![]() |
|
ஈழ இந்திய புரிந்துணர்வு - கருத்துப்பகிர்வு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: தமிழ் /தமிழர் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=20) +--- Thread: ஈழ இந்திய புரிந்துணர்வு - கருத்துப்பகிர்வு (/showthread.php?tid=782) |
- Luckyluke - 02-20-2006 புலிகள் பேச்சுவார்த்தைக்கான இடத்தை தேர்வு செய்வதில் கூட காட்டிய பிடிவாதத்தை கணக்கில் கொள்ளுங்கள்... எனக்கு தெரிந்து ஜப்பான் இரு தரப்புக்கும் பொதுவான நாடு தானே... அங்கே கூட பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது ஐரோப்பாவில் தான் நடத்த வேண்டும் என்று ஏன் புலிகள் பிடிவாதம் பிடித்தனர்.... பேச்சுவார்த்தைக்கு முன்பே இலங்கைத் தரப்பை இது உசுப்பேற்றி இருக்காதா? - காவடி - 02-20-2006 Quote:அதிருக்கட்டும்... இந்தியாவின் ஆதரவைப் பெற இதுவரை புலிகள் ஏதாவது முயற்சி மேற்கொண்டிருக்கிறார்களா என்ன? இந்தியா அழையா விருந்தாளியாக வந்து உங்களுக்கு ஆதரவளிக்க வேண்டுமாம்.. பலதடவைகள்! அன்ரன் பாலசிங்கம் அவர்களுக்கு மருத்துவ உதவி கேட்டது கூட இந்தியாவுடனான தமது உறவை புதுப்பித்துக் கொள்ளும் ஒரு முயற்சிதான். தவிர பல தடவைகள் இந்தியா தற்போதைய பேச்சுக்களில் நடுநிலைமையுடன் தலையிடுவதானால் தமக்கு ஆட்சேபனை இல்லயென புலிகள் அறிவித்திருக்கிறார்கள். - Luckyluke - 02-20-2006 காவடி.... சோகமான ஒரு உண்மை.... சுனாமி பாதித்திருந்தபோது கூட மீட்புப் பணிகளுக்கு இலங்கை ராணுவத்தை கூட சில பகுதிகளில் புலிகள் அனுமதித்து இருந்தார்கள்... ஆனால் இந்தியர்களை மீட்புப் பணிகளுக்கு கூட அனுமதிக்கவில்லை என்பதே.... - காவடி - 02-20-2006 Quote:புலிகள் பேச்சுவார்த்தைக்கான இடத்தை தேர்வு செய்வதில் கூட காட்டிய பிடிவாதத்தை கணக்கில் கொள்ளுங்கள்... எனக்கு தெரிந்து ஜப்பான் இரு தரப்புக்கும் பொதுவான நாடு தானே...உண்மையில் இலங்கை அரசுக் பேச்சுக்களை இலங்கையில் நடத்துவதுதான் விருப்பம். அவர்களை பொறுத்தவரை தமிழரின் பிரச்சனை உலகமயப்படுத்தப்படக் கூடாது என்பது தான் நோக்கம். தவிரவும் புலிகள் ஐரோப்பிய நாடுகளில் பேச்சுக்களை நடாத்தினால் ஐரோப்பிய ஒன்றியம் அவர்கள் மீது விதித்திருக்கும் தடையை தளர்த்த வேண்டியிருக்கும் என்ற பயமும் ஒரு காரணம். அதே நேரம் புலிகளும் ஐரோப்பிய ஒன்றியத் தடையினை தளர்த்துகின்ற ஒரு நோக்குடனுமே ஐரோப்பிய நாடுகளை பிரஸ்தாபித்தார்கள். ஒரு இயக்கம் என்ற முறையில் உலகின் தடைகளிலிருந்து தாம் விலக வேண்டும் என அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். - காவடி - 02-20-2006 அமெரிக்காவின் நிலைப்பாடு என்ன ? அமெரிக்காவிற்கு தமிழ் ஈழம் குறித்தோ, சிங்கள் இனவாதம் குறித்தோ எந்தக் கவலையும் இல்லை. அமெரிக்காவிற்கு கடந்த காலங்களில் இந்தியாவிற்கு எதிராகவும் தெற்காசிய பிராந்தியத்தில் அமெரிக்கா நிலை கொள்ளக் கூடிய ஒரு இடமாகவும் இலங்கையை