமாக மாறுமாயின் புலிகளது மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழின வீழ்ச்சிக்கே வழிகோலும். புலிகளது செயல்கள் எப்போதாவது வழிதவறிப்போகுமாயின் அதனை புரிந்து அவா்களை ஆக்கபூா்வமான வழியில் விமா்சித்தல் நிச்சயம் எல்லோரது வளா்ச்சிக்கும் வழி வகுக்கும்.


- Mathan - 12-19-2004

manimaran Wrote:
cannon Wrote:அங்கே ஆதரவான குரல்கள் கேட்கத் தொடங்குதோ இல்லையோ எங்கடைகளிலை ஒண்டு இரண்டுக்கு வயிறெரியத் தொடங்கி விடும். பழையதுகளை கிண்டிக் கிண்டி சேறாக்கி நாற்றுவதில் ஒரு தனி இன்பம். ஈனப்பிறவிகள்!!!!!!

வெறுமனே புலி எதிர்ப்பு ஒன்றையே குறியாக கொண்டு எழுதும் தமிழக எழுத்தாளர்களை விடுத்து மற்றைய தமிழக எழுத்தாளர்கள் என்ன சொல்கின்றார்கள் அல்லது எண்ணுகின்றார்கள் என்பது பற்றி நாங்கள் அறிந்திருத்தல் அவசியமானது. அப்போதுதான் நாங்கள் அவர்கள் கருத்துக்கு பதிலளிக்கவோ அல்லது எதிர்காலத்தில் அவர்களை எம்பால் இழுக்கக்கூடியதாகவோ செயலாற்ற முடியும்.

தமிழ்தேசியம் மீதான எமது பற்று அல்லது புலிகள் மீதான நேசம் என்பது எமது இனத்தின் ஆக்கபூா்வமான வளா்ச்சிக்கு உதவுவது என்பதனை குறியாக கொண்டதொன்றே. மாறாக அது உணா்ச்சிவசப்பட்ட வெறித்தனமாக மாறுமாயின் புலிகளது மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழின வீழ்ச்சிக்கே வழிகோலும். புலிகளது செயல்கள் எப்போதாவது வழிதவறிப்போகுமாயின் அதனை புரிந்து அவா்களை ஆக்கபூா்வமான வழியில் விமா்சித்தல் நிச்சயம் எல்லோரது வளா்ச்சிக்கும் வழி வகுக்கும்.

சரியாக சொன்னீர்கள்


- kuruvikal - 12-19-2004

manimaran Wrote:
cannon Wrote:அங்கே ஆதரவான குரல்கள் கேட்கத் தொடங்குதோ இல்லையோ எங்கடைகளிலை ஒண்டு இரண்டுக்கு வயிறெரியத் தொடங்கி விடும். பழையதுகளை கிண்டிக் கிண்டி சேறாக்கி நாற்றுவதில் ஒரு தனி இன்பம். ஈனப்பிறவிகள்!!!!!!

வெறுமனே புலி எதிர்ப்பு ஒன்றையே குறியாக கொண்டு எழுதும் தமிழக எழுத்தாளர்களை விடுத்து மற்றைய தமிழக எழுத்தாளர்கள் என்ன சொல்கின்றார்கள் அல்லது எண்ணுகின்றார்கள் என்பது பற்றி நாங்கள் அறிந்திருத்தல் அவசியமானது. அப்போதுதான் நாங்கள் அவர்கள் கருத்துக்கு பதிலளிக்கவோ அல்லது எதிர்காலத்தில் அவர்களை எம்பால் இழுக்கக்கூடியதாகவோ செயலாற்ற முடியும்.

தமிழ்தேசியம் மீதான எமது பற்று அல்லது புலிகள் மீதான நேசம் என்பது எமது இனத்தின் ஆக்கபூா்வமான வளா்ச்சிக்கு உதவுவது என்பதனை குறியாக கொண்டதொன்றே. மாறாக அது உணா்ச்சிவசப்பட்ட வெறித்தனமாக மாறுமாயின் புலிகளது மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழின வீழ்ச்சிக்கே வழிகோலும். புலிகளது செயல்கள் எப்போதாவது வழிதவறிப்போகுமாயின் அதனை புரிந்து அவா்களை ஆக்கபூா்வமான வழியில் விமா்சித்தல் நிச்சயம் எல்லோரது வளா்ச்சிக்கும் வழி வகுக்கும்.

மணிமாறன்...உங்கள் கருத்தை ஏற்கவோ இல்ல மறுக்கவோ முதல் உஙளிடம் ஒரு கேள்வி...அதெப்படி புலிகள் எதிர்ப்பொன்றை குறியாகக் கொண்டு எழுதுபவர்கள் என்று ஒரு தரப்பைப் பிரிப்பீர்கள்...இனங்காட்டுவீர்கள்...அவர்களுக்கும் புலிகளின் வளர்ச்சியில் அக்கறை கொண்ட... உங்கள் கண்ணுக்குத் தெரியும் புலி எதிர்ப்பு ஆரோக்கிய விமர்சனகாரர்களையும் கொஞ்சம் வேறுபடுத்தி அடையாளப்படுத்துக்கள் பார்க்கலாம்...இங்கு பலரும் இப்ப புலி எதிர்ப்பென்பது மக்களிடம் எடுபடாது என்பதற்காய் புலி வளர்ச்சி... ஆரோக்கிய விமர்சனம் என்று தங்கள் காழ்புணர்ச்சிகளைக் கொட்டவே வழி வகுக்கின்றனர்....!

