Yarl Forum
திருமலையில் இனக்கலவரம்: தமிழர்களின் கடைகள் தீவைத்து எரிப்பு! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: திருமலையில் இனக்கலவரம்: தமிழர்களின் கடைகள் தீவைத்து எரிப்பு! (/showthread.php?tid=252)

Pages: 1 2 3 4


- Selvamuthu - 04-12-2006

படங்களைப் பார்க்க நெஞ்சம் கொதிக்கின்றது.
அந்தத்தாய் யாரோ? அந்தத் தாயையும், குழந்தைகளையும் பார்க்கும்போது கண்கள் கலங்குகின்றன.
தமிழராகப்பிறந்ததினால் தங்களுக்கு இப்படியொரு விதி வருமென்று நேற்றுவரை நினைத்திருப்பார்களா?

இவைகளை உலகெங்கிலும் உள்ள ஆங்கில ஊடகங்களுக்கும், ஏனைய ஊடகங்களுக்கும் அனுப்பக்கூடியவர்கள் அனுப்பவேண்டும்.


- iruvizhi - 04-12-2006

இப்போதுதாவது உலகம் புரிந்து கொள்ளுமா தமிழ் சிறார்களுக்கு சிங்கள இராணுவத்தால் உயிராபத்து என்பதனை. :?: :?: :?: :?:


- iruvizhi - 04-12-2006

:evil: :evil: :evil: :evil: :evil: :evil:


- DV THAMILAN - 04-12-2006

ஆங்கில பத்திரிக்கை காரன்களுக்கு தமிழிழ பக்கம் நடக்கிற ஒன்றும் தெரியாது மாறி இருப்பாங்க. நாங்க சும்மா ஆமியை தட்டி போட்டா இந்தா அடிடா புடிடா என்டு வருவாங்க. தமிழிழம் கிடைக்கக்க வருவாங்கள் தானே. அப்ப பாத்துகொள்ளுவம்.


- Sujeenthan - 04-12-2006

இந்த நடவடிக்கைகள் 83ம் ஆண்டு கலவரங்களை நினைவுபடுத்துகின்றன. அப்பொழுது தமிழனுக்கு இது பயத்தை உண்டுபண்ணியது. ஆனால் இப்பொழுது இது சிங்கள இராணுவத்திற்கு பேராபத்தை கொண்டுவரும் என்பது திடம். எதுவாக இருந்தாலும் உயிர் இழந்தவர்களது உறவுகளுக்கு எனது அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கின்றேன். இதைவிட கோழைபோல் வேறுநாட்டில் தங்கியிருக்கும் என்னால் என்ன செய்யமுடியும்.


- DV THAMILAN - 04-12-2006

இறந்த மக்களுக்கு எனது கண்ணிர் அஞ்சலி.


- sinnakuddy - 04-13-2006

இது 58, 77, 83, இல்லை.... விளங்கேலை......உவங்களுக்கு.....இது.......2006 .......


- mathuka - 04-13-2006

சரி சிங்களவன் இன்று ஆரம்பிச்சு வைச்ச்சான் வருத்தம் தான் நெஞ்சம் கொதிக்கிறது. எம் உறவுகள் வீதி வீதியாய் பிணங்களாக கிடக்கிறார்கள். சரி வரும் நாட்களில் பொறுத்து இருந்து தான் பாருங்களேன். பதிலடி எப்படி என்று..


- paandiyan - 04-13-2006

இனியும் என்ன பொறுமை. நெஞ்சம் கொதிக்கிறது. நாலரை வருட ஏமாற்றம் போதும். இறந்தவர்களுக்கு கண்ணீர் அஞ்சலிகள்


- Eelathirumagan - 04-13-2006

தாய்நிலமே !!
கண்கள் கொவ்வை பழமாக சிவக்கின்றன. இவை அனைத்தும் விடுதலைக்கான கட்டியங்களே.
படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு கண'ணீரஞ்சலிகள்.


- கந்தப்பு - 04-13-2006

படுகொலை செய்யப்பட்ட எமது உறவுகளுக்கு கண்ணீர் அஞ்சலி


- Aravinthan - 04-13-2006

இறந்த மக்களுக்கு எனது கண்ணிர் அஞ்சலி


- SUNDHAL - 04-13-2006

இறந்த எம்மவர்களுக்கு ஆழ்ந்த அணுதாபங்கள்... Cry Cry Cry


- sooriyamuhi - 04-13-2006

இறந்த திருமலை மக்களுக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள்


- கந்தப்பு - 04-13-2006

இப்படுகொலை ஒன்றும் அமெரிக்காவுக்குத் தெரியாது. இராணுவத்தினர் மட்டும் தான் மனிதர்களா?


