![]() |
|
கருணாநிதியும் குள்ளநரித்தனமும். - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: அரசியல் / பொருளாதாரம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=36) +--- Thread: கருணாநிதியும் குள்ளநரித்தனமும். (/showthread.php?tid=2493) |
- கந்தப்பு - 12-19-2005 ஜெயலலிதா வெளிப்படையாக ஈழத்தினை எதிர்க்கிறார். கருணாநிதி தனக்கு ஆதாயத்திற்கேற்ப ஆதரிக்கவோ ,எதிர்க்கவோ செய்வார். அதானல் குள்ளநரி வேலையும் செய்வார். - Luckylook - 12-19-2005 கலைஞர் என்று ஈழத்தை எதிர்த்தார்? ஆதாரம் தாருங்கள்... 1991ம் ஆண்டு பார்ப்பன குடியரசுத் தலைவரால் அவர் ஆட்சி கலைக்கப்பட்டதற்கு காரணமே ஈழத்தமிழர்களை ஆதரித்ததால் தான். திமுக முன்னணித் தலைவர் சுப்புலட்சுமி செகதீசன் ஈராண்டுகள் சிறையில் வாடியது ஈழத்தமிழர்களை திமுக ஆதரித்ததால் தான். - Thala - 12-19-2005 Luckylook Wrote:கலைஞர் என்று ஈழத்தை எதிர்த்தார்? ஆதாரம் தாருங்கள்... 1991ம் ஆண்டு பார்ப்பன குடியரசுத் தலைவரால் அவர் ஆட்சி கலைக்கப்பட்டதற்கு காரணமே ஈழத்தமிழர்களை ஆதரித்ததால் தான். திமுக முன்னணித் தலைவர் சுப்புலட்சுமி செகதீசன் ஈராண்டுகள் சிறையில் வாடியது ஈழத்தமிழர்களை திமுக ஆதரித்ததால் தான். அப்ப புலிகளைக்கொண்டு வைகோ தன்னைக் கொல்லத் திட்டம்போட்டார் எண்டு ஓலமிட்டது பொய்யா.... புலிகளை எதோ கொலைகாறர் எண்ட வகையில் சித்தரிக்க முயண்றது ஈழத்தின் பால்கொண்ட அன்பாலா..???? - Thala - 12-19-2005 Luckylook Wrote:இந்திய அரசாங்கத்தின் உளவுபிரிவு தந்த குறிப்பையே அவர் பத்திரிகையாளர்களிடம் கையளித்தார். புலிகள் கொலையாளிகளா என்றெல்லாம் பேசினால் இங்கு தணிக்கை செய்யப்பட்டு விடும் என்பதால் என்னால் அதை பற்றியெல்லாம் பேச முடியவில்லை..... இந்திய உளவுப்பிரிவின் அறிக்கை குறிப்பு எந்தளவு உண்மைவிடயத்தை விடலாம் அது சச்சரவில் போய் முடியும்..... ஆனால் அதன் உள்ளர்த்தம் இருப்பது மட்டும் உண்மை. கருணாநிதிக்கு அதாவது திமுக வாக்கு வங்கி என்பது உண்டு என்பது.... எல்லாரும் அறிந்ததுதான்... (அதுக்கு காரணம் பல இருக்கலாம் அது இப்ப பிரச்சினை இல்லை..) கருணாநிதிக்கு ஒரு அச்சுறுத்தல் எண்டு காரணம் காட்டி ஆதரவர்கள் யாரும் ஈழத்தவருக்கு சார்பான போராட்டங்களில் ஈடுபடமல் இருக்க போடப்பட்டதிட்டமாய்க் கூட இருக்கலாம் அந்தப் புலனாய்வு அறிக்கை..... - Luckylook - 12-19-2005 Thala Wrote:இந்திய உளவுப்பிரிவின் அறிக்கை குறிப்பு எந்தளவு உண்மைவிடயத்தை விடலாம் அது சச்சரவில் போய் முடியும்..... ஆனால் அதன் உள்ளர்த்தம் இருப்பது