Yarl Forum
தமிழ்சினிமாவும் ஈழத் தமிழர்களும் (ஆக்கம் பரணி) - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39)
+--- Thread: தமிழ்சினிமாவும் ஈழத் தமிழர்களும் (ஆக்கம் பரணி) (/showthread.php?tid=5857)

Pages: 1 2 3 4 5


- kuruvikal - 01-11-2005

என்ன சின்னத்திரை நடிகைகள் போல சிரிக்கக் கூட சுதந்திரம் இல்லையா அவங்களுக்கு.... பாவம் எப்பவும் அழுவாங்க...இப்பவாவது சிரிக்க விடுங்களன்...எவ்வளவு அழகா இருக்குது சிரிக்கிறது...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:


- kavithan - 01-11-2005

kuruvikal Wrote:என்ன சிரிக்கக் கூட சுதந்திரம் இல்லையா அவங்களுக்கு.... பாவம் எப்பவும் அழுவாங்க...இப்பவாவது சிரிக்க விடுங்களன்...எவ்வளவு அழகா இருக்குது சிரிக்கிறது...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
அப்படியா சரிங்க.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- tamilini - 01-11-2005

:? <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- kuruvikal - 01-11-2005

தமிழினி..இந்த முறாய்ப்ப விட்டிட்டு...மேல உள்ள தலைப்புக்கு உங்க கருத்தை வையுங்க...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- tamilini - 01-11-2005

இல்லை அப்படி பாட்டிகளுக்கு போறாக்களுக்கு தானே தெரியும் நமக்கு எப்படிங்க தெரியும்.. அதுகள் பற்றி.. அது தான் சிரிச்சம்.. நீங்க சின்னத்திரைக்கு போய்விட்டீங்க அதுக்குள்ள :?


- kavithan - 01-11-2005

குருவி(கள்) தான் சொல்லணும்.. பல்கலைகழக்க பக்கம் எல்லாம் நாம் மழைக்கும் ஒதுங்கினதில்லை இன்னும்.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- tamilini - 01-11-2005

:mrgreen: சரி ஒரு ஆள் என்றாலும் இருக்கே அனுபவம் சொல்ல போதாதா..?? நிறையப்பேர் இருக்காங்க.. பட் எங்களுக்கு சொல்லக்கூடிய மாதிரி... :wink: Idea


- Mathuran - 01-11-2005

வணக்கம் குருவிகளே,

மீண்டும் உங்கள் கருத்துடன் என்னால் ஒன்றி போக முடியவில்லை. நீங்கள் குறிப்பிடுவதை போன்று சமூகத்கில் நடப்பவற்றை தான், தழிழ்திரை பிரதி பலிக்கின்றன என கூறி இருந்தீர்கள். அப்படி ஆயின். திரைப்படங்கள் கற்பனைல் உருவாதில்லை என்று உங்கள் வாதத்தை முன் வைக்கின்றீர்களா? உதாரணத்திற்கு அவ்வை சண்முகி போன்ற கதா பாதிரம் இந்தியாவில் எந்த மூலையில் இருந்தார்? தமிழ் திரைப்படங்களின் பாடல் காட்சிகளில் கதாநாயகனுக்கும் கதாநாயகிக்கும் பின்னால் நின்று ஒரு கூட்டம் ஆடிக்கொன்டு இருக்குமே,ந்த சமூகத்தில் இருந்து காட்சிப்பௌத்தினார்கள்? இவைகள் யாவும் கற்பனையின் வெளிப்பாடுகள்தானே?

இன்றய நாளில் திரைப்படங்கள் ஆயினும் சரி, அழகி போட்டிகள் ஆயினும் சரி, ஆணாதிக்க வாதிகளின் பிற்போக்கு தனமான சிந்தனைக் குவியல்களையே வெளிப்படுத்துகின்றன. அதிலும் இந்திய தமிழ் திரைப்படங்களானவை, சில படங்களை தவிர ஏனயவை மிகவும் பிற்போக்கு தனமான கருத்துக்களை கூறி நிற்கின்றன. விஞ்ஞான பூர்வமான தமிழ் படங்கள் வருவதே இல்லை. தனியாக இவர்களுக்கு தெரிந்த ஒரு விடயம். கா..தல்.... மனித வாழ்வில் காதல் மட்டும் தான் பேசு பொருளா? எடுத்ததுக்கு எல்லாம் சொல்லுற ஒரே வார்த, திரைப்பட துறை என்பது அது வணிக நோக்குடயது. அது அப்படிதான் இருக்கும் என்றால் தமிழ்ன் மாறவே மாட்டான். எதை எதையோ நாகரீகம் என்று சொல்லியும், அழுக்கு படிந்த சர்வ சாதாரண குடிமகனால் ஊகித்து சொல்லிவிடக் கூடியதான அற்பதனங்கள் நிறைந்த திரக்கதைகளை கொண்ட திரைத்துறையினை, தமிழ் திரை என சொல்லிட நான் விரும்ப வில்லை.

சமுகத்தில் தவறுகள் நடப்பின் அவற்றை சுட்டிகாட்டி. மக்களை சரியான வழியை நாட வைபதுவே திரை. தமிழ்ன் இந்த அவலத்தில் இருந்து வெளியில் வரவேண்டுமாயின், அவனிற்கேற்ற வாறு ஆக்க பூர்வமாகிய கருத்தை கூறி அவனை பண்படுத்துவதே முறையாக இருக்கும். இது ஒரு சேவை மனப்பான்புடன் செய்யபட வேண்டிட மிக முக்கியமான பணி. நீங்கள் ஒருவர் திரையின் உடாக சொல்லும் கருத்து, பல இலட்ச கணக்கான மக்களின் வாழ்க்கை முறைதனை தீர்மானிக்கின்றன. எனவே திரைப்பட துறையினர் ஆழமாகவும் ஆக்கபூர்வமாகவும் சிந்தித்து நிதானமாக செயல் பட வேண்டியவர்கள்.