கருதி வந்துள்ளது. குறிப்பாக 1984/85ல் அமெரிக்கா "Voice of America" என்னும் ஒளிப்பரப்பு நிறுவனத்தை இலங்கையில் நிறுவ முயற்சி எடுத்தது. இதனை இராணுவ உளவு வேலைகளுக்கு அமெரிக்கா பயன்படுத்தும் என்று இந்தியா எண்ணியது. குறிப்பாக தன்னுடைய இராணுவ நிலைகளை கண்காணிப்பதற்கு அமெரிக்கா முயலுவதாக இந்தியா கருதியது. இது தவிர திருகோணமலை துறைமுகத்தில் அமெரிக்கா தன்னுடைய கடற்படை தளத்தை அமைக்க முயற்சித்தது. இதுவும் இந்தியாவிற்கு அச்சத்தை ஏற்படுத்தியது. இவ்வாறான நிலையில் இந்தியா, அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுமே இலங்கை அரசாங்கத்துடன் நெருக்கத்தை ஏற்படுத்தவே முனைந்தன. 1985லேயே போராளிக் குழுக்களுக்கு உதவிகளை இந்தியா நிறுத்தியது. இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தையை தொடங்கியது - Luckyluke - 02-20-2006 Quote:உண்மையில் இலங்கை அரசுக் பேச்சுக்களை இலங்கையில் நடத்துவதுதான் விருப்பம். அவர்களை பொறுத்தவரை தமிழரின் பிரச்சனை உலகமயப்படுத்தப்படக் கூடாது என்பது தான் நோக்கம். தவிரவும் புலிகள் ஐரோப்பிய நாடுகளில் பேச்சுக்களை நடாத்தினால் ஐரோப்பிய ஒன்றியம் அவர்கள் மீது விதித்திருக்கும் தடையை தளர்த்த வேண்டியிருக்கும் என்ற பயமும் ஒரு காரணம். அதே நேரம் புலிகளும் ஐரோப்பிய ஒன்றியத் தடையினை தளர்த்துகின்ற ஒரு நோக்குடனுமே ஐரோப்பிய நாடுகளை பிரஸ்தாபித்தார்கள். ஒரு இயக்கம் என்ற முறையில் உலகின் தடைகளிலிருந்து தாம் விலக வேண்டும் என அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். சரியான விளக்கம்.... நன்றி.... இரவாகி விட்டது 15 கி.மீ. பைக்கில் பயணம் செய்ய வேண்டும்... 3 மணி நேரம் உங்களுக்காகவே அலுவலகத்தில் எந்த வேலையுமின்றி தங்கினேன்... விடை பெறுகிறேன் சகோதரரே.... வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் சந்திப்போம்..... - AJeevan - 02-20-2006 Luckyluke Wrote:கணவரை இழந்த சோனியா காந்தியே நீதிமன்றத்தால் மரணதண்டனை விதிக்கப்பட்டவர்களை மன்னிக்க வேண்டும் என்று இந்தியக் குடியரசுத் தலைவரிடம் பரிந்துரை செய்யவில்லை? நான் சொல்லப் போவது இங்கே பொருத்தமோ எனக்குத் தெரியாது. இருந்தாலும் ராஜீவ் காந்தி பற்றி வருவதால் இதை எழுதுகிறேன். கடந்த ஜனவரி மாதம் 26ம் தேதி முதல் பெப்பரவரி 12ம் தேதி வரை இந்தியாவில் இருந்தேன். அதிக நாட்களை சென்னையில் கழிக்க வேண்டியிருந்தது. அப்போது ராஜீவ் கொல்லப்பட்ட இடத்துக்கு நண்பர்களுடன் சென்று வந்தேன். இடங்களை பார்த்த பின் நான் கருத்து எதுவும் சொல்லாமல் நடந்து கொண்டிருந்தேன். அப்போது அம்பத்தூரிலிருந்து என்னோடு வந்த நண்பன் சொன்னான். "ராஜீவ் இங்க செத்ததாலதான் இந்த பகுதியே முன்னேறிச்சு. வருடத்துக்கு ஒரு முறை நினைவு நிகழ்ச்சிகளும் விழாக்களும் நடக்கிறதால இந்தப் பகுதியின் வளர்ச்சி எதிர்பாராத ஒரு அதீத வளர்ச்சியாகிடுச்சு" "சில கெடுதல்களில் கூட பல நன்மைகள்" என்றான் அடுத்தவன். நான் பேசாமல் நடந்து கொண்டிருந்தேன். - காவடி - 02-20-2006 Quote:சோகமான ஒரு உண்மை.... சுனாமி பாதித்திருந்தபோது கூட மீட்புப் பணிகளுக்கு இலங்கை ராணுவத்தை கூட சில பகுதிகளில் புலிகள் அனுமதித்து இருந்தார்கள்... ஆனால் இந்தியர்களை மீட்புப் பணிகளுக்கு கூட அனுமதிக்கவில்லை என்பதே....