- kurukaalapoovan - 04-13-2006

<b>விடுதலைப்புலிகள் பங்குனி 2006 இதளிலிருந்து:</b>
சமாதான மேசையில் தமிழர் தரப்பை யுத்தத்திற்கு அழைக்கிறது சிங்கள அரசு
http://www.viduthalaipulikal.com/file/docs...6/04/129-07.pdf
போரை நோக்கியே சிங்கள அரசு காய்களை நகர்த்துகிறது
http://www.viduthalaipulikal.com/file/docs...6/04/129-05.pdf


- Vaanampaadi - 04-13-2006

<b>Sri Lanka extends curfew after bloodshed</b>
http://news.yahoo.com/s/afp/20060413/wl_st...HNlYwN5bmNhdA--


- Vaanampaadi - 04-13-2006

<b>Sri Lanka capital under security net after fatal blasts</b>
http://english.pravda.ru/news/world/13-04-...121-Sri_Lanka-0


- Vaanampaadi - 04-13-2006

<b>Sri Lanka lifts curfew in Trincomalee</b>
http://www.radioaustralia.net.au/news/stor...1616166.htm?Sri


- iruvizhi - 04-13-2006

திருமலை வன்முறைத் தாக்குதல் ஆத்திமூட்டும் பேரினவாதத்தின் கொடூரத்தை வெளிப்பாடே - ஜெயானந்தமூர்த்தி
திருகோணமலையில் திட்டமிட்டு தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி வன்மையாகக் கண்டித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழர் தலைநகரான திருமலையில் கடந்த பல ஆண்டுகளாக பேரினவாதிகளும் சிங்கள அரசும் திட்டமிட்டு தமிழ் மக்களை அழிக்கும் வகையில் செயற்பட்டு வருகின்றன. தமிழர்களின் பாரம்பரிய நிலங்களை திட்டமிட்டு ஆக்கிரமித்தும் குடியேற்றங்களை நடத்தியும் வந்ததுடன் கடந்த வருடத்தில் நகரின் மத்தியில் புத்தர் சிலை அமைக்கப்பட்டு தமிழர் தலைநகரை மேலும் ஆக்கிரமிப்புச் செய்தனர்.

இதன் தொடர்ச்சியாக தேசியத்திற்காகக் குரல் கொடுத்த பலர் கொலை செய்யப்பட்டதுடன் நேற்றைய தினம் தமிழ் மக்களை மேலும் ஆத்திரமூட்டும் வகையில் திட்டமிட்டு குண்டுவெடிப்பை நடத்தி தமிழ் மக்களின் மீது தாக்குதல் நடத்தியது மாத்திரமின்றி சொத்துக்களையும் தீயிட்டு அழித்துள்ளனர்.

இச்சம்பவம் தமிழ் மக்களை மேலும் ஆத்திரமூட்டும் ஒரு நடவடிக்கையாகவே உள்ளதுடன் சிறிலங்காவின் பேரினவாதத்தின் கொடூரத்தை வெளிக்காட்டியுள்ளது. இதனால் இன்று தமிழ் மக்கள் தமது இருப்புக்காகவும் தமிழ் மண்ணைக் காப்பதற்காகவும் தமிழ் தேசியத்தை வலியுறுத்தி சுயநிர்ணய உரிமையைப் பெறுவதற்காகவும் இறுதி முடிவெடுக்க வேண்டிய காலம் வந்துவிட்டது. என்று தெரிவித்துள்ள அவர் தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து எமது தேசிய போராட்டத்திற்கு வலுச்சேர்க்க வேண்டிய நேரம் இதுவாகும். என்றும் மேலும் தெரிவித்துள்ள அவர்

திருமலைச் சம்பவத்தில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இம்முறை புதுவருடப் பிறப்பை வடகிழக்கில் மக்கள் ஆடம்பரமின்றி அமைதியாக அனுஸ்டிக்க வேண்டுமென்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தகவல்: பதிவு புள்ளி கோம் www.pathivu.com