அன்புடன்
விதுரன்


- kuruvikal - 01-11-2005

தமிழினி..மற்றும் கவிதனுக்கு... குருவிகள் உங்களையும் விடக் கேடு.. ஐஞ்சாம் வகுப்போட பள்ளிக்கூடமே போனதில்ல...பிறகெங்க பல்கலைக்கழகம் போறது... பல்கலைக்கழகம் போன போற நண்பர்கள் சொல்லித்தான் தெரியும்...எதுக்கும் நீங்க உண்மையை அறியோனும் எண்டா ஒருக்கா போய்த்தான் பாருங்களேன்...பார்வையாளர்களாக...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:


- Nitharsan - 01-11-2005

வணக்கம் குருவிகள்!!!
சினிமாவுக்கும் கலாச்சார சீரழிவுக்கும் தொடர்ப்பில்லை என்று கூறுவதே எனக்கு சினிமா பாணியாயய் தெரிகிறது... நீங்கள் கூறும் அந்த கருத்துக்கு நான் கை ஊயாத்தி வரவேற்க்க முடியாது...ஏனெனில் யதாhர்த்தம் அது வல்ல தமிழ் சினிமாவிலிருந்தே தமிழக மற்றும் தமிழர்களின் உடைகள் பிறக்கிறது அதை விட் இப்போது சின்னத்திரைகள் வேறு.. இப்போது வரும் ஆடைகளின் பெயர்களை லண்டனில் உள்ள தமிழ் புடவை மாளிகையில் சென்று விசாரித்துப் பாருங்கள் தெரியும்... அது மட்டு மல்ல புகலிடத்தில் நடக்கும் எமது கலை சார்ந்த நிகழ்ச்சிகளில் சென்று பாருங்கள் அங்கே சினிமாவின் பிரதி பலப்பு தெரியும்.. ஏன் ஒரு நாடகத்தை பாருங்கள் அதில் சினமாவின் பிரதி பலிப்பில்லாம் யாராலும் எடுக்க முடிகிறதா? தமிழ் நாட:டு சினிமா எக்கேடு கெட்டால் நமக்கென்ன ஆனால் அதால் எமது கலைகள் பாதிப்படைவதால் தான் நாங்கள் எழுதுகின்றோம்...யதார்த்தத்.தை சினமா எடுப்பதானால்... சங்கரின் பாய்ஸ் திரைப்படம் யதாhர்த்தமா?...அதே பாணியில் வந்த வயசு பசங்க யதாhர்த்தமா? அதையும் வீடுங்கள் ஈழத்தமிழரையும் உள்ளடக்கி வந்த மணிரத்தினத்தின் கன்னித்தில் முத்தமிட்டால் யதார்த்தமா? யதார்த்தம் என்றால் நாம் வாழும் வாழ்கை படமாக வேண்டும்.... தமிழ் நாட்டில் இருக்கும் ஏழைகள் பற்றி யாராவது படம் எடுத்திருக்கிறார்களா? (சிலவற்றை தவிர) ஆனால் அரசியல் வாதிகளைப் பற்றி எடுக்கும் படங்களை ஒரு முறை பாருங்கள் இப்படியான அரசாட்சியில் தான் தமிழ் நாடு இருக்கிறதா? அதையும் விடுங்க யாதார்த்தம் படமானால் ஒருவரால் 10 பேரை ஒரோ நேரத்தில் அடிக்க முடியுமா? போலகளையும் ஏமாற்று வித்தைகளையும் கொண்டதே தமிழ் சினிமா..அது தமிழ் கலாச்சாரத்தில் மிகப் பெரும் மாற்றத்தை ஏற்ப்படுத்தியது என்றால் அதை யாரும் மறுக்க முடியாது..
நேசமுடன் நிதர்சன்


- kuruvikal - 01-11-2005

சினிமா என்பதும் சரி இலக்கியங்களும் சரி அந்தந்தக் காலத்தின் பிரதிபலிப்புக்களை உள்ளடக்கிய கலைவடிவங்கள்... அதில் சினிமா என்பது நவகால வர்த்தகக் கலைவடிவமாகவே பெரிதும் வெளிவருகிறது...அதில் நீங்களும் நாங்களும் ஒருமித்தே உள்ளோம்...!

எனி சினிமாவின் தன்மை பற்றி நோக்கினால்...

இப்போ...ஒரு பொருளுக்கு விளம்பரம் செய்யும் போது எத்தனை நளினமாக கண்ணைக் கருத்தைக் கவரத்தக்கதாக விளம்பரம் செய்கிறார்கள்...காரணம் அப்பொருளுக்கான வர்த்தகக் கேள்வியைக் கூட்ட வேண்டும்..அதற்கு வாடிக்கையாளர்களைக் கவர வேண்டும் என்பதற்காக...! அதே பொருளை நீங்கள் வாங்கி உண்டோ அல்லது பாவிக்கும் போதோ விளம்பரத்தில் பிரதிபலித்த மாதிரி அது இல்லாமல் போகலாம்...! அதுபோலத்தான் சினிமாவும் பொருள் இது என்று சொல்கிறது...ஆனால் அதற்குள் பல அம்சங்கள் செருகப்பட்டு அவை கண்ணைக் கருத்தைக் கவரத்தக்கதாக வடிவமைக்கப்படுகின்ற போது பார்ப்பவரின் புலன் நோக்கி பொருள் மாறுபடலாம்,,...அவ்வளவும் தான்...!

