Yarl Forum
கடவுள் நம்பிக்கை - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7)
+--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34)
+--- Thread: கடவுள் நம்பிக்கை (/showthread.php?tid=6763)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17


- shanmuhi - 08-26-2004

Quote:என்னைப் பொறுத்தவரை நான் கோயிலில் அர்ச்சனை என்ற பெயரில் காசு குடுப்பதுமில்லைஇ திருப்பணிக்கென்று உண்டியலில் காசு போடுவதுமில்லை(ஐரோப்பாவில்). ஆனால் ஊரிலென்டா குடுக்கலாம். ஏனெனில் அங்கு ஏமாற்ற்பவர்கள் இங்கவிட குறைவு மற்றையது சில கோயிலகளில் அர்ச்சனை காசு உண்மையான திருப்பணிக்கும் கஷ்டப்பட்ட ஐயருக்கும் போகும்(சம்பளமாக). அப்படியான இடங்களில் குடுப்பது பிழையில்லை என்டு நினைக்கிறன்.

அர்ச்சனை செய்வது எல்லாம் கிடையாது. கற்புூரம் கொளுத்துவதோடு சரி.


- tamilini - 08-26-2004

Quote:கடவுள் நம்பிக்கைஇ இதனால் இருந்த இடத்தில் இருந்து கொண்டே கோடிக் கணக்காக சம்பாதிப்பவர்கள். கடவுளின் பெயரால் மூட நம்பிக்கை வளர்ப்பவர்கள்இ ஏமாற்று வித்தைகள் செய்பவர்கள்இ கடவுள் எனக்கு எல்லாம் தருவார் என்று எண்ணி முயற்சி இல்லாமல் இருப்பவர்கள்.

இவர்களை அல்லது இவர்கள் சார்ந்த மனநிலையை ஒழிப்போம்
_________________


கடவுள் சொன்னாரா முயற்சி செய்யாது என்னை நம்பிக்கொண்டிருங்கள் என்று.. ஒரு சில முட்டாள்கள் முயற்சி செய்வதில்லை அப்படி முயற்சி இன்றி தேற்கிற காரியங்களுக்கு கடவுள் உதவி செய்யவில்லை கடவுள் இல்லை என்டு சொல்லுவார்கள்....

உண்மையாக கடவுளை மனிதனிலும் ஒவ்வொரு உயிருலும் பார்த்தால் மற்றவர்களை துன்புறுத்த ஒருவுரும் முயல மாட்டார்கள்.. முன்னயை காலங்களில் எல்லாம் ஒருவர் மற்றவரை விழிக்கும் போது கடவுள் பெயரை சொல்லி விழிப்பார்களாம் ஏன் என்றால் எல்லாரிலும் கடவுள் இருக்கிறார் என்று அவர்கள் நம்பினார்கள் அப்பொழுது இப்ப நடக்கிற மாதிரி வெட்டுக்குத்து எல்லாம் கிடையாது.. அன்பு வளர்வதற்கு ஒரு மு}லமாக கடவுளும் மதங்களும் துணையாக இருந்தன...எல்லாரையும் கடவுளாக பார்த்து எல்லாருடனும் அன்பாக வாழ்ந்தால்.. பிரச்சனைகள் குறையும்... மனிதனை வழிப்படுத்த வந்தவைகள் தான் மதங்களும் கடவுளும்... அதன் படி பார்த்தால் எமது முயற்சிக்கு உரிய பலனை நாம் அடைவோம்... அதைவிட்டு விட்டு கடவுள் தருவார் என்று சம்பாதிக்காமல் இருந்து சாப்பிட்டு கொண்டிருப்பதனால் என்ன பலனை அனுபவிக்க முடியும்.. நாம் வாழ்ந்ததற்கே உரிய அர்த்தமே இல்லாமல் போய்விடும்....!கஸ்டப்பட்டு உழைக்கும் போது தான் அதனால் ஏற்படுகின்ற பலனை நாம் முழுமையாக அனுபவிக்க முடியும்

Quote:அப்போ நீங்கள் ஐயரிடம் காசு கொடுத்து ஏமாறுவது எந்த வகையில் சேரும்..?