ம்.. புலிகிள்ன கட்டுப்பாட்டுப் பகுதிகளில் நுழைகின்ற போது இந்தியாவிலிருந்து வருகின்றவர்கள் தனியாக விசாரணை செய்யப்படுகின்றார்கள். புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இந்தியாவிலிருந்து வருகின்றவர்கள் ஒருவித பாதுகாப்பு உணர்வுடன் அணுகப்படுகின்றார்கள். அதற்கு காரணங்கள் இல்லாமல் இல்லையென்பதை நிங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்திய புலனாய்வுப் பிரிவு -இலங்கை அரசுடன் இணைந்து என்று சொல்ல முடியாவிட்டாலும்-- தனியாக தனது கடமையைச் செய்த கொண்டுதானிருக்கிறது. புலிகளும் ஒரு நாடு இதனை எவ்வாறு அணுகுமோ அவ்வாறு அணுகுகின்றார்கள். ஆனால் இந்திய மருத்துவர்கள் சுனாமியின் போது திருப்பியனுப்பபட்டது குறித்து நான் அறியவில்லை. சரியாகத் தெரியாமல் அந்த மருத்தவர்கள் உளவாளிகள் என்றோ, அல்லது புலிகள் அவ்வாறு செய்யவில்லை என்றொ நான் பேச முடியாது. அண்மையில் கிளிநொச்சி வைத்தியசாலைகளுக்கு இந்தியா மருத்துவ உதவிகளை நேரடியாக செய்திருந்தது. மகிழ்ச்சி - Luckyluke - 02-20-2006 AJeevan Wrote:நான் சொல்லப் போவது இங்கே பொருத்தமோ எனக்குத் தெரியாது. அஜீவன் அண்ணா, சத்தியமாக நான் இதை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை.... யாரோ பாமரத்தனமாக சொன்னதை இங்கு சொல்கிறீர்களே, மற்றவர்கள் எப்படி பொருள்கொள்வார்கள் என்று நினைத்தீர்களா? - காவடி - 02-20-2006 Quote:சரியான விளக்கம்.... நன்றி.... இரவாகி விட்டது 15 கி.மீ. பைக்கில் பயணம் செய்ய வேண்டும்... 3 மணி நேரம் உங்களுக்காகவே அலுவலகத்தில் எந்த வேலையுமின்றி தங்கினேன்... விடை பெறுகிறேன் சகோதரரே.... வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் சந்திப்போம்.....கண்டிப்பாக.. கட்டாயம் வாய்ப்பு கிடைக்கும்.. உங்களிடமிருந்து விளக்கங்களை நாமும் எங்களிடமிருந்து விளக்கங்களை நீங்களும் பெற்று புரிதலை ஏற்படுத்துவதுதான் வரியானதாக இருக்கும். வேலிச்சண்டை பிடிப்பதனால் எதுவும் ஆகிவிடப்போவதில்ல.. உண்மையில் எமக்கிடையில் வேலிகள் கூட இல்லை - AJeevan - 02-20-2006 Luckyluke Wrote:AJeevan Wrote:நான் சொல்லப் போவது இங்கே பொருத்தமோ எனக்குத் தெரியாது. <b>இது அங்கு வாழும் ஒருவருடைய கருத்து மட்டுமே. அவர் ஓர் முன்னால் காங்கிரஸ் கட்சியில் இருந்து இன்று வேறோர் கட்சியில் இருப்பவர்.........