Yarl Forum
மூளைக்கு வேலை - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: மூளைக்கு வேலை (/showthread.php?tid=6978)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35


- வெண்ணிலா - 04-11-2006

மீண்டும் மூளைக்கு வேலை பகுதியை தூசு தட்டிய rock boy க்கு நன்றிகள். தொடருங்கள் கள நண்பர்களே <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- pandiyan - 04-11-2006

1000 சிங்கள படை வரும் பொழுது ஒருவரை சுட்டால் எத்தனை பேர் மிச்சம் ?


- Puyal - 04-11-2006

றொக் போய் நீங்கள் கடைசியாக தந்துள்ள கணக்கு நன்றாக விளங்கவில்லை, மேலதிக விளக்கம் தர முடியுமா?


- நர்மதா - 04-11-2006

ஒருவர் தான் (இறந்தவர்) மீதிப்போர் இருக்கிற இடம் தெரியாது


- வெண்ணிலா - 04-12-2006

pandiyan Wrote:1000 சிங்கள படை வரும் பொழுது ஒருவரை சுட்டால் எத்தனை பேர் மிச்சம் ?

999 பேர். சரியா?


- கந்தப்பு - 04-12-2006

செய்த ஆமியும், ஆயுதங்களும் தான் மிஞ்சி இருக்கும். மற்றவர்கள் தப்பினால் பெரும் காரியம் என்று ஒடத்தொடங்கிவினம்


- Vishnu - 04-12-2006

rock boy எங்கே?? கேள்விக்கு பதிலை காணவில்லை. ஆளையும் காணவில்லை. :roll: நான் ஒரு கேள்வி போடுறேன்.

<b>2 வாகனங்கள் ஒன்றை ஒன்றை சந்திக்கும் நோக்கில், ஒன்றை ஒன்றை நோக்கி ஒரு நேர்பாதையில் புறப்படுகின்றன. 2 வாகனங்களின் இடையேயான தூரம் 385 கீ. மீ. வாகனங்கள் 2மே ஆரம்பத்தில் இருந்து ஒன்றை ஒன்று சந்திக்கும்வரை ஒரே வேகத்தில் பயணித்ததாக எடுத்து கொள்ளவும். வாகனம் 1 இன் வேகம் - 100கீ.மீ/மணி, வாகனம் 2இன் வேகம் - 120கீ.மீ/மணி

கேள்வி - வாகனங்கள் ஒன்றை ஒன்று எத்தனை நிமிடங்களில் சந்தித்துக்கொள்ளும்??</b>


- pandiyan - 04-12-2006

இல்லை. 999 பேரையும் இனி தேடிபிடிக்க முடியாது.


- Aravinthan - 04-13-2006

விஷ்ணுவின் கேள்விக்கு என்பதில். இரண்டு வாகனங்களும் X நிமிடங்களுக்கு
சந்திப்பது என்று வைப்போம். வாகனம் 1 சென்றதூரம் = (100/60)*X =5/3X. ( மணித்தியாலத்தினை நிமிடங்களுக்கு மாற்ற 60னால் பெருக்கியுள்ளேன். தூரத்தினைக் காண வேகத்தினயும், நேரத்தினயும் பெருக்கவேண்டும்). வாகனம் 2 சென்றதூரம் = 120/60 * X = 2X.

5/3X + 2X = 385

11/3X =385

X = 105 நிமிடங்கள்


- Puyal - 04-13-2006

விஷ்ணு அரவிந்தனின் பதில் சரியாக இருக்கின்றபடியால் வேறொரு கணக்கை இணைத்து விடலாம் தானே


- Vishnu - 04-13-2006

Puyal Wrote:விஷ்ணு அரவிந்தனின் பதில் சரியாக இருக்கின்றபடியால் வேறொரு கணக்கை இணைத்து விடலாம் தானே

ம்ம்... என்னிடம் புத்தகம் ஏதும் இல்லைப்பா :roll: சும்மா யோசித்துப் போட்டேன்.


அடுத்த கேள்வி

<b>2 4 7 11 16 . . .

இந்த எண்தொடரில் உள்ள தொடர்பு என்ன என்பது புரிந்திருக்கும். இந்த எண்தொடரில் 75ஆவதாக வரும் இலக்கம் என்ன?? 75 ஆவது இலக்கம் வரை கூட்டிக் கொண்டு செல்வது சாத்தியமல்ல. அல்லது நேரவிரயம் தானே. ஏதாவது சமன் பாடு அமைத்து விரும்பிய இலக்கத்தை கண்டு பிடிக்க முடியுமா??