ஏன் தியாகம் ஆலயங்களிக்கு சென்று தான் கடவுளை விழிபட வேண்டுமா.... ஆலயம் என்பது ஆண்மாக்களை லயப்பட வைப்பது.. அங்கு சென்றால் மனதை ஒரு நிலைப்படுத்தி சாந்தியனையலாம் என்று தான் நாம் அங்கு செல்கிறறோம்... ஆனால் எங்கு நின்று கொண்டும் எமது புலன்களை அடக்கி வணங்கினால்.... அது கடவுளை வணங்கியதற்கு சமம்.... ஏன் என்றால் கடவுள் தான் எங்கும் இருக்கிறாரே....!
அதைவிட பாண்டியன் கு}றிய காரணங்களிற்காக தான் நாம்; அர்ச்சனை செய்கிறோம்... ஒரு அர்ச்சனை செய்யும் பொழுது.. ஒரு குடும்பத்திற்கு அது ஏதொ ஒருவகையில் உதவுகிறது.. அதைவிட ஆலயங்களுக்கு நாம் செல்லும் போது அங்கு செருப்புக்களை பாதுகாக்கிறவர்களிற்கு காசுகிடைக்கிறது.. அர்ச்சனைப்பொருட்கள் விற்பவர்களிக்கு அடுப்பு எரிக்க காசு வருது... இவைகள் எல்லாம் கடவுளுக்காக நாம் செய்யும் போது ஏற்படுகின்ற சில நல்ல காரியங்கள்... அவற்றை நாம் செய்யும் போது எமது புண்ணியம் கு}டுது... தானே...

நீங்கள் வறுமை பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள்... வறுமை கவலை யாவும் வாழ்க்கையில வருகின்ற ஒரு சில துன்பகரமான நிகழ்வுகள்.. வறுமையில் ஒருவன் வாழ்ந்தால் தான் வறுமையின் கொடுமையை அவன் அறிய முடியும் அவனைப்பார்த்து மற்றவர்கள் வறுமை எப்படி பட்டது என்று தெரிந்து கொள்ளமுடியும்... காலம் ஒரே மாதிரி இருப்பதில்லை அப்படி கடவுள் விட்டு வைத்ததும் இல்லை இன்றைக்கு ஏழையாக இருப்பவன் நாளைக்கு வசதிபடைத்தவன் ஆகலாம் வசதி படைத்தவன் ஏழையாகவும் மாறலாம் யாவும் எமது முயற்சிலும் நாம் செய்யும் காரியங்களி|லும் தான் இருக்கிறது... இவற்றுக்கு எம்மை வழிகாட்டுவதும்.. வழிநடத்துவதும் தான் கடவுள்... மதங்களின் வேலை.... அதைவிட வறுமையில் வாடிய ஒருவனால் தான் வசதி வந்தவுடன் அதை புரிந்து.. அதன்; முழுபயனையும் அடையமுடியும்... கடவுளே கு}றியாதாக ஒரு கதையுன்டு... அனுபவம் தான் கடவுள் என்று அதை அறிந்திருப்பீர்கள்

இந்த நாடுகளில் நடக்கின்ற கோயில்களை விடுங்கள்... அவர்கள் இப்படி வளர்வதற்கு ஒருவிதத்தில் பக்தர்கள் தான் காரணம் அவர்கள் ஏமாற்றுகிறார்கள் என்று தெரிந்தும் சிலர் மீண்டும் மீண்டும் சென்று தமது வசதியையும் மற்றவர்களிக்கு தாங்கள் பெரிய இவர்கள் என்று காட்டுவதற்கு தான் ஏட்டிக்கு போட்டியாக.. நடக்கிறார்கள்... ஏமாற்றுபவர்களிக்கு அதுவும் கடவுளின் பெயரால் ஏமாற்றுபவர்களிக்கு கண்டிப்பாக தண்டனைகள் கிடைக்கும் அவர்கள் தப்ப முடியாது.. ஆனால் இலங்கையில் நடக்கின்ற ஆலயங்கள் முலம் எத்தனையோ அறக்கட்டளைகள் முலம் ஏழைக்குடும்பங்கள் மாணவர்கள் பயன்பெறுகிறார்கள்..


