![]() |
|
திருமலையில் இனக்கலவரம்: தமிழர்களின் கடைகள் தீவைத்து எரிப்பு! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: திருமலையில் இனக்கலவரம்: தமிழர்களின் கடைகள் தீவைத்து எரிப்பு! (/showthread.php?tid=252) |
- putthan - 04-13-2006 இறந்த மக்களுக்கு எனது கண்ணிர் அஞ்சலி - தூயவன் - 04-13-2006 [size=18] [b] திருமலையில் சிங்களக் காடையர்கள் செய்த மூர்க்கத்தனமான அட்டூழியங்களின் படங்கள்!! <img src='http://www.makizh.com/newsphoto/trinco/1.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.makizh.com/newsphoto/trinco/2.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.makizh.com/newsphoto/trinco/3.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.makizh.com/newsphoto/trinco/4.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.makizh.com/newsphoto/trinco/5.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.makizh.com/newsphoto/trinco/6.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.makizh.com/newsphoto/trinco/7.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.makizh.com/newsphoto/trinco/8.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.makizh.com/newsphoto/trinco/9.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.makizh.com/newsphoto/trinco/10.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.makizh.com/newsphoto/trinco/11.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.makizh.com/newsphoto/trinco/12.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.makizh.com/newsphoto/trinco/13.jpg' border='0' alt='user posted image'> மூலம்:மட்டக்களப்பு ஈழநாதம் - iruvizhi - 04-13-2006 <b>திருமலையில் 15 சடலங்கள் அடையாளம் காணப்பட்டன- பலி 19 ஆக உயர்வு!</b> [வியாழக்கிழமை, 13 ஏப்ரல் 2006, 20:04 ஈழம்] [ம.சேரமான்] திருகோணமலையில் சிறிலங்கா இராணுவமும் சிங்கள இனவெறியர்களும் நேற்று புதன்கிழமை நடத்திய கொலை வெறியாட்டத்தில் பலியானோர் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்தது. இதுவரை 15 சடலங்கள் அடையாளம் காணப்பட்டன. கொல்லப்பட்டோரில் 6 பேர் தமிழர்கள், 2 முஸ்லிம்கள், 7 பேர் சிங்களவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். லிங்கநகரில் முச்சக்கர வாகனத்தின் உள்ளேயே 3 தமிழர்கள் எரித்துக் கொலை செய்யப்பட்டனர். அந்த சடலங்கள் அடையாளம் காணப்பட முடியாத நிலையில் உள்ளது. மேலும் ஒரு தமிழரது சடலமும் அடையாளம் காணப்படவில்லை. 6 தமிழர்களில் 5 பேர் பெண்கள் என்றும் 7 சிங்களவர்களில் 2 பேர் பெண்கள் என்றும் தெரியவந்துள்ளது. மரக்கறி சந்தைக்கு எதிரே உள்ள தேங்காய் விற்பனை நிலையத்தின் முன்வாசலில் முதல் குண்டுவெடித்துள்ளது. அதன் பின்னர் சிறிலங்கா இராணுவத்தினரால் கைக் குண்டுகள் வீசப்பட்டு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. முன்னதாக லிங்கநகரில் முச்சக்கர வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த தமிழர்கள் மீது சிங்களக் காடையர்கள் குழு தாக்குதலை நடத்தியது. திருகோணமலை மருத்துவ அதிகாரிகள் திருமதி கே.ஞானகுணாளன் மற்றும் காமினி குணதிலக்க ஆகியோர் சடலங்களை பிரேத பரிசோதனை செய்தனர். தகவல்: புதினம் புள்ளி கோம் www.puthinam.com - Subiththiran - 04-21-2006 [b] [size=18]திருமலை இனப்படுகொலை திட்டமிட்டு நடத்தப்பட்ட இன்னொரு ஜுலை'83: சிங்கள உண்மைஅறியும் குழு திருகோணமலையில் ஏப்ரல் 12ஆம் நாளன்று தமிழர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட இனப்படுகொலை ஒரு திட்டமிடப்பட்ட சதியே என்று சிங்கள உண்மை அறியும் குழுவினர் அறிவித்துள்ளது. திருமலை இனப்படுகொலையைத் தொடர்ந்து கொழும்பை மையமாகக் கொண்ட இன்பார்ம், சட்டம் மற்றும் சமூக அறக்கட்டளை, மாற்றுக் கொள்கைகளுக்கான மையம் மற்றும் சுதந்திர ஊடக இயக்கம் ஆகிய நான்கு சிங்கள அமைப்புகளை உள்ளடக்கிய உண்மை அறியும் குழுவினர் திருகோணமலையில் ஏப்ரல் 16ஆம் நாளன்று விசாரணைகளை மேற்கொண்டனர். கொழும்பில் வெளியிடப்பட்ட இக்குழுவின் இறுதி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: திருமலை வன்முறையில் மொத்தம் 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 30 கடைகள் மற்றும் 100 வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. மூவாயிரம் பேர் பாடசாலைகளிலும் வழிபாட்டு இடங்களிலும் அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர். ஏப்ரல் 12ஆம் நாளன்று குண்டு வெடிக்க வைக்கப்பட்டு ஐந்து பேர் கொல்லப்பட்ட உடனே 15 நிமிடத்திலேயே இந்த இனப்படுகொலை மேற்கொள்ளப்பட்டுள்ளதானது ஒரு திட்டமிட்ட செயலாகவே கருதுகிறோம். 1983ஆம் ஆண்டு ஜுலை மாதம் நடத்தப்பட்ட இனப்படுகொலையைப் போன்றது திருமலை இனப்படுகொலை. திருமலை நகரின் வர்த்தகப் பகுதியில் ஆயுதமேந்திய சிங்களவர்களால் பழிக்குப் பழிவாங்கும் வகையில் தமிழர் கடைகள் தீக்கிரையாக்கப்பட்டு பொருட்கள் சூறையாடப்பட்டமையானது மிகவும் துன்பகரமானது. தமிழர் கடைகள் தீக்கிரையாக்கப்பட்ட போதும் படுகொலை செய்யப்பட்ட போதும் சிறிலங்கா படையினர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததாக நேரில் பார்த்த பலரும் தெரிவித்தனர். வன்முறைகளை சிறிலங்கா அரசாங்கத்தால் தடுக்க முயலவில்லை என்று ஒப்புக்கொள்ள வேண்டும். சிறிலங்கா அரசாங்கம் மற்றும் தென்னிலங்கை அரசியல் கட்சிகள் திருகோணமலை மக்களிடம் கூட்டாக மன்னிப்பு கோருவதுதான் நீண்டகாலத்துக்கு இருதரப்புக்கும் இடையே நல்லெண்ணத்தையும் நம்பிக்கையையும் கட்டியெழுப்பும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறிலங்கா படையினர் மீதான விடுதலைப் புலிகளின் தாக்குதலால் திருகோணமலையில் இரு இனங்களிடையேயான பதற்றம் அதிகரிக்கிறது என்றும் அந்த அறிக்கை குற்றம்சாட்டியுள்ளது. puthinam.com |