</b> (பெயர்களை எழுத முடியவில்லை. காரணம் அவர்கள் அரசியலால் வாழ்பவர்கள்.) தவிரவும் அங்கு அரச அலுவலங்களில் சில வேலைகள் நிமித்தம் சென்றேன். என்னை வெறுக்க வைத்தது. லஞ்சத்தின் உச்சம். கவனயீனம் மற்றும் சட்டை செய்யாத நிலை............. நான் சொன்னேன் அப்துல்கலாம் 2020ல் இந்தியா வல்லரசாகும் என்று தவறாக சொல்லி விட்டார். அவர் சாதாரண ஒருவனாக வந்தால் உண்மை நிலை புரியுமென்று ............. அதற்கு அந்த அதிகாரி முறைத்து சத்தமிட்டார். நான் மீண்டும் அவரிடம் சொன்னேன். ஐயா காந்தி இந்தியாவை அமைதி தேசமாக உருவாக்க பாடுபட்டார். நம்பினார். ஆனால் இன்றும் அது கனவு மட்டுமே. அது போல இதுவும் அப்துல்கலாமின் கனவு மட்டுமே என்றேன். அவர் உறும முயன்ற போது......... என்னோடு வந்தவர் அரசிலில் ஒரு முக்கிய புள்ளி. அவர் அவரை பேசவிடாது தன்னை அடையாளம் காட்டிய பின்னர் மெளனமானார். <b>காரணம்</b> இந்தியாவிலிருந்து ஒருவர் தொழில் விடயமாக சுவிஸுக்கு வர வேண்டி றெட்சீல் பண்ணிக் கொடுக்கும் படி கோட்டையில் கையளித்த சான்றிதழை தான்தோன்றித்தனமாக தொலைத்து விட்டு தெரியாது என்று சொன்னதே. பின்னர் அங்கு வேலை செய்யும் பியூன் அதைக் கிழித்து ஏதோ எழுதியிருப்பது தெரிய வந்தது. பின்னர் மீண்டும் ஒரு பிரதி கொண்டு வந்து 5000 ரூபா லஞ்சம் கொடுத்த பின் ஓகேயானது. இவைகளை தனியாக எழுதவிருக்கிறேன். பொறுத்திருங்கள்................... - அருவி - 02-20-2006 Luckyluke Wrote:காவடி.... மீட்புப்பணிகளிற்கு இராணுவத்தை அனுமதித்தது என்பது தவறு இராணுவத்தினரின் முன்னணி நிலைகளைக்கூட மீட்டு மீளளித்து கொடுத்தது தமிழீழ விடுதலைப்புலிகள் என்பதே உண்மை. மற்றும் இந்தியர்களை அனுமதிக்கவில்லை என்பதல்ல அவர்கள் அப்பகுதிகளிற்கு செல்லவில்லை என்பதே உண்மை. அமெரிக்கர்கள் கூட இலங்கை அரசின் கடற்படைத்தளங்களை மட்டுமே மீளமைப்பு செய்து கொடுத்தார்கள். - அருவி - 02-20-2006 Luckyluke Wrote:இப்போது என் நிலை என்னவென்றால்.... இவர்கள் என் தாய்நாட்டுக்கு எதிராக இருக்கும்போது நாம் மட்டும் ஏன் இவர்களை ஆதரிக்க வேண்டும் என்பது தான்.... இதே நிலைப்பாடுதான் இப்போது எனதும். 8) - காவடி - 02-21-2006 லக்கி கடந்த விவாதங்களில் சில உண்மைகளைப் புரிந்து கொண்டிருப்பீர்கள் என நம்புகின்றேன்.. செய்திகளின் உண்மைத்தன்மையும் கருத்துக்களை உருவாக்குவதில் பங்கு வகிக்கின்றன. ஆகவே அவ்வாறு நீங்கள் கேள்விப்படும் செய்திகள் போராட்டம் தொடர்பான தவறான கருத்துக்களையும் உண்டாக்கக் கூடும்.. தயவு செய்து உங்கள் குழப்பங்களை பகிருங்கள். உமக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது என்று யாரும் சொல்ல மாட்டார்கள். அப்படி சொன்னால் கருத்தில் எடுக்காதீர்கள். உலகத்தில் புதியதாய் உதிக்க உள்ள ஒரு நாட்டிற்காக போராடுகின்ற ஒரு இனம் என்ற வகையில் அந்த உலகிற்கு போராட்டம் தொடர்பான சந்தேகங்களை குழப்பங்களை சரியாக எடுத்துச் சொல்ல வேண்டிய கடமை இருக்கிறது. ஏனெனில் இந்த நாடு எதற்காக உருவானது என்ற கேள்விக்கு நாளை அனைவருக்கும் சரியான காரணங்கள் தெரிந்திருக்க வேண்டும்.. உங்கள் நாட்டில் ஆயிரம் பிரச்சனைகள் இருக்க