Yarl Forum
சாதனை - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21)
+--- Thread: சாதனை (/showthread.php?tid=8337)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13


- veera - 10-25-2003

தமிழ்ப் பெண்ணின் இந்த சாதனை முயற்சிக்குப் பாராட்டுக்களை மட்டுமல்ல அனைத்து ஐரோப்பிய மக்களும் ஒத்துழைப்பினையும் வழங்க வேண்டும்.

ஐந்து நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறப்போகும் இந்த முயற்சிக்கு வானொலி பேதமின்றி அனைத்து வானொலி :!: நேயர்களும் ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

ஆனால்....

ஐரோப்பிய மண்ணில் எந்த வானொலியில் இருந்தாலும் அந்த வானொலியைப் பிரித்துப் பிரித்து புதிய வானொலிகளை உருவாக்கும் விற்பன்னர் வானொலிக்குள்ளே 20ம் திகதி முதல் நடாத்திவரும் உள்நாட்டுக்கலகத்தின் விளைவு எங்கே போய் முடியும் என்பது சந்தேகத்திற்கு இடமானது.

<b>இவருடைய மெத்தப்போக்கினால் இந்த அரிய சாதனை முயற்சி குழம்பிவிடக்கூடாது.</b>

இந்த விடயத்தில் வானொலியின் உண்மையான பணிப்பாளர் சாதனையாளருக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்க விடயம்.

எனினும் குழப்பத்தில் பணிப்பாளருக்கு எதிராகச் செயற்படும் பக்கத்திற்காக இந்த சாதனைப் பெண்மணி தொடர்ந்தும் சார்ந்து நிற்பதும் .

<b>எனவே தனது நிலைப்பாட்டை சிந்தனையுடன் முடிவெடுத்து தனது சாதனையை இவர் முடித்துவிட
எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள்

பணிப்பாளரினால் வெளியேற்றப்பட்ட உலகெல்லாம் அறிந்த பணிப்பாளர்? என்று தன்னைத்தானே கூறிக்கொள்பவர் 31ம் திகதி வரையான காலக்கெடுவோடு இந்த வானொலிக்குள் தற்போது வேண்டாத மனிதராக ஆனால் சாதனையை முடிக்க வழி வகுக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இருப்பினும் தற்போது உண்மையான பணிப்பாளரை வெளியேற்றுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளிலும் இவர் ஈடுபடுவதாக விபரங்கள் வெளியாகியிருக்கின்றன.

தயவு செய்து உங்கள் உறுப்படியற்ற வேலைகளை நிறுத்திவிட்டு இந்த அரிய சாதனைக்கு வழி விடுங்கள்.
உங்களுக்கொன்றாரு நேயர் கூட்டம் இருப்பது உண்மை.அதற்காக பணம் போட்டவனை மறைத்து நீங்களே அனைத்தையும் அனுபவிக்க ஆசைப்பட்டதன் விளைவு தானே இது?

தயவு செய்து சாதனையை நிறைவேற்ற விடுங்கள்.
இது தமிழ் சமுதாயத்திற்கு குறிப்பாக ஐரோப்பிய மக்களுக்கு நீங்கள் இதுவரை செய்த மன்னிக்க முடியாத குற்றங்களை விட...

[b]என்றும் மறக்க முடியாத நன்றிக்கடனாகும்.</b>


- Paranee - 10-25-2003

வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்


- தணிக்கை - 10-26-2003

http://www.puthinam.com/


- ganesh - 10-27-2003

சாதனை நிலைநாட்டுவார்கள்
போல் உள்ளது
........................................................

--------------------------------------------------------------------------------
தமிழ்ப் பெண்ணின் இந்த சாதனை முயற்சிக்குப் பாராட்டுக்களை மட்டுமல்ல அனைத்து ஐரோப்பிய மக்களும் ஒத்துழைப்பினையும் வழங்க வேண்டும்.

ஐந்து நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறப்போகும் இந்த முயற்சிக்கு வானொலி பேதமின்றி அனைத்து வானொலி நேயர்களும் ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

ஆனால்....

ஐரோப்பிய மண்ணில் எந்த வானொலியில் இருந்தாலும் அந்த வானொலியைப் பிரித்துப் பிரித்து புதிய வானொலிகளை உருவாக்கும் விற்பன்னர் வானொலிக்குள்ளே 20ம் திகதி முதல் நடாத்திவரும் உள்நாட்டுக்கலகத்தின் விளைவு எங்கே போய் முடியும் என்பது சந்தேகத்திற்கு இடமானது.

இவருடைய மெத்தப்போக்கினால் இந்த அரிய சாதனை முயற்சி குழம்பிவிடக்கூடாது.

இந்த விடயத்தில் வானொலியின் உண்மையான பணிப்பாளர் சாதனையாளருக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்க விடயம்.