- tamilini - 08-26-2004

Quote:கடவுள் எனக்கு எல்லாம் தருவார் என்று எண்ணி முயற்சி செய்யாமல் இருப்பது என்பதை என்ன என்று சொல்வது...?
பிரார்த்தனைகளினாலோ... வேண்டுதல்களினாலோ.. துனபங்களைக் குறைக்க முடியாது.
பிரார்த்தனை மனதை அமைதியாக்குகின்றது.
எந்த சோகத்தையும் துன்பத்தையும் எதிர்கொள்ளக்கூடிய மனத்தைரியத்தை தருகின்றது.
_________________
சரியாக சொன்னீர்கள் சண்முகி


- tamilini - 08-26-2004

Quote:நான் பட்டிமன்றம் நடத்தவில்லை அக்கா..... எந்த பக்கதில் நின்று கை தட்டுவது என்று தான் பார்க்கிறேன்
_________________
தம்பி நல்ல ஆளுதான் நீங்கள்


- shanthy - 08-26-2004

tamilini Wrote:
Quote:நான் பட்டிமன்றம் நடத்தவில்லை அக்கா..... எந்த பக்கதில் நின்று கை தட்டுவது என்று தான் பார்க்கிறேன்
_________________
தம்பி நல்ல ஆளுதான் நீங்கள்

கவிதன் தம்பியின் கைதட்டல் வாழ்க. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

தமிழினி ! மஞ்சை வசந்தன் (1979ம் ஆண்டு) எழுதிய அர்த்தமற்ற இந்து மதம் புத்தகத்தை வாசியுங்கள் தியாகத்தின் கேள்விகளுக்கு விடைகிடைக்கும். கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதத்தை எதிர்த்து எழுதப்பட்ட நு}ல் அர்த்தமற்ற இந்துமதம். கடவுள் இருக்கிறார் என்பதை நிருபணம் செய்வோருக்கு ஒருலட்சம் சன்மானம் தருவதாக சவால் விட்டு மஞ்சை வசந்தன் எழுதியது அந்த நு}ல்.
மஞ்சை வசந்தனின் வாதத்துக்கு நிறையவே எதிர்வாதம் நம்மாலும் செய்யலாம். எல்லாவாதத்திற்கும் எதிர்விவாதமும் உண்டு. :!:


- shanthy - 08-26-2004

Thiyaham Wrote:கடவுள் ஒருவன் இருக்க வேண்டும் என்பது தான் என் ஆசை கூட. காரணம் நிறைய பேர் பசி பஞ்சம் என்று வாடுகிறார்கள். ஆவர்களுடைய வாட்டம் போக்க கடவுள் ஒருவன் வேண்டும். ஆனால் நடப்பது என்ன..? கடவுளை மட்டும் கும்பிட்டவன் கதி என்ன?

எமது முயற்சியால் தான் எல்லாம் கிடைக்கும் போது இல்லாத கடவுள் நமக்கு எதற்கு..............?

கடவுளை ஒழிப்போம்

தியாகம் அவர்களே ! கடவுளே இல்லையென்கிறீர்கள். ஆனால் கடவுளை அழிக்க வேண்டும் என்கிறீர்கள். எப்படி இல்லாத கடவுளை அழிக்க முடியும் ?

தியாகம் ! புலத்தில் கோவில்கள் , சாமிகள் உருவாடிகள் என உருவாகியிருக்கும் ஏமாற்றுக்காரர்களை ஊக்குவிக்கும் ஊடகங்கள் , பக்தர்களைத் திருத்துவது எப்படியென்பதை நாம் இங்கு விவாதித்தால் பலன் கிடைக்கும் என்று நினைக்கிறேன். மனிதர்கள் சாமிகள்தாமெனச் சொல்லி அவதாரமெடுக்கிறோம் என மக்களை ஏமாற்றுவதை இன்னும் நம்பி ஏமாறும் மக்களை மீட்கின்ற வழிகளை ஆராயலாமே ? <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- shanmuhi - 08-26-2004

கடவுள் இல்லை என்று கூறுபவர்கள் தான் அதிகம் கடவுளைப்பற்றி சிந்திக்கிறார்கள்... இது உண்மையா...? ? ?


- tamilini - 08-26-2004

தகவலுக்கு நன்றி சாந்தி அக்கா... முயற்சி செய்கிறேன்.....!


- tamilini - 08-26-2004

Quote:கடவுள் இல்லை என்று கூறுபவர்கள் தான் அதிகம் கடவுளைப்பற்றி சிந்திக்கிறார்கள்... இது உண்மையா...? ? ?
_________________
இருக்கலாம் சண்முகி அக்கா....!