நீங்கள் சினிமா சொல்லும் கருப் பொருளைப் பற்றிக் கருத்தில் எடுக்காது செருகல்களைக் கருத்தில் எடுப்பதற்கு சினிமா என்ன செய்ய முடியும் சொல்லுங்கள்..அது உங்கள் தவறே அன்றி சினிமாவினதல்ல...!

இப்போ கப்பல் கடலில் போனால் தாண்டு விடும் என்பதற்காகவோ..இல்ல கடலில் உள்ள திமிங்கிலம் கவிழ்த்துவிடும் என்பதற்காகவோ...விமானம் ஆகாயத்தில் இருந்து விழுந்துவிடும் என்பதற்காகவோ இரண்டிலும் போகாமலா இருக்கிறோம்...தொழில்நுட்பத்தினை நம்பி பயணிக்கிறோம் இல்லையா...அதுபோலத்தான் சினிமாவும்... ஆபத்துக்கள் அருவருப்புக்கள் அங்கும் இருக்கலாம்...அதற்காக அவற்றையே நாம் நோக்கிக் கொண்டிருக்க வேண்டும் என்பதில்லையே...!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் காதல், குடும்ப வாழ்கை.. அங்கு எழும் சச்சரவுகள் என்று ஒரே குண்டுச்சட்டிக்குள் தான் அதிகம் குதிரை ஓட்டுகிறார்கள்...அது உண்மைதான்...ஆனால் அதற்காக சினிமா முற்றுமுழுதாக கெட்டதைத்தான் சொல்கிறது என்பது தவறு...அதுவே கலாசார சீரழிவுக்கு முழுக் காரணம் என்பதும் தவறு இதுவே எமது வாதத்தின் நோக்கம்...!
சினிமா என்பது மிகவும் சுத்தமானது அல்லது முழுக்க முழுக்க நல்லதையே தருகிறது என்பதல்ல எமது வாதம்...! அதற்குள் உள்ள கெட்டதுகளை நோக்காது நல்லதுகளை நோக்க ஏன் நீங்கள் தயங்குகிறீர்கள் என்பதே எமது வினா...??! கெட்டதுகள் நோக்கியே அதிகம் பார்வைகளைக் கொட்டுவது ஏன்...??! சினிமாவுக்குள் வரும் புளுகுக்காக சமூகத்தில் ஆதாரம் கேட்கிறீர்களே உங்களை எனென்று விமர்சிப்பது...அது புளுகு... ஒரு யதார்த்ததைச் சொல்ல பல யதார்த்தமற்றதைச் செருகி கண்ணைக் கருத்தைக் கவருகின்றார்கள் என்பது வெளிப்படையாகத் தெரிந்தும்..சினிமாவை ஏன் உதாரணமாகக் கொள்ள விளைகின்றீர்கள்...அதற்கு ஏன் முன்னுரிமையும் மிகைப்படுத்தலும் கொடுக்கிறீர்கள்...! அதையேன் பொழுதுபோக்கம்சமாக பார்க்காமல் பொழுதழிக்கும் அம்சமாக நோக்குகிறீர்கள்...!

சினிமாவுக்கு தமிழ் பெயர் வைத்தால்தான் தமிழ் வளரும் என்பதோ...சினிமாத் தமிழில் தான் எங்கள் தமிழன்னை வாழ்கிறாள் என்று நோக்குவதோ தவறு...!

முன்னரே சொன்னோம்...சினிமா ஒரு வர்த்தக்கக் கலைவடிவம்...இலக்கியம் முழுக்க முழுக்க மொழிசார் கலைவடிவம் போன்றதென்று...! அந்த இலக்கியத்துக்குள்ளேயே எத்தனை புளுகுகள்...குறிப்பாக இன்றைய சிறுகதைகள் நாவல்கள்...கவிதைகள்...இப்படியானவை எவ்வாறு மொழிநடையைக் கையாள்கின்றன என்று பார்த்தால் அவற்றுக்குள்ளேயே தமிழ் இறந்து கிடக்கிறது...! இந்தியத் தமிழ் நாவல்கள் ஆகட்டும் இலங்கை அல்லது புலம்பெயர் நாவல்கள் எழுத்துக்கள் ஆகட்டும் பலவற்றில் சிலவற்றை நோக்கி நாமே ஒரு சின்ன சுய ஆய்வு செய்தோம்...தூய தமிழ் தந்த சமகால எழுத்தாளர்களின் நாவல்கள் சிறுகதைகள் என்று ஒன்று கிடைப்பதே மிக அரிதாக இருந்தது..பாடசாலைக் காலத்தில் கல்கியில் வாசித்த பொன்னியின் செல்வனுக்குப் பிறகு....அப்படி ஒன்றை வாசிக்கும் வாய்ப்பே கிடைக்கவில்லை என்றால்...தமிழ் இலக்கிய கர்த்தாக்களின் நிலை என்ன என்று பாருங்கள்...அவர்களே அப்படி சமூகத்தோடு தமிழை மறந்து வியாபாரத்துக்காக புகழுக்காக மொழிச் சீரழிவோடு ஒன்ற முற்படும் போது வர்த்தகக் கலைக்காக சினிமாக் கதையெழுதும் கதாசிரியர்களிடம் எப்படி மொழித் தூய்மையை எதிர்பார்க்க முடியும்....!

