Yarl Forum
ஓ இரத்த உறவே....... - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: ஓ இரத்த உறவே....... (/showthread.php?tid=6521)

Pages: 1 2 3


- hari - 11-05-2004

யார் சொல்வதை நாங்கள் நம்புவது?????


- Nellaiyan - 11-05-2004

மோகன்,

முடிந்தால் தயவு செய்து சம்பந்தப்பட்ட இணையத்தளம் பற்றிய செய்தியை "***" இணையத்திற்கு அறிவிக்கவும்.

நன்றி


- srilanka - 11-05-2004

இரவுபகல் நித்திரை முளித்து இதை கன்டறிந்து இதற்காக போராடும் தாயகத்து உறவுக்கு எனது நன்றிகள் தனது உடல் உயிர் அனைத்தும் மன்னுக்கு அர்பனித்த அந்த போரா..........

இவோன் Wrote:மோசடி முறையில் தமிழ் மக்களை தங்கள் வலையில் சிக்க வைக்க முயற்சித்த நாசகாாிகளின் கபடத்தை மிக குறுகிய காலத்தில் மிக வேகமாக தேவையறிந்து வெளியிட்ட உறவுக்கு விமா்சனங்களுக்கு அப்பால் வாழ்த்துக்களும் நன்றியும்.



- Eelavan - 11-05-2004

இந்த இணையத்தளம் பற்றிய செய்தி முதலில் தமிழ்நாதத்தில் வரவில்லை.நிதர்சனத்தில்தான் வந்தது.
அதை யார் வெளியிட்டது
அதனை யார் களத்தில் கொண்டு வந்து போட்டது
இப்போது யார் தமிழ்நாதம் தமிழ்நாதம் என ஊளையிடுவது.

இவற்றையும் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்


- srilanka - 11-05-2004

தம்பி டோய் நிதர்சனத்தை நான் கன காலமா வாசிக்கிறன்டா அங்கை இந்த தளம் தொடர்பா ஒரு செய்தியும் வரல்லடாப்பா எனக்க வயது போனாலும் நிதானம் போல்லடாப்பா அந்த தளம் இதை பற்றி எச்சரிக்கைதான் கொடுத்ததடாப்பா அட நீயும் அந்த தமிழ் குமாரதுரை துரோகிக்கு வக்காளத்து வாங்குறாய் ஆனால் போட்டிருக்கியது /****/


- tamilini - 11-05-2004

:roll: :roll:


- கறுணா - 11-05-2004

டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

இதோ அதோ இதோ கறுணா இங்கும்!!!!!!!

உந்த டோக் மதி குமாரதுரை எல்லோரையும் கிளீன் போல்ட் செய்கிறன் எண்டு வெளிக்கிட்டு தான் ஒரேயடியாக போல்ட் ஆகப் போகுது. நான் நினைத்தேன் உந்த டோக் என்னை மாதிரி பொம்பளைச் சேட்டைகளும், ஆட்கடத்தலும்தான் செய்யுது என்டு! இப்படி பெரும் ஏமாற்று வேலைகளும் தொடங்கீட்டுதோ?

டோக் ஒண்டை யாபகம் வைத்திரு "அவசரகாரனுக்கு புத்தி மத்திமம் என்டு". பாடைக்குப் போறதற்கு முன் சன்னி வந்து போடுமொரு ஆட்டம் போல் கிடக்குது. இப்படித்தான் என்னோடு சேர்ந்து சன்னி போட்டதுகள் கனக்க பாடைக்குப் போட்டுதுகள்.

இதோ அதோ இதோ கறுணா.....

டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்


- cannon - 11-05-2004

நிச்சயம் நாலாயிரம் கையெழுத்துக்களில் நாலாவது துரோகிகளின் கையெழுத்தாக இருக்குமென்பது சந்தேகமே! ஏறக்குறைய எல்லாக் கையெழுத்துக்களும் தமிழ்நாதத்தையோ, தமிழ்நெற்றையோ அல்லது யாழ் கருத்துக் களத்தில் வந்த செய்தியின் அடிப்படையில் உணர்ச்சிகளின் பிரதிபலிப்பேயாகும். ஆகவே நிச்சயமாக இத் தளங்களே தவறான வழி நடாத்தலுக்கு பொறுப்பானவர்கள். இதில் எந்த ஒரு இரண்டாவது கருத்துக்கும் இடமேயில்லை.

1) இதற்கு மன்னிப்பு என்ற வசனம் தேவைப்படாவிட்டாலும், நடைபெற்ற தவறை விளக்கி ஒரு சிறு அறிக்கையையேனும் மேற்குறிப்பிட்ட இணையத் தளங்கள் வெளியிட வேண்டாமா?
2) கையெழுத்து இட்டு விட்டும், இன்னும் அதன் உண்மைத் தன்மை தெரியாமலும், தாங்கள் பிழையாக வழிநடாத்தப்பட்டது தெரிவிக்காமலும் விடுவது சரியா?
3) உண்மை புரியாமல் கையெழுத்து இட்டவர்கள் மூலம் இன்னும் எத்தனை ஆயிரக் கணக்காணவர்களுக்கு அத்துரோகத் தளம் பற்றிய செய்தி பரவப் போகின்றது? இதைத் தடுக்க வேண்டாமா?
4) அச் செய்திகலை இணையங்களிலிருந்து அகற்றுவதாலோ மறைப்பதாலோ நடந்த தவறுகள் திருத்தப் பட்டுவிடுமா?

தயவு செய்து எங்கள் கோரிக்கைகளை எழுந்தமானமாக நிராகரிக்காமல், ஓர் சிறு அறிக்கை மூலமாவது உண்மையை தெரியப்படுத்துங்கள். இது இன உணர்வின்பால் விடப்பட்ட தவறே!