- Thiyaham - 08-26-2004

மனம் அமைதி பெற வீட்டில் இருந்தவாறே தியானம் யோகா என நிறைய உண்டு. கோவிலிற்கு நாம் ஏன் செல்கிறோம்...? எதிர்ப் பாலாரை பார்ப்பதற்கும், பெண்கள் மற்றவர்கள் என்ன உடுப்பு, நகை போட்டுள்ளார்கள் என பார்ப்பதற்கும், ஊர்க்கதை பேசுவதற்கும் தானே.

சமயம் என்கிற பெயரால் நாம் எவ்வளவு தூரம் ஏமாற்றப்படுகிறோம் யாராவது சிந்தித்தீர்களா? ஒரு சிறிய உதாரணம் ஊரில் இன்னும் எத்தனை பேருடைய வீடு உடைபடாமல் உள்ளது? என்னுடையது என்று சொல்பவர்கள் சற்று ஒதுங்கி நில்லுங்கள்..... நாம் வீடு கட்ட தொடங்கும் போது ஐயரை அழைத்து நிலையம் எடுத்து நாள் நட்ச்சத்திரம் பார்த்து தொடங்குகிறோம். ஏன் என்பது உங்களுக்கே தெரியும்.. அப்படி தொடங்கிய வீடுகள் ஏன் தரை மட்டமாகின்றன? அப்படி என்றால் நாம் ஐயருக்கு செலவிட்ட பணம் வீண் தானே..!!


- tamilini - 08-26-2004

என்ன தியாகம் வீடுகள் இடிப்பட்டதை பற்றி நீங்கள் கவலைப்படுகின்றீர்கள் நாங்கள் உயிருடன் தப்பி இருப்பதற்கு கடவுளின் கிருபை என்று நம்புறம்.... நீங்கள் எப்ப இங்கால வந்தனீங்கள்... செல்லுகள் அருகில் வந்து விழும் போது... கடவுளே கடவுளே என்டு கு}றி விழுந்தவைகளட யாரும் இப்படி சொல்லமாட்டார்கள்....!
உடுப்பு நகைக்காக அதைபார்க்க போகின்ற ஒருசிலர் தான்.. இப்படி தாங்கள் போறது தேவையற்றது என்டு நினைக்கிறீங்கள்.. நாங்கள் கும்பிட போறோம்...... மற்றவர்கள் பற்றி தெரியாது.. தியானம் யோகா எல்லாம் எப்படி உருவானது அவற்றிற்கு மு}ல காரணம் யார் என்று நினைக்கிறீங்கள்....??


- kavithan - 08-27-2004

தியாகம் அண்ணா ஒரு சிலர் தப்பு செய்கிறார்கள் என்றால் அதில் எல்லாரையும் தப்பாக நினைக்க முடியாது.... கோவில் அதில் பூசை என்பது எமது வழிபாட்டுமுறை பாரம்பரியம்... அதுகள் காக்கப்பட வேண்டுமே ஒழிய அழிக்க பட வேண்டியவை அல்ல... அதில் நீங்கள் ஏமாறுகிறீர்கள் என்பதற்காகா உடனடியாக கோவிலை அழிக்கிறேன் அதை அழிக்கிறேன் இதை அழிக்கிறேன் கடவுளை அழிக்கிறேன் என்று எங்கு கிளம்புகிறீர்கள் ..... அங்கு நடக்கும் ஏமாற்று நாடகங்களையும், ஏமாற்றுபாவர்களையும் மாற்ற பாருங்கள்... ஒருவரோ இருவரோ சிலரோ தான் இதற்கு காரணமாக இருப்பார்கள்.. அதனை திருத்தினால் எல்லாம் சரியாகிவிடுமே
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


சிங்களவன் ஒருபக்கத்தாலை கோவிலுகளை அழித்து... அழித்து .. புத்தனின் விகாரைகளை கட்டி கொண்டுவாறான்.. அதுக்குள்ளை இருக்கிற ஒன்டு இரண்டையும் அழிக்கிறதுக்கு நீங்கள் வேறை கிழம்பிட்டியள்..... யாருடைய ஜடியா இது.. எந்த கோயில் அடிக்கிறியள்..? எப்ப..?.. கொஞ்சம் சொன்னால் எனக்கும் வசதியாக இருக்கும்..... எங்கை இருக்கிறியள் கனடாவிலையா .. அதிலை .. மொன்றியலா.. ரொறன்ரோவா... திருவிழாக்கள் நடக்குதாக்கும்.. பாத்து அடியுங்கோ :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- paandiyan - 08-27-2004

Thiyaham Wrote:மனம் அமைதி பெற வீட்டில் இருந்தவாறே தியானம் யோகா என நிறைய உண்டு. கோவிலிற்கு நாம் ஏன் செல்கிறோம்...? எதிர்ப் பாலாரை பார்ப்பதற்கும், பெண்கள் மற்றவர்கள் என்ன உடுப்பு, நகை போட்டுள்ளார்கள் என பார்ப்பதற்கும், ஊர்க்கதை பேசுவதற்கும் தானே.