கூடும். ஆயினும் நீங்கள் இந்தியர்தான். ஏனெனில் உதிக்கப்போகும் நமது நாட்டிலும் மக்களுக்குள் ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் நாம் ஈழத்தவர்களே.. என்ன பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்று பின்னர் எழுதுகிறேன். ஆகவே ஒரு இந்தியனாக எங்கள் போராட்டத்தை நியாயத்தை புரிந்து கொள்ளுங்கள் - வர்ணன் - 02-21-2006 8) 8) 8) 8) :roll: - வர்ணன் - 02-21-2006 varnan Wrote:AJeevan Wrote:</b>Luckyluke Wrote:கணவரை இழந்த சோனியா காந்தியே நீதிமன்றத்தால் மரணதண்டனை விதிக்கப்பட்டவர்களை மன்னிக்க வேண்டும் என்று இந்தியக் குடியரசுத் தலைவரிடம் பரிந்துரை செய்யவில்லை? - adithadi - 02-21-2006 ஈழத் தமிழர்கள், சிங்கள கொடியை தூக்குவது மிகவும் தவறு, நாம் இலங்கை அரசுக்கு எதிராக போரடும்போது, சிங்கள அரசாங்கம் என்ன சொல்கிறது என்றால், விடுதலைப்புலிகள் தான் எமக்கு எதிராக போரடுகிறார்கள், ஆனால் தமிழ் மக்களோ, சிங்கள அரசை ஆதரிக்கறார்கள், இவற்றுக்கு ஆதாரம் எம்மவர்கள் கிரிக்கெட் விசரால், சிங்க கொடியை ஏந்திப்பிடிப்பதால் தான் கில்லாடி சிங்கள அரசாங்கம் எல்லாவற்றையும் தமக்கு சாதகம்மாக பயன்படுத்துகிறார்கள். - வர்ணன் - 02-21-2006 adithadi Wrote:ஈழத் தமிழர்கள், சிங்கள கொடியை தூக்குவது மிகவும் தவறு, நாம் இலங்கை அரசுக்கு எதிராக போரடும்போது, சிங்கள அரசாங்கம் என்ன சொல்கிறது என்றால், விடுதலைப்புலிகள் தான் எமக்கு எதிராக போரடுகிறார்கள், ஆனால் தமிழ் மக்களோ, சிங்கள அரசை ஆதரிக்கறார்கள், இவற்றுக்கு ஆதாரம் எம்மவர்கள் கிரிக்கெட் விசரால், சிங்க கொடியை ஏந்திப்பிடிப்பதால் தான் கில்லாடி சிங்கள அரசாங்கம் எல்லாவற்றையும் தமக்கு சாதகம்மாக பயன்படுத்துகிறார்கள். இதைதானே ஆரம்பத்தில் இருந்து சொல்லுறாங்க - எல்லாரும் கவனம் குறுக்க வந்து யாரும் - கேள்வி கேக்க போறாங்க -சிங்க கொடிதான் நான் - தூக்குவன் - அடுத்த கேள்வி என்ன எண்டு-! 8) - paandiyan - 02-21-2006 rajathiraja Wrote:ஆம் கருணானிதி மேல் எங்கள் ஆட்கள் பேசுவதை விட இங்கு அதிகமாக விமர்சனம் செய்ய பட்டுள்ளது. தனி தமிழ் நாடு கேள், ஹிந்தி கார்னின் அடிமை நாங்கள் என்ற தொணியில் எவ்வளவு கருத்து எழுத பட்ட்ளது , அது நீங்கள் அறியாத்த தலை?? --------------------------------------------------- உங்களது தலைவரைப்பற்றி இங்கு பேசியதாக பெரிதாக கிழிக்கிறீர்களே, ஏன் தற்ஸ்தமிழ்.கொம்மில் எங்களையும் எங்களது தலைமைத்துவத்தையும் பற்றி நீங்களெல்லொரும் ஒரு மிருகமாக மாறி கேவலமாகக் பேசியதெல்லாம் மறந்துவிட்டதா. உன்னைத்திருத்து உலகம் தானாகத்திருந்தும் என்பார்கள். ஆனால் இங்கு இப்படிப்பேசிவிட்டு பின்பு கருத்து.கொம் மிலோ அல்லது தற்ஸ்தமிழ்.