![]() |
|
ஜேர்மனி செய்திகள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21) +--- Thread: ஜேர்மனி செய்திகள் (/showthread.php?tid=8411) |
- ganesh - 10-19-2003 ஆ பத்து மட்டுமல்ல தமிழர்கள் ஒன்று கூடினாலும் ஆபத்துதான் - Kanani - 10-19-2003 ஒன்று கூடுவதில் பிரச்சினை இல்லை புரிந்துணர்வும் சரியான தலைமைத்துவமும் வேண்டும் - sOliyAn - 10-20-2003 அப்படி சொல்லுங்க கணனி.. - sandiya - 10-20-2003 சங்கங்களும் பல சங்கடங்களும் ஐரோப்பாவில் வழமையாகிவருவதற்கு காரணம்தான் யாரே புரியாத புதிராரகவுள்ளது - sandiya - 10-20-2003 சங்கங்களும் பல சங்கடங்களும் ஐரோப்பாவில் வழமையாகிவருவதற்கு காரணம்தான் யாரே புரியாத புதிராரகவுள்ளது - ganesh - 10-20-2003 போட்டி பொறாமை பதவிஆசை எல்லோரும் தலைவராகவேண்டும் எல்வோரும் அறிவிப்பாளர்கள் ஆகவேண்டும் எல்லோரும் பணிப்பாளர்கள் ஆக வேண்டும் இன்னும் பல ஆனால் எல்லோராலும் எல்லாம் முடியாது இதனால் வருவதுதான் சங்கங்களும் சங்கடங்களும் பாதிக்கப்படுவது யார் அவர்கள் அல்ல - sandiya - 10-20-2003 அப்போது யார் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்? - sOliyAn - 10-21-2003 ஜேர்மனியில் ஓரளவாவது தகமை உள்ளவர்கள்தான் அப்போது சங்கங்களையோ அமைப்புகளையோ ஊடகங்களையோ உருவாக்கினார்கள்.. பின்னர் அதற்குள் தகமையில்லாத வான்கோழிகள் ஒன்றுமில்லாத அகதிப்பட்டத்தை கொஞ்சமாவது களிம்பு தடவி உருமாற்ற உள்ளே நுழைந்து.. போலியாக பெயர் எடுப்பதற்காக ஏதேதோ செய்யப்போய்.. ஈற்றில் சங்கமென்றால் சங்கடங்களாகிவிட்டன.. இதுதான் எனது அனுபவம். - பாரதி - 10-21-2003 எதிரியானாலும் அவனது திறமையை மதிப்போமேயானால் சங்கடங்கள் பதவி ஆசைகள் போலியான பதவி ஆசைகள் வர சந்தற்பம் இல்லாது போகிறது. திறமைக்கு மதிப்பு கொடுப்போமேயானால் களிம்பு புhசவேண்டி வராது. எம்மையே நாம் சில சமயங்களில் ஆளமுடியாது தோற்று விடுகிறோம். பிறகெப்படி சங்கம்...? ( உணர்வு ஆதிக்கங்களால்... கோபம் அழுகை .. வெறுமை... ) நட்புடன் பாரதி. - sandiya - 10-22-2003 திறமைக்கு மதிப்புகொடுக்கின்ற தமிழ்சமுதாயம் என்று தான் புலம்பெயர்வாழ்வியல் சுழலில் உருவாகும் ? - veera - 10-22-2003 Quote:திறமைக்கு மதிப்புகொடுக்கின்ற தமிழ்சமுதாயம் என்று தான் புலம்பெயர்வாழ்வியல் சுழலில் உருவாகும் ? வாய்ப்புக்கள் குறைவுதான். ஏனெனில் இங்குள்ள பல திறமைசாலிகளே தங்களை யார் என்று இனங்கண்டுகொள்ள முடியாமல் இருக்கின்றனர். ஏன் மற்றவர் திறமையை அழிக்கவேண்டும்?அல்லது மற்றவர்களை வளரவிடக்கூடாது என்ற மனப்பக்குவம் இன்னுமொரு திறமைசாலிக்கு வருகிறது என்றால் அது அவரிடம் இருக்கும் தாழ்வு மனப்பான்மையே தவிர வேறு ஒன்றும் இல்லை. எனக்குத்தெரிந்த ஒரு பல்கலைக் கலைஞன் ஒருவர் அடிக்கடி இப்படிச் சொல்லுவார்.