உண்மையில் மொழித் தூய்மை என்பது சகல மட்டத்திலும் இருக்க வேண்டும்...அரச நிர்வாகம் தொடங்கி பாடசாலைகள் ஈறாக சாதாரண மக்களின் கலந்துரையாடகல்கள் வரை அது இருக்கும் பட்சத்திலேயே மொழித் தூய்மை என்பது பரிகரிக்கப்படும்...இதில் சினிமாவின் பங்களிப்பென்பது ஆதிக்கமுள்ள ஆனால் அளவில் சிறிதானதே...கடுகு போல....! அதை தூக்கிப் பிடித்து அதுதான் மொழியை சீரழிக்கிறது என்று உரக்க கூவுவது எய்தவன் இருக்க அம்பை நோவது போன்றதே...!

அதுபோலத்தான் உடையலங்காரங்கள்...உடலலங்காரங்கள்...சிகையலங்காரங்கள் என்பதாக வீதிக்கு வீதி மெழுகு பொம்மைகள் காவும் உடைகளை விடவா சினிமா அதிகம் காட்டுகிறது...வீட்டுக்குவீடு தொலைக்காட்சிகள் இணையத்தளங்கள் காட்டுவதை விடவா சினிமா காட்டுகிறது... தெருவுக்கு தெரு முளைத்துள்ள ஆண், பெண் அழகு நிலையங்கள் செய்து காட்டுவதை விடவா சினிமா காட்டுகிறது....சமூகத்தில் அனைத்துக் கண்றாவிகளும் சினிமாவை வென்று நடக்கும் போது அதை அமைதியாகச் செய்பவர்களே முகத்துக்கு நல்ல முகமூடி போட்டு அகத்துக்கு நல்ல இறுகப் பூட்டுப் போட்டு சினிமாவை விமர்சிக்கின்றனர்...ஏன் இந்தக் கேவலமான நிலை...! இவர்கள் உண்மையில் கலாசார சீரழிவுக்காகக் குரல்கொடுக்கின்றனரா அல்லது தங்கள் கூத்துக்களை சினிமா அரங்கேற்றுகிறது என்பதற்காக பழிவாங்க முற்படுகின்றனரா என்றே கேட்கத் தோன்றுகிறது...!

சினிமாவுக்குள் மாறுதலைக் கோர முதல் தொலைக்காட்சிகளிலும் பத்திரிகைகளிலும் வீதிக்கு வீதியும் வீட்டுக்குவீடும் நிகழும் மொழி மற்றும் கலாசார சீரழிவுக்கு முடிவுகட்ட ஒவ்வொருவரும் திடசங்கற்பம் பூணுங்கள்...சினிமா தானே தன்னை மாற்றிக் கொள்ளும்...! அது விரைந்தும் நடக்கும்....மற்றும் படி...நீங்களா தேடிப் பெறுவதற்கு சினிமாவைச் சாட்சி வைக்காதீர்கள்...அது உங்கள் போலித்தனத்தை நிரூபிக்கவே வழிகாட்டும்....!

மற்றும் படி சினிமாவில் தூய தமிழ் பேசு...சினிமாவில் அப்படி உடுத்தாதே இப்படி உடுத்து...சினிமாவில் பெண்களை அப்படிக் காட்டுறாங்க...கேவலப்படுத்துறாங்க என்பதெல்லாம் வெறும் கோசங்களே அன்றி வேறில்லை...உண்மையில் இவற்றை காதில் வாங்க வேண்டிய அவசியமும் இல்லை...!

ஒவ்வொரு தனிமனிதனும் தன்னை ஆளுமை செய்வது எது என்பதைப் பற்றி மீளாய்வு செய்வானாயின் நிச்சயமாக அவன் சமூகச்சீரழிவு கலாசார சீரழிவு நோக்கிய பாதையில் செல்லமாட்டான்...சினிமா காட்டினால் என்ன தெருவில் நின்றுகாட்டினால் என்ன...! அதைச் செய்யத் திராணி அற்ற பெண்களும் ஆண்களும் போடும் கூச்சலே சினிமா எதிர்ப்பு பெண்களைக் கேவலம் பண்ணுறாங்க என்பதெல்லாம்..பெண்களை கேவலம் பண்ணுறாங்க என்று தெரிந்தால் பிறகெதற்கு விழுந்தடிக்கிறீங்க சினிமா பார்க்க....! பார்க்காமல் விட வேண்டியதுதானே....! பாக்கிறதையும் பாக்கிறது பிறகு அதற்கு ஒரு விமர்சனம்...இப்போ எயிட்ஸ் வரும் என்பதற்காக எயிட்ஸ் நோயாளியையே துரத்தி அடிக்க வேண்டும் என்பவர்கள் நீங்கள் என்றால்...நாங்கள் எங்கும் எயிட்ஸ் வைரசையே அழிக்க வேண்டும் என்பவர்கள்...அவ்வளவும் தான் வேறுபாடு...! உங்களுக்குத் தெரியாது நோய் அறிகுறியில்லாமல் நீங்களும் எயிட்ஸோடு இருக்கலாம் என்பது...! Idea


- Mathuran - 01-11-2005

வணக்கம் நண்பர்களே,

குரிவிக்ள், நிதர்சன், தமிழினி, கவிதன் உங்களின் தமிழ்த்திரைமீதான அகண்ட பார்வைதனையும், அதனுள்ளே இருக்க கூடிய குறை நிறைகளை உங்கள் பார்வையில் சிறப்பாக சீர்தூக்கி பார்க்கின்ற தன்மைதனை பாராட்டுகின்றேன்.