கொம்மிலோ போய் மாறி எழுதுவீர்கள் என்பதை நான் நெடுனாளாகவே கவனித்துத்தான் வருகிறேன். இங்கு கருணானிதி பற்றி எழுதிய தலைப்பை மாற்றச்சொன்னவர்களில் நானும் ஒருவன் அனால் இங்கு கிழிக்கிற நீங்கள் யாராவது ஒருனாளாவது அங்கு எழுதியிருப்பீர்களா நீங்கள் எழுதுவது பிழையென்று. அனால் நாம் எழுதினால் சும்மா பிச்சுக்கொன்டு நிற்கிறீர்கள் ஏன் இந்த இழினிலை. எனவே சும்ம வெட்டியாக எதும் சொல்லாமல் செய்துவிட்டு பின்பு நீங்கள் யார் என்று காட்டவும். - Aravinthan - 02-21-2006 <!--QuoteBegin-rajathiraja+-->QUOTE(rajathiraja)<!--QuoteEBegin--><!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin-->உங்கள்புரிந்துணர்வுக்கு நன்றி எமக்கு தமிழக தமிழர் மீது பாசம் இருக்குதான் ஸாரி பாலாஜியை மறந்துட்டன் உங்களால தமிழருக்கு இந்திய அணியில போதிய இடமளிக்கபட்டிருக்கு என்று சொல்ல முடியுமா என்னை பொறுத்தவரை இல்லை எண்டுதான் சொல்லுவன்<!--QuoteEnd--><!--QuoteEEnd--> இந்திய அணியில் இடம் பிடிப்பது கடினமான காரியம், உள்ளுர் போட்டியில் நன்றாக விளையாண்டால் தாம் இடம் கிடைக்கும். சில் ஆண்களுக்கு முன் சீராம், பதானி( வட நாட்டவர் தான், ஆனால் பிறந்து வளர்ந்து எல்லாம் சென்னையில்) ,குமரன் என்று பல பேர் இடம் பிடித்தனர்.ஆனால் சரியாக விளையாடாம்ல் நீக்க பட்டு விடுகின்றனர்.அமைதி படை சோகம் எனக்கும் தெரியும்.அது எதிர்பாரமல் நட்ந்தது. அமைதி படை காலத்தில் நானும் சிறுவன் தான். என்க்கு அது என்ன அக்கிரம் செய்த்தது என்று சில வருடங்களுக்கு முன்னர் தான் தெரியும்.இன்னும் பல பேருக்கு அமைதி படையின் இன்னொரு முகம் தெரியாது. <!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->சில உதாரணங்கள் - இந்திய அணியில் தமிழர்கள் புறக்கணிப்பு பாகிஸ்தானில் முதன் முதலாக இந்தியா அணி 2004ல் தான் முதலாவது டெஸ்ட் வென்றது.அதற்கு முன்பு நடந்த தொடர்களில் பாகிஸ்தானே வென்றது.ஆனால் 1989ல் நடைபெற்ற 4 டெஸ்டிலும் வெற்றி தோல்வி இன்றியே முடிவடைந்தது. இந்தியா தோல்வியடையும் என எதிர்ப்பார்த்த இத்தொடர் சிறிகாந்தின் தலைமையில் சிறப்பாக விளையாடி வெற்றி தோல்வி இன்றி முடிவடைந்தது. சிறிகாந் தலைமையில் இந்திய அணி பாகிஸ்தானுக்கு 1989ல் சென்று சிறப்பாக விளையாடியும், அடுத்துவந்த நியுசிலாந்துக்கு எதிரான போட்டியில் சிறிகாந்த் அணியிலிருந்து நீக்கப்பட்டு அசாருதீன் தலைமையில் இந்தியா அணி விளையாடியது. வெங்கட்ராகவன் தலைமையில் 70 கடைசியில் பலம்பொருந்திய இங்கிலாந்துக்கு சென்ற அணி கடைசிப்போட்டியில் 420க்குமேல் ஒட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் 5ம் நாளில் சிறப்பாக விளையாடி 7,8 ஒட்டங்கள் குறைவாக உள்ளபோது நேரம் காணாமல் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்து. பலர் இத்தொடரில் இங்கிலாந்து அணி 5-0 ல் வெற்றி பெறும் என நினைக்க வெங்கட்ராகவனின் சிறப்பான தலைமையில் இந்தியா 1-0ல் தோல்வியடைந்தது. அடுத்த தொடரில் வெங்கட்ராகவன் அணியின் தலைமைப்பதவி பறிக்கப்பட்டு 12வது ஆளாக விளையாடினார் |