[b]அதாவது ஒரு திறமைசாலியால் இன்னுமொரு திறமைசாலியை முந்திக்கொண்டு செல்ல முடியமே தவிர இன்னுமொரு திறமையையோ கலைஞனையோ அழிக்க முடியாது என்பார். இது முற்றிலும் உண்மை.அதாவது எப்போது திறமைசாலிகள் தங்களை தமது திறமையை முழுமையாக நம்பி தனக்கு முன்னால் இருப்பவரை விட முயற்சியுடன்,தன்னைத்தானே மெரூகூட்டி முன்னுக்கு வரவேண்டும் என்று நினைப்பாரோ அப்போது அவர் மற்றவரைப் பற்றிக் கவலைப்படவும் மாட்டார் மற்றவர் திறமைகளை மதிக்கத் தவறவும் மாட்டார். எனவே முதலில் (ஏதோவொரு வகையில்) இவர்களிடம் உருவாகும், பொறாமையை உருவாக்கும் தாழ்வு மனப்பாண்மை ஒழியுமானால் சந்தியா விரும்புவது போன்று ஒரு காலம் உருவாகும். ஆனால்....? நடக்குமா என்று பார்த்தால்,வாய்ப்புக்கள் குறைவாகத்தான் இருக்கிறது. - shanthy - 10-23-2003 <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- shanmuhi - 10-20-2004 þýறு t.t.n. ¦¾¡¨Ä측ðº¢Â¢ø §ƒ÷Áɢ¢ø «¸¾¢¸û Á£Ç¡öவு ±ýÈ ¿¢¸ú ¿¨¼¦ÀÈ þரு츢ýÈது. ¿£Ä À¡Š§À¡ð ÀüȢ ¸ருòதுì¸ளுõ þ¼õ¦ÀÈ þரு츢ýÈது. - kavithan - 10-20-2004 உங்கள் தகவலால் எம் உறவுகள் நன்மை அடைவார்கள் .தகவலுக்கு நன்றி. நேரம் , நாள் என்பவற்றையும் தெரிவித்தீர்கள் என்றால் வசதியாக இருக்கும் உறவுகளுக்கு - shanmuhi - 10-20-2004 þýறு þÃவு 21.00 Á½¢ìகு ¿¨¼¦ÀÈô§À¡¸¢ýÈது. - shanmuhi - 11-13-2004 ஜேர்மனியத் தமிழரின் சட்டப்பிரச்சினையை அரசியலாக்க தமிழ்த் துரோகிகள் திட்டம் - தமிழ் தினசரி தவறான தகவல். ( சனிக்கிழமை, 13 நவம்பர் 2004 ) ( குமரப்பா ) புலம்பெயர்ந்த தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க உலகிலேயே முதன் முறையாகத் தமிழ்ச்சட்ட சேவைப்பிரிவு நடாத்தும் ஜேர்மனிய சட்டவல்லுநர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் செய்கின்றார் எனத்தமிழ் ஊடகமொன்றில் வெளிவந்த செய்தி தவறானது என்பதை நிதர்சனம் சுட்டிக்காட்ட விரும்புகிறது. ஜேர்மனியில் வசிக்கும் இலங்கைத் தமிழர்கள் பிரச்சனையை அரசியலாக்க சில தமிழ்;த்தேசவிரோதிகள் முயன்று வருகின்றார்கள். தமிழ் மக்களின் பிரச்சனையைப் பயன்படுத்தித் தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஜேர்மனிய ஒருங்கிணைப்பாளர் எனப்படும் ஒருவர் அரசியல் இலாபம் தேடும் நோக்குடன் அரசியல் தலைவர்கள், அரசியல் ஆய்வாளர்கள், புத்திஜீவிகள், சட்டத்தரணிகள் ஆகியோரைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார். கடந்த ஏழு வருடங்களாக இடம்பெயர்ந்த பல்லாயிரக்கணக்கான இலங்கைத் தமிழர்களின் வழக்குகளில் பல ஆயிரம் தமிழர்களை நாடுகடத்த தீவிரமாக உழைத்த தமிழரே தற்போது தமிழ் மக்களுக்கு உதவுவது போன்ற ஒரு செயலில் இறங்கியுள்ளார். தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர் வீ.