#######################################

நீங்கள் என்னத்துக்கு கோயிலுக்குப் போறயலென்டு எனக்குத்தெரியாது ஆனால் நான் கடவுளைக் கும்பிடத்தான் போறன். நீங்கள் ஏன் மற்றவர்களைப் பார்க்கிறியம். உங்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை செய்துவிட்டு வர வேண்டியதுதானே. நீங்கள் எழுதியவை சரிதான் இல்லைஎன்று சொல்லவில்லை.
நீங்களெ கடவுள் இல்லையென்றும் சொல்றியள், கோயில்ல சனங்கள் இப்படித்தான் நடப்பதாகவும் சொல்றியள் அதே நேரம் எதிர்ப்பாலாரை பார்ப்பதற்குத்த்தான் என்றும் சொல்லிறியள். இப்ப நான் உங்களிடம் கேட்கிறேன் நீங்கள் எதற்காக கோயிலுக்கு போறயள்??? கடவுளைப் பார்க்க போயிருந்தால் உங்களுக்கு நீங்கள் மேற் சொன்னவைகள் தெரிந்திருக்காது.........
இதைவிட நீங்கள் சொன்ன மாதிரி வீட்டிலிருந்தே கும்பிடலாம்தானே. கடவுள் இல்லையென்டும் சொல்லுறியள், யோகா, தியானம் பற்றியும் கதைக்கிறியள். இந்தெ யோகா தியானம் எல்லாம் அந்த் கடவுளைக் கும்பிட்ட முனிவர்களால்தான் தரப்பட்டது என்பதையும் மறங்திட்டியள் போல...
கடவுள் இல்லை என்டு சொல்றவக்குத்தான் கடவுள் நம்பிக்கை கூட என்டது சரியாத்தான் இருக்குபோல :roll: Confusedhock:

--------------------------------------------------------
சமயம் என்கிற பெயரால் நாம் எவ்வளவு தூரம் ஏமாற்றப்படுகிறோம் யாராவது சிந்தித்தீர்களா? ஒரு சிறிய உதாரணம் ஊரில் இன்னும் எத்தனை பேருடைய வீடு உடைபடாமல் உள்ளது? என்னுடையது என்று சொல்பவர்கள் சற்று ஒதுங்கி நில்லுங்கள்..... நாம் வீடு கட்ட தொடங்கும் போது ஐயரை அழைத்து நிலையம் எடுத்து நாள் நட்ச்சத்திரம் பார்த்து தொடங்குகிறோம். ஏன் என்பது உங்களுக்கே தெரியும்.. அப்படி தொடங்கிய வீடுகள் ஏன் தரை மட்டமாகின்றன? அப்படி என்றால் நாம் ஐயருக்கு செலவிட்ட பணம் வீண் தானே..!!

########################################

என்ன தியாகம் நீங்கள் திரும்பவும் ஒரே இடத்துக்குத்த்தான் வாறியள். ஐயருக்கு காசு குடுத்துத்தான் நிலையம் எடுக்க வேண்டுமென்றில்லையே. உங்களுக்கு விருப்பமில்லையெண்டா அப்படி ஒன்டுமில்லாமலே செய்யலாம்தானே. நீங்களே உங்களுக்கென்று ஒன்றை உருவாக்கிவிட்டு அதைவிடமுடியாமலும் அத்துடன் அது பிழைஎன்றும் சொல்லிறியள். இது கேலிக்குரியது. :roll: :roll:


- vasisutha - 08-27-2004

நம்பிக்கை என்பது அவரவர் மனங்களை பொறுத்தது. தியாகம் இதில் நீங்கள் உங்கள் நம்பிக்கையில் கடவுள் இல்லை என்கிறீர்கள். மற்றவர்களும் அதே நம்பிக்கையில் கடவுள் இருக்கிறார். என்கிறார்கள்.
என்னைப் பொறுத்தவரை எனக்கு கடவுள் நம்பிக்கை இருந்தது... சில நாட்கள் முன்பு வரை. இப்போது இல்லை.


