Yarl Forum
விளையாட்டு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37)
+--- Thread: விளையாட்டு (/showthread.php?tid=7332)

Pages: 1 2 3


- Eelavan - 05-20-2004

இலங்கைக் குடிமகன் ஒருவரின் உரிமையைப் பாதுகாக்கும் முயற்சியா? இலங்கையிலேயே முரளியை சர்வதேச விளையாட்டுக்களில் சேர்த்துக் கொள்வதற்கு எவ்வளவு தடங்கல்கள் கொடுத்தார்கள்.இன்றுவரை முரளிக்கு பின் எந்தவொரு தமிழரும் இலங்கை அணியில் இல்லையே இதெல்லாம் அரசியல் இல்லை இனத்துவேஷம்


- Mathan - 06-01-2004

பிரெஞ்ச் ஓபன் போட்டியில் ஜெனீபர் கப்பிரியாட்டி (Jennifer Capriati) செரீனா வில்லிய்ம்சை (Serena Williams)வென்று அரை இறுதிக்குள் நுழைந்தார்.

<b>Jennifer Capriati beats Serena Williams in three sets 6-3 2-6 6-3 to reach the French Open semi finals</b>

<img src='http://news.bbc.co.uk/media/images/40221000/jpg/_40221267_cap245x245.jpg' border='0' alt='user posted image'>

http://news.bbc.co.uk/sport1/hi/tennis/3767093.stm


- Mathan - 06-04-2004

இந்தியாவுக்கான போட்டித் தொடரிலிருந்து தென் ஆபிரிக்காவின் போஜே, கிப்ஸ் விலகுவார்கள்

தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி வீரர்களான நிக்கி போஜே, ஹேஸ்ஸி கிப்ஸ் இருவரும் எதிர்வரும் இந்தியப் பயணத்தில் இருந்து விலகுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

2000 ஆம் ஆண்டு தென்னாபிரிக்க அணி இந்தியா வந்திருந்த போது, ஆட்ட நிர்ணய சதி நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக இவ்வருட கடைசியில் இந்தியா வரவிருக்கும் தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் கிப்ஸ், போஜே இருவர் மீதும் டில்லி பொலிஸார் விசாரணை நடத்துவார்கள் என்ற தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் கிப்ஸ், போஜே இருவர் மீதும் டில்லி பொலிஸார் விசாரணை நடத்துவதாக இருந்தால் இருவரும் இந்தியப் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று ஒருங்கிணைந்த தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

எங்களுடைய கிரிக்கெட் வீரர்களை இதுபோன்ற விசாரணைக்கு உட்படுத்த அனுமதிக்க முடியாது. அவர்கள் கிரிக்கெட் விளையாடச் செல்லும்போது இப்படிப்பட்ட விசாரணை நடத்துவதை அனுமதிக்க முடியாது என்று தென்னாபிரிக்க கிரிக்கெட் சபைத் தலைவர் ரே மாலி தெரிவித்துள்ளார்.

இந்த இரு வீரர்கள் குறித்தும் இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையுடன் தென்னாபிரிக்க கிரிக்கெட் சபைத் தலைமை நிர்வாகி ஜெரால்ட் மஜோலா ஆலோசனை நடத்தி வருவதாகவும் மாலி தெரிவித்துள்ளார். அக்டோபர், நவம்பர் மாதங்களில் தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி 7 ஒருநாள் போட்டிகளில் விளையாட இந்தியா வரவுள்ளது.

டில்லி பொலிஸாரின் விசாரணை விடயத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை தலையிட முடியாது என்றும், அதேசமயம், இந்த விசாரணை நடத்தப்படமாட்டாது என்றும் உத்தரவாதம் அளிப்பதாக கிரிக்கெட் சபைத் தலைவர் டால்மியா ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

ஆனால், குரோஞ்ஞே கிப்ஸ், போஜே ஆகியோர் மீதான ஆட்ட நிர்ணய சதி விசாரணை இன்னும் முடியவில்லை என்று டில்லி பொலிஸ் கமிர்னர் கே.கே.பால் தெரிவித்திருந்தார்.

தென்னாபிரிக்க அணி 4 ஆண்டுகளுக்கு முன் இந்தியா வந்திருந்த போது ஆட்டநிர்ணய சதிக் குற்றச்சாட்டு எழுந்தது. அப்போது தென்னாபிரிக்க அணியின் கப்டனாக இருந்த குரோஞ்ஞே இந்தக் குற்றச்சாட்டை ஒத்துக் கொண்டார். இதனால் அவருக்கு ஆயுட்காலத்தடை விதிக்கப்பட்டது. இரண்டு வருடங்களுக்கு முன் குரோஞ்ஞே விமான விபத்தில் பலியானார்.

மேலும் தென்னாபிரிக்க அணியின் இந்தியப் பயணத்தின் போது ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாடுவது என்ற இந்தியாவின் முடிவுக்கு தென்னாபிரிக்கா அதிருப்தி தெரிவித்துள்ளது.

Thinakkural


- ganesh - 09-16-2004

இன்று இரவு நடைபெற்ற ஐரோப்பியகிண்ண சுற்றுப்போட்டியொன்றில் இத்தாலியைச்சேர்;ந்த ஏ எஸ் ரோமா உக்கிரசைன்சோந்த டைனமோவ்கிவ் எதிர்த்து விளையாடியது இதில் டைனமோவ்கிவ் 1 0 என்ற ரீதியில் முன்னணியில் நின்றது இப்போட்டியின் போது ரோமா வீரர் ஒருவர் சிகப்புபாட்கடைத்து மைதானத்தை விட்டு வெளியேற்றப்பட்டார் இடைவேளையின் போது இளைப்பாறும் அறைக்கு சென்ற சிகப்புகாட்கொடுத்த மத்தியஸ்தர் ஆயுதம் உஒன்றினால் தாக்கப்பட்டு படுகாயம் அடைந்துள்ளார் இதனால் இப்போட்டி இடையே நிறுத்தப்பட்டது