![]() |
|
மூளைக்கு வேலை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10) +--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49) +--- Thread: மூளைக்கு வேலை (/showthread.php?tid=6978) |
- kirubans - 06-03-2005 Eswar Wrote:Quote:பாபா இலண்டனில் பாவித்த கார்களை விற்பனை செய்யும் தொழில் செய்கிறார். அவர் போன வாரம் இரண்டு கார்களை தலா 9999 பவுண்டுகளுக்கு விற்றார். ஒரு காரில் அவர் 10% இலாபத்தையும், மற்றையதில் 10% நட்டத்தையும் அடைந்தால், அவர் மொத்தமாக அடைந்த இலாபத்தினது/நட்டத்தினது தொகை என்ன?அவர் 202 பவுண்டு நட்டப்பட்டிருக்கிறார். சரியான பதில். நீங்கள் ஒரு கணக்காளராக இருந்தால், வியாபாரம் செய்யும் தமிழருக்கு லாப நட்டங்களைக் கணக்கிட உதவலாமே. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- kavithan - 06-03-2005 kirubans Wrote:எப்படி என்றும் போடலாமே.. என்னை போலை கொஞ்சப் பேருக்காகEswar Wrote:Quote:பாபா இலண்டனில் பாவித்த கார்களை விற்பனை செய்யும் தொழில் செய்கிறார். அவர் போன வாரம் இரண்டு கார்களை தலா 9999 பவுண்டுகளுக்கு விற்றார். ஒரு காரில் அவர் 10% இலாபத்தையும், மற்றையதில் 10% நட்டத்தையும் அடைந்தால், அவர் மொத்தமாக அடைந்த இலாபத்தினது/நட்டத்தினது தொகை என்ன?அவர் 202 பவுண்டு நட்டப்பட்டிருக்கிறார். - samsan - 06-03-2005 Quote:நான் கேட்டது ரூ 100/= க்கும் 100 பொம்மை வாங்கணும் என்று. இதற்குள் எப்படியாம் இனிப்பு வாங்கிறது. எனக்கே 100 பொம்மைகள் வேணும் பிறகெப்படியாம் யாழ்கள உறுப்பினர்களுக்கும் கொடுக்க முடியும். சரி முதலில் ஒழுங்காக பதில் சொல்லி தாங்கோ நான் பொம்மைகளை வாங்கிறேன். அதற்கப்புறம் பார்ப்பம் யார்யாருக்கு பொம்மை கொடுக்கிறதென்று. சுட்டி நீங்கள் உங்களின் முதல் பதிப்பிலே தெளிவாக எழுதவில்லை அதுதான் நான் சும்மா எழுதினேன். பருவாயில்லை இப்போ திருத்திவிட்டீர்கள். விடைதெரிந்தால் நிச்சயமாக சொல்கிறேன். - Eswar - 06-03-2005 Quote:நான் கேட்டது ரூ 100/= க்கும் 100 பொம்மை வாங்கணும் என்று. இதற்குள் எப்படியாம் இனிப்பு வாங்கிறது. எனக்கே 100 பொம்மைகள் வேணும் பிறகெப்படியாம் யாழ்கள உறுப்பினர்களுக்கும் கொடுக்க முடியும். சரி முதலில் ஒழுங்காக பதில் சொல்லி தாங்கோ நான் பொம்மைகளை வாங்கிறேன். அதற்கப்புறம் பார்ப்பம் யார்யாருக்கு பொம்மை கொடுக்கிறதென்றுஎன்ன வெண்ணிலா நான் சொன்ன விடையில திருப்தி இல்லையா? 10 நீல பொம்மை 35 பச்சை பொம்மை 55 சிவப்பு பொம்மைகளைக் கூட்ட 100 பொம்மைகள் வருகிறதா. இனி விலைகளைப் பார்ப்போம். 