- Thiyaham - 08-27-2004

எமது சமுதாயம் எப்படி சொன்னாலும் திருந்தாது. தத்துவம் படித்த குருடன் யானையை பார்த்து சொன்ன கதை தான் எல்லாம்.

எங்களில் சிலர் எப்படி தான் கஸ்டப்பட்டு முன்னேற் முயற்சி செய்தாலும் சாண் ஏற முளம் சறுக்கிய கதையாகவும், சிலர் சிறு முயற்சியாலேயே பெரு வெற்றி கண்டவர்களாகவும் இருக்கிறார்கள். ஏன் என்று விசாரிக்க போனால் பூர்வ ஜென்மத்து பலனாம். ஒருவன் தன் கடும் முயற்சியால் முன்னேற் துடிக்கும் போது கடவுளின் கிருபையால் தொடர்ந்து தோல்வி மேல் தோல்வி அவனுக்கு வந்தால் அவனிடம் இருக்கும் ஆளுமை மழுங்கடிக்கப்படுகிறது. இதனால் அவன் தன் முயற்சியை கை விடுபவனாகி கூனி குறுகிகின்றான். இப்படி போன ஜெனமத்து தண்டனையை போன ஜெனமத்தில் கொடுக்காமல் இந்த ஜெனமத்தில் கொடுக்கும் கடவுள் உங்களுக்கு முட்டாளாக தெரியவில்லையா...?

இப்படி சும்மா இருந்தவனை கோடீஸ்வரனாக்கி அவனை மமதையில் மிதக்க வைத்த கடவுள் சர்வ முட்டாளாக தெரியவில்லயா??

மனித உருவில் இருக்கும் அதிமுட்டாள்களே சிந்தியுங்கள். கடவுளை யார் அதிகமா நம்புகிறார்கள்..?
1 இல்லாதவன்
2 இயலாதவன்
இதில் நீங்கள் எந்த ரகம்..?


- sOliyAn - 08-27-2004

vasisutha Wrote:நம்பிக்கை என்பது அவரவர் மனங்களை பொறுத்தது. தியாகம் இதில் நீங்கள் உங்கள் நம்பிக்கையில் கடவுள் இல்லை என்கிறீர்கள். மற்றவர்களும் அதே நம்பிக்கையில் கடவுள் இருக்கிறார். என்கிறார்கள்.
என்னைப் பொறுத்தவரை எனக்கு கடவுள் நம்பிக்கை இருந்தது... சில நாட்கள் முன்பு வரை. இப்போது இல்லை.
சிலநாட்களுள் சாத்தான் புகுந்துவிட்டாரா?!


- sOliyAn - 08-27-2004

Quote:மனித உருவில் இருக்கும் அதிமுட்டாள்களே சிந்தியுங்கள். கடவுளை யார் அதிகமா நம்புகிறார்கள்..?
1 இல்லாதவன்
2 இயலாதவன்
இதில் நீங்கள் எந்த ரகம்..?
கணக்குப் படிக்க வேண்டுமானால் அதற்குரிய இடத்துக்கு, அதற்குரிய ஆசானிடம் அதற்குரிய நூல்களை நாடிப் போகவேண்டும். இதைப்போல எல்லாவற்றுக்கும் 'படிப்பு' அவசியம்.
அதைப்போல, 'கடவுளை' அறியவேண்டுமானால் அதற்குரிய முறையில் அதற்குரியமாதிரி 'படிப்பு' அவசியம். வெளியில் நின்று மேலெழுந்தவாரியாக அரைகுரையான கேள்விஞானத்துடன் முடிவெடுத்து கடவுள இல்லையென்ற முடிபை ஏனையவர்களுக்கும் திணிக்கும்நோக்குடன் இரண்டு தரவுகளைக் கொடுத்து, அதனுள் ஒன்றை தெரிவுசெய்யுமாறு 'அதிமுட்டாள்'களை அறைகூவும் 'உலகமகா(ப்)புத்திசாலி'களே! உங்களுக்கு கடவுளைபபற்றி ஒரு முடிபுகாணும் சிந்தையிருப்பின் அதற்குரிய நூல்களைத் தேடி வாசியுங்கள்... அதன்பிறகு முடிவுக்கு வாருங்கள்!