மட்டும் உண்மை. கருணாநிதிக்கு அதாவது திமுக வாக்கு வங்கி என்பது உண்டு என்பது.... எல்லாரும் அறிந்ததுதான்... (அதுக்கு காரணம் பல இருக்கலாம் அது இப்ப பிரச்சினை இல்லை..) கருணாநிதிக்கு ஒரு அச்சுறுத்தல் எண்டு காரணம் காட்டி ஆதரவர்கள் யாரும் ஈழத்தவருக்கு சார்பான போராட்டங்களில் ஈடுபடமல் இருக்க போடப்பட்டதிட்டமாய்க் கூட இருக்கலாம் அந்தப் புலனாய்வு அறிக்கை..... இருக்கலாம். அதற்காக ஈழத்தமிழ் சகோதரர்கள் 83 வயது கலைஞரை முறை தவறி விமர்சிப்பது முறையா? சட்ட மன்றத்திலேயே புலிகளுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்த - தூயவன் - 12-19-2005 Luckylook Wrote:இருக்கலாம். அதற்காக ஈழத்தமிழ் சகோதரர்கள் 83 வயது கலைஞரை முறை தவறி விமர்சிப்பது முறையா?வணக்கம் லக்கிலுக் வயது போனதானோ, அல்லது அமராகி விட்டாலோ, விமர்சனங்களை தாண்டியவர் என்று கொள்ளமுடியாது. இத் தலைப்பிற்கான காரணம் இங்கே பலர் கருணாநிதியை பற்றி பெருமை பேசியபடியால் தான் அப்படி எழுதவேண்டி ஏற்பட்டதே தவிர உங்கள் தலைவரை வசைபாடும் எண்ணம் கொண்டல்ல. புரிந்து கொள்வீர்கள் என நம்புகின்றேன். - Vasampu - 12-19-2005 தூயவன் உண்மைக்குப் புறிம்பாக எழுத முயற்சிக்காதீர்கள். உங்களைப் போன்ற சிலர் காந்தி உட்பட பல இந்தியத் தலைவர்களை தேவையில்லாமல் இழுத்ததைத் தான் நான் உட்பட பலர் தவறு என்று சுட்டிக் காட்டினோம். இப்போது கதையையே தலை கீழாக மாற்றப் பார்க்கின்றீர்கள். இந்தப் பக்கமும் தாக்க வேண்டுமென்ற நோக்கிலேயே ஆரம்பிக்கப் பட்டது. - தூயவன் - 12-19-2005 போய்த் தேடிப்பாருங்கள். திலீபனின் தியாகத்தை மதி;க்கத் தெரியாதவர்கள் எதற்கு காந்தியைப் பெருமை பேசவேண்டும் என்று தான் கேட்டிருந்தோம். அப்படிப்பட்டவர்கள் காந்தியின் அகிம்சையைப் பற்றி பேச யோக்கியம் இல்லை என்றே சுட்டி காட்டினோம். - Vasampu - 12-19-2005 அதனைத் தான் நானும் குறிப்பிடுகின்றேன் நன்றாக நீங்களே பாருங்கள் அங்கு முதலில் காந்தியைப் பற்றித் தொடங்கியது யார். பின் யார் காந்தி என்று வம்புக் கிழுத்தது யார்?? அதே போல் மற்றய இந்தியத் தலைவர்களையும் யார் முதலில் வம்புக்கிழுத்தார்கள் என்பதையும் சென்று பாருங்கள். - adithadi - 12-19-2005 அடு லக்கிலுக்: என்னய்யா திருச்சியின் முயற்சியியால் தட்ஸ்தமிழ் உறங்கிவிட்டதே. - கந்தப்பு - 12-20-2005 கருணாநிதி ஈழத்தமிழர்களுக்கு ஜெயலலிதாவை விட அதிக உதவி செய்தவர். தமிழ் நாட்டில் உள்ள எம்மவர்களுக்கு பல்கலைக்கலகக் கல்வி ஜெயலலிதாவினால்(91 - 96) அனுமதி மறுக்கப்பட்டது, பிறகு கருணாநிதி ஆட்சி வந்தபோது, மீண்டும் அனுமதி கிடைத்தது.