எனினும் குழப்பத்தில் பணிப்பாளருக்கு எதிராகச் செயற்படும் பக்கத்திற்காக இந்த சாதனைப் பெண்மணி தொடர்ந்தும் சார்ந்து நிற்பதும் அதே நேரம் உண்மையான பணிப்பாளரை மதிக்காமல் விடுவதும் சர்ச்சைக்குரிய விடயங்களே.


- ganesh - 10-27-2003

மேலே படித்தது உண்மையாயின்
சிவாந்தியின் சாதனை வெற்றியுடன் முடிவடையும் மட்டும்
இவர்கள் வானொலியைவிட்டு விலகி இருப்பது நல்லது

இன்னும் 3 நாட்கள் மட்டுமே
உள்ளது


- தணிக்கை - 10-27-2003

சிவாந்தியின் வெற்றிக்கு வாள்த்துக்கள்.


- தணிக்கை - 10-27-2003

<img src='http://geethavani.homestead.com/files/siva2.jpg' border='0' alt='user posted image'>

http://geethavani.homestead.com/


- தணிக்கை - 10-27-2003

சவாந்தி தனது 55 க்கு மேற்பட்ட மனித்தியலங்களை வெற்றிகரமாக முடித்ததுடன் சுமார் 940 க்கு மேற்பட்ட தொலைபேசி வாழ்த்துகளை மட்டும் பெற்றுள்ளா

தொடரும்................


- shanmuhi - 10-27-2003

சிவாந்தியின் சாதனை பற்றிய மேலதிக படங்களை
www.swaasam.com
சென்று பார்வையிடலாம்


- தணிக்கை - 10-27-2003

சிவாந்தியின் உலகசாதனை தேசத்துரோகக்கும்பல் ஒன்றினால் குளப்பப்படுகிறது.

திட்டமிட்டதுறையில் குளப்பப்படுவது எமது சமுதாயத்திற்கே இளுக்கை உன்டுபன்னும் தயவுசெய்து உலகசாதனையை குளப்பும் அந்த தமிழ் உள்ளம் தயவுசெய்து தங்கள் அடாவடித்தனங்களை எதிர்வரும் வெள்ளிகிழமைக்கு பிறகு பகிர்ந்துகொள்ளுங்கள்.


- தணிக்கை - 10-27-2003

திட்டமிட்டமுறையில்.........


- sOliyAn - 10-27-2003

என்ன குழப்பம்? கடந்த இரவு காலை 5 மணிவரை செவிமடுத்தேன்.. யாரும் குழப்ப முற்பட்டதாக தெரியவில்லையே? குழப்பினாலும் சிவாந்தி குழப்பமடைவதாகவும் தெரியவில்லையே... 1993ல் அவருக்கு 16 வயது என்பதைமட்டும்தான் அறியமுடிந்தது... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- தணிக்கை - 10-27-2003

அவவின் கால் சிரட்டைகள் இருன்டும் 1998 ம் ஆன்டு நடந்த விபத்து ஒன்றின்போது மருத்துவமனையில் அகற்றப்பட்டது.

ஆனால் இப்படியான சிக்கலுடனும் எதிர்வரும் சில காலத்திற்குள் 15 மனித்தியாலம் தொடர்ந்து பரத நாட்டியம் ஆடஉள்ளாவாம்.

தொடரும்.........................


- yarl - 10-27-2003

தணிக்கை ..அது சரி படத்திலுள்ள மற்றவர்கள் யார்?


- yarl - 10-27-2003

தற்ஸ்ரமில் கொம் செய்தி

அக்டோபர் 27இ 2003

கின்னஸ் சாதனை முயற்சியில் லண்டன் தமிழ் பெண் ரேடியோ அறிவிப்பாளர்

லண்டன்:

லண்டனில் இருந்து ஒலிபரப்பாகும் ஐரோப்பிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தில் அறிவிப்பாளராகப் பணிபுரியும் செல்வி சிவாந்தி சுப்பிரமணியன் கின்னஸ் சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

தொடர்ந்து 123 மணி நேரம் ரேடியோவில் பேசி சாதனை படைக்கத் திட்டமிட்டுள்ளார். இந்த முயற்சியை அவர் கடந்த 25ம் தேதி காலை 10 மணிக்குத் தொடங்கினார். இடைவிடாமல் ரேடியோவில் தனது பேச்சை ஒலிபரப்பி வரும் அவர் வரும் 30ம் தேதி பகல் 12 மணி வரை இதைத் தொடர்வார்.


யாழ்பாணம் சாகவச்சேரியில் பிறந்த சிவாந்திஇ இலங்கை ரேடியோவில் பயிற்சி பெற்றவர். லண்டன் ஐ.பி.சி. ரேடியோவில் பணியாற்றிய இவர்இ இப்போது ஐரோப்பிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தில் பணியாற்றுகிறார்.

இந்தச் சாதனை முயற்சியில் இறங்கியுள்ள சிவாந்திக்கு உலகெங்கும் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து கொண்டுள்ளன. தொலைபேசி மற்றும் இமெயில்கள் மூலம் இந்த வாழ்த்துக்கள் குவிகின்றன.