இந்தியா என்ன காரணத்துக்காக தமிழர் போராட்டத்தை வளர்த்ததோ...அதே காரணம் தன் கைவிட்டுப் போகும் என்று உணர்ந்ததும் நசுக்க வெளிக்கிட்டது...எது புகழ்ந்ததோ...அது தூற்றியது.... தூற்றிக் கொண்டேதான் இருக்கிறதே தவிர புலிகள் பக்க நல்லதுகளை உலகமே காணும் போது இந்தியா காணாமலேதான் இருக்கிறது...ஒரு ஒப்புக்குக் கூட அதைச் சொல்வதாக இல்லை.... இது ஒன்றும் புலிகளின் வளர்ச்சியில் அக்கறை கொண்டு வரும் விமர்சனங்களாக கருத முதல் புலிகளின் வளர்ச்சியால் எழுந்த அச்சம் காரணமாக விதைக்கபட்ட பொய்களின் அம்சங்களின் விளைவுகளாகவே தென்படுகிறது....!

புலிகளை விமர்சிப்பதென்று தொடர்ந்தும் பழைய கட்டுக்கதைகளையே அவிழ்க்கிறீர்களே தவிர நிகழ்காலம் எதிர்காலம் என்று எதையும் யாரும் ஆராய்ந்து நடுநிலை நின்று எழுதுவதாகத் தெரியவில்லை...புலிகளை வெறுப்பவர்களில் பலர் உங்களைப் போலத்தான் போர்வைக்குள் இருந்து கொண்டு வெறுக்கிறார்கள்...புலி வளர்ச்சிக்குதான் மாற்றுக் கருத்து என்றவர்கள் ஈழத்தில் என்ன செய்கிறார்கள்...இதெல்லாம் மக்களை மந்தைகள் என்று எண்ணி விதைக்கப்படும் கருத்துக்கள் தங்களை நல்லவர்கள் போலக் காட்டிக் கொண்டு நஞ்சை விதைக்கும் கொடியவர்களாகவே உள்ளனர்....!

உண்மையான வளர்ச்சியை விரும்புவனின் விமர்சனம்...நல்லதையும் ஆராய்ந்து முன்னேற்ற வழி சொல்லும்..கெட்டத்தை இனங்காட்டி ஒதுக்கச் சொல்லும்...ஆனால் இங்கு எதிலும் நல்லதை ஆராய்ந்து வளர்க்க வழி சொன்னதாய் தெரியவில்லை...கெட்டது என்பதும் சரியானது இனங்காட்டப்படவில்லை...பழைய கட்டுக்கதைகளுக்கு இப்பவும் புத்துயிர் கொடுப்பதன் நோக்கம் என்ன...அதனால் இப்ப என்ன பயன் கிடைக்கப் போகிறது புலிகளுக்கும் சரி மக்களுக்கும் சரி...????!

ஐந்து வருடத்துக்கு முதல் ஜெயலலிதா செய்த ஊழல் கண்டு எதிர்த்தவர்கள் தான் பிறகு ஐந்தாண்டுக்குப் பின் மீண்டும் ஜெயலலிதா காலில் விழ்கிறார்கள்...இவர்களா..ஈழத்தமிழரின் புலிகளின் யதார்த்தச் சூழலை முற்றாக விளங்க முற்படுவர்...????! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea


- Mathan - 12-19-2004

நன்றி இந்தியா

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட இருந்தது.

இது குறித்து கருத்து வெளியிட்டிருந்த விடுதலைப்புலிகள் இந்த ஒப்பந்தம் தமிழர் உணர்வுகளுக்கு விரோதமாக அமையும் என்பதுடன் சமாதான காலத்தில் மக்களை அச்சமூட்டுவதாய் அமையும் எனவும் தெரிவித்திருந்தனர்.

என்னுடைய இதற்கு முன்பதான பதிவொன்றில் இந்தியா இவ்வாறான பாதுகாப்பு ஒப்பந்தத்தை மேற்கொண்டாலும் பரவாயில்லை ஆனால் அதற்கு முன்பாய் சமாதானப் பேச்சுக்களுக்கு இலங்கை அரசை வற்புறுத்தும் நிபந்தனையூடாக இப் பாதுகாப்பு ஒப்பந்தத்தை நிறைவேற்றினால் ஓரளவுக்காவது உபயோகமாயிருக்கும் என குறிப்பிட்டிருந்தேன்.

இதற்கிடையில் இப் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் இந்திய அரசு கையெழுத்திடாது என இந்திய பிரதமர் மன்மோகன்சிங் அவர்கள் உறுதியளித்திருக்கிறார். இவ்வுறுதி மொழியை அவர் திரு வைகோ அவர்களிடம் கொடுத்திருக்கிறார்.

இது வழமையான அரசியல் வாதிகளின் வாக்குறுதியாக இருக்காது என நம்புவதுடன், அந்த நம்பிக்கையுடனேயே இந்தியாவிற்கு நன்றி தெரிவிக்கிறோம்.

இலங்கையில் சமாதானம் மலர, நியாயமானதும் நிலையானதுமான சமாதானத்திற்கு ஆதரவும் அழுத்தமும் வழங்கும் உலக நாடுகளுடன் இந்தியாவும் இணைய வேண்டும்.

நன்றி - சயந்தன்