10x5=50, 35x0,25=8,75, 55x0,75=41,25 இவ்வளவையும் கூட்ட 100 வருதா. - Eswar - 06-04-2005 Quote:kirubans எழுதியது:கட்டாயம் நாளை எழுதுகிறேன் கவிதன். - kuruvikal - 06-04-2005 kavithan Wrote:kirubans Wrote:எப்படி என்றும் போடலாமே.. என்னை போலை கொஞ்சப் பேருக்காகEswar Wrote:Quote:பாபா இலண்டனில் பாவித்த கார்களை விற்பனை செய்யும் தொழில் செய்கிறார். அவர் போன வாரம் இரண்டு கார்களை தலா 9999 பவுண்டுகளுக்கு விற்றார். ஒரு காரில் அவர் 10% இலாபத்தையும், மற்றையதில் 10% நட்டத்தையும் அடைந்தால், அவர் மொத்தமாக அடைந்த இலாபத்தினது/நட்டத்தினது தொகை என்ன?அவர் 202 பவுண்டு நட்டப்பட்டிருக்கிறார். இரண்டு காரினதும் கொள்விலைகள் = Y* , Y" விற்றவிலை = 9999 10% இலாபமும் நட்டமும் என்று தரப்பட்டுள்ளது தரவு...! இதன் பிரகாரம் இலாபச் சதவீதம் பின்வருமாறு தரப்படும் 9999 - Y* X 100 / Y* = 10 இதைத் தீர்த்தால் இலாபத்துடன் விற்ற காரின் கொள்விலை = 9090 பவுண்ஸ் என்றாகும் நட்டச் சதவீதம் பிவருமாறு தரப்படும் Y" - 9999 X 100 / Y" = 10 இதைத் தீர்த்தால் நட்டத்துடன் விற்ற காரின் கொள்விலை = 11110 பவுண்ஸ் ஆகும் மொத்தக் கொள்விலை (இரு காரினதும் ) = 9090 + 11110 = 20200 மொத்த விற்றவிலை ( இரு காரினதும் ) = 9999 + 9999 = 19998 மொத்த நட்டம் = 20200 - 19998 = 202 பவுண்கள்...! ஈஸ்வர் செய்கைமுறை தர தாமதித்ததால் நாங்கள் செய்த வழிமுறையைத் தருகின்றோம்...! - kavithan - 06-04-2005 அண்ணா நன்றி உங்கள் விளக்கத்துக்கு .. எனக்கும் தெரியும் இது ஆனால் அதிலை வந்த தலா வை கவனிக்கவில்லை அதுதான் பலமுறை முயன்றும் முடியவில்லை.. என்னடா இரண்டுகார் 9999 க்கு விகிறார் என்றால் எப்படி ஒன்றின் விலை தெரியும் என்று குழம்பீட்டன்.. இப்ப நீங்கள் விளக்கம் போட பின் தான் ஒவ்வொரு கார் 9999 என்பதை புரிந்து கொண்டேன். உங்கள் விளக்கதுக்கும் , ஈஸ்வரின் விடைக்கும் நன்றிகள். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- kathirs - 06-04-2005 Quote:ஒரு பொம்மைக்கடையில் நீலநிறப் பொம்மை ஒன்றின் விலை ரூ 5/= இது கூட விடையாக வரலாம்... 8 நீலம். (40) 18 பச்சை. (4.50) 74 சிவப்பு. (55.50) - வெண்ணிலா - 06-05-2005 நன்றி ஈஸ்வர். தாங்கள் சொன்னதை நான் முதலில் கவனிக்கவில்லை. மன்னிக்கவும். கதிருக்கும் நன்றிகள் - Eswar - 06-08-2005 நான் ஒரு செடி நட்டேன். அதில் நடும்போது 7 இலைகள் இருந்தன. அடுத்த நாள் 3 இலைகள்தான் இருந்தன. அடுத்த நாள் புதிதாக இன்னும் 7 இலைகள் வந்திருந்தன. அதுக்கு அடுத்த நாள் 4 இலைகள் உதிர்ந்திருந்தன. இப்படியே ஒருநாள் புதிதாக 7 இலைகள் வருவதும் அதற்கு அடுத்த நாள் 4 