அதற்கு நாம் கட்டாயம் நன்றி செலுத்தப்பட வேண்டும். இப்படி பல உதவிகள் செய்தார். ஆனால் தனது மகன் ஸ்டாலினை தனக்குப்பிறகு தி.மு.க வில் தலைவராக வருவதற்கு, கட்சியில் தனக்கு அடுத்து செல்வாக்குள்ள வை.கோ இருப்பதால், கடினம் என்பதால் சுயநலமாக எடுத்த ஆயுதம் விடுதலைப்புலிகள், தன்னை வை.கோ வின் உதவியோடு அழிக்க முயல்கிறார்கள் என்ற பொய் செய்தி. அந்த விடயத்தில் எவ்வாறு மன்னிப்பது?. ஆனால் ராம்,சோ,விசு போன்றவர்களைப் போல எதற்கு எடுத்தாலும் எம்மை எதிர்ப்பதில்லை. கருணாநிதி நன்மைகள் செய்தாலும், தனது சுயலாபத்திற்காக சில தீமைகளும் செய்திருக்கிறார் - Thala - 12-20-2005 Luckylook Wrote:இருக்கலாம். அதற்காக ஈழத்தமிழ் சகோதரர்கள் 83 வயது கலைஞரை முறை தவறி விமர்சிப்பது முறையா? பிரச்சினை வேண்டாம் எண்டு இருக்க கருணாநிதி ஐயா.. ஆதரவாளர்கள் விடமாட்டார்களாம் என்ன செய்ய... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> கலைஞர் ஒண்டும் சின்னக் குழந்தை அல்லவே... ஒரு இனத்தை அதுவும் ஒடுக்கப் படும் இனத்தை எப்படிக் கையாளவேண்டும் எண்ட அளவு அறிவு இல்லாதவர் எண்டா சொல்கிறீர்கள்...???? அவரின் குடும்ப அரசியல் நடாத்த தடையாய் இருந்த வைகோ தூக்கியெறியப்பட்டது நியாயவாதியின் செயலா..??? திரைப் படத்துக்கு கதை எழுத வந்த ஒருவர் கோடீஸ்வரன் ஆகலாம் எண்டால்.... பல படங்களில் கதாநாயகியாய் நடித்த ஜெயலலிதா அம்மாவை சொத்து சேர்த்த வளக்கில் குற்றம் சாட்ட அவருக்கு தகுதி இருக்கிறதா...??? அவர் மீதான நம்பகத்தன்மை என்ன..??... அவர் ஒரு தலைவர் அது மாதிரி ஜெயலலிதா அம்மாவும் தலைவி...! அவ்வளவே... இருவருக்கும் வித்தியாசம் ஓண்டும் இல்லை... வயிற்றுப் பிளைப்புக்காக மட்டும் அல்லாமல் வசதிவாய்ப்புக்காகவும் அரசியல் நடாத்தும் வியாபாரிகள்..., மக்களை ஏமாத்துபவர்கள் அவ்வளவே....! - Thala - 12-20-2005 Luckylook Wrote:ஏன் ஈழ்த்தமிழரை இங்குள்ளோர் சிலர் வெறுக்கிறார்கள் என்பது இப்போது புரிகிறது.... ஓ அப்பிடியா 1996ல் யாழ்ப்பாணத்தை இராணுவம் பிடித்தபோது உங்கள் கருணாநிதி ஐயா தானே தமிழ்நாட்டு முதல் அமைச்சர்.... கடல் கடந்து தந்சம்கோரி மண்டபம் அகதிமுகாமுக்கு வந்த ஈழத்தமிழர்கள் எப்படி நடத்தப்பட்டார்கள் தெரியுமா..??? தமிழகம் வழங்கிய மரியாதையை கண்கூடாகப் பாத்தவன் நான்... எனக்கு கதை அளக்காதீர்... நாங்கள் இந்திய தமிழரை ஏன் வெறுகிறோம் என்பதுகும் காரணம் இருக்கிறது.... எதுக்கெடுத்தாலும் புலிப்பட்டம் கட்டி காசுபுடுங்கும் கேவலம் வேறு எந்த நாட்டிலும் இல்லை... ஜெயலலிதா