![]() |
|
பொதுவறிவுப் போட்டி - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10) +--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49) +--- Thread: பொதுவறிவுப் போட்டி (/showthread.php?tid=487) |
- Puyal - 03-23-2006 கவிதைமொழி எனச் சிறப்புப் பெயர் கொண்ட மொழி எது? - Sujeenthan - 03-24-2006 தமிழ்தான். வேறு என்ன இருக்க முடியும். - Puyal - 03-24-2006 சுஜி எம்மொழி சிறந்த மொழி தான் ஆனாலும் பதில் தவறு முயற்சிக்குப் பாராட்டுக்கள். - putthan - 03-24-2006 ஆங்கிலம் அல்லது தமிழ் அல்லது தமிழும் ஆங்கிலமும் கலந்த தமிங்கிலம். - Puyal - 03-24-2006 புத்தரே முயற்சித்தமைக்கு நன்றி தவறான பதில் மீண்டும் முயற்சித்துப் பார்க்கவும். ஒரு ஆசிய நாட்டு மொழி தான். - putthan - 03-24-2006 சீன மொழி பதில் தவறாக இருந்தால் இந்திய மொழிகளா என ஒர் குழு தாங்கோ - kirubans - 03-24-2006 தமிழ் ஆக்கங்கள் பற்றிய கேள்விகளுக்கான சரியான விடைகள் பதிந்தவர்களுக்குப் பாராட்டுக்கள். - kirubans - 03-24-2006 kirubans Wrote:3. சீயம் - சீனா.சரியான் விடை தாய்லாந்து - Puyal - 03-24-2006 முயற்சிக்குப் பாராட்டுக்கள் கிருபா இந்தியாவிலும் பேசப்படுகின்றது, இம்மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட நாடும் இந்தியாவிற்கு அண்மையிலுள்ளது. - kurukaalapoovan - 03-24-2006 வங்காள மொழி ? - Puyal - 03-24-2006 குறுக்கால உங்களின் முயற்சிக்குப் பாராட்டுக்கள் பதில் தவறு மீண்டும் முயற்சிக்கவும். - Puyal - 03-24-2006 கவிதைமொழி எனச் சிறப்புப் பெயர் கொண்ட மொழி எது? பதில்: உருதுமொழி. - Puyal - 03-24-2006 பக்திமொழி எனச் சிறப்புப் பெயர் கொண்ட மொழி எது? - Sujeenthan - 03-25-2006 இது நிச்சயமாய் தமிழ்தான். இல்லை என்று சொன்னால் எனக்கு விசர் வரும்.சொல்லிப்போட்டன். :evil: :evil: - Puyal - 03-25-2006 சுஜி உங்களுக்கு விசர் வந்தால் தமிழ் உலகிற்கே விசர் வந்த மாதிரி என்றபடியால் உங்களின் விடையை சரியென ஒப்புக் கொள்கின்றேன். - Puyal - 03-25-2006 அடுத்தாக கிருபனின் கேள்விகள் ஏதாவது வருமெனக் களம் எதிர்பார்க்கின்றது. - kirubans - 03-25-2006 மீண்டும் புவியியல் சம்பந்தமான கேள்விகள். 1. உலகின் மிக ஆழமான ஆழி எது? எந்த சமுத்திரத்தில் உள்ளது? 2. ஹட்சன் குடா எந்த நாட்டில் உள்ளது? 3. ஆசியாவின் நீளமான நதி எது? 4. ஜெர்மனியில் உற்பத்தியாகி கருங்கடலில் விழும் நதி எது? 5. உலகில் மிகப் பெரிய ஏரி எது? 6. உலகில் மிகப் பெரிய முதல் மூன்று தீவுகள் எவை? 7. இந்தியாவிலுள்ள பெரிய பாலைவனம் எது? 8. ஐம்பேரேரிகள் எவை? - Thusi - 03-25-2006 1. மரியானா ஆழி, பசுபிக் சமுத்திரம். 2. கனடா. 3. யாங் சிக்கியாங் - சீனா. 4. டன்யூப் 5. உவர்நீர் - கஸ்பியன்கடல் நன்னீர் - சுப்பீரியர் 6. 1வது - கிறீன்லாந்து 2வது - நியூகினியா 3வது - போணியோ 7. ராஜஸ்தான் 8. மிச்சிக்கன், ஹியூரன், ஈரி, சுப்பீரியர், ஒன்ராறியோ - அனிதா - 03-25-2006 5.உலகில் மிகப் பெரிய ஏரி எது? <b>கால்பிஸ்கோயைமோரி. (கஸ்பியன் கடல்)</b> 7. இந்தியாவிலுள்ள பெரிய பாலைவனம் எது? <b>தார் 1,00,000</b> :roll: :roll: - KULAKADDAN - 03-25-2006 தமிழில் பத்து பாட்டு என கூறப்படும் நூல்கள் எவை? |