Yarl Forum
பொதுவறிவுப் போட்டி - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: பொதுவறிவுப் போட்டி (/showthread.php?tid=487)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11


- Puyal - 03-27-2006

கறுப்பி முயற்சிக்குப் பாராட்டுக்கள் ஆனால் ஆசிய நாடு அல்ல


- Puyal - 03-27-2006

தென்னுலகப் பிரிட்டன் என அழைக்கப்படும் நாடு எது?

பதில்: நியுூஸிலாந்து.


- Puyal - 03-27-2006

பின்வரும் நு}ல்களை எழுதிய ஆசிரியர்கள் யார்?

1. அந்த நாள்:

2. அகல்விளக்கு:

3. இயேசு காவியம்:

4. சிற்பியின் நகரம்:

5. சீறாப்புராணம்:

6. திரிகடுகம்:

7. சொர்க்கத்தின் நிழல்:

8. தண்ணீர் தேசம்:

9. சுகுண சுந்தரி:

10. பார்த்திபன் கனவு:


- stalin - 03-27-2006

2...அகல் விளக்கு -அகிலன்


- stalin - 03-27-2006

1.அந்த நாள்-ஜெயகாந்தன்


- Rasikai - 03-27-2006

பார்த்திபன் கனவு - கல்கி
அந்த நாள் - எஸ் பாலச்சந்தர்
சீறாப்புராணம் - உமறுப் புலவர்
திரிகடுகம் - நல்லாதனார்


- Puyal - 03-27-2006

தோழமையுடன் ஸ்ராலினுக்கு

பதில் இரண்டும் தவறாக உள்ளது. மீண்டும் முயற்சிக்கவும்.


- Puyal - 03-27-2006

ரசிகை தங்களுடைய விடைகளில் முதலாவது வினாவிற்கான (அந்த நாள்) விடை தவறாக உள்ளது. மீண்டும் முயற்சித்துப் பார்க்கவும்.


- stalin - 03-27-2006

அகல் விளக்கு-நா.பார்த்தசாரதி


- Puyal - 03-27-2006

தோழமையுடன் ஸ்ராலினிற்கு

அகல் விளக்கு - டாக்டர் மு. வரதராசனார்.

முயற்சித்தமைக்குப் பாராட்டுக்கள்.


- kirubans - 03-27-2006

1. அந்த நாள்: ?

2. அகல்விளக்கு: மு.வ

3. இயேசு காவியம்: கண்ணதாசன்

4. சிற்பியின் நகரம்: புதுமைப்பித்தன்

7. சொர்க்கத்தின் நிழல்: ?

8. தண்ணீர் தேசம்: வைரமுத்து

9. சுகுண சுந்தரி: வேதநாயகம் பிள்ளை


- Puyal - 03-28-2006

கிருபா நீங்கள் கொடுத்த பதில்கள் அனைத்தும் சரி.

முயற்சிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்.


- Puyal - 03-28-2006

அந்த நாள் - மு. வரதராசனார்.
அகல் விளக்கு - மு. வரதராசனார்.
இயேசு காவியம் - கவிஞர் கண்ணதாசன்.
சிற்பியின் நகரம் - புதுமைப்பித்தன்.
சீறாப்புராணம். - உமறுப்புலவர்.
திரிகடுகம் - நல்லாதனார்.
சொர்க்கத்தின் நிழல் - ஜெகசிற்பியன்.
தண்ணீர் தேசம் - கவிஞர் வைரமுத்து.
சுகுண சுந்தரி. வேதநாயகம்பிள்ளை.
பார்த்திபன் கனவு. - கல்கி.


- kurukaalapoovan - 03-28-2006

அணுச் சக்தியை ஆயுதமாகவே அல்லது கட்டுப்பாடான முறையில் சக்தி உற்பத்தி செய்யும் உலையாகவே எடுக்குக் கூடி முறைகள் எத்தனை? அவை என்ன?


- Puyal - 03-29-2006

அணுச் சக்தியை ஆயுதமாகவோ அல்லது கட்டுப்பாடான முறையில் சக்தி உற்பத்தி செய்யும் உலையாகவோ எடுக்கக் கூடிய முறைகள் எத்தனை? அவை என்ன?

சகோதரம் இவ்வினாவிற்காக ஏதாவது தரவு தர முடியுமா?

அணுக்கச்தி செய்வதற்குப் பாவிக்கப்படும் தனிமங்களுடன் தொடர்புபட்டுப் பதில் வருமா?


- kurukaalapoovan - 03-29-2006

ஓம் இரண்டு முறைக்கும் யுரேனியம் பாவிக்கலாம்.
முதலாவது முறை தான் இரண்டாவது முறைக்கும் உரிய ஆரம்ப நிலை.

மன்னிக்கவும் ஒரு திருத்தம் இரண்டாவது முறை சக்த்தி உற்பத்தி உலையில் பயன்படுத்தப்பட முடியாது.


- kirubans - 03-29-2006

fusion, fission??
மன்னிக்கவும் தமிழில் தெரியாது. :oops:


- Puyal - 03-30-2006

பின்வரும் பாலைவனங்களை பரப்பளவில் முதன்மைப்படுத்தி எழுதுக:

1. சஹாரா (வட ஆபிரிக்கா)

2. கலஹாரி (தென் ஆபிரிக்கா)

3. கிரேட் விக்டோரியா ( அவுஸ்ரேலியா)

4. கோபி (ஆசியா)

5. அரேபியன் (மத்திய கிழக்கு)


- narathar - 03-30-2006

kirubans Wrote:fusion, fission??
மன்னிக்கவும் தமிழில் தெரியாது. :oops:

அணு ஒருங்கிணைவு, அணுப் பிரிகை?


- kurukaalapoovan - 03-30-2006

ஓம் fission and fusion தான், எனக்கும் தமிழ் தெரியாது மன்னிக்கவும். :oops:
http://reactor.engr.wisc.edu/fission.htm