Yarl Forum
பழமொழிக்கான விளக்கம். - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: தமிழும் நயமும் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=22)
+--- Thread: பழமொழிக்கான விளக்கம். (/showthread.php?tid=800)

Pages: 1 2 3


- Sujeenthan - 03-01-2006

களவும் கற்று மற

விளக்கம்:

காதலைத்தான் பண்டைக்காலத்தில் களவு என்று அழைப்பார்கள். களவும் கற்று மற என்றால் காதலை ஒரு முறை செய்ய வேண்டும். காதலித்து ஒருவனை அல்லது ஒருத்தியை திருமணம் செய்த பின் காதலை மறந்துவிடவேண்டும். அதாவது வேறு ஓருவரையும் காதலிக்க கூடாது.


- Sujeenthan - 03-01-2006

பாத்திரம் அறிந்து பிச்சை கொடு கோத்திரம் அறிந்து பெண்ணைக்கொடு.

விளக்கம்:
உண்மையான பழமொழி கூறுவது என்னவென்றால் "பாத்திறம் அறிந்து பீச்சி எடு கோத்திறம் அறிந்து பெண்ணைக்கொடு."

அதாவது மாட்டின் மடியில் உள்ள பாலின் அளவை அறிந்து அந்த பாலை பீச்சி எடுக்க வேண்டும். (பா என்றால் மாடு) மணமகனின் திறனை(நல்லவனா அல்லது கெட்டவனா) அறிந்து பெண்ணைக் கொடுக்க வேண்டும். ( கோ என்றால் மணமகன்)


- Aaruran - 03-01-2006

Sujeenthan Wrote:பாத்திரம் அறிந்து பிச்சை கொடு கோத்திரம் அறிந்து பெண்ணைக்கொடு.
விளக்கம்:
உண்மையான பழமொழி கூறுவது என்னவென்றால் \"பாத்திறம் அறிந்து பீச்சி எடு கோத்திறம் அறிந்து பெண்ணைக்கொடு.\"
அதாவது மாட்டின் மடியில் உள்ள பாலின் அளவை அறிந்து அந்த பாலை பீச்சி எடுக்க வேண்டும். (பா என்றால் மாடு) மணமகனின் திறனை(நல்லவனா அல்லது கெட்டவனா) அறிந்து பெண்ணைக் கொடுக்க வேண்டும். ( கோ என்றால் மணமகன்)

[size=14]என்னமோ இது எனக்குச் சரியாகப் படவில்லை. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> பா என்றால் மாடு என்று நான் கேள்விப்பட்டதில்லை. பா என்றால் மாடு என்பதற்கு ஏதாவது ஆதாரம் உண்டா? தமிழர்களிடையே சாதிப்பாகுபாடு பலகாலம் இருந்து வருகிறது. அதனால் சாதியடிப்படையிலான பழமொழிகளும் வழக்கத்திலுண்டு, அதை நாம் மறுத்து புதுக்கருத்துக்களைக் கண்டு பிடிக்க வேண்டியதில்லை என்பது என்னுடைய கருத்தாகும்.

ஈழத்தமிழரிடையில் இந்தக் கோத்திர வழக்கம் கிடையாது ஆனால் தமிழ்நாட்டில் பிராமணரல்லாத தமிழர்களிடம் கூட ஆளுக்காள் சாதியை விடக் கோத்திரம் என்ற ஒன்றையும் வைத்திருக்கிறார்கள். அதை விட குறிப்பிட்ட கோத்திரத்துப் பெண் குறிப்பிட்ட இன்னொரு கோத்திரத்தில் மணம் முடிக்கக் கூடாதென்று கூடக் கட்டுப்பாடு உண்டு.

அதனால் இந்தப் பழமொழி <b>"பாத்திரமறிந்து பிச்சையிடு, கோத்திரமறிந்து பெண்ணைக் கொடு</b>" என்பதன் கருத்து ஒருவனின், தேவையை அதாவது உண்மையான பிச்சைக்காரனா அல்லது நடிக்கிறானா என்பதை அறிந்து பிச்சையிடு, அதே போல் ஏதாவது காரியத்தைச் செய்ய முன்பு அடிப்படையை ஆராய்ந்து பார். அதாவது தீரவிசாரி என்பதாகும்.


- Sujeenthan - 03-01-2006

இதை நான் இயற்றிச் சொல்லவில்லை. எங்கேயோ படித்தனான். எதற்கும் வேறு சிலரிடம் கேட்டுவிட்டு சொல்கிறேன்.


- Saanakyan - 03-02-2006

ÀƦÁ¡Æ¢ìÌ Å¢Çì¸õ ±ýÚ ¦º¡øÄ¢ì¦¸¡ñÎ ÀƦÁ¡Æ¢ò ¾¢Ã¢ôÒõ «¾¢ §Á¾¡Å¢ò¾ÉÓõ ¦ºö¢ÈÁ¡¾¢Ã¢ ¸¢¼ìÌÐ. ¿øÄ ÓÂüº¢ Å¡úòÐì¸û!


- Sujeenthan - 03-04-2006

அதி மேதாவித்தனம்; செய்யிறதுக்கு நாங்கள் பண்டிதர்கள் இல்லை. ஏதோ எங்களுக்கு யாராவது தமிழ் அறிந்தவர்கள் சொன்னதை மற்றவர்களும் அறிய வேண்டும் என்பதற்காக போடுகிறோம். அவ்வளவும் தான்.
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->ÀƦÁ¡Æ¢ìÌ Å¢Çì¸õ ±ýÚ ¦º¡øÄ¢ì¦¸¡ñÎ ÀƦÁ¡Æ¢ò ¾¢Ã¢ôÒõ «¾¢ §Á¾¡Å¢ò¾ÉÓõ ¦ºö¢ÈÁ¡¾¢Ã¢ ¸¢¼ìÌÐ. ¿øÄ ÓÂüº¢ Å¡úòÐì¸û!
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->