![]() |
|
பொதுவறிவுப் போட்டி - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10) +--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49) +--- Thread: பொதுவறிவுப் போட்டி (/showthread.php?tid=487) |
- kirubans - 03-25-2006 புவியியலில் பெரும் புலிகள்தான். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> சரியான விடைகளை அளித்த துஷிக்கும் அனிதாவுக்கும் வாழ்த்துக்கள். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- kirubans - 03-25-2006 KULAKADDAN Wrote:தமிழில் பத்து பாட்டு என கூறப்படும் நூல்கள் எவை?பத்துப் பாட்டையும் எட்டுப் புலவர்கள் இயற்றியுள்ளனர். நச்சினார்க்கினியனார் உரை எழுதியுள்ளார். சிறியது முல்லைப் பாட்டு, பெரியது மதுரைக் காஞ்சி. மற்றையவர்கள் மிகுதி எட்டையும் எழுத விட்டுவிடுகின்றேன். :wink: - அனிதா - 03-25-2006 KULAKADDAN Wrote:தமிழில் பத்து பாட்டு என கூறப்படும் நூல்கள் எவை? திருமுருகார்றுப்படை (நக்கீரனார்) பொருநராற்றுப்படை (மூடத்தாமக்கண்ணியார்) சிறுபாணாற்றுப்படை (நத்தத்தனார்) பெரும்பாணாற்றுப்படை (கடியலூர் உருத்திரங் கண்ணனார்) முல்லைப் பாட்டு (நப்பூதனார்) மதுரைக்காஞ்சி (மாங்குடி மருதனார்) நெடுநல்வாடை (நக்கீரர்) குறிஞ்சிப்பாட்டு (கபிலர்) பட்டினப்பாலை (கடியலூர் உருத்திரங்கண்ணனார்) மலைபடுகடாம் (பெருங் கெளசிகனார்) சரியோ.... :roll: :roll: - Puyal - 03-25-2006 அனிதா முழுவதும் மிகவும் சரியான பதில். நத்தத்தனாருக்கு முன் நல்லு}ர் என ஒரு அடைமொழியையும் சேர்த்து ஞாபகத்தில் வைத்திருக்கவும். - Puyal - 03-25-2006 இப்பக்கத்திற்கு உறவுகள் கொடுக்கும் ஊக்கத்திற்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள். எனது கேள்வி: பதினெண்கீழ்க்கணக்குத் தொகுப்பிற்குள் அடங்கும் நு}ல்கள் எவை? (பதினெட்டு நு}ல்கள் வரவேண்டும்) - Raguvaran - 03-25-2006 Puyal Wrote:பக்திமொழி எனச் சிறப்புப் பெயர் கொண்ட மொழி எது? தமிழ் - Puyal - 03-25-2006 சுஜி இக்கேள்விக்கான பதிலை ஏற்கெனவே தந்துள்ளார். இருந்தாலும் ரகு உங்களது முயற்சிக்குச் சிறப்பான பாராட்டுக்கள். தொடர்ந்தும் இப்பக்கத்தடன் இணைந்திருங்கள். - Raguvaran - 03-25-2006 Puyal Wrote:சுஜி இக்கேள்விக்கான பதிலை ஏற்கெனவே தந்துள்ளார். அப்படியா? நான் வாசிக்காமல் பதிலளித்துவிட்டேன். - Puyal - 03-25-2006 பதினெண்கீழ்க்கணக்குத் தொகுப்பிற்குள் அடங்கும் நு}ல்கள் எவை? (பதினெட்டு நு}ல்கள் வரவேண்டும்) - கறுப்பி - 03-25-2006 திருக்குறள் நாலடியார் நான்மணிக்கடிகை இன்னா நாற்பது இனியவை நாற்பது திரிகடுகம் ஆசாரக்கோவை பழமொழி நானூறு சிறுபஞ்சமூலம் ஏலாதி முதுமொழிக்காஞ்சி ஐந்திணை ஐம்பது திணைமொழி ஐம்பது ஐந்திணை எழுபது திணைமாலை நூற்றைம்பது கைந்நிலை கார் நாற்பது களவழி நாற்பது - Puyal - 03-25-2006 கறுப்பி வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் பதில்கள் யாவும் சரியானவையே. - Puyal - 03-25-2006 வச்சணந்திமாலை என்னும் இலக்கண நு}லை இயற்றியவர் யார்? யாப்பிலக்கணம் என்னும் இலக்கண நு}லை இயற்றியவர் யார்? யாப்பருங்கல விருத்தி என்னும் இலக்கண நு}லை இயற்றியவர் யார்? கிறிஸ்தவர்கள் தமிழ் உலகிற்குத் தந்த அகராதியின் பெயர் என்ன? ஆழ்வார்களில் திருடனாகவும் மன்னனாகவும் இருந்த ஆழ்வார் யார்? - Puyal - 03-25-2006 வச்சணந்திமாலை - குணவீரபண்டிதர். யாப்பிலக்கணம் - திருத்தணிகை விசாகப்பெருமாளையர். யாப்பருங்கலவிருத்தி - அமிர்தசாகரர். கிறிஸ்தவர்கள் தமிழ் உலகிற்குத் தந்த அகராதியின் பெயர் என்ன? பதில்: சதுரகராதி. ஆழ்வார்களில் திருடனாகவும் மன்னனாகவும் இருந்த ஆழ்வாரின் பெயர் என்ன? பதில்: திருமங்கையாழ்வார். - Puyal - 03-26-2006 உலகத் தொழிலாளரே ஒன்று சேருங்கள் என்ற வாசகம் யாருடைய கல்லறையில் இடம் பெற்றுள்ளது? - Puyal - 03-26-2006 உலகத் தொழிலாளரே ஒன்று சேருங்கள் என்ற வாசகம் யாருடைய கல்லறையில் இடம் பெற்றுள்ளது? இவ்வினாவிற்கு மேலதிக தரவுகள் தேவையாயின் களத்தில் குறிப்பிடவும். - Puyal - 03-26-2006 உலகத் தொழிலாளரே ஒன்று சேருங்கள் என்ற வாசகம் யாருடைய கல்லறையில் இடம் பெற்றுள்ளது? இவ்வினாவிற்கான தரவாக இவர் ஜெர்மன் நாட்டில் பிறந்து பிரித்தானியாவில் வாழ்ந்து இறந்த ஒரு பிரபலமானவர் - stalin - 03-26-2006 http://www.yarl.com/forum/viewtopic.php?t=6255 கார்ல் மாக்ஸ் - Puyal - 03-26-2006 ஸ்ராலின் உங்களின் பதில் சரி. முயற்சிக்குச் சிறப்பான பாராட்டுக்கள். - Puyal - 03-26-2006 தென்னுலகப் பிரிட்டன் என அழைக்கப்படும் நாடு எது? - கறுப்பி - 03-27-2006 தென்னுலகப் பிரிட்டன் என அழைக்கப்படும் நாடு எது? º¢í¸ôâ÷ |