அம்மா... ஈழத்தவரை வராதீர்கள் எண்டால் உங்கட ஐயா வாருங்கள் எண்டு அழத்துப் புலிச்சந்தேக நபர்கள் எண்டு "<b>செங்கல்ப்பட்டு கோட்டயில் </b>" ஈழத்தவர்களை அடைத்து வைத்ததை உங்களால் மறுக்க முடியுமா...??? அவர்களைப் பார்ப்பதுக்கு கூட அனுமதி இல்லை அதற்கு என்னிடம் ஆதாரம் இருக்கிறது.... மண்டபம் அகதிமுகாமுக்கு பொறுப்பாய் போலீஸ் அதிகாரி SP தியாகராஜன் இருந்தான் முடிந்தால் அவர்களிடமே கேளுங்கள்.... முன்னாள் புலிகள் உறுப்பினர் எண்ட ஈழத்தமிழ் பையன்கள் டில்லி திகாருக்கு கூட அனுப்பப் பட்டார்கள்... பயங்கரவாத தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப் படுபவர்களில்... 99% மானவர் அப்பாவிகள் அதுக்காய் கருணாநிதி ஐயா செய்தது என்ன...??? அணைப்பது போல முதுகில் குத்திய துரோகி தான் கருணாநிதி... ஜெயலலிதா நேரடியான எதிர்ப்பாளர் அதனால் அவர்ருக்கானது மரியாதை.... - தூயவன் - 12-20-2005 Luckylook Wrote:ஏன் ஈழ்த்தமிழரை இங்குள்ளோர் சிலர் வெறுக்கிறார்கள் என்பது இப்போது புரிகிறது....தனிப்பட்ட வாழ்க்கை எல்லாம் கதைக்கவெளிக்கிட்டால், சன் ரீவியில், மாறன்மாருடையதும், ஸ்ராலின்மாரிடையும் கடைக்கண் பார்வைகளையும் சேர்த்து கதைக்கலாம் சாமி!!!! - paandiyan - 12-21-2005 -உன்மையில் இந்திய சகோதரர்களுக்கு இலங்கையிலோ அல்லது இந்தியாவிலோ இலங்கைத்தமிழருக்கு என்ன நடந்தது, நடந்துகொண்டு இருக்கிறது என்பது இன்னும் தெரியாமல் இருப்பது மிகவும் வருத்தத்துக்குரியது. லக்கிலுக் நீங்கள் மட்டுமல்ல எனது நிறைய இந்திய நண்பர்களுக்கும் என்ன நடந்த்தென்பது தெரியாமலே இருக்கிறது. எனது நண்பர்களிடம் நடந்தவைகளைக் கூறினால் ஆச்சரியப்படுகிறார்கள் உன்மையில் இப்படியெல்லாம் நடந்ததா என்று. எமது துன்பங்கள் எமக்கே தெரியும் ஏனெனில் நாமே அனுபவப்பட்டவர்கள் பட்டுக்கொன்டு இருப்பவர்கள் ஆனால் தமிழ்நாட்டிலிருந்து தமிழர்கள் இன்றைக்கும் இலங்கைத்தமிழர் பற்றி ஒன்றும் தெரியாமல் தங்கட பாட்டிற்கு என்னவெல்லாம் பேசித்திரிகிறர்கள். முதலில் இலங்கையில் தமிழனுக்கு என்ன நடக்கிறது என்பதை தமிழனாக தெரிந்துகொள்ளப்பாருங்கள். இங்கு சில இந்தியத்தமிழர் இலங்கைத்தமிழனைப்பற்றி மிகவும் வருந்தத்தக்கவகையில் எழுதினார்கள் அப்படி நாமும் எழுதத்தொடங்கினால் இங்கு எழ்தியே முடிக்க முடியாமல் போய்விடும். - Luckylook - 12-21-2005 அது போலவே இலங்கைத் தமிழர்களும் விவரம் புரியாமல் ஒரு தாயக தமிழ் தலைவனை இங்கு முறைகேடாக விமர்சித்துக் கொண்டு இருக்கிறார்கள். அந்த தலைவனின் தியாகம் என்ன? சரித்திரம் என்ன? சிறையில் எத்தனை