ஐரோப்பாவில் வானொலி மூலம் சிவாந்தியின் ஒலிபரப்பைக் கேட்கலாம். வேறு நாடுகளில் வசிப்பவர்கள் இணையத் தளத்தின் மூலம் அவரது குரலைக் கேட்கலாம். இணையத் தள முகவரி: தீதீதீ.ஞுவஞஞிடூணிணஞீணிண.ஞிணிட்

ஐரோப்பிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தின் தொலைபேசி எண்கள்: 0044 20 8795 0040 மற்றும் 0044 20 8795 0045.

பேக்ஸ் எண்: 0044 20 8795 0037

முயற்சியில் வெல்லஇ வாசகர்கள் சார்பில் சிவாந்தியை தட்ஸ்தமிழ்.காம் வாழ்த்துகிறது.


- sOliyAn - 10-27-2003

இந்த இடத்திலாவது என்னுள் எழும் சிலதை சொல்லித்தான் ஆகவேண்டும்.. ஏதோ தமிழின ஒற்றுமை.. முன்னேற்றமென சொல்லிக் கொள்ளும் வானொலி தொலைக்காட்சி போன்ற ஊடகங்கள் ஒரு தமிழ்ப் பெண்ணின் சாதனை முயற்சிபற்றி ஊமைகளாக இருக்கின்றன?
உலகில் எங்கோ நிகழும் ஒரு செய்தியை வெளியிடும் இதுகள்.. ஒரு தமிழ்ப்பெண்.. அதுவும் ஒரு புகலிட நாட்டில் வாழும் ஒரு பெண் மேற்கொண்ட முயற்சியை ஒரு செய்தியாகக்கூட வெளியிட மனமில்லாமல் எதை வெளிப்படுத்துகின்றன?
தயவுசெய்து எமது சமுதாயத்தில் இப்படியான முயற்சிகளை குழு வேறுபாடின்றி வரவேற்று ஒரு முன்மாதிரியை தோற்றுவிக்கவாவது இதை பயன்படுத்துமாறு அனைத்து ஊடகங்களையும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
இனறேல் வட்டங்கள் மீண்டும் மீண்டும நலிந்து தொண்டைவரையும் வரலாம். அது எதிர்காலத்திலாவது தவிர்க்க முடியாததாகிவிடும்.


- தணிக்கை - 10-28-2003

தாயக ஊடகங்கள் கொடுக்கும் உட்சாகம் ஜரோப்பிய தமிழ் ஊடகங்கள் கொடுக்கவில்லை என்று உனரும்போது மிகவும் கவலையாக உள்ளது.


- shanmuhi - 10-28-2003

தாயக ஊடகங்கள் மட்டும் இல்லை உலகில் வேறு பல ஊடகங்களில் இருந்து எல்லாம் அவவின் முயற்சியை பாராட்டி ஊக்கம் கொடுக்கும் போது....ஐரோப்பிய ஊடகங்கள் ஏன் மௌனம் சாதிக்கின்றன.
புரியாத புதிர் ! ! !


- shanmuhi - 10-28-2003

மனம் தளராமல் வெற்றியடைய வாழ்த்துக்கள் பல.....


- yarl - 10-28-2003

sOliyAn Wrote:இந்த இடத்திலாவது என்னுள் எழும் சிலதை சொல்லித்தான் ஆகவேண்டும்.. ஏதோ தமிழின ஒற்றுமை.. முன்னேற்றமென சொல்லிக் கொள்ளும் வானொலி தொலைக்காட்சி போன்ற ஊடகங்கள் ஒரு தமிழ்ப் பெண்ணின் சாதனை முயற்சிபற்றி ஊமைகளாக இருக்கின்றன?
உலகில் எங்கோ நிகழும் ஒரு செய்தியை வெளியிடும் இதுகள்.. ஒரு தமிழ்ப்பெண்.. அதுவும் ஒரு புகலிட நாட்டில் வாழும் ஒரு பெண் மேற்கொண்ட முயற்சியை ஒரு செய்தியாகக்கூட வெளியிட மனமில்லாமல் எதை வெளிப்படுத்துகின்றன?
தயவுசெய்து எமது சமுதாயத்தில் இப்படியான முயற்சிகளை குழு வேறுபாடின்றி வரவேற்று ஒரு முன்மாதிரியை தோற்றுவிக்கவாவது இதை பயன்படுத்துமாறு அனைத்து ஊடகங்களையும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
இனறேல் வட்டங்கள் மீண்டும் மீண்டும நலிந்து தொண்டைவரையும் வரலாம். அது எதிர்காலத்திலாவது தவிர்க்க முடியாததாகிவிடும்.





சிலர் ஒரு ரபர் ஸ்ராம்ப் வைத்திருக்கிறார்கள்.எப்ப யாருக்கு அது குத்தப்படும் எனத் தெரியாது.

தமிழ் என்று ஏற்கனவே சீல் குத்தப்பட்டதை மறந்துவிடுகிறார்கள்.