கேள்வி - சமன்பாடு அமைக்க முடியுமா?? சமன்பாடு என்ன? 75 ஆவது இலக்கம் என்ன?</b>


- Aravinthan - 04-14-2006

காணவேண்டிய இலக்கத்தினை X என்க.
X வது இலக்கம் =( X*(X+1)/2 ) + 1

5 வது இலக்கம் = (5*(5+1)/2) +1 =16

6 வது இலக்கம் = (6*(6+1)/2 ) +1 =22

75 வது இலக்கம் =(75*(75+1)/2) +1 =75*38 +1 =2851


- அனிதா - 04-15-2006

சரி இதை கண்டு பிடியுங்க பாப்பம்... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

ஒரு குழுவில் அம்மா,அப்பா, 2 மகன், 2 மகள் ஒரு காவலர்,ஒரு திருடன் ஆக ,எட்டு பேர் இருக்கிறார்கள். பிரச்சனை என்னவென்றால் இவர்கள் அனைவரும் ,இக்கரையிலிருந்து அக்கரைக்கு படகில் மூலம் ஆற்றை கடக்க வேண்டும் கீழ் வரும் நிபந்தனைகளுக்குட்பட்டு:

நிபந்தனைகள்:

1.ஒரு சமயத்தில் அதிகபட்சம் இரண்டு பேர் தான் படகில் செல்ல முடியும்.
2.அம்மா,அப்பா அல்லது காவலர் தான் படகை செலுத்த முடியும்.
3.காவலர் அருகில் இல்லாத பட்சத்தில் திருடன் குடும்பத்தினரை தாக்க கூடும்.
4. அம்மா அருகில் இல்லாத பட்சத்தில் அப்பா மகள்களை அடிக்க கூடும்.
5. அப்பா அருகில் இல்லாத பட்சத்தில் அம்மா மகன்களை அடிக்க கூடும்.
எப்படி யாருக்கும் தீங்கில்லாது கரையை கடப்பது.?
கொஞ்சம் கஷ்டம் தான். முயற்சி செய்து பாருங்கள்.

பி.கு. நிபந்தனை 4 & 5 படித்து விட்டு பேசாதீங்க :wink: இது மூளைக்கு வேளை கொடுக்கும் ஓர் புதிர் தான் :-)


- Subiththiran - 04-15-2006

படகு செலுத்துனருடன் சேர்த்து முவர் ஒரு தடவையில் செல்லலாமா?


- அனிதா - 04-15-2006

<!--QuoteBegin-Subiththiran+-->QUOTE(Subiththiran)<!--QuoteEBegin-->படகு செலுத்துனருடன் சேர்த்து  முவர் ஒரு தடவையில்  செல்லலாமா?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

இல்லை அந்த படகில் 2 பேர் தான் செல்லலாம்.!


- Subiththiran - 04-15-2006

சந்தியா இவ்விடை சரியா :?: என்று பாருங்கள்.
முதலில் அப்பாவும்,அம்மாவும் ஓருமகனை அக்கரைக்கு அழைத்துச் செல்கின்றனர்.
பின்னர் அப்பாவும்,அம்மாவும் திரும்பி வருகின்றனர்.
வந்து அடுத்த மகனையும், இவ்வாறே மகள்களையும் அழைத்துச் செல்கின்றனர்.


பின்னர் அப்பாவும் அம்மாவும் திரும்பிவந்து காவலரை அழைத்துச்செல்கின்றனர்.(காவலர் இல்லாத போது திருடன் ஓடிவிடுவான் என்ற நிபந்தனை இங்கு இல்லாத படியால்)

அதன்பிறகு காவலர் மட்டும் திரும்பி வந்து திருடனை அழைத்துசெல்கின்றார்.


- Subiththiran - 04-15-2006

<!--QuoteBegin-Subiththiran+-->QUOTE(Subiththiran)<!--QuoteEBegin-->சந்தியா இவ்விடை சரியா :?:  என்று பாருங்கள்.
முதலில் அப்பாவும்,அம்மாவும் ஓருமகனை அக்கரைக்கு அழைத்துச் செல்கின்றனர்.  
பின்னர் அப்பாவும்,அம்மாவும் திரும்பி வருகின்றனர்.
வந்து அடுத்த மகனையும், இவ்வாறே மகள்களையும் அழைத்துச் செல்கின்றனர்.