ஆண்டு காலம் இருந்தார் என்பதெல்லாம் இவர்களுக்கு தெரியுமா? - அருவி - 12-21-2005 Luckylook Wrote:அது போலவே இலங்கைத் தமிழர்களும் விவரம் புரியாமல் ஒரு தாயக தமிழ் தலைவனை இங்கு முறைகேடாக விமர்சித்துக் கொண்டு இருக்கிறார்கள். அந்த தலைவனின் தியாகம் என்ன? சரித்திரம் என்ன? சிறையில் எத்தனை ஆண்டு காலம் இருந்தார் என்பதெல்லாம் இவர்களுக்கு தெரியுமா? லக்கிலுக் உங்கள் தலைவரை முறைகேடாக விமர்சிப்பதற்காக இத்தலைப்பு தொடங்கப்பட்டதாக தலைப்பின் ஆரம்பத்தில் இல்லையே! தலைப்பு தொடங்கியபோது ஈழத்தமிழர் விடயத்துடன் உங்களின் தலைவரின் போக்குப்பற்றித்தானே கதைத்தோம்.(கீழே தூயவன் கூறியதை அப்படியே கொடுத்துள்ளேன் பாருங்கள்) தூயவன் Wrote:இங்கே நான் யாருக்கும் வக்காளத்து வாங்கவில்லை. ஜெயலலிதாவும் சரி. கருணாநிதியும் சரி சுயநலவாதிகள் தான். நான் இதை எழுதக் காரணம். கருணாநிதி ஏதோ ஈழத்தமிழருக்காக செய்தவர் என்றும் எம் மீது பாசம் கொண்டவர் என்றும் சொல்லப்படும் கருத்துக்கள் யாவும் தவறு, அவர் முழுமையான பச்சோந்தி. தன் பையை நிரப்புவதில் தான் குறியாக உள்ளார் என்பதை காட்டத் தான். இங்கு எம் மக்களை விளிப்படையச் செய்வதற்காகவே இதில் இருந்து எழுதிக்கொண்டிருக்கிறோமே தவிர உங்களின் தலைவரை விமர்சிக்கும் நோக்கம் எமக்கில்லை. சிறீலங்காவில் ரணிலப் போல சிறீலங்காவிற்கு வெளியில் *****. போலியுடன் இருப்பவர்களை அடையாளப்படுத்த வேண்டியது ஒவ்வொருவரினதும் கடமை. - Luckylook - 12-21-2005 பச்சோந்தி, குள்ள நரி போன்ற வார்த்தைகள் உங்கள் அகராதியில் புனித வார்த்தைகளோ? ஈழத்தளபதியை பற்றி இது போல தமிழ் நாட்டு ஊடகங்களில் செய்திகள் வரும்போது உங்கள் உள்ளம் கொதிப்பதை போல தானே என் உள்ளமும் கொதிக்கும்? - அருவி - 12-21-2005 லக்கிலுக் ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள், இங்கு அரசியல்வாதியைப்பற்றி விவாதிக்கப்படுகிறதே தவிர சுதந்திரப்போராட்ட வீரர்களைப்பற்றியல்ல. முதலில் இரண்டிற்கும் இடையில் உள்ள வித்தியாசத்தைப் புரிந்து கொள்ளுங்கள். அரசியல்வாதிகளையும் அவர்களையும் ஒப்பிடுவதில் இருந்து தெரிகிறது உங்களின் மனநிலை. ஏன் உங்களின் நாட்டுப்பத்திரிகைகளை நீங்கள் பார்ப்பதில்லையா மற்றைய அரசியல்வாதிகளைப்பற்றி எப்படி செய்திபோடுகிறார்கள் என்று. - அருவி - 12-21-2005 பச்சோந்தியின் குணவியல்பு தெரிந்திருந்தால் அப்படிக் கேட்டிருக்கமாட்டீர்கள், தெரியாதுவிடின் இப்பவாவது தெரிந்து கொள்ளுங்கள். பச்சோந்தி என்பது சூழ்நிலைக்குத்தக்கமாதிரி தன்நிறத்தை மாற்றிக்கொள்ளும் ஓர் உயிரினம். |