நான் எனது கருத்தில் திரை என்று குறிப்பிட்டிருந்தேன், இங்கு எனது கருத்தை நான் சின்னத்திரை பெரியதிரை என்று பிரித்து முன் வைக்கவில்லை. பத்திரிகை துறையும் தமிழிற்கு தவறிழைக்கின்றன அதை நான் ஒத்துக்கொள்கின்றேன். இந்ததலைப்பு திரை பற்றியது என்பதனால், நான் முடிந்தவரை திரை பற்றிய கருத்துக்களையே முன்வைக்க விரும்புகின்றேன்.

திரைக்கதையின் கருப்புருளைதான் புரிந்திட முயல்கின்றோம், அனால் முடியவில்லையே. அழகி, சேது, மன்மதன், கையொப்பம் ( ஆட்டோ கிராப்), வீடு, மூன்றாம் பிறை, எதிர்நீச்சல், முள்ளும் மலரும் இந்தவரிசையில் இன்னும் பல படங்கள் கருத்துக்களை தெளிவாகவும், நேர்த்தியாகவும் சொல்லி சென்றன. இதில் மன்மதன் பெண்கள் விடயத்தில் கொஞ்சம் மட்டமான பார்வை இருந்தாலும், கதையின் தேவை கருதி அப்படி நிகள்ந்திருக்கலாம். இங்கே அதனை தப்பென விமர்சிக்க முடியாமல் உள்ளது. ஒரு சமூகத்திற்கு சொல்லவேண்டிய விடயம் அங்கே இருப்பதனால், அத்திரைப்படத்தினை ஏற்றுக்கொள்ள வேண்டி உள்ளது.

கதையின் கருத்தில் கூட பல திரைகளில் தெளிவின்மை. ஒரு ஆசிரியர் எப்படி மாணவர்களுக்கு பயிற்றுவிக்கின்றாரோ, அந்த ஆசிரியரின் கருத்தை ஒப்பவே மாணவர்களும் உருவாகுவார்கள் என்பதுதான் உண்மை. அதனை போலவே திரைபடத்தை பார்த்தே சிலர் அறியாமையினால் தங்கள் வாழ்வை அமைத்துக் கொள்கின்றார்கள். தமிழ் திரையால் நன்மை அடைபவர்கள் சிலராக இருந்தாலும், பாதிக்க படுபவர்கள் பலர் அல்லவா? எனவே தமிழ் திரை ஒருநாள் தனது நிலையை புரிந்து மக்களுக்காக செயல்ப்படும் என்ற நம்பிக்கையோடு முடிக்கின்றேன். அதுவரை தமிழுக்கும் தமிழருக்கும் எதிரான திரைப்படங்களை புறக்கணிப்போம்.

அன்புடன்
விதுரன்


- வெண்ணிலா - 01-11-2005

kavithan Wrote:குருவி(கள்) தான் சொல்லணும்.. பல்கலைகழக்க பக்கம் எல்லாம் நாம் மழைக்கும் ஒதுங்கினதில்லை இன்னும்.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

இனி ஒதுங்குவிங்கதானே. அப்போ பாருங்க யாராவது நடிகைகளும் ( தமிழ் சினிமாவைப் பின்பற்றி உடையணியும் நம்ம தமிழ்ப் பொண்ணுங்க) வருகிறார்களா என்று. Confusedhock: :roll:


- வெண்ணிலா - 01-11-2005

அதுதானே குருவிகள் கேட்டது போல சினிமாவின் உடை நடை பாவனை பிடிக்கவில்லை என்றால் ஏன் பார்க்கிறீர்கள். சரி பாடல்காட்சியில் அணியும் உடைகள் பிடிக்கவில்லை என்றால் பாடல்களை Forward பண்ணிட்டு பார்க்க வேண்டியதுதானே. சினிமாக்காரர்கள் கவர்ச்சி காட்டுவது குருவியண்ணா சொன்னது போல ஒரு விளம்பரம்தான் மற்றும்படி சினிமாவுக்குள் பல சீர்திருத்தங்களையும் புகுத்தியிருப்பது உங்களது பார்வையில் புலப்படவில்லையா? அதுசரி ஏனுங்க நடிகைகள் எப்படியென்றாலும் ஆடைகளை அணியட்டும் ஏன் ஆடைகளே இல்லாமல் நடிக்கட்டன். அதை ஏனுங்க நம்ம பாழாய்ப் போன சமூகம் பின்பற்றணும்? ஏன் சினிமாவில் நடிகைமார் சொன்னவர்களா "ஹாய்! லேடீஸ் & ஜென்டில்மென்! எங்களைப் போல உடையணியுங்கள்" என்று சொன்னார்களா? நம்ம நாட்டுப் பெண்களுக்கு (தமிழ் சினிமாவைப் பின்பற்றி உடையணியும் பெண்களுக்கு) எங்கே போச்சுதாம் புத்தி?

அதைவிட்டு ஏனுங்க சினிமாவைப் பற்றியும் நடிகைகளைப் பற்றியும் வாதாடுறீங்க? சினிமா என்பது ஒரு கலை. அதில் நடிப்பவர்கள் ஒரு கலைஞர்கள். அது அவர்களது தொழில். தொழிலில் முதலாளி சொல்வதைத்தான் தொழிலாளியும் கேட்பான். அதனால் தான் சினிமா நடிகைகளும் உடையணிவதும் உணர்ச்சிகளுக்கு ஏற்றபோல முகபாவனைகள் காட்டுவதும். தயாரிப்பாளர்கள் கவர்ச்சி காட்ட சொல்லுவார்கள் ஏனெனில் படங்கள் வெற்றிகரமாக ஓடணுமே. அப்படி படங்கள் கதையம்சம் இல்லாவிட்டாலும் 100 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடுது என்றால் அதற்குக் காரணமும் பார்வையாளர்கள்தானே. பின்பு ஏன் விமர்சனங்கள். ஆனால் நம்ம நாட்டுப் பெண்கள் நடிகைகளைப் போல உடையணிந்து பல்கலைக்கழகம் செல்வதும் மேடைகளில் பாடுவதும் ஏன்? :wink: :?:


- tamilini - 01-11-2005

Quote:சினிமா என்பது ஒரு கலை. அதில் நடிப்பவர்கள் ஒரு கலைஞர்கள். அது அவர்களது தொழில்.
ஏனுங்கோ அதை தான் சொல்லுறம்.. கலையை கலையாய் எடுங்க.. உங்கள் கவர்ச்சி கத்திரிக்காயை கொஞ்சம் குறையுங்க என்று.. கலை சழு}கத்திற்கு கருத்து சொல்லுது என்றால்.. கவர்ச்சி தான் அவை சொல்லுற கருத்தா..?? தயாரிப்பாளர்கள் சொல்லுறதை செய்கிறதுக்கு வேறை பேர் வைக்கலாமே.. நாங்கள் போர்வாட் பண்ணி பாக்கலாம் இல்லை என்றில்ல.. ஏன் அப்படி ஒரு நிலை தமிழ் சழுகத்திற்கு வரவேணும்.. பாக்கிற மாதிரி காட்டினால்.. ஏன்க போர்வாட் பண்ணணும் சொல்லுங்க.. இப்படியே எல்லாரும் போர்வர்ட் பண்ணி பலனில்லை.. அதனை தடுக்கணும் என்று தான் நாங்கள் சொல்லுறம்... ஒரு படம் வந்தாலும் ஒழுங்கானதாய் வரனும் என்கிறோம்.... ஏன்க.. மேலை நாடுகளில்.. அவங்க தங்க கலாச்சாரத்திற்கு ஏற்ற மாதிரி போறாங்க.. நம்மட அக்கள் தான்.. அவையிட்டயும் கொஞ்சம் வாங்கி இவையிட்டையும் கொஞ்சம் வாங்கி தங்கடையை விட்டுக்கொண்டிருக்கினம்.. ஏன் நீங்கள் பாத்திருக்க கு}டும்.. நம்ம இலங்கையில.. சோசல் என்று ஒன்று வைப்பாங்களே.. அண்ணாமாரும் அக்காமாரும்.. எப்படி அழகாய் சாறி கட்டி.. பு}வைத்து போவாங்க.. எவ்வளவு அழகாய் இருக்கும்...


- shiyam - 01-11-2005

நாங்கள் ஏற்கனவே உந்த சண்டைகாட்சிகளையும் பாடல்காட்சியையும் ஒடவிட்டுபாத்து ஒருபடம் முக்கால் மணித்தியாலத்திலை பாத்திடுவன் பிறகு மிச்சத்தையும் ஓடவிட்டால என்னத்தைபாக்கிறதாம்


- shiyam - 01-11-2005

இப்ப வந்த காதல் எண்டொரு படம் பார்த்தேன் எல்லாம் புதியவர்கள் 5 சண்டை 4 பாட்டு கடைசியிலை கதாநாயகன் குறைஞசது 50 பேரை அடிச்சு கதாநாயகியை கைபிடிப்பதுஎன்கிற வழமையான விதியிலிருந்து மாறுபட்டு.கதையை நகர்த்தியிருக்கிறார்கள்.சேரனின் ஆட்டோ கிராப்பிற்கு பின்னர் ஒரு நல்லபடம் பாத்த நிறைவு


- kuruvikal - 01-11-2005

[quote=tamilini][quote]
சினிமா என்பது ஒரு கலை. அதில் நடிப்பவர்கள் ஒரு கலைஞர்கள். அது அவர்களது தொழில்.
[/quote]
ஏனுங்கோ அதை தான் சொல்லுறம்.. கலையை கலையாய் எடுங்க.. உங்கள் கவர்ச்சி கத்திரிக்காயை கொஞ்சம் குறையுங்க என்று.. கலை சழு}கத்திற்கு கருத்து சொல்லுது என்றால்.. கவர்ச்சி தான் அவை சொல்லுற கருத்தா..?? தயாரிப்பாளர்கள் சொல்லுறதை செய்கிறதுக்கு வேறை பேர் வைக்கலாமே.. நாங்கள் போர்வாட் பண்ணி பாக்கலாம் இல்லை என்றில்ல.. ஏன் அப்படி ஒரு நிலை தமிழ் சழுகத்திற்கு வரவேணும்.. பாக்கிற மாதிரி காட்டினால்.. ஏன்க போர்வாட் பண்ணணும் சொல்லுங்க.. இப்படியே எல்லாரும் போர்வர்ட் பண்ணி பலனில்லை.. அதனை தடுக்கணும் என்று தான் நாங்கள் சொல்லுறம்... ஒரு படம் வந்தாலும் ஒழுங்கானதாய் வரனும் என்கிறோம்.... ஏன்க.. மேலை நாடுகளில்.. அவங்க தங்க கலாச்சாரத்திற்கு ஏற்ற மாதிரி போறாங்க.. நம்மட அக்கள் தான்.. அவையிட்டயும் கொஞ்சம் வாங்கி இவையிட்டையும் கொஞ்சம் வாங்கி தங்கடையை விட்டுக்கொண்டிருக்கினம்.. ஏன் நீங்கள் பாத்திருக்க கு}டும்.. நம்ம இலங்கையில.. சோசல் என்று ஒன்று வைப்பாங்களே.. அண்ணாமாரும் அக்காமாரும்.. எப்படி அழகாய் சாறி கட்டி.. பு}வைத்து போவாங்க.. எவ்வளவு அழகாய் இருக்கும்...