இலைகள் உதிர்வதுமாக இருந்தால் அச்செடியில் மொத்தமாக 100 இலைகள் வருவதற்கு எத்தனை நாட்கள் எடுக்கும்? - kirubans - 06-09-2005 63 வது நாளில் 100 இருக்கும். - Eswar - 06-09-2005 நன்றி கிருபன். எஸ் - kirubans - 06-30-2005 இறுதியாகக் கொடுத்த புதிர் விஷமிகளின் தாக்குதலில் போய்விட்டதால் மீண்டும் தருகின்றேன். யாராவது முயற்சி செய்யுங்கள். இரு வெவ்வேறான நீளங்களும் பருமன்களும் (thickness) உடைய மெழுகுதிரிகள் உள்ளன. குறைவான நீளம் உள்ள மெழுகுதிரி முழுமையாக எரிந்துமுடியச் சரியாக 11 மணிநேரம் எடுக்கும். மற்றையது (நீளம் கூடியது) முழுமையாக எரிந்துமுடிய 7 மணிநேரமே பிடிக்கும். இரு மெழுகுதிரிகளுமே ஒன்றாகக் கொளுத்தப்பட்டு 3 மணிநேரத்தின் பின் சமமான நீளங்களைக் கொண்டிருந்தால், அம்மெழுகுதிரிகளின் ஆரம்ப நீளங்களின் விகிதம் (ratio) என்ன? - Vishnu - 07-01-2005 நீளம் கூடியது : நீளம் குறைந்தது = 1:2 சரியா அண்ணா?? :roll: :roll: - ஈழத்துளி - 07-01-2005 11:14 - kirubans - 07-01-2005 விஷ்ணு விடை சரியாக வரவில்லை.
- kirubans - 07-01-2005 ஈழத்துளி Wrote:11:14சரியான விடை. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> விளக்கத்தையும் தந்தால் மற்றவர்கள் புரிந்துகொள்வார்களே.
- அருவி - 07-09-2005 ஈழத்துளி விளக்கம் தரமுடியுமா? :roll: - ஈழத்துளி - 07-11-2005 இந்தப் பகுதியை கவனிக்காது விட்டுவிட்டேன். தாமதத்திற்கு வருந்துகிறேன் Quote:இரு வெவ்வேறான நீளங்களும் பருமன்களும் (thickness) உடைய மெழுகுதிரிகள் உள்ளன. குறைவான நீளம் உள்ள மெழுகுதிரி முழுமையாக எரிந்துமுடியச் சரியாக 11 மணிநேரம் எடுக்கும். மற்றையது (நீளம் கூடியது) முழுமையாக எரிந்துமுடிய 7 மணிநேரமே பிடிக்கும். கீழே இணைக்கப்பட்டிருக்கும் படம் போதிய விளக்கத்தை தரும் என நினைக்கிறேன் <img src='http://img243.imageshack.us/img243/782/candle4hi.gif' border='0' alt='user posted image'> எடுகோள் - 1 மெழுகுதிரியின் பருமன் சீரானது, அதாவது ஒரு மெழுகுதிரியின் பருமன் மற்றயதிலிருந்து வேறுபட்டபோதிலும் சீராகவே இருக்கிறது 2 மெழுகுதிரி எரியும் வீதம் அதன் பருமனில் தங்கியிருக்கவில்லை - அதாவது ஒரு அலகு நேரத்தில் எரிக்கப்படும் மெழுகின் அளவு இரு மெழுகுதிரிகளுக்கும் பொதுவான மாறிலி 3 மெழுகுதிரி எரியும் வீதம் பிறச் சூழல் காரணிகளில் தங்கியிருக்கவில்லை - அதாவது இரு மெழுகுதிரிகளும் ஒரே சூழலில் எரிக்கப்படுகின்றன - Mathan - 07-11-2005 இவ்வளவு நீளமான விளக்கமா. நன்றி. (விடை சரியா தானே இருக்கும் விளக்கத்த படிச்சு பார்க்கலை அலுப்பா இருக்கு ஹி ஹி) |