ஆனந்தசங்கரி தலைமையிலான கட்சியின் செல்லப்பிள்ளையான இவர் முன்னைநாள் ஜேர்மனிய பிரதி உள்துறை அமைச்சர் ஒருவர் ஊடாக பல தமிழர்களை நாடுகடத்தக் காரணமாக இருந்தவர். வறுமைக் கோட்டுக்குள் வாழும் இடம்பெயர்ந்த அகதிகளுக்கு இலவசமாக இவர்கள் எதனையும் செய்யவில்லை என்பதும் நிதர்சனத்தின் ஆய்வுகளில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக கொழும்பில் வாழும் தமிழர்களும் தமிழ் தினசரி பத்திரிகைகளும் அவதானமாக நடந்து கொள்ளுமாறு வேண்டப்படுகின்றீர். ¿ýÈ¢ - ¿¢¾÷ºÉõ - shanmuhi - 12-08-2004 ஜேர்மனியில் புகலிடம் கோரிய இலங்கைத் தமிழர் பத்தாயிரம் பேரின் விண்ணப்பங்கள் நிராகரிப்பு! ஜேர்மனியில் புகலிம் கோரியுள்ள இலங்கைத் தமிழர்களில் 10 ஆயிரம் பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் இவ்வருடம் இது வரையும் ஆயிரம் பேர் வரை இலங்கைக்குப் பலவந்தமாக நாடு கடத்தப்பட்டுள்ளனர் என ஜேர்மனியிலுள்ள புகலிட மற்றும் மனித உரிமைகள் அமைப்புக்கள் மூலம் தெரிய வந்துள்ளது. - sOliyAn - 12-08-2004 அண்மையில் பேர்லினிலுள்ள சிறீலங்கா துாதுவராலயத்துக்கு சென்றிருந்தேன். வழமையாக அங்கு வருகை தருவோரின் அலுவல்களைக் கவனிக்க மூவர் இருப்பார்கள். அன்று ஒரு பெண்மணிதான் இருந்தார்.. வெளியே 2 ஜேர்மனியர் காத்திருந்தனர். இறுதியில்தான் தெரிந்தது.. மற்ற இருவரும் உள்ளே அவசரகால கடவுச்சீட்டுகளை தயாரித்து, ஒரு கொத்தாக அந்த இரு ஜேர்மன் அதிகாரிகளிடம் கொடுத்தனர். ஆக, திருப்பி அனுப்புதல் துரித கதியில் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. - shiyam - 12-13-2004 கெட்டதிலும் ஒரு நல்லது பாருங்கோ இதாலை கன யேர்மன் வாழ் தமிழர் அவசர அவசரமா பிள்ளையழுக்கு தமிழ் படிப்பிக்கினமாம் - aswini2005 - 12-14-2004 shiyam Wrote:கெட்டதிலும் ஒரு நல்லது பாருங்கோ இதாலை கன யேர்மன் வாழ் தமிழர் அவசர அவசரமா பிள்ளையழுக்கு தமிழ் படிப்பிக்கினமாம் ஓமோம் சும்மா உப்பிடிக்கனவு காணுங்கோ. கெட்டதிலையும் ஒரு நல்லதெண்டு சொல்லிக்கொண்டே இருங்கோ. குறிப்பிட்ட விகிதமான பிள்ளைகள் தமிழ் படிக்கன்றனர். படித்துக்கொண்டிருக்கின்றனர். ஐ டோன்ற் லைக் ரமிலெண்டவை இப்பவும் அப்பிடியேதான் இருக்கினம். சில வாரங்களுக்கு முன்னால் ஜேர்மனியிலிருந்து திருப்பியனுப்பப்பட்ட ஒரு குடும்பத்தின் இரு யுவதிகளின் பேட்டி வெக்டோனில் வந்தது. ஏதோ அந்தாட்டிக்காவிலை போய் இறங்கினமாதிரி கதை கதைச்சினம். அப்பதான் நினைச்சேன் இவையை அனுப்பினதுதான் சரியெண்டு. அதை யாராவது பாத்தீங்களா ? கேட்டீங்களா ? அவர்கள் 8வருடம்தான் புலம்பெயர்ந்து இருக்கினம். ஆனா அவையாலை எப்பிடி எமது சமுகத்தில் பழகுவது , சமுகத்தை அணுகுவது ? என்றெல்லாம் புரியவில்லையாம். அவைக்கு டொச்லாண்தானாம் நல்லது. திரும்ப அங்கைதானாம் போக விரும்புகினம். அப்ப இவை பிறந்த ஊருக்கை இவை இருந்த காலம் மோகினிகள் , பில்லி சுூனியங்களோ இருந்தது ? ஆஆஆஆஆ இந்த புதிய மோகினிகள் புழுகு தாங்க முடியவில்லையே.
|