- shanmuhi - 08-27-2004

Quote:அதைப்போலஇ 'கடவுளை' அறியவேண்டுமானால் அதற்குரிய முறையில் அதற்குரியமாதிரி 'படிப்பு' அவசியம். வெளியில் நின்று மேலெழுந்தவாரியாக அரைகுரையான கேள்விஞானத்துடன் முடிவெடுத்து கடவுள இல்லையென்ற முடிபை ஏனையவர்களுக்கும் திணிக்கும்நோக்குடன் இரண்டு தரவுகளைக் கொடுத்துஇ அதனுள் ஒன்றை தெரிவுசெய்யுமாறு 'அதிமுட்டாள்'களை அறைகூவும் 'உலகமகா(ப்)புத்திசாலி'களே! உங்களுக்கு கடவுளைபபற்றி ஒரு முடிபுகாணும் சிந்தையிருப்பின் அதற்குரிய நூல்களைத் தேடி வாசியுங்கள்... அதன்பிறகு முடிவுக்கு வாருங்கள்!

அருமையான யோசனை.


- Thiyaham - 08-27-2004

கடவுள் எல்லா உயிர்களையும் காப்பதாக சொல்கிறார்கள். ஆனால் மனிதன் மட்டும் தான் கடவுளை வழிபடுகிறான். ஆனால் மனிதன் தான் பெரும் பெரும் ஆபத்தில் உள்ளான். செய்திகளில் ஒரு நாளைக்கு எத்தனை வீண் சாவுகள் வருகின்றன... கோவில்களில் நெரிபட்டு சுவர் இடிந்து விழிந்து எத்தனை பேர் இறக்கின்றனர்... தன்னை கும்பிட வந்தவனையே கடவுளால் காப்பாற்ற முடியவில்லை... இதில் எங்கே மற்றவனை..........நீங்களே சொல்லுங்கள்..?

நான் சொல்கிறேன் கடவுளை மனிதன் தான் காப்பாற்றுகிறான். கோவில்களில் களவு போகிறது.கடவுளால் தன்னை கூட பாதுகாக்க முடியவில்லை. அங்கே மனிதர்கள் காவல் கடமையில் ஈடுபடுகின்ற்னர்


- kavithan - 08-27-2004

Thiyaham Wrote:கடவுள் எல்லா உயிர்களையும் காப்பதாக சொல்கிறார்கள். ஆனால் மனிதன் மட்டும் தான் கடவுளை வழிபடுகிறான். ஆனால் மனிதன் தான் பெரும் பெரும் ஆபத்தில் உள்ளான். செய்திகளில் ஒரு நாளைக்கு எத்தனை வீண் சாவுகள் வருகின்றன... கோவில்களில் நெரிபட்டு சுவர் இடிந்து விழிந்து எத்தனை பேர் இறக்கின்றனர்... தன்னை கும்பிட வந்தவனையே கடவுளால் காப்பாற்ற முடியவில்லை... இதில் எங்கே மற்றவனை..........நீங்களே சொல்லுங்கள்..?

நான் சொல்கிறேன் கடவுளை மனிதன் தான் காப்பாற்றுகிறான். கோவில்களில் களவு போகிறது.கடவுளால் தன்னை கூட பாதுகாக்க முடியவில்லை. அங்கே மனிதர்கள் காவல் கடமையில் ஈடுபடுகின்ற்னர்

ஜ..ஜை...யோ.. கடவுள் எல்லா உயிரையும் காத்தால் பூமி தாங்காதப்பா... அந்தாள் சும்மா இருக்குது அந்தாளோடை போய் ஏன் மல்லுக்கு நிக்கிறியள் அண்ணை.....
அது சரி இல்லாத கடவுளை மனிதன் ஏன் காப்பாற்ற வேணும்...?.. அப்ப கடைசீலை கோவிலிலை கடவுள் இருக்கிறார் என்கிறீர்கள்....... கோயிலிலை இடம் காணாது நெரிபட்டுது.... மதில் உடைஞ்சுது..... அதுக்கை சனம் அம்பிட்டு செத்துது.... இது ஓகே.. உங்கடை கதையை பார்த்தால் தமிழ் பட கதானாயகன் மாதிரி கடவுள் வந்து மதிலை தாங்கி பிடிச்சு காப்பாற்ற வேணும் என்று எல்லோ சொல்லிறமாதிரிக் கிடக்கு....