பாடசாலைகளில் பெண்கள் பாடசாலையில் இருந்து கொஞ்சப் பேர சாறி கட்டிவரச் சொல்லிட்டு ஆண்கள் பாடசாலைகளில் அவை வேட்டியோட இல்லாம ரவுஷர் போட்டுக்கொண்டு சோஷல் நடத்திறதும் உண்டு... மறுவளமாவும் நடக்கிறது உண்டு...அதென்ன கூத்து... ஒரு நாளில சுமார் இரண்டு/ மூன்று மணித்தியாலத்துக்கு உப்படி வேடிக்கை காட்டிட்டா அது காலாசாரம் வெளிப்பாடு ஆகிடுமோ....இல்ல சோஷலா பழகிறதென்ற அர்த்தம் தான் வந்திடுமோ...உந்த அதிபரா இருக்கிற ஆக்கள் என்னத்த நினைச்சு உது செய்யுறவையோ தெரியாது...இதன் தொடர்ச்சி தான் ராக்கிங் என்று பல்கலைக்கழகங்களில் போய் முடிகிறது....!

தங்கள் தங்கள் வக்கிர புத்திகளை மற்றவர்களுக்கு காட்டிறதும்...ஊட்டிறதுதான் ராக்கிங்....! பெண்களும் செய்வினம் இழிச்சுக் கொண்டு...அவைக்கு வால் பிடிக்க சீனியர் கிறுக்கில கொஞ்சம் திரியும்...அவைதான் அங்க கீரோக்கள்....இவர்களுக்கு செருப்பால சாத்தி பல்கலைக்கழக வாசலோட வீட்ட அனுப்ப வேணும்..!அப்பதான் அவைக்கு சோஷல் என்றதன் அர்த்தம் வெளிப்படும்...!

மேற்கில பாருங்க அழகா...வாறாங்க...சின்ன அறிமுகம் பண்ணுறாங்க... படிக்கிறாங்க... போறாங்க...ராக்கிங்கும் இல்ல சோஷலும் இல்ல...! விரும்பினா பல்கலைக்கழக நேரம் தவிர்ந்த நேரங்களில்...வழமையான அவர்களின் கலாசாரப்படி...பப்..கிளப்...அதுக்கும் பல்கலைக்கழகத்துக்கும் படிப்புக்கும் சம்பந்தமே இருக்காது...! அங்க அவர்கள் சோஷலா பழகுவார்கள்...அவ்வளவும் தான்...!

முதலில பாடசாலைகளில் உந்தச் சோஷல நிறுத்தோனும்...ஒரு இரண்டு மணித்தியாலக் கூத்தில பெட்டையளும் பொடியளும் அங்க சோஷல் ஆகப் போறதில்ல...வேணும் என்றா வாரா வாரம் சோஷல் வையுங்க...படிச்சதுகள..நடப்பு விவகாரங்கள் அலசுங்க... தீர்மானங்கள் எடுங்க....நடைமுறைப்படுட்துங்க..அது பறவாயில்லை...சோஷல் ஆக வாய்ப்பு இருக்கு..உந்த இரண்டு மணித்தியால சோஷல் கூத்துக்களை பாடசாலைகளில் ஒழிப்பது நல்லது...!

தமிழினி...உங்கட கலாசாரம் சேலை கட்டிறதெண்டா...அதுவும் சினிமாவில தாராளமாகத்தான் காட்டுறாங்க...அம்மாவுக்கு நடிக்கிறவங்க...அடக்க ஒடுக்கமான குடும்பப்பாங்கான பாத்திரத்தில நடிக்கிறவங்க என்று பலரையும் தான் காட்டுறாங்க... அதேவேளை நவீன ஆடை அலங்காரங்களை விரும்புகின்ற இளசுகளைக் கவர நவீன ஆடைகள் உடுத்தி நடிக்க விடுறாங்க...சினிமா கூட அநேகம் நாட்டு நடப்பைத்தான் பிரதிபலிக்குதே தவிர அவங்களா எதுவும் புதிசா சேர்க்கிறதோ இல்ல... ஓரளவுக்கு சமூகத்தின் நிலை அறிந்துதான் அவங்க படங்களில் காட்சிகளை வழங்குறாங்க...!

இப்ப மேற்கத்தைய இசைக்கருவிகளின் ஆதிக்கம் இல்லாத பழைய டப்பாப் பாடல்களைக் கேட்பிங்களா....அதாவது கீழத்தேய...உங்கள் கலாசார பின்னணியில் வந்த... இசைக்கருவிகளைக் கொண்டு இசையமைத்த பாடல்களை..இல்ல இல்ல...! ஏன்....??! அதுபோலத்தான்... ஆடை அலங்காரங்களிலும் மேற்கத்தேயக் கலப்படம் சமூகத்தில் ஆட்சி செய்யும் போது அதைதான் சினிமாவில் காட்ட வேண்டும்...அவர்கள் புரட்சி செய்ய வெளிக்கிட்டு படம் கவிழ்த்திட்டா கலாசார விரும்பிகளான உங்களைப் போல எத்தினை பேர் அவங்கள் நட்டத்தை ஈடு செய்யத் தயாரா இருக்குறீங்க...!

சும்மா யதார்த்தத்திற்கு வெளியே நின்று கூவலாம்..கலாசாரம் மண்ணாங்கட்டியென்று...இன்றும் மறக்க முடியாத ஒன்று 1990 இல் தமிழீழ விடுதலைப் புலிகள் யாழ்ப்பாணத்தில் சினிமா பார்க்கத் தடை விதித்த போது கள்ளக் கொப்பி வாங்கிப் பாத்தவையும்...கொழும்புக்கு இடம்பெயர்ந்தவையும்...இவையின்ர ஆட்டம் இன்னும் கொஞ்சக் காலத்துக்குத்தான் என்று புலம்பினவையும்....இதே கலாசார விரும்பிகள் தான் என்பதை நாம் மறக்கத் தயாரில்லை...!

குறிப்பாக ஆண்களைவிட பெண்கள் தான் அதிகம் அந்நியக் கலாசாரத்துக்குள் இலகுவாக கவரப்படுகின்றனர்...அவர்களுக்கு ஒரு நிலையில்லாத மனது...அதை அடக்க வழி செய்யுங்கள்...சும்மா சினிமாவைத் திட்டாம....அதைத்தான் சினிமாவும் சொல்லுது...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea


- Mathuran - 01-11-2005

வணக்கம் நண்பர்களே,



நீங்கள் சொல்வது சரியாகத்தான் படுகின்றது. அதைத்தானே நாங்களும் சொல்லுகின்றோம். சமூகத்தில் நடக்கும் இதுபோன்ற அடக்குமுறைகளை ஏன் திரைப்படங்கள் சொல்வதில்லை. பெண்கள் புடவை கட்ட வேண்டும் என்று சொல்லும் ஆண்கள், ஏன் அவர்கள் வேட்டி கட்டுவதில்லை என்று ஏதாவது ஒரு திரைப்படம் கேட்டதுண்டா? காரணம் தமிழ் திரைப்படத்துறையில் ஆண்களின் அதிக்கம் அதிகமிருக்கின்றமயால் டானெ.

சூழலுக்கு ஏற்றவாறு உடை அணிவதில் தவறில்லை. குளிர் பிரதேசங்களில் அதர்க்குரிய ஆடைகளை தான் அணியவேண்டும். ஆனால் மிகவும் வெப்பம் கூடிய இந்தியா, இலங்கை ஈழம் போன்ற பிரதேசங்களில், ஒவ்வாத உடைகளை அணிவது அசௌகரியங்களையே தோற்றுவிக்கும். இதனை மக்களிற்கு ஏதாவது ஒரு திரைப்படம் எடுத்து சொல்லியது உண்டா?

தகவல் ஊடகம் என்பது திரைப்படதுறையை குறிக்காதா? அப்படியாயின் எனக்கு இதை கொஞ்சம் தெளிவாக விள்க்கமுடியுமா உங்களால்?

அன்புடன்
விதுரன்


- tamilini - 01-11-2005

Quote:தமிழினி...உங்கட கலாசாரம் சேலை கட்டிறதெண்டா...அதுவும் சினிமாவில தாராளமாகத்தான் காட்டுறாங்க...அம்மாவுக்கு நடிக்கிறவங்க...அடக்க ஒடுக்கமான குடும்பப்பாங்கான பாத்திரத்தில நடிக்கிறவங்க என்று பலரையும் தான் காட்டுறாங்க... அதேவேளை நவீன ஆடை அலங்காரங்களை விரும்புகின்ற இளசுகளைக் கவர நவீன ஆடைகள் உடுத்தி நடிக்க விடுறாங்க...சினிமா கூட அநேகம் நாட்டு நடப்பைத்தான் பிரதிபலிக்குதே தவிர அவங்களா எதுவும் புதிசா சேர்க்கிறதோ இல்ல... ஓரளவுக்கு சமூகத்தின் நிலை அறிந்துதான் அவங்க படங்களில் காட்சிகளை வழங்குறாங்க...!

குருவிகள்.. சேலை கட்டுறது தான் கலாச்சாரம் என்று நாங்க சொல்லவில்லை.. அப்படி பேசுறது சுத்த பயித்தியக்காற தனம். நோர்மல படத்தில போடுறு ஆடைகளில பெரிசா. பிழை இருக்கிறதில்லை.. ஆனால் பாடல் காட்சிகளில் வாற ஆடைகளைத்தவரிக்கலாம் தவிர்க்க வேண்டும் என்று நாங்க சொல்லுறம்.. தேவைக்கேற்றவிதமாய் அவங்க ஆடைகளை மாத்திறாங்க.. ஆனால் அது நாகரீகமாய் இருக்கனும் என்று சொல்லுறம்.. அநாகரீகமாய் இருக்கிறதை தான் தவிர்க்க சொல்லுறம்..

1990 போனவை போக இருக்கிறவை நன்றாய் தானே இருந்தவை.. இப்ப பாருங்க.. நல்ல விதமாய்.. படங்களை எடுத்திருந்தால்.. அவங்க ஏன் தடைபோடப்போறாங்க.. சனம் ஏன் ஓடியிருக்கப்போகுது.. எல்லாம் சுத்திச்சுத்தி அங்கேயே நிக்கிறது பாத்தீங்களா...?? அது தான் சொல்லுறம்.சிறுவர் பெரியோர் என்று யாவரும் ஒன்றாய் இருந்து படம் பாக்கிற மாதிரி படம் எடுங்க.. என்று சொல்லுறம்.. அப்படி எடுங்க.. யார் வேண்டாம் என்கிறாங்க....??

உங்களுக்கே தெரியும்.. இந்தியாவில இருக்கிற அநேகப்பேர்.. சினிமாவில வாற ஹீரோ என்ன செய்கிறாங்களோ அதை மாதிரி தாங்களும் செய்கிறாங்க.. அப்படி சமூகத்தில சினிமா பெரிய அளவில தாக்கத்தை ஏற்படுத்துது.. அப்படியிருக்கிற சினிமாவை நல்லபடியா எடுங்க என்று தானே சொல்லுறம்........???