பின்னர் அப்பாவும் அம்மாவும் திரும்பிவந்து காவலரை அழைத்துச்செல்கின்றனர்.(காவலர் இல்லாத போது திருடன் ஓடிவிடுவான் என்ற நிபந்தனை இங்கு இல்லாத படியால்)

அதன்பிறகு காவலர் மட்டும் திரும்பி வந்து திருடனை அழைத்துசெல்கின்றார்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->



தவறான பதில் மன்னக்க வேண்டும்


- Subiththiran - 04-15-2006

<!--QuoteBegin-pandiyan+-->QUOTE(pandiyan)<!--QuoteEBegin-->1000 சிங்கள படை வரும் பொழுது ஒருவரை சுட்டால் எத்தனை பேர் மிச்சம் ?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->


'பாட்சா-அன்ரனி ஸ்ரைலில் சொன்னா ''நான் ஒருத்தரை சுட்டால் ஆயிரம் பேரை சுட்டமாதிரி"

<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- kirubans - 04-15-2006

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->சரி இதை கண்டு பிடியுங்க பாப்பம்... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->  

ஒரு குழுவில் அம்மா,அப்பா, 2 மகன், 2 மகள் ஒரு காவலர்,ஒரு திருடன் ஆக ,எட்டு பேர் இருக்கிறார்கள். பிரச்சனை என்னவென்றால் இவர்கள் அனைவரும் ,இக்கரையிலிருந்து அக்கரைக்கு படகில் மூலம் ஆற்றை கடக்க வேண்டும் கீழ் வரும் நிபந்தனைகளுக்குட்பட்டு:  

நிபந்தனைகள்:

1.ஒரு சமயத்தில் அதிகபட்சம் இரண்டு பேர் தான் படகில் செல்ல முடியும்.  
2.அம்மா,அப்பா அல்லது காவலர் தான் படகை செலுத்த முடியும்.  
3.காவலர் அருகில் இல்லாத பட்சத்தில் திருடன் குடும்பத்தினரை தாக்க கூடும்.  
4. அம்மா அருகில் இல்லாத பட்சத்தில் அப்பா மகள்களை அடிக்க கூடும்.  
5. அப்பா அருகில் இல்லாத பட்சத்தில் அம்மா மகன்களை அடிக்க கூடும்.  
எப்படி யாருக்கும் தீங்கில்லாது கரையை கடப்பது.?  
கொஞ்சம் கஷ்டம் தான். முயற்சி செய்து பாருங்கள்.

பி.கு. நிபந்தனை 4 & 5 படித்து விட்டு பேசாதீங்க  :wink: இது மூளைக்கு வேளை கொடுக்கும் ஓர் புதிர் தான் :-)<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

1. அம்மா, அப்பா, மகள்1, மகள்2, மகன்1, மகன்2, பொலிஸ், திருடன் ------------0

2. அம்மா, அப்பா, மகள்1, மகள்2, மகன்1, மகன்2, ------------ பொலிஸ், திருடன்

3. அம்மா, அப்பா, மகள்1, மகள்2, மகன்1, மகன்2,பொலிஸ் ------------ திருடன்

4. அம்மா, அப்பா, மகள்2, மகன்1, மகன்2, ------------ திருடன், பொலிஸ், மகள்1

5. அம்மா, அப்பா, மகள்2, மகன்1, மகன்2, திருடன், பொலிஸ், ------------ மகள்1

6. அப்பா, மகன்1, மகன்2, திருடன், பொலிஸ், ------------ அம்மா,மகள்1, மகள்2

7. அம்மா,அப்பா, மகன்1, மகன்2, திருடன், பொலிஸ், ------------ மகள்1, மகள்2

8. மகன்1, மகன்2, திருடன், பொலிஸ், ------------ அம்மா,அப்பா,மகள்1, மகள்2

9. அப்பா, மகன்1, மகன்2, திருடன், பொலிஸ், ------------ அம்மா,மகள்1, மகள்2

10. அப்பா, மகன்1, மகன்2, ------------ அம்மா,மகள்1, மகள்2, திருடன், பொலிஸ்

11. அம்மா, அப்பா, மகன்1, மகன்2, ------------ மகள்1, மகள்2, திருடன், பொலிஸ்

12. மகன்1, மகன்2, ------------ அம்மா, அப்பா,மகள்1, மகள்2, திருடன், பொலிஸ்

13. அப்பா, மகன்1, மகன்2, ------------ அம்மா,மகள்1, மகள்2, திருடன், பொலிஸ்

14. மகன்2 ------------ அம்மா,மகள்1, மகள்2, திருடன், பொலிஸ், அப்பா, மகன்1

15. திருடன், பொலிஸ்,மகன்2 ------------ அம்மா,மகள்1, மகள்2, அப்பா, மகன்1

16. திருடன், ------------ அம்மா,மகள்1, மகள்2, அப்பா, மகன்1,பொலிஸ்,மகன்2

17. பொலிஸ், திருடன், ------------ அம்மா,மகள்1, மகள்2, அப்பா, மகன்1,,மகன்2

18. ------------ அம்மா,மகள்1, மகள்2, அப்பா, மகன்1,,மகன்2 , பொலிஸ், திருடன்


- வெண்ணிலா - 04-16-2006

கிருபன் அண்ணாவை மீண்டும் மூளைக்கு வேலை பகுதியில் கண்டது மிக்க சந்தோசம்.