பி.கு: யாழ் கருத்துக்களத்தை பார்வையிடும் உறவுகளைத் தவிர வேறு எவருக்கும் அத் துரோகிகளின் இணையத்தளத்தின் உண்மை நிலமை தெரியாது.


- hari - 11-06-2004

Quote:பி.கு: யாழ் கருத்துக்களத்தை பார்வையிடும் உறவுகளைத் தவிர வேறு எவருக்கும் அத் துரோகிகளின் இணையத்தளத்தின் உண்மை நிலமை தெரியாது.
இந்த பாரிய மோசடியை கருத்துக்களத்தை தவிர மற்றய இணையத்தளங்கள் அம்பலப்படுத்தாதது கவலை தரக்கூடிய விடயம்.


- Sriramanan - 11-07-2004

Quote:இந்த பாரிய மோசடியை கருத்துக்களத்தை தவிர மற்றய இணையத்தளங்கள் அம்பலப்படுத்தாதது கவலை தரக்கூடிய விடயம்.
கவலை தரக் கூடிய விடயம்தான்

அம்பலப்படுத்துவதால் சிலவேளைகளில் சட்டச் சிக்கல் ஏற்பட வாய்ப்புக்கள் இருக்கலாம் அதனால் குறிப்பிட்ட இணையங்கள் அம்பலப்படுத்தாமல் இருக்கலாம் எண்டு நான் ஊகிக்கிறேன்.


- cannon - 11-26-2004

நன்றி வீரகேசரி .....

எனது கணவரை தீவிரவாதிகளிடமிருந்து மீட்டுத்தருவதில்
அரசு அசட்டை; சிறுபான்மையினர் என்பதால் இந்நிலையா?
தினேஷ் தர்மேந்திராவின் மனைவி கவலை
(அ.கனகராஜா)

எனது கணவர் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவரை மீட்பதில் அரசாங்கம் அசட்டையாக செயல்படுகின்றது. கட்சி பேதங்களை மறந்து இலங்கையர் என்ற ரீதியில் எனது கணவரை மீட்டுத் தாருங்கள் என ஈராக்கில் தீவிரவாதிகளினால் கடத்தப்பட்ட தினேஷ் தர்மேந்திராவின் மனைவி உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்:

நோன்பு பெருநாளுக்கு பின்னர் எனது கணவர் விடுதலையாவதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாக இலங்கை அரசாங்கம் அறிவித்த போது எனது குடும்பமே சந்தோஷமடைந்தது. ஆனால் இன்றுவரை அவருக்கு என்ன நடந்துள்ளது என்பது கூட எங்களுக்குத் தெரியவில்லை.

எனது கணவரின் விடுதலை குறித்து ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு மூன்று கடிதங்களை எழுதிய போதிலும் அக்கடிதம் கிடைத்துவிட்டது என்று கூட ஜனாதிபதி செயலகத்திலிருந்து எனக்கு பதில் கிடைக்கவில்லை.

எனது கணவரின் விடுதலை தொடர்பாக வெளிவிவகார அமைச்சும் ஏனைய பொது அமைப்புகளும் அரசியல் வாதிகளும் ஆரம்பத்தில் காட்டிய கரிசனை நாளுக்கு நாள் குறைந்துகொண்டு வருகிறது.

ஈராக்கில் யுத்தம் காரணமாக தீவிரவாதிகளுடன் தொடர்பு கொள்ள முடியாதுள்ளதாக சில முக்கியஸ்தர்கள் தெரிவிக்கின்றனர். அப்படியானால் ஏனைய நாட்டு தீவிரவாதிகள் எவ்வாறு விடுதலைச் செய்யப்பட்டனர்.

எனது கணவர் வேலை செய்த குவைத் நாட்டு கம்பனிக்காரர்கள் தீவிரவாதிகள் என்ன கேட்டாலும் தருவதாக கூறிவருகின்றனர்.

இந்நிலையில் கணவரை விடுதலைச் செய்வதற்கு அரசாங்கம் கொடுக்கின்ற அழுத்தம் போதாது என்றே கருதுகிறேன்.

எனது கணவரை விடுதலை செய்வதற்கு அழுத்தம் கொடுக்கும் படி மூன்று பிள்ளைகளுடன் ஜனாதிபதியை நேரடியாக சந்தித்து வேண்டுகோள்விடுக்க விரும்புகிறேன். ஜனாதிபதியை நேரடியாக சந்திப்பதற்கான ஏற்பாட்டை யாராவது மேற்கொள்ள வேண்டும் என்றார்.


- Nellaiyan - 12-07-2004

இன்று, ஈராக்கில் கடத்திப் பணயக்கைதியாக வைக்கப்பட்டிருந்த ஈழத்தமிழனான தினேஸ் தர்மேந்திரா விடுவிக்கப்பட்டிருப்பதாகவும், அவர் தற்போது குவைற்றில் தங்கியிருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இவரின் விடுதலைக்கு உலகலாவிய அளவில் தமிழ்க் மக்கள் குரல் கொடுத்ததும், இலங்கையரசு இவரின் விடுதலைக்கு எவ்வித நடவடிக்கையெதுவும் எடுக்கவில்லையென்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இவரின் விடுதலைக்கு உதவுகின்றோம் எனும் போர்வையில் புலத்தில் குறிப்பாக டென்மார்க் தேசத்திலிருந்து சில தமிழ்த் துரோக ஈனப்பிறப்புகள் செயற்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இச்சந்தர்ப்பத்தில் தினேஸ் தர்மேந்திராவின் குடும்பத்துக்கு, இச்செய்தியால் சந்தோசமடைந்திருக்கும் வேளையில் நாமும் எமது